இவ் மறையுரையை வழங்குபவர்

Rev.Fr.Peter Jayakanthan sss
Congregation of the Blessed Sacrament
Corpus Christi Catholic Church,
Houston, Texas, US



ஞாயிறு மறையுரைகள்

மதிப்பிற்குரிய அருட்பணியாளர்களே, துறவிகளே, அருட் கன்னியரே, உங்கள் ஞாயிறு மறையுரைகளை எமது இணையத்தளத்தின் ஆன்மீக வலத்தில் பிரசுரித்து, ஆண்டவர் இயேசுவின் நற்செய்தியை எல்லோருக்கும் அறிவிக்க விரும்பினால், info@tamilcatholicnews.com என்ற எமது மின்னஞ்சலுக்கு உங்களுடைய ஆக்கங்களை அனுப்பிவைக்கவும். உங்கள் மறையுரைகள் உலகெங்கும் இருக்கும் அனைத்து தமிழ் உள்ளங்களையும் சென்றடையும்.



இதோ! ஓநாய்களிடையே ஆடுகளை அனுப்புவதைப்போல நான் உங்களை அனுப்புகிறேன். எனவே பாம்புகளைப்போல முன்மதி உடையவர்களாகவும் புறாக்களைப்போலக் கபடு அற்றவர்களாகவும் இருங்கள்.
(மத்தேயு 10:16)

நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள்; தந்தை, மகன், தூய ஆவியார் பெயரால் திருமுழுக்குக் கொடுங்கள். நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்களும் கடைப்பிடிக்கும்படி கற்பியுங்கள். இதோ! உலக முடிவுவரை எந்நாளும் நான் உங்களுடன் இருக்கிறேன்
(மத்தேயு 28:19-20)

நீ அவற்றை உன் பிள்ளைகளின் உள்ளத்தில் பதியுமாறு சொல். உன் வீட்டில் இருக்கும்போதும், உன் வழிப்பயணத்தின் போதும், நீ படுக்கும்போது, எழும்போதும் அவற்றைப் பற்றிப் பேசு.
(இணைச்சட்டம் 6:7)








தவக்காலத்தின் நான்காம் ஞாயிறு

என் இல்லம்: இருட்டிலா!.......... வெளிச்சத்திலா!

2கு.பே36:14-16,19-23
எபே2:4-10
யோவா 3:14-21



கிறிஸ்துவில் பிரியமுள்ளவர்களே சகோதர சகோதிரியரே இளைய உள்ளங்களே சிறார்களே இணையதள நண்பர்களே தவக்காலத்தின் பாதிபாதையை நாம் கடந்திருக்கிறோம். முதல் வாரத்தில் நமது பாலைவன அனுபவங்களை கடக்க சிந்தித்தோம். இரண்டாவது வாரத்தில் மலை உச்சியைநோக்கிய பயணதருணங்களில் இறைஇயேசுவின் இணைந்து நெருங்கிய பிரசன்னத்தை கண்டுணர அழைக்கப்பட்டோம். நமது ஞாயிறு வாரந்தர ஆலயம் செல்வது சாதாரண சந்திப்புகளா அல்லது இறைவனோடு சங்கமிக்கும் நேரங்களா? என சுய ஆய்வுசெய்தோம். நான்காவது வாரத்தை துவங்கும் இன்றைய திருவழிபாடு நாம் வசிக்கும் இல்லங்கள் இருட்டிலிருக்கின்றனவா? அல்லது வெளிச்சத்தால் நிரம்பியிருக்கின்றனவா? என நமக்கு சவால்விடுகின்றன. இருட்டினால் அழிவைநோக்கியிருக்கும் நம் இல்லங்களை வெளிச்சத்திற்கு மீட்டுகொணர்வோம். அதற்கு வெளிச்சத்தை வெளிக்கொணரும் நற்கருணை பிரசன்னம் துணையிருக்கட்டும். தடையாகயிருக்கும் இருட்டுநிலைகளை வெளிச்சத்தால் அழிப்போம் சமூகமாக நம்இறைவனுக்கு சாட்சிபகர்வோம்.

