இவ் மறையுரையை வழங்குபவர்

Rev.Fr.Peter Jayakanthan sss
Congregation of the Blessed Sacrament
Corpus Christi Catholic Church,
Houston, Texas, USஞாயிறு மறையுரைகள்

மதிப்பிற்குரிய அருட்பணியாளர்களே, துறவிகளே, அருட் கன்னியரே, உங்கள் ஞாயிறு மறையுரைகளை எமது இணையத்தளத்தின் ஆன்மீக வலத்தில் பிரசுரித்து, ஆண்டவர் இயேசுவின் நற்செய்தியை எல்லோருக்கும் அறிவிக்க விரும்பினால், info@tamilcatholicnews.com என்ற எமது மின்னஞ்சலுக்கு உங்களுடைய ஆக்கங்களை அனுப்பிவைக்கவும். உங்கள் மறையுரைகள் உலகெங்கும் இருக்கும் அனைத்து தமிழ் உள்ளங்களையும் சென்றடையும்.இதோ! ஓநாய்களிடையே ஆடுகளை அனுப்புவதைப்போல நான் உங்களை அனுப்புகிறேன். எனவே பாம்புகளைப்போல முன்மதி உடையவர்களாகவும் புறாக்களைப்போலக் கபடு அற்றவர்களாகவும் இருங்கள்.
(மத்தேயு 10:16)

நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள்; தந்தை, மகன், தூய ஆவியார் பெயரால் திருமுழுக்குக் கொடுங்கள். நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்களும் கடைப்பிடிக்கும்படி கற்பியுங்கள். இதோ! உலக முடிவுவரை எந்நாளும் நான் உங்களுடன் இருக்கிறேன்
(மத்தேயு 28:19-20)

நீ அவற்றை உன் பிள்ளைகளின் உள்ளத்தில் பதியுமாறு சொல். உன் வீட்டில் இருக்கும்போதும், உன் வழிப்பயணத்தின் போதும், நீ படுக்கும்போது, எழும்போதும் அவற்றைப் பற்றிப் பேசு.
(இணைச்சட்டம் 6:7)
தவக்காலத்தின் மூன்றாம் ஞாயிறு

சந்திக்கவா?.......... ..... சங்கமிக்கவா?

வி.ப 20:1-17, 1கொரி 1:22-25 யோவா 2:13-25கிறிஸ்துவில் பிரியமுள்ளவர்களே சகோதர சகோதிரியரே இளைய உள்ளங்களே சிறார்களே இணையதள நண்பர்களே தவக்காலத்தின் மூன்றாம் வாரத்திற்கு உங்கள் அனைவரையும் பிரியமுடன் வரவேற்கிறேன்ல் கடந்தவாரங்களில் நமது பாலைவன அனுபவங்களில் மற்றும் மலை உச்சியைநோக்கிய பயணதருணங்களில் இறைஇயேசுவின் இணைந்து நெருங்கிய பிரசன்னத்தை கண்டுணர அழைக்கப்பட்டோம். இன்றைய திருவழிபாடு மற்றும் இறைவார்த்தைகள் நமது ஞாயிறு வாரந்தர ஆலயம் செல்வது எவ்வாறு அமைகிறது. ஒரு வெறும் கடமைக்கான சந்திப்புகளா அல்லது இறைவனோடு சங்கமிக்கும் நேரங்களா? என் சுய ஆய்வுசெய்ய நம்மை குடும்பங்களாக அழைக்கிறது நாம் குடும்பங்களாக சமூகங்களாக இறைவனின் பிரிய பிள்ளைகள் என்ற உடன்படிக்கை உறவை இறைவனோடு சங்கமித்து புதுப்பிக்கவே திருப்பலிக்கு அழைக்கப்படுகிறோம். இன்றைய நற்கருணை பங்கேற்பு நம்மை வாழுகின்ற பயணிக்கின்ற மற்றும் சாட்சிபகர்கின்ற ஆலயங்களாக நம்மை உருவாக்கட்டும்.

ஏன் உன்பங்கு கோயிலைவிட்டுவிட்டு வாரவாரம் ஞாயிற்றுகிழமை வேறகோயிலுக்குபோகனும்? என்ற கேள்விக்கு கிடைத்தபதில் என் பங்கு எனக்கு தேவையானதை கொடுக்கவில்லை….அங்கு புதிதாக ஒன்றும் நடப்பதுகிடையாது….பழைமையான அணுகுமுறை இளையோருக்கு மற்றும் சிறார்களுக்கு ஈடுபாடு என்று ஒருவாய்ப்பும் கொடுக்கப்படுவது கிடையாது. சிலர் ஆலயங்களை தங்கள் உறவுகளை வெறும் சந்திக்கின்ற இடங்களாகவே பார்க்கின்றார்கள். இறைவனையும் வாரம் ஒருமுறை கடமையை நிறைவேற்ற சந்திக்க சென்றால் போதும் என்றே செல்கிறார்கள். இது பலருடைய முழுமையில்லா நம்பிக்ககைகளாகவே இருக்கின்றன.

