இவ் மறையுரையை வழங்குபவர்

Rev.Fr.Peter Jayakanthan sss
Congregation of the Blessed Sacrament
Corpus Christi Catholic Church,
Houston, Texas, US



ஞாயிறு மறையுரைகள்

மதிப்பிற்குரிய அருட்பணியாளர்களே, துறவிகளே, அருட் கன்னியரே, உங்கள் ஞாயிறு மறையுரைகளை எமது இணையத்தளத்தின் ஆன்மீக வலத்தில் பிரசுரித்து, ஆண்டவர் இயேசுவின் நற்செய்தியை எல்லோருக்கும் அறிவிக்க விரும்பினால், info@tamilcatholicnews.com என்ற எமது மின்னஞ்சலுக்கு உங்களுடைய ஆக்கங்களை அனுப்பிவைக்கவும். உங்கள் மறையுரைகள் உலகெங்கும் இருக்கும் அனைத்து தமிழ் உள்ளங்களையும் சென்றடையும்.



இதோ! ஓநாய்களிடையே ஆடுகளை அனுப்புவதைப்போல நான் உங்களை அனுப்புகிறேன். எனவே பாம்புகளைப்போல முன்மதி உடையவர்களாகவும் புறாக்களைப்போலக் கபடு அற்றவர்களாகவும் இருங்கள்.
(மத்தேயு 10:16)

நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள்; தந்தை, மகன், தூய ஆவியார் பெயரால் திருமுழுக்குக் கொடுங்கள். நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்களும் கடைப்பிடிக்கும்படி கற்பியுங்கள். இதோ! உலக முடிவுவரை எந்நாளும் நான் உங்களுடன் இருக்கிறேன்
(மத்தேயு 28:19-20)

நீ அவற்றை உன் பிள்ளைகளின் உள்ளத்தில் பதியுமாறு சொல். உன் வீட்டில் இருக்கும்போதும், உன் வழிப்பயணத்தின் போதும், நீ படுக்கும்போது, எழும்போதும் அவற்றைப் பற்றிப் பேசு.
(இணைச்சட்டம் 6:7)








பொதுக்காலத்தின் ஆறாம் ஞாயிறு-

விரும்புகிறேன்: முழுமனிதமாகு…….!!!

லேவி13:1-2 44-46 1கொரி10:31-11:1 மாற்1:40-45



கிறிஸ்துவில் பிரியமுள்ளவர்களே சகோதர சகோதிரியரே இளைய உள்ளங்களே சிறார்களே இணையதள நண்பர்களே இன்றைய நற்கருணை திருவிருந்திற்கு உங்களை அன்போடு அழைக்கின்றேன். இறைவன் திருநாமத்தில் அவர் திருபீடத்தில் மற்றுமொரு புதிய வாரத்தை துவங்க நாம் ஒன்று சேர்ந்து வந்திருக்கின்றோம். இறைவனின் பிரிய பிள்ளைகள் நாம் என்ற உணர்வை நம் ஒவ்வொரு குடும்ப சமூக ஒன்றிப்பும் நமக்கு நினைவுபடுத்தி திருச்சபையோடு பங்கோடு நாம் சார்ந்திருக்கும் தன்மையை ஆழப்படுத்தட்டும் இயேசுவின் புனிதமிகு இறப்பையும் உயிர்ப்பையும் நம்முன் கொண்டுவரும் இத்திருப்பலியில் நமது அன்றாட இறப்பு உயிர்ப்பு அனுபவங்களை அர்ப்பணித்து ஆற்றல் பெறுவோம். நமது தனிமை வெறுமை போன்ற காயங்களை உடைபடும் இயேசுவின் உடலோடு சிந்தப்படும் அவர் இரத்தத்தோடு இணைத்து நலம் வேண்டுவோம். விரும்புகிறேன் முழுமனிதமாகு என்ற இயேசுவின் வார்த்தை நமது செவிகளில் கேட்கப்படட்டும்.