வரலாறு பல்வேறு இருட்டுகளை வெளிச்சமாக்கியிருக்கிறது………
எண்ணிலடங்கா உயிர்களை பலிவாங்கிய இரு உலகப்போர் என்ற இருட்டிற்குப்பிறகான அமைதிவெளிச்சம்……
மதச்சுதந்திரத்தை தடுத்த கம்யூனிசம் என்ற இருட்டிலிருந்து இறைநம்பிக்கை என்றவெளிச்சம்….
கொடியஅழிவை கொணர்ந்த சுனாமிஇருட்டிலிருந்து மீண்டுஎழுந்த வெளிச்சமிகுவாழ்வு……
ஆப்ரிக்கா நாடுகளை தாக்கிய எபோலாஇருட்டிலிருந்து மாறிவரும் வெளிச்சமிகு நம்பிக்கை….
வரலாற்றில் மட்டுமல்ல மீட்பின் வரலாற்றிலும் பல இருட்டுகளிலிருந்து தான் புதுவாழ்வு கிடைத்திருக்கிறது. எகிப்திய அடிமைத்தனஇருட்டிலிருந்து கிடைத்தவெற்றி பாஸ்காவெளிச்சம்…பல்வேறு பிரிவினை மற்றும் பாவமென்ற இருட்டிலிருந்து இயேசுவின் உயிர்ப்புவெளிச்சம்…..இவ்வுண்மைகள் சொல்வது அனைத்து இருட்டிகளிலிருந்து வெளிச்சம் கிடைப்பது வெளிச்சத்தை காண்பது சாத்தியம் உறுதி இதற்கு நம்மை சுற்றியிருக்கும் இருட்டுகளிலிருந்து நாம் தஞ்சம் அடைந்திருக்கும் இருட்டுக்குகைகளிலிருந்து வெளியேவரவேண்டும்.

நம் இல்லம் எத்தகைய இருட்டிலிருக்கிறது? பயம்-தோல்விகள்-காயங்கள்-கசப்பான தருணங்கள்-தொடர்நோய்கள்-தனிமைகள்-ஏமாற்றங்கள்-அழிவுபழக்கங்கள்-சுயநல வாழ்வு-முயற்சியிக்கமறுப்பு- இறைநம்பிக்கையின்மை போன்றவைகள் நிரம்பியவையே இருட்டு இல்லங்கள் எனலாம். இருட்டு நம்மை தாக்குகிறது ஆனால் நாம்தான் அதைகவ்வி தேடிக்கொள்கிறோம். அதில் தஞ்சம்புகுந்து சொகுசுவாகயிருந்துவிடுகிறோம். நான் விரும்பவேண்டும் வெளியேவர…வெளிச்சத்தை பற்றிக்கொள்ள. இருட்டை கடந்துவருவது ஒருஅனுபவபயணம். என் இருட்டு இல்லத்தை எளிதாக கடக்கமுயற்சிக்கின்றேனா? அல்லது தயங்கி கடக்கஇயலாது எனக்காரணங்கள் சொல்லி என் இல்லத்தை முழு இருட்டால் நிரப்புகின்றேனா?

இரண்டாம் குறிப்பேடுகளிலிருந்து கொடுக்கப்பட்டுள்ள இன்றையமுதல் வாசகம்வழியாக கசப்பான மிகவும் சோர்ந்துபோன இஸ்ராயேல் மக்களின் வாழ்வை ஆசீரியர் நம்முன்வைக்கிறார். முதல்பகுதியில் அவர்களின் இருட்டுநிரம்பிய இல்லத்தை எடுத்துரைக்கிறார். அழைத்து விடுதலைதந்து பல்வேறு வகைகளில் வழிநடத்திய இறைவனை மறந்துயிருக்கையில் நம்பிக்கையற்றதன்மை பாவங்கள் சுயநலங்கள் இவ்விருட்டுகளுக்கு மத்தியில் 400 ஆண்டுகளாக தாவீதுவின் வழிமரபில் ஆட்சிசெய்யப்பட்ட இஸ்ராயேல் குலம் இனம் இடம் அரசு தாக்கப்படுகிறது