ஆலயம் இறைவனை சந்திக்கும் ஒரு சந்தையோ அல்லது ஒரு மேடையோ மடமோ அல்ல. மாறாக இறைவனோடு ஒன்றிக்கின்ற ஒன்றாகின்ற இடம் தருணம் இறைவன் கூடியிருக்கும் சமூகத்தோடு கலக்கின்ற சங்கமமாகின்ற தருணம். நாம் ஆலயம் தேடி செல்லும் பொழுது நம்முடைய எண்ணம் விருப்பம் இவ்வாறாக அமைய இன்றைய இறைவார்த்தைகள் நமக்கு அழைப்பு விடுக்கின்றன. நம் ஆலயங்கைளை சந்திப்பு நிலைகளாக அல்ல மாறாக இறைவனோடு சங்கமிக்கும் இடங்களாக மாற்ற உணர்த்துகின்றன.

ஏன் இயேசு எருசலேம் கோயிலுக்கு சென்றார்?: துவக்கத்தில் குழந்தையாக தன்பெற்றோர்களால் தூய்மைபடுத்தும் மற்றும் தலைமகன் அர்ப்பணிப்பு சடங்கிற்காக எருசலேம் ஆலயம் கொண்டுசெல்லப்பட்டார்.லூக்2:21-38.. மீண்டும் எருசலேம் திருவிழாவிற்கு சென்றபொழுது காணாமாற்போய்விட்டார் என்றுஎண்ணியபொழுது மற்றவர்கள் மத்தியில் போதித்து படிப்பித்துகொண்டது லூக்2:42-52 நமக்கு அறிந்ததே. யோவான் நற்செய்தியாளர் இயேசு தன் 33வயது வயதில் யூதகடமைமுறைப்படி குடும்ப சமூக நினைவுகொண்டாட்டமான தங்கள் முன்னோர்களின் எகிப்திய அடிமைத்தன விடுதலையை நினைவுகூறி கொண்டாட சென்றார்.எருசலேமின் வரலாறு என்ன?: அனைத்து இஸ்ராயேல் மக்களுக்கு இறைவன் உறையும் இடமாக இறைவனை வழிபடும் இடமாக இறைவனுக்கு பலிசெலுத்தும் இடமாக எருசலேம் ஆலயம் திகழ்ந்தது. அவர்கள் வாழ்வின் மையமாக கருதினார்கள். வாக்குறுதி பெட்டகம் பத்துகட்டளைகன் துவக்கத்தில் தூய்மையகத்தில் வைக்கப்பட்டடிருந்தது. இது மிக அழகாக பல்வேறு சிறப்புதன்மைகளுடன் கி.மு966ல் சாலமோனால் கட்டப்பட்டது 2அரசர்6-7. 35ஏக்கர் பரப்பளவில் இப்பெரிய சிறப்பான அலங்காலகற்களாலான இவ்வாலயம் பாபிலோனியர்களால் தாக்கப்பட்டு கி.மு587ல் தகர்க்பட்டு கொள்ளையடிக்கப்பட்டன.அனைவரையும் அடிமைகளாக நெபுகத்நாசர் தலைமையில் கொண்டுசெல்லப்பட்டனர். ஏஸ்ரா6:15. அங்கு 70 வருட அகதிவாழ்வுக்குப்பிறகு பாரசீக அரசன் சைரஸின் உதவியால் அவர்கள் மீட்கப்பட்டு எருசலேமிற்கு சென்று வாழ்வை குறிக்கோள்களை எருசலேம் ஆலயத்தோடு மீண்டும் கட்டிஎழுப்ப அனைத்து உதவிகளும் தரப்பட கி.மு515ல் மீண்டும் கட்டி எழுப்பி புதுப்பிக்கப்பட்டன.செருபபேல் தலைமைியல் கட்டப்பட்டாலும் மீண்டும் கி.மு168-ல் நான்காம் அந்தியோகஸினால் தாக்கப்பட. இறுதி கட்டிஎழுப்புதல் கி.மு19ல் ஏரோது அரசனால் 46ஆண்டுகளாகட்டப்பட்டன. எழுப்ப்பட்ட ஆறாம் ஆண்டில் கி.பி70ல் உரோமையர்களால் தகர்க்கப்பட்டது. எத்தனை அழிவுகள் எத்தனை போராட்டங்கள் எத்தனை கொள்ளைகள். விவிலியத்தில் குறிப்பிடாத மற்றும் பல்வேறு சிறிய போர்களில் எருசலேம் பலதடவைகள் தாக்கபட்டன. மக்கள் இறைவன் உறையும் .இடத்தை தங்கள் அழிவின் இடங்களாக பேரட்டியின் இடங்களாக செயல்பட்டார்கள்.

