இவ் மறையுரையை வழங்குபவர்

Rev.Fr.Peter Jayakanthan sss
Congregation of the Blessed Sacrament
Corpus Christi Catholic Church,
Houston, Texas, USஞாயிறு மறையுரைகள்

மதிப்பிற்குரிய அருட்பணியாளர்களே, துறவிகளே, அருட் கன்னியரே, உங்கள் ஞாயிறு மறையுரைகளை எமது இணையத்தளத்தின் ஆன்மீக வலத்தில் பிரசுரித்து, ஆண்டவர் இயேசுவின் நற்செய்தியை எல்லோருக்கும் அறிவிக்க விரும்பினால், info@tamilcatholicnews.com என்ற எமது மின்னஞ்சலுக்கு உங்களுடைய ஆக்கங்களை அனுப்பிவைக்கவும். உங்கள் மறையுரைகள் உலகெங்கும் இருக்கும் அனைத்து தமிழ் உள்ளங்களையும் சென்றடையும்.இதோ! ஓநாய்களிடையே ஆடுகளை அனுப்புவதைப்போல நான் உங்களை அனுப்புகிறேன். எனவே பாம்புகளைப்போல முன்மதி உடையவர்களாகவும் புறாக்களைப்போலக் கபடு அற்றவர்களாகவும் இருங்கள்.
(மத்தேயு 10:16)

நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள்; தந்தை, மகன், தூய ஆவியார் பெயரால் திருமுழுக்குக் கொடுங்கள். நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்களும் கடைப்பிடிக்கும்படி கற்பியுங்கள். இதோ! உலக முடிவுவரை எந்நாளும் நான் உங்களுடன் இருக்கிறேன்
(மத்தேயு 28:19-20)

நீ அவற்றை உன் பிள்ளைகளின் உள்ளத்தில் பதியுமாறு சொல். உன் வீட்டில் இருக்கும்போதும், உன் வழிப்பயணத்தின் போதும், நீ படுக்கும்போது, எழும்போதும் அவற்றைப் பற்றிப் பேசு.
(இணைச்சட்டம் 6:7)
பொதுக்காலத்தின் ஜந்தாம் ஞாயிறு-

எனக்கு ஏன்? - ஓர் இறைபுலம்பல்…….!!!

யோபு7:1-4 6-7 1கொரி9:16-19 22-25 மாற்1:28-39கிறிஸ்துவில் பிரியமுள்ளவர்களே சகோதர சகோதிரியரே இளைய உள்ளங்களே சிறார்களே இணையதள நண்பர்களே நற்கருணை விருந்தில் அருகிலிருப்பவரை கரம்கொடுத்து வரவேற்று ஒரே சமூகமாக இணைவோம். நாம் ஒன்றிணைப்பும் பங்கேற்பு கொண்டாட்டமும் நம்மை சுற்றியிருப்பவர்களுக்கு சாட்சியமும் சான்றும் ஆகும். நம் சாட்சியம் நம் அன்றாட வாழ்வில் விளக்கங்கள் தரஇயலாத புரியமுடியாத வலிகளையும் துயரங்களையும் சந்திக்கும்பொழுது சோதிக்கப்படுகிறது. நம் விசுவாசத்திற்கு இறைப்பற்றுக்கு சவாலான தருணம் இது. இவைகளீலிருந்து நாம் விலகி ஓட முடியாது. நமது உடைபடும் தருணங்களோடு இறையேசுவின் உடைக்கப்படும் உடலோடு இணைத்துக்கொள்ளவே ஒவ்வொரு நற்கருணையும் நம்மை அழைக்கிறது. இறைஇயேசுவின் இந்த தொடர் பங்கேற்புக்கு நன்றிகூறி நம சகோதர சகோதரியரின் துயரங்களுக்கு தோள்கொடுத்து பயணம்செய்ய இத்திருவிருந்தில் வரம்கேட்டு இணைவோம்.

பெண் பார்த்துவிட்டு வந்தபிறறகு ஏன் பலர் சிரிக்கிறார்கள் என்ற கேள்விக்கு ஒருவர் சொன்னபதில் துன்பம் வரும் வேளையில் சிரிங்க என்ற வள்ளுவரின் கூற்றே. ஏன் திருவள்ளுவர் துன்பத்தை ஏளனமாகப்பார்க்க சொல்கின்றார் என இறுதியில் காண்போம்.

என்னால் சமாளிக்க முடியாது இதை நம்மாள தாங்க தாக்குபிடிக்க இயலாது .இவைகள் நாம் அநேக துன்பமிகு நேரங்களில் சொல்லக்கூடிய வாக்கியங்களாகும் இந்நோயை வலியை ஏமாற்றத்தை தோல்வியை இழப்புகளை சந்திக்கவோ தாங்கவே கடந்துவரவோ எனக்கு சக்தியில்லை என்ற மனப்போராட்த்தோடு நாம் புலம்புவது எனக்கு ஏன்? எனக்கு ஏன் இந்த இழப்பு? எனக்கு ஏன் இந்த சோதனை? எனக்கு ஏன் பெரிய கடன் தொல்லை? எனக்கு மட்டும் ஏன் இறைவன் இந்த வலியை துயரத்தை தருகிறார? நான் வலியில் கதறவேண்டும் என இறைவன் அனுமதிக்கிறாரா? விரும்புகிறாரா?

இதே கேள்வியைத்தான் சாரா என்ற இளம்பெண் என்னைக்கேட்டார். சாரா பகிர்ந்து புலம்பியது நான் இரட்டை குழந்தைகளை என் உதரத்தில் சுமந்துகொண்டிருந்தேன். ஒரு குழந்தையை 17வாரத்தில் இழந்தேன். மற்றொரு என் குழந்தையும் இதோ 23வாரத்து குழந்தையாக சிசுவாச உயிராக எனக்கு கிடைக்கவில்லை இதோ உயிரற்ற பொம்மையாக என்கையில் கொடுக்கப்பட்டிருக்கிறது.. என் இரண்டு உயிரும் குழந்தைகளும் இவ்வுலகில் பிழைக்காது வாழமுடியாது எனத்தெரிந்தும் ஏன் ஏன் இறைவன் அவைகளை என்னில் அனுமதித்தார்? எனக்கு ஏன்? நான் இவ்வேதனையை சந்திக்கவேண்டும் என்பதற்கா? நான் துயரப்படவேண்டும் எனபத்றகா? எனக்கு ஏன்? என் இழப்பை ஏன் இறைவனால் பொருத்துக்கொள்ள முடிகிறது?. நான் அவர்கள் மத்தியில் 40 நிமிடங்கள் இருந்தேன் என்னிடம் பதிலில்லை யாரிடமும் பதிலில்லை மற்றெதுவும் நான் பேசவில்லை.

சாராவின் கேள்வி புலம்பல் நியாயமானது தேவையானது எனக்குப்பிடித்திருந்தது ஆனால் சிறார் சிறப்பு மருத்துவமனையில் அந்த அறையில் அவருடைய புலம்பலில் ஆழ்ந்த அர்த்தம் இருப்பதை உணரமுடிந்தது. இத்தகைய ஆழமான வலிகளுக்கு இழப்புகளுக்கு யாரும் பதில் தர இயலாது எந்த பதிலும் ஆறுதலாகாது எனவே இத்துயர தருணங்களை சந்திப்பதின் முதல்படி நம்முடைய எனக்கு ஏன்? என்ற கேள்விகள் நிறைந்த புலம்பல்களே எனலாம். இதில் எந்த தவறும் கிடையாது. இறைவனின் பிரிய பிள்ளைகளாக நமககு அழுதுபுலம்பி கேள்விகேட்க நமக்கு உரிமையிருக்கிறது. இறையியலார் குஸ்தாவோ இதை ஒரு அத்தியாவசமான இறைபுலம்பல் அல்லது இறைஉரையாடல் என எடுத்துகூறி விளக்குகிறார்.

இன்றைய முதல்வாசக நாயகர் நமக்கு பரிச்சயமான பழக்கமான நாம் அனைவரும் அறிந்த யோபு ஆவார். இன்றைய வாசகவரிகள் யோபுவின் கதறல்களை கேள்விகளை புலம்பல்களை நம்முன் வைக்கிறது. யோபுவின் இந்த போரட்டம் மல்யுத்தம் துயரங்கள் இறையியலுக்கு ஆன்மிகத்துக்கு ஒரு உயரிய சவால் எனவெளிப்படுத்துகின்றன. விவிலியத்தில் வேறெங்கும் ஏன் உலகில் மற்றெந்த படைப்புகளிலும் யோபுவின் ஆழ்ந்த அழுத்தமான துயர வலிநிறைந்த போராட்டங்கள் போல வேறெங்கும் நாம் படிக்கவோ காணவோ முடியாது. .செல்வாக்கான செல்வம் நிரம்ப பெற்ற யோபு தன்பிரிய மனைவியை தன் பிள்ளைகளை அனைத்து கால்நடைகள் உடைமைகளை எல்லாம் இழந்துநிற்க அவன் நண்பர்கள் இறைவனை மறுக்க அழைத்து யோபு மறுக்க அவரைத்தனியே விட்டுச்செல்கின்றனர். தனிமையில் துயரத்தில் இழப்பின் உச்சத்தில் பெயரிடமுடியாத உடல் தோல் நோயில் இறைவனிடம் புலம்பி தன் போராட்டத்தை எடுத்துரைக்கிறார்.

யோபுவின் போரட்டம் புலம்பல் கேள்விகள் எவ்வளவு ஆழமானது எத்தகையது? அவருடைய வார்த்தைகளில் இதை ஒரு போரட்டம் என்கிறார். இவைகளை பின்வருவனவற்றிற்கு ஒப்பிடுகிறார். இப்போரட்டம் ஒரு பலநாள்அடிமையாக உழைக்கும் கூலியாள் தன் கூலிக்கு என்றுவரும் என எதிர்ப்பார்ப்பதை போலவும் மற்றும் எனக்கு என்று விடுதலை என்ற நிழலுக்கு எதிர்பார்க்கும் ஒரு நீண்ட நாள் அடிமையைப்போலவும் மேலும் கட்டாயப்போர்வீரராக முடிவுநாள் தெரியாமல்போரிடுவதைப்போலவும் இருப்பதாக ஒப்பிட்டு யோபு புலம்புகிறார். தொடர்ந்து யோபு தன் துயரம் நீண்ட இரவு போல உறக்கமில்லா இடைவிடாமல் படுக்ககையில் புரள்ளவது என்னை இருட்டிலே இருக்கவைக்கின்றன என்கிறார். யோபுவின் இந்த இறை புலம்பல் “இத்துன்ப கிண்ணம் என்னைவிட்டு நீங்கட்டும்” “என் இறைவா என் இறைவா ஏன் என்னை கைவிட்டீர்” என்ற இயேசுவின் இறைத்தந்தையை நோக்கிய புலம்புல்களை கேள்விகளை நினைவுபடுத்துகின்றன.

நம்மனைவருக்கும் ஆன்மிக உளவியல் உடல் சம்பந்தப்பட்ட உணர்வுபூர்மான போராட்டங்கள் துயரங்கள் இருக்கின்றன. சிலசமயம் இவைகள் அனைத்தும் ஒருங்கிணைந்த ஒன்றாகவும் இருக்கலாம். இத்தருணங்களிலெல்லாம் நாமும் ஏன்? எனக்கு ஏன்? என நாம் புலம்புவது சரியானது முறையானது இதுவே இறைப்புலம்பல் அல்லது இறைஉரையாடல் என்பதாகும். ஏன் என்ற இறைஉரையாடலிலிருந்து அடுத்த படியான எவ்வாறு எப்படி எத்தகைய வழியில் நான் இதை கடக்க பயணம் செய்யவேண்டும் என்ற கேள்வி எழுப்ப யோபு கற்று தருகிறார். இந்த எவ்வாறு நான் இதைச்சந்திக்க கடந்துவர முடியும் என்ற கேள்வியின் பொழுது நாம் உணரவேண்டியது என்னோடு பங்கேற்கும் என்வலியில் என்துயரத்தில் என்போராட்டத்தில் என்னோடு இணைந்திருக்கும் இயேசுவை அடையாளம் காணவேண்டும்.புலம்பிய யோபு இறுதிப்பகுதியில் 42:5 “உம்மைப்பற்றிக் காதால் மட்டுமே கேள்விப்பட்டேன் ஆனால் என் கண்களே உம்மைக் காண்கின்றன” எனவெளிப்படுத்துவது யோபு தன்போராட்டத்தில் இறைவன் எவ்வாறு நெருக்கமாக பங்கேற்கிறார் எனஅனுபவபூர்வமாக உணர்ந்ததை சொல்கிறார்.

இறையேசுவின் இத்தகைய பங்கேற்பையும் ஒன்றிணைப்பையும் இன்றைய நற்செய்தி நமக்கு வெளிப்படுத்துகிறது. அனைவரும் அனைத்து விதமான நோயாளிகள் அவரை தேடிவந்தனர். அவரைத்தொட நெருங்கினர் அவரிடமிருந்து குணம்பெற்றனர். என்பது அவர்களின் துன்பத்தில் வலியில் தனிமையில் இயேசுவின் முழு ஒன்றிப்பை இணைப்பை ஈடுபாட்டை பங்கேற்பை வெளிப்படுத்துகிறது. தொடக்கத்திருச்சபையில் துன்புறுத்தப்பட்டபொழுது “இயேசுவின் உடலோடு துயரத்தோடு நாங்களும் பங்கேற்கிறோம்” என பல திருச்சபைதந்தையர்கள் வெிப்படுத்துகிறார்கள்.

நாம் கொண்டாடும் நற்கருணை போரட்டத்தின் வெளிப்பாடு. கோதுமைமணிகள் நசுக்கப்பட்டுதான் அப்பம் உருவாக்கப்படுகிறது. திராட்சைகனிகள் பிழியப்பட்டுதான் இரசம் கிடைக்கப்பெறுகிறது. இதுபோல தொடர்ந்து துன்பப்பட்டு உடைபட்டு மீட்புதரும் இறைஇயேசுவை நம் உடைந்த மனங்களை போரரட்டங்களை துயரங்களை இழப்புகளை இறைபீடத்திற்கு எடுத்துவந்து அர்ப்பணித்து உடைபடும் அப்பத்தில் சிந்தப்படும் இரத்தத்தில் கண்டு அவர் உடலோடு ஒன்றாவோம்.

தொடக்கத்தில் நான் பகிர்ந்த சாரா தொடர்ந்து அந்த 40நிமிட இறுதிநேரத்தில் தன்கரங்களை தன் கணவன் கரங்களோடு இணைத்து என்கணவரோடு இத்துயரத்தை இழப்பை சந்திக்க கடந்துவரமுடியும் என் இறைவனுக்குத்தெரியும்.இறைவன் என்னை இப்போராட்த்திலிருந்து உயர்த்துவார். இங்குள்ள மற்றவர்களின் துயரங்களைவிட என்னுடையது சிறியது என்னுடைய தாங்கும்சக்தி இயேசுவுக்குத்தெரியும் என்றார். திருப்பாடல்23:4 “சாவின் இருள்நிறை பள்ளத்தாக்கில் நான் நடக்கநேர்ந்தாலும் நீர் என்னோடு இருப்பதால் எத்தீங்கிற்கும் அஞ்சிடேன்”.

.இடுக்ககண் வருங்கால் நகுக அதனை
அடுத்து ஊர்வது அ.து ஒப்பது இல் – குறள் 621
இன்பம் விழையான் இடும்பை இயல்பு என்பான்
துனபம் உறுதல் இலன் – குறள் 628
துன்பம் வரும்வேளையில் சிரிங்க என்பது துன்பத்தை ஏளனமாகப்பார்ப்பது அது நம்மை ஒன்றும் செய்யமுடியாது என்ற செய்தியையும் மேலும் துன்பம் நாம் சந்திக்கவேண்டிய இயற்கை என ஏற்றால் எந்ததுன்பமும் நம்மைநெருங்காது இல்லையென்றால் நாம் இன்பத்திலே மூழ்கி துன்பத்தில் துன்பத்தில் ஒடவேண்டாம். கண்ணதாசனின் வரிகளில் “ கடலளவு கிடைத்தாலும் மயங்கமாட்டேன் கையளவேயானாலும் கலங்கமாட்டேன்” என்பதும் இறையேசுவின் உடன்பங்கேற்பு அனுபவத்தை இறைப்புலம்புக்குபின் உணர்வோம்-ஆமென்.