கி.மு586-ல் எதிரிகளால். இவ்வெதிரிகள் பாபிலோனியர்களே. நெபுகத்நேசர் அரசர் தலைமையில் பலஉயிர்கள் பலியாகின்றன. இடம் அவர்கள் வாழ்வின் மையமான எருசலேம் ஆலயம் தகர்க்கபடுகிறது. எருசலேம் ஆலயத்தை தகர்த்தால் அவர்களின் வாழ்வு முடிந்துவிடும் என்றஎண்ணத்தில் அனைத்தும் கொள்ளையடிக்கப்பட்டு 70 ஆண்டுகளாக கி.மு515வரை பாபிலோனில் அடிமைக்கைதிகளாக நடத்தப்படுகின்றனர். அங்கு அவர்கள் உரிமையற்ற இல்லத்தில் அவர்கள் தங்கள் இல்லங்களை வாழ்வை இயலாது முடியாது அதாவது எருசலேம் திரும்பசெல்லமுடியாது எருசலேம் வாழ்வு மீண்டும் கிடைக்காது சென்றாலும் எருசலேமை ஆலயத்தை தங்கள் வாழ்வை மீண்டும் மீட்ட கட்டியெழுப்பவது சாத்தியமில்லா கனவுஎன இருட்டினால் நிரப்பினர் தங்கள் இல்லத்தை. மேலும் அவமானம்-ஏமாற்றம்-குற்றஉணர்வு-அடிமைத்தனம் போன்றவைகளால் தங்கள்இருப்பிடமே இருட்டிலிருந்தது.

இரண்டாவதுபகுதியில் எப்படி அவர்கள் இல்லங்கள் வெளிச்சமாகியது எனவிவரிக்கிறார். 70வது ஆண்டு இருண்ட வாழ்வில் எண்ணஇயலாஉயிர்கள் உறவுகள் மனஅழுத்ததினால் சோகத்தினால் வெறுப்பினால் இறந்திருக்கலாம். ஆனால் இத்தருணத்தில் இறைவன் புறஇனத்துஅரசரான சைரசுவழியாக மக்களை பாபிலோனியர்களிடமிருந்து மீட்கிறார். சைரசு அரசன் இஸ்ராயேல் மக்களைப்பார்த்து உங்கள் இருள்நிறைந்நத இல்லங்களைதக்க வைத்துக்கொள்ள கவர்ந்துயிழுக்கும் யூப்பரடிஸ் டைகிரிஸ் நதீகள் அருகாமையிலிருந்துகொண்டு சொகுசைதேடவேண்டாம். நீங்கள் மீண்டும் விடுதலையின் மக்கள். வெற்றியடைந்து எருசலேமை திரும்பபெற்றுக்கொண்டுள்ளோம். இருட்டு இல்லத்திலிருந்து வெளியேவாருங்கள். மீண்டும் உங்கள் வாழ்வை உங்கள் வாழ்வின் மையமான எருசலேம் ஆலயத்தை கட்டிஎழுப்புவோம் நான் துணையாக அனைத்தும்செய்வேன் உங்கள் இல்லங்களை வெளிச்சம் நிறைந்ததாக்குவோம் என அழைக்கிறார். நம்பிக்கையோடு புதுவாழ்வு என்ற வெளிச்சத்தைநோக்கி அவர்கள் சைரஸோடு பயணமானார்கள்.

யேவான் நற்செய்தியாளர் இரவில் இயேசுவை சந்திக்கவரும் நிக்கதேமுவின் இல்லத்தை நம்முன் எடுத்துச்சொல்கிறார். நிக்கதேமு செல்வாக்கான பிரபலமான ஒருபரிசேயர். சட்டங்களுக்கு பிரமாணிக்கமான மற்றவர்களுக்கு பயிற்றுவிக்கும் யூததலைவராவார். இவர் இவர்களுடைய பழக்கவழக்கங்களுக்கு மத்தியில் இயேசுவின்வாழ்வு மற்றும் போதனையின் மீது ஆவல் கொண்ட மற்றபரிசேயர்களின் பிரதிநிதியாக இயேசுவை இரவில் பயம் பதவி தயக்கம் போன்ற இருள்போர்த்திய போர்வையோடு சந்திக்கிறார். நிக்கதேமு மற்றும் மற்றஆவல் நிறைந்த பரிசேயத்தலைவர்களிடமிருந்த இரண்டு இருட்டு நிலையைச்சுட்டிகாட்டுகிறார். ஒன்று: பயம் மற்றும் பதவி என்ற இருள் இரண்டு: பழைமைபழக்கம் மற்றும் புத்தகஇறைஅறிவு. இவைகளிலிருந்து வெளியேவந்து தங்கள் இல்லங்களை வெளிச்சமாக்க அழைப்புவிடுகிறார். அவர்கள் பழைமைகளை தலைகுனிந்து பார்க்காமல் மாறாக நிமிர்ந்துப்பார்த்து மேல்நோக்கிப்பார்த்து வெளிச்சத்தை தங்கள் இல்லமாக்க சொல்லிக்கொடுக்கிறார். நாம் பயன்படுத்தும் போர்வை இருள்நிறைந்ததா? வெளிச்சம் நிரம்பியதா?