எருசலேம் ஆலயம் எவ்வாறு அமைந்திருந்தது?: இருவேறு கிரேக்கசொற்கள் குறிக்கும் தூய்மையகம்-புனிதகம் மற்றும் வழிபடும்-பொதுஇடங்களாக அமைந்திருந்தன. இப்பொதுஇடங்கள் 1) இஸ்ராயேல் வழிபடுமிடம் 2)புறஇனத்தார் வழிபடுமிடம் 3)பெண்கள் வழிபடுமிடம் 4) குருக்கள் வழிபடும் இடமாக பிரிக்ப்பட்டிருந்தன. இயேவின் கவனம் பார்வை அனைத்தும் புனிதகத்தின் மீதல்ல மாறாக புறஇனத்தவர் வழிபடுமிடத்திலேயே அவர் பார்வை கவனம் எண்ணம் வேகம் அனைத்தும் ஒருமித்து இருந்’தன. காரணம் அங்குதான் புறஅனத்தவர்கள் புறக்கணிக்க மற்றும் ஒதுக்கப்பட்டு அவ்விடத்திலே பலிசெலுத்த பொருள்கள் விலங்குகள் விற்கப்பட்டு பணமாற்றுதல் திகழ்ந்தது. ஆன்மிகத்தில்அரசியல் கலக்கலாயிற்று.

எவ்விதத்தில் இறைவன் சங்கமிப்பதற்கு பதிலாக அரசியல் அநியாயம் கலந்தது கரைபடிந்தது?: முன்பாக விலங்குகள் பறவைகள் பொருள்கள் பணமாற்றுதல் கெதரோன் பள்ளத்தாக்கு அருகாமையில் நிகழ்ந்தேறின. ஆனால் அநியாயாம் அரசியல் நுழைந்தவுடன் இடம் மாறியது.வியாபாரமாகியது. ஏழைமக்கள் அவர்களின் விலங்குகளை எடுத்துவர தடைசெய்யப்பட்டு அதிகதொகையில் அங்கு வாங்க கட்டாயப்படுத்தப்பட்டனர். பணமாற்றம் உயர்தொகையில் மாற்றப்பட்டன. குறைபாடுள்ள விலங்குகள் விற்கப்பட்டு பலியாக்கப்ட்டன. ஆன்மிகபலி வியாபாரபலியாகியது. எனவே இயேசு அதிகாரத்தூடு வன்முறைவார்த்தை செயலால் வெளிபடுத்துகிறார்.

என்தந்தையின் இல்லத்தை வியாபார சந்தையாக மாற்றிவிட்டீர்கள்: இதன் பொருள் நான் உங்கள் இறைவன் நீங்கள் என்மக்கள் என உங்களோடு ஒன்றித்து உறவாடி முதல் வாசகத்தில் கண்ட உடன்படிக்கையின் கட்டளைகளை பெறும் அந்த ஒன்றிப்பு அனுபவத்தை புறக்கணித்து இறைவனின் நெருங்கிய உறவை வியாபாரபொருளாக பயன்படுத்தியது தான். சங்கமிக்கவந்த இறைவனை கடமைக்காகசந்திக்கவந்து வியாபாரத்திற்கு பயன்படுத்துவது. மேலும் மனிதமாக வந்த இறைமகன் இயேசுவை ஏற்றுக்கொள்ளாதது புறக்கணிப்பது இத்தகைய அரசியலாக்க ஆன்மிகத்தை வியாபார அணுகுமுறையை மாற்ற சங்கமிக்கும் இறைவனை உணர்த்த இயேசுவெளிப்படுத்துகிறார்.

நாம் இறைவனோடு சங்கமாகும் அனுபவத்தை எதிர்நோக்குகிறோமா? அல்லது வெறும் கடமை சந்திப்புக்காக ஆலயம் செல்கின்றோமா? ஒவ்வொருமுறை நாம் திருப்பீடத்தை நாடிவரும்பொழுது நற்கருணை திருவிருந்தில் மற்றும் இறைவார்த்தையில் இறைவன் நம்மோடு சங்கமமாகிறார் நற்கருணை திருத்தூதர் புனித பீட்டர் ஜீலியன் நற்கருணைஇயேசு சங்கமத்தை “மனிதத்தின் விருந்தாளியாகவரும் இறைஇயேசுவே - நற்கருணை” என்கிறார்-ஆமென்.

-