மனித வாழ்வில் நம்மை ஆழமாக பாதிக்ககூடியது நாம் விரும்பாதது புறக்கணிப்படுகின்ற – வெறுக்கப்படுகின்ற மற்றும் தனித்துவிடப்படுகின்ற அனுபவங்களே ஆகும். நாம் விரும்புவது வேண்டுவது எல்லாம் நம் வாழ்வில் இவைகள் எனக்கு ஏற்படக்கூடாது என்பதே. இவைகள் ஒருவர் மனதில் ஆழமான ஆறாத காயங்களாக ஆழமான தழும்புகளாக இருந்துவிடுகின்றன. இது ஒருவரை குடும்பம் – சகோதர சமூகம் என்ற உறவுவட்டத்திலிருந்து வெட்டி பிரித்து விடுகிறது. இது மனரீதியாக ஒரு பெரிய பாதிப்பை ஒருவரில் ஏற்படுத்துகிறது. இத்தருணங்களில் நம் செபங்கள் பின்வருமாறு அமைகின்றன:

o தீராதவியாதியினால் நான் புறக்கணிக்கப்ட்டேன்….ஆறுதல் கிடைக்குமா!
o என் பக்கவாதம் என்னை முடக்கிவைத்துவிட்டது..எனக்கு யாருமில்லையா!
o என் கோபத்தினால் பலர் என்னைவிட்டு தொலைவில் செல்கின்றனர்….கோபம் நீங்காதா
! o நான் பொறுமையற்று செயல்படுவதால் எந்த குழுவிலும் எனக்கு இடமில்லை…ஏன்!
o நான் அனைவருக்கும் சுமையாகயிருப்பதால் நான் தனித்துவிடப்பட்டேன்……யார்ஆதரவு!
o என்னை பிரிந்து சென்ற மகள் திரும்ப வந்து என்னுடன் சேரமாட்டாளா!
o போதைபொருளில் தொலைந்துபோன என்மகன் திரும்ப கிடைக்கமாட்டானா!
o உடல் வலிகளைவிட என் உள்ளத்து காயங்கள் வேதனை தருகின்றன…குணம்கிடைக்குமா!

இத்தகைய எதார்த்தங்களில் நம் எதிர்பார்ப்பும் ஆதங்கமும் எல்லாம் நமக்கு யாரும்; இருக்கமாட்டாங்களா என்பதேயாகும்? நம்மோடு பேச யாரும் வரமாட்டார்களா? நாம் சார்ந்துயிருக்க யாரும் தோள்கொடுத்து துணையிருக்கமாட்டார்களா என்பதேயாகும். இன்றைய நவீன அறிவியல் தொழில் நுட்பவளர்ச்சி முயற்சியில் பல்வேறு தீராத மற்றும் புதிய நோய்களை எதிர்த்துபோராட மருத்துவதுணையிருக்கின்றன. ஆனால் இவைகள் ஒன்றுமில்லாதருணத்தில் வரலாற்றில் கோடிக்கணக்கில் உயிர்கள் இழப்பு இருந்திருக்கின்றன. வரலாறு இதற்கு சான்றுபகர்கின்றது.

1348 – 1350 களில் தாக்கிய கொடிய ப்ளேக் ஜரோப்பாவில் மட்டும் நான்கில் ஒருபங்கு மக்களை பலிவாங்கியது. 1918-ல் இன்புல்வன்சா என்ற கொள்ளைநோய் கணக்கிலடங்கா உயிர்களை தாக்கியது. 1940 மற்றும் 50-களில் போலியோ மற்றும் காலரா நோய்கள் மக்களின் வாழ்வில் உடல்குறைபாடுகளை ஏற்படுத்தியது. நாம் வாழும் நாட்களில் பல்வேறு கேன்சர் புற்றுநோய்கள்-எய்ட்ஸ் மற்றும் சமீபத்திய ஈபோலா இவைகள் தொடாந்து மனிதத்தின் நலமான வாழ்வுக்கு ஒரு பயமுறுத்தும் எதிரியாக இருக்கின்றன. இவைகளினால் மனித உள்ளங்களின் அமைதியும் மகிழ்ச்சியும் தடைபடுகிறது. மருத்துவமுன்னேற்றமடையா அந்நாட்களில் அவர்கள்சார்ந்திருந்திருந்த சமூகம் மற்றும் குடும்பம் துணையாக சக்தியாக இத்துயரங்களை கடக்க உடன் பயணம்செய்தன.

இன்று உறவுகள் வெட்டி எறியப்படுவதை மாற்றியமைக்க இன்றைய இறைவார்த்தைகள் நமக்கு அழைப்புவிடுக்கின்றன.முதல் நூற்றாண்டிலேயே இத்தொழுநோயானது ஒரு பயமிகு உணர்வை சமூகத்தில் உருவாக்கியது. திருப்பாடல் 88ம் பிரிவு இந்நோயோடு செபிக்கின்ற ஒருவரின் மனநிலையை வெளிக்காட்டுகிறது.”6 ஆழமிகு படுகுழிக்குள் என்னைத்தள்ளிவிட்டீர்! காரிருள் பள்ளங்களுக்குள் என்னைக் கைவிட்டுவிட்டீர். 7 உமது சினம் என்னை அழுத்துகின்றது. உம் அலைகள் அனைத்தும் என்னை வருத்துகின்றன.18 என் அன்பரையும் தோழரையும் என்னைவிட்டு அகற்றினீர்: இருளே என் நெருங்கிய நண்பன்”

தொழுநோய் பாதித்தவர்களின் அனுபவங்கள் எவ்வாறு இருந்தன? இன்றைய முதல் வாசகத்து லேவியர் புத்தகத்து 13-ம் அதிகாரம் அதிகம் அறியப்படாத தொழுநோய் எனச்சொல்லப்பட்ட தோல்வியாதியில் பாதிக்கப்பட்டவர்களின் வாழ்வை நம்முன் கொணர்கிறது. இவ்வரிகளை நாம் படிக்கும்பொழுது அவர்களின் உடன் – மன – ஆன்மிக மற்றும் சமூக பாதிப்புகள் நமக்குவிளங்கும். இது ஒரு ஆழமான பிரிவை ஏற்படுத்தியது. வேற்றுமையை உருவாக்கியது. அவர்களை இவ்வாறு சமுதாயம் மதசட்டங்கள் நோக்கியது நடத்தியது:

 தீண்டதகாதவர்களாக கருதப்பட்டனர்
 சமூகத்திலிருந்து புறம்பாக வெளியேற்றப்பட்டனர்
 அவர்கள் வாழ்ந்த இடம் – பயன்படுத்திய பொருட்கள் மற்றும் அவர்களோடு தொடர்புடையவர்களும் தீட்டுபட்டவர்களாக எண்ணப்பட்டனர்.
 கோயிலின் குருக்கள் வெளியே வந்து ஒருவரை சோதித்து அவர்களின் தோல்வியாதியை தொழுநோய் எனஉறுதிபடுத்தினர்.
 மக்களின் பார்வையிலிருந்து புறம்பாக வைக்கப்பட்டனர்.
 தீட்டு தீட்டு என்ற கூக்குரலோடு மணியடித்தவாறு மட்டுமே அவர்கள் வெளியே நடமாட அதுவும் தங்கள் உணவை தேடிவரமுடிந்தது.
 மறைமுகமாக யாரையாவது பார்க்க துணிந்தால் அவர்கள் கல்லால் எறியபட்டு கொல்லப்பட்டனர்.
 தொழுநோய் இறைவனின் சாபமாக தண்டனையாக கருதப்பட்டது. (எண்12:1—15 மிரியமும் ஆரோனும் மறைமுகமாக மோசே பற்றி பேசியதால் கிடைத்த தண்டனை எனசொல்லிக்கொண்டனர்.)

மேற்கூறியவைகள் எவ்வாறு தொழுநோயால் தாக்கியவரை காயப்படுத்தி பாதித்தன? அவர்களின் முகங்கள் அலங்கோலமாயின. இது ஒரு பரவும் தொத்தும் விரைவில் அருகிலிருப்பவரை பற்றிக்கொள்ளும் நோயாக கருதப்பட்டதால் அவர்கள் அவமானத்திற்குள்ளாகி தனித்து பிரித்துவைக்கப்பட்டனர். மேலும் இது இறைவன் தரும் சாபமாக எண்ணப்பட்டு அவர்கள் தங்கள் உறவுகளாகிய குடும்பம் நண்பர்கள் சமூகம் இவைகளிலிருந்து வெட்டிவிடப்பட்டனர். இத்தகைய உடல்குறைபாடு – அவமான உணர்வு – சமூக புறக்கணிப்பு மற்றும் ஆன்மிக ஏமாற்றம் அவர்களில் எற்கனவே இறந்துவிட்டோம் என்ற கசப்பான வெறுப்பான உணர்வை ஏற்படுத்தியது. தோல் செத்துபோனதுபோல மனமும் செத்துபோயின என்றுவெளிக்காட்டினர். காரணம் அவர்கள் தொடர்பு உறவுகள் அனைத்தும் இருந்தும் காணமுடியாதவாறு செத்துபோனதாகியது. என்னுடைய எத்தகைய காயங்களை தழும்புகளை நான் உயிரோடு புதைக்கின்றேன்? எந்த காயங்கள் என் உறவுகளிடமிருந்து சமூகத்திடமிருந்து திருச்சபையிலிருந்து விசுவாசத்திலிருந்து என்னை பிரித்துவைக்கிறது? விரும்புகிறேன் குணமாக்கும் முழுமனிதமாக்கும் என் உறவுகளோடு மீண்டும் இணைத்துவையும் என நான் சொல்ல தயாரா?

நற்செய்தியில் எவ்வாறு தொழுநோயுற்றவர் இயேசுவை அணுகுகிறார்? தீட்டு தீட்டு என்று கூவிஅழைப்பதற்கு பதிலாக அனைத்து மதவேறுபாட்டு சட்டங்களை உடைத்து இயேசுவை நெருங்கி வருகிறார். பின் நீர் என்னை தொடவேண்டாம் இக்கூட்டம் உம்மை தீட்டு எனச்சொல்லிவிடும். நீர் என்றும் தூய்மையான இறைமகன் விரும்பி என்னைக் குணமாக்கும் என்கிறார்.

இயேசு மற்ற ஆலய குருக்களிடமிருந்து எவ்வாறு வேறுபடுகிறார்? ஆலய குருக்கள் வெளியேவந்து தங்களை தேடிவந்தவர்களை பரிசோதித்து அவர்கள் முழுவதும் குணம்பெற்றிருந்தால் தூய்மைபடுத்திக்கொள்ள காணிக்கைபலியை செலுத்தச்சொல்லி கட்டாயப்படுத்தினர். அதன் பிறகே அவர்களின் உறவுகளோடு இணைய அனுப்பப்பட்டனர். இங்கு இயேசு ஆலயமாகவும் மற்றும் குருவாகவும்செயலபடுகிறார். நீ தீட்டு அல்ல என உலகுக்கு உணர்த்த அவரைகரங்களால் தொட்டு விரும்புகிறேன் குணமாகி முழுமனிதமாகு உன் உறவுகளோடு குடும்ப சமூகங்களோடு மீண்டும் இணைந்துகொள் என அனுப்புகிறார்.

வின்சியா ரிவ்வா என்ற 53வயது இத்தாலியர் கொடூரமான கட்டிகளை முகத்தில்தாங்கிய ஒரு குறைபாடு நோயினால் 15வயதிலிருந்து அவமானத்துக்குள்ளானவர். பேருந்துகளில் பயணம் செய்யும்பொழுது தூரமாக போ அருகில் வராதே என விரட்டியடிக்கப்பட்டவர். அவர் கடந்தவருடம் ஒருமுறை திருத்தந்தையின் பொதுசந்திப்பின் பொழுது எதிர்பாராதவிதமாக திருதந்தை அவரருகில; வந்து ரிவா முகத்தை பற்றி அணைத்தது தனக்கு பரகதியில் வானகத்தில் இருந்ததுபோன்ற ஒரு உணர்வைதந்தது என்று பகிர்ந்தார்.

மலாக்காய் தீவுகளில் தொழுநோயின்றி நுழைந்த முதல் மனிதர் அருட்தந்தை தமியான். தீட்டு என விலக்கப்பட்ட மக்களோடு ஒன்றாகி ஒரு முழுமனித உணர்வை கொடுத்தவர். ஆயர் அவரை மீண்டும் வர அழைத்தப்பொழுது தன்னை முகங்களை வாழ்வை இழந்தஇம்மக்களுக்கு அர்பணித்துவிட்டேன் என்றுரைத்து பணிசெய்ய அவரையும் தொழுநோய் பாதித்தது. அங்குள்ளவர்கள்சொன்னது நாங்கள் உறவுகளின்றி ஆதரவின்றி அனைத்தையும் இழந்து அவமானத்தோடு இறக்கும்பொழுது நீயும் மனிதம் எனஎங்கள் கரங்களை இறைவனோடு இணைத்தவரே அருட்தந்தை தமியான் என பகிர்ந்துகொண்டனர்.

என்னை தனிமைப்படுத்தும் காயங்கள் தழும்புகள் என்ன? நான் காயப்பட்டு பிரிந்திருக்கும் ஒருவரை என்சமூகத்தில் முழுமனிதமாக இணைத்துக்கொள்வேன் –ஆமென்.