கடினமான ஜெர்மனியஇரண்டுவருட சிறைஅனுபத்திற்குபிறகு ஏப்ரல்9-1945ல் தூக்குதண்டனைக்கு முன்பு போனஹாபர் தன்சகசிறைகைதிளோடு சமூகமாக திருவழிபாட்டில் ஈடுபட்டபொழுது அவருக்கு வயது39. அவரின் இறுதிவார்த்தைகள் “எனக்கு இறுதி தருணம் ஆனால் புதுவாழ்வின் தொடக்கம்” நிச்சயம் இதுபலரின் வெளிச்சமிகு வாழ்விற்கு தூண்டுதலாக அமைந்திருக்கிறது.

கடந்தவாரத்தில் ஜஸிஸ் (இஸ்லாமிய வன்முறை அமைப்புகள்) சிரிய படைகளோடுநடத்திய சண்டையில் எல்லைப்புறத்தில் ஜஸிஸ் படையிலிருந்த ஆலப்பு என்ற32வயது நபர் பல்வேறுகாயங்களுடன் இறந்துவிட்டார் எனஎல்லைப்புற பாலைவனப்பகுதியில் விட்டுசெல்லப்பட்டார். மறைபோதக அருட்பணியாளர் ஹெர்மன் அவருக்கு கிறிஸ்தவ சமூகத்தில் நல்ல அடக்கம் கொடுக்க 26கி;மீ தூக்கிசெல்லப்பட்டார். ஆனால் அங்குசென்றவுடன் இறந்துவிட்டார் என்றுவிடப்பட்டவர் உயிரோடு கண்திறக்க காயங்களுக்கு சிகிச்சைதரப்பட ஆலப்பு நான் இதுவரை வெறுப்பு பகைமை மற்றும் வன்முறை என்றஇருட்டான இல்லத்தில் உலகத்தில் இருந்து விட்டேன் உங்களோடு அமைதி மகிழ்ச்சி சகோதரம் என்ற வெளிச்சமான இல்லத்திற்கு வர நுழைய விரும்புகிறேன் என்றபிறகு திருமுழுக்குபெற்று வெளிச்சத்திற்கு சாட்சிபகர அக்கிறிஸ்தவ சமூகத்திற்குள் ஏற்றுக்கொள்ளப்பட்டார்.

மோசேயோடு 40 ஆண்டுகள் இஸ்ராயேல் அடிமைத்தன இருட்டிலிருந்து பயணம்…….
70 ஆண்டுகள் பாபிலோனியஅடிமைத்தன இருட்டிலிருந்து பயணம்……..
உலகின் பாவ-பிரிவினை மற்றும் மீட்புக்காக இயேசுவின் எருசலேம் மற்றும் கல்வாரியைநோக்கிய பயணம்…..
நிக்கதேமு இரவில் இருட்டு இல்லத்திலிருந்து இயேசுவைச்சந்தித்தவர்…இயேசுவின் இறப்பிற்குபிறகு பகலில் மற்றவர்களோடு உடலை அடக்கம்செய்யதுணைபுரிந்து இயேசுவின் சீடராக வெளிச்சமிகு இல்லத்திற்கு வருகிறார். என் இல்லம் இருப்பது இருட்டிலா? வெளிச்சத்திலா? –ஆமென்.