இவ் மறையுரையை வழங்குபவர்

Rev.Fr.Peter Jayakanthan sss
Congregation of the Blessed Sacrament
Corpus Christi Catholic Church,
Houston, Texas, USஞாயிறு மறையுரைகள்

மதிப்பிற்குரிய அருட்பணியாளர்களே, துறவிகளே, அருட் கன்னியரே, உங்கள் ஞாயிறு மறையுரைகளை எமது இணையத்தளத்தின் ஆன்மீக வலத்தில் பிரசுரித்து, ஆண்டவர் இயேசுவின் நற்செய்தியை எல்லோருக்கும் அறிவிக்க விரும்பினால், info@tamilcatholicnews.com என்ற எமது மின்னஞ்சலுக்கு உங்களுடைய ஆக்கங்களை அனுப்பிவைக்கவும். உங்கள் மறையுரைகள் உலகெங்கும் இருக்கும் அனைத்து தமிழ் உள்ளங்களையும் சென்றடையும்.இதோ! ஓநாய்களிடையே ஆடுகளை அனுப்புவதைப்போல நான் உங்களை அனுப்புகிறேன். எனவே பாம்புகளைப்போல முன்மதி உடையவர்களாகவும் புறாக்களைப்போலக் கபடு அற்றவர்களாகவும் இருங்கள்.
(மத்தேயு 10:16)

நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள்; தந்தை, மகன், தூய ஆவியார் பெயரால் திருமுழுக்குக் கொடுங்கள். நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்களும் கடைப்பிடிக்கும்படி கற்பியுங்கள். இதோ! உலக முடிவுவரை எந்நாளும் நான் உங்களுடன் இருக்கிறேன்
(மத்தேயு 28:19-20)

நீ அவற்றை உன் பிள்ளைகளின் உள்ளத்தில் பதியுமாறு சொல். உன் வீட்டில் இருக்கும்போதும், உன் வழிப்பயணத்தின் போதும், நீ படுக்கும்போது, எழும்போதும் அவற்றைப் பற்றிப் பேசு.
(இணைச்சட்டம் 6:7)
பொதுக்காலத்தின் நான்காம் ஞாயிறு-

தீமைகளை………… எதிர்கொள்வோம்…….!!!

இ.ச18:15-20 1கொரி7:32-35 மாற்1:21-28கிறிஸ்துவில் பிரியமுள்ளவர்களே சகோதர சகோதிரியரே இளைய உள்ளங்களே சிறார்களே இணையதள நண்பர்களே நற்கருணை திருவிருந்திற்கு நாம் விரும்பி வந்திருக்கின்றோம் என்பதை மகிழ்ச்சியோடு வெளிப்படுத்த நம் அருகில் இருப்பவர்களை கரம்பற்றி வரவேற்போம். இது ஒரு கொண்டாட்டம் ஆகும். எதையெல்லாம் நாம்கொண்டாட அழைக்கப்பபடுகின்றோம் என்றால் நம் ஒப்புரவை- இறைவனின் நினைவுகளை மற்றும் நம் சமூக ஒன்றிப்பை நாம் கொண்டாட அழைக்கப்படுகின்றோம். இறைபீடத்தை சுற்றி நாம் கூடுவது நமது நம் விசுவாச ