இவ் மறையுரையை வழங்குபவர்

Rev.Fr.Peter Jayakanthan sss
Congregation of the Blessed Sacrament
Corpus Christi Catholic Church,
Houston, Texas, USஞாயிறு மறையுரைகள்

மதிப்பிற்குரிய அருட்பணியாளர்களே, துறவிகளே, அருட் கன்னியரே, உங்கள் ஞாயிறு மறையுரைகளை எமது இணையத்தளத்தின் ஆன்மீக வலத்தில் பிரசுரித்து, ஆண்டவர் இயேசுவின் நற்செய்தியை எல்லோருக்கும் அறிவிக்க விரும்பினால், info@tamilcatholicnews.com என்ற எமது மின்னஞ்சலுக்கு உங்களுடைய ஆக்கங்களை அனுப்பிவைக்கவும். உங்கள் மறையுரைகள் உலகெங்கும் இருக்கும் அனைத்து தமிழ் உள்ளங்களையும் சென்றடையும்.இதோ! ஓநாய்களிடையே ஆடுகளை அனுப்புவதைப்போல நான் உங்களை அனுப்புகிறேன். எனவே பாம்புகளைப்போல முன்மதி உடையவர்களாகவும் புறாக்களைப்போலக் கபடு அற்றவர்களாகவும் இருங்கள்.
(மத்தேயு 10:16)

நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள்; தந்தை, மகன், தூய ஆவியார் பெயரால் திருமுழுக்குக் கொடுங்கள். நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்களும் கடைப்பிடிக்கும்படி கற்பியுங்கள். இதோ! உலக முடிவுவரை எந்நாளும் நான் உங்களுடன் இருக்கிறேன்
(மத்தேயு 28:19-20)

நீ அவற்றை உன் பிள்ளைகளின் உள்ளத்தில் பதியுமாறு சொல். உன் வீட்டில் இருக்கும்போதும், உன் வழிப்பயணத்தின் போதும், நீ படுக்கும்போது, எழும்போதும் அவற்றைப் பற்றிப் பேசு.
(இணைச்சட்டம் 6:7)
தவக்காலத்தின் இரண்டாம் ஞாயிறு

எந்த மலையை நோக்கி?

தொ.நூ22:1-2 9 10-13 உரோ8:31-34 மாற்9:2-10கிறிஸ்துவில் பிரியமுள்ளவர்களே சகோதர சகோதிரியரே இளைய உள்ளங்களே சிறார்களே இணையதள நண்பர்களே தவக்காலத்தின் இரண்டாம் வாரத்திற்கு உங்கள் அனைவரையும் பிரியமுடன் வரவேற்கிறேன்.கடந்த வாரம் நமது பாலைவன அனுபவத்தில் வானதூதர்களின் பிரசன்னத்தில் தொடர்ந்து பயணம்செய்ய அழைக்கப்பட்டோம். இரண்டாம் வாரத்தில் பல்வேறு இருள்நிறைந்த மனநிலைகளோடு நாம் பயணம் செய்த அல்லது பயணம் செய்ய தயங்கிய மலைநோக்கிய தருணங்களை திரும்பிபார்க்க அழைக்கப்படுகிறோம். நமது செப தப முயற்சிகள் மலைஉச்சிதருணங்களில் இறைவனோடு ஒன்றித்திருக்க துணைபுரியட்டும். ஒவ்வொருமுறை நாம் நற்கருணை பலியில் ஈடுபடும்பொழுது அது மறுகல்வாரி பயணம் என்பது நமது நினைவிலிருக்கட்டும்.

தமிழகத்தின் அனைத்து மலைகளிலும் கோயில்கள் இருப்பதை நாம் பார்க்கிறோம். பல்வேறு வேண்டுதல்களோடு தவமுயற்சிகளோடு அக்கோயில்களை நோக்கி நடைபயணமாக அல்லது திருப்பயணமாகவோ மக்கள் தொடர்ந்து செல்வதுண்டு. மலை உச்சி இறைவனோடு இனணகின்ற இறைவன் அவரை நமக்கு வெளிப்படுத்துகின்ற இடமாக மீட்பின் வரலாற்றிலும் திருச்சபையின் படிப்பினையிலும் நாம் காண்கின்றோம். ஆனால் இறைவனின் ஒளியில் இணைவதற்குமுன்பு மலையை நோக்கிய பயணத்தை நாம் ஒரு இருள் நிரம்பிய பயணமாக குழப்பம் நிரம்பிய பயணமாகவே அதிகமாகவே நாம் காண்கின்றோம். எத்தகைய இருளான நிலைகள்? தடுமாற்றத்தை தரும் தருணங்கள் எவை?

வேலையை தக்கவைக்க சந்திக்கும் தருணங்கள்……….இருளானவை!
இறுதி தேர்வின் இறுதி பாடத்தை முடிக்க கடினப்படும் நேரங்கள்….இருளானவை!
கேன்சர் சிகிச்சையில் ஹிமோதெரெப்பியை வலிகளோடு சமாளிப்பது…..இருள்போன்றது!
நெருக்கமான நபரின் சமீபத்திய இழப்பை ஏற்க மறுப்பது….இருள்போன்றது!
ஆன்மிக தேவைகளை மறுப்பது……..இருள்போன்றது!
நீண்டகால தொல்லைகளுக்கு வேண்டாம் என சொல்லமுடியாதது ….இருள்போன்றது!
பெரிய நன்மைதனத்தை மறுக்க சுயநலத்தை பயன்படுத்துவது……இருளுக்கு சமம்!
மேற்சொன்னவைகள் நாம் பயணிக்க விரும்பா இருள்நிரம்பிய தருணங்கள் ஆகும். இவைகளோடு மலை உயரத்தை காண தடுமாறி தயங்குகிறோம். மலையின் உயரம் பயம்தருகின்ற இருள் நிரம்பிகிடக்கின்ற தனிமை தருவிக்கின்ற மேலும் பல்வேறு காரணங்களால் தற்கொலை முயற்சிக்கு ஏதுவான இருளான இடமாக நாம் தவறான எண்ணத்தோடு காண்கின்றோம். இத்தகைய எண்ணத்தை மாற்றி மலையின் உயரமான இடத்திலே மலையின் உச்சியியே இறைவன் நம்மை சந்திக்கின்ற வெளிச்சமான ஆசீர் தருகின்ற தருணங்கள் ஆகும். இறைவன் நம்மை அவ்விடத்திலே நெருக்கமாக காணும்பொழுது நம் அனைத்து இருள் நிலைகளும் முழு வெளிச்சமடைகின்றன. இயேசுவின் தோற்றமாற்றத்துடன் நம்மை அடையாளம் காணச்செய்கின்றன. நம்மிலும் இவை ஏற்படுத்துகின்ற தோற்றமாற்றம் யாதெனில் பலவகைகளில் சிதைந்துபோன இறைச்சாயலை திரும்பபெற்றுகொடுப்பவைகளே.

. இன்று நமக்கு தரப்படுகின்ற இறைவார்த்தைகள் அபிரகாம் இயேசு மற்றும் அவருடைய அனைத்து திருத்தூதர்களோடு மலைஉச்சியை நோக்கிய பயணத்துக்கு அழைப்புவிடுக்கின்றன.மலை உச்சியை நோக்கிய பயணம் அவ்வளவு எளிதானதல்ல இது அபாயகரமானது உத்திரவாதமில்லாதது காட்டுவிலங்கள் இருக்ககூடியது உடல்நலத்திற்கு சோதனையானதொன்று. ஆனால் பயணிப்பது சிதைந்த உடைந்த அத்தருணங்களை மீண்டும் முழுஇறைச்சாயலாக பெறக்கூடிய வாய்ப்புக்கு வழிகாட்டுகிறது. பல்வேறு மலை உச்சி பயண அனுபவங்களை விவிலிய மீட்பின் வரலாறு நமக்கு தருகிறது.

தொ.நூ8:4 நாற்பது நாள் இருளான போராட்டத்திற்குபிறகு நோவாவின் பெட்டகம் அடைந்தஇடம் ஆரராத்து மலை. தொ.நூ22:2 அபிரகாம் கடின இதயத்தோடு தன் ஒரே மகன் ஈசாக்கை பலியாக்க சென்ற பயணித்தது மலை மோரியா. 2குறி3:1 சாலமோன் மோரியா மலைமீது கட்டப்படவிருக்கும் ஆலயத்தில் பலிகள் தொடர்ந்து நிறைவேற்றப்பட்டன. வி.ப19:16-20:12மேசே இறைவனை சீனாய் மலையிலே சந்தித்து உறவாடி வெளிப்படுத்திய இறைவனிடமிருந்து உடன்படிக்கை உறுதியை பத்துகட்டளைகளை பெற்றார். 1அரச19 எலியா இறைவாக்ககினர் உயிருக்குப் பயந்து நாற்பது நாள் பாலைவனத்து பயணத்திற்குபிறகு பயத்தோடு மனவலியோடு ஓடியபொழுது ஒரேபு மலை உச்சியில் இறைவனை சந்தித்து அணுகி இருளிலிருந்து வெளிச்சம் பெற்றோர்.எபி12:22 தி.வெ14:1 தாவீது எருசலேம் நகரை சீயோன் மலை மீது உருவாக்ககினார்.

மேற்குறிப்பிட்ட இறைகுறிப்பிடுகள் மலை உச்சி மலை அனுபவம் இறைவனை சந்திக்கும் தருணங்களாக விண்ணகத்து இறைவன் தன்னை வெளிப்படுத்திய அருகாமை அனுபவங்களாக நாம் காண்கிறோம். ஏன் இந்த மலை அனுபவத்திற்கு இறைவன் தலைவர்களை இறைவாக்கினர்களை அழைக்கின்றார்? ஏன் மலைஉச்சியில் தன் அருகாமையை வெளிப்படுத்தி உணர்த்துகின்றார்?. அவரை அடைய அவருக்கு நெருக்கமாக கடினங்களை கடந்துவர பல தடைக்கற்களை ஏறிவர விரும்புகிறார். இப்படிகற்கள் சந்தேகங்கள் – குழப்பங்கள் – கேள்விகள் – இருள்நிறை தருணம் போன்றவைகளாகும். இப்படிக்கற்கள் நமது சிதைந்த வாழ்வை முகத்தை பல்வேறு எண்ண மன நிலைகளை பக்குவபடுத்தி செம்மைபடுத்தி இறைவனை அனுபவித்து நம்மை ஒளியை புதியதொரு வெளிச்சத்தை தருகின்றன. இதுதான் தோற்றமாற்றமிகு அனுபவம். இன்றைய வழிபாட்டின் இறைவார்த்தைகள் மூன்று மலை உச்சி இறைஅனுபவத்தை நம் சிந்தனைக்கு நம்முன் வைக்கின்றன. இவைகள் மோரியா மலை – ஒரேபு மலை – கல்வாரி மலைகளாகும்.

மோரியா மலை: அபிரகாம் இம்மலைமீது ஏறும்பொழுது அவரிடம் இருந்த போராட்டஙகள் விசுவாசமா? பாசமா? இறைநம்பிக்கையா? சுயவிருப்பமா? இவைகளோடு மனதிலே வலி கவலை ஏமாற்றம் துயரம் இவைகளோடு மலைமீது பலியாகயிருக்கும் மகனோடு ஏறுகிறார்.. நிறுத்தாது தொடர் பயணம் செய்கிறார். மலை உச்சியிலே தனக்கு கிடைத்த பலிப்பொருளும் இறைவனின் பேச்சும் வெளிச்சத்திற்கு இறைவனோடு இணைத்து உறுதிபடுத்தும் எண்ணஇயலா ஆசீர் மலைஉச்சி அனுபவத்திற்கு முன் உதாரணமாகும். மேலும் வரலாற்றில் பல்வேறு நேரங்களில் முதல் பிள்ளையை பலியாக்கும் பழக்கம் இருந்தது. கனானேயர் மற்றும் அமோனியர்கள் தங்கள் பிள்ளைகளின் பலிகளை நிறைவேற்றி வந்தனர். மீக்கா6:6-8 தன்னிடம் என்ன பலிப்பொருளாக செலுத்தவேண்டும் கனியா – விலங்குகளா எண்ணெயா என்று வந்தவர்களுக்கு அபிரகாமின் எடுத்துகாட்டை விளக்கிமுன்வைக்கிறார்.

தாபோர் மலை – எர்மோன் மலை: தபோர் 1000 அடிகளுடையது மாறாக எர்மோன் மலை 92000 உயரமுடியது. இங்கு தான் இயேசுவின் தோற்றமாற்றம் நிகழ்ந்தது. மாற்கு அன்றைய கிறிஸ்தவ சமூகத்தில் சிலர் சிலுவையை ஏற்றுக்கொள்ள மறுத்து அதை குற்றவாளியின் சின்னமாக கருதியது. பலர் அரசனுக்கு ஏதிராக சிலுவையை அரவணைத்து விசுவாசத்தின் மீட்பின் சின்னமாக சாட்சி பகர்ந்தனர். பேதுரு யேவான் மற்றும் யாக்கோபு இவர்களின் எண்ணங்கள் சிதைந்துயிருந்தது இயேசுவை வெற்றியின் மெசியாக பார்த்தனனர். அவர்களின் எண்ணத்திரையை மனத்திரையை புரிந்துகொள்தலை மாற்றவே தன் தோறறமாற்றத்தின வழியாக இருளின் துயரத்தின் படிகற்களை ஏறி அதன்பிறகே வெற்றியின் மீட்பின் மெசியா என வெளிப்படுத்தியதை அவர்கள் பெந்தெகோஸ்தே பெருவிழாவின் பிறகே புரிந்து ஏற்று சாட்சிபகர்ந்தனர். அவர்களும் பல்வேறு மலை அனுபவங்களுக்குள்ளாயினர்.

கல்வாரி மலை – நற்கருணைப் பலி: நாம் ஒவ்வொருமுறை நற்கருணைப்பலிக்கு ஒன்றுகூடும் பொழுது நாம் மலை அனுபவத்திற்கு அழைக்கப்படுகிறோம். திருப்பலியில் நம்முடைய உடைந்த சிதைந்த முகங்களை உணர்வுகளை குழப்பங்களை சந்தேகங்களை அப்ப இரசத்தோடு அர்பணிக்கும்பொழுது இயேசுவின் பிரசன்னங்களாக மாறும்பொழுது நாமும் தோற்றம் மாறுகிறோம் அப்பொழுது தான் நம்பங்கேற்பு முழுமையடைகிறது-ஆமென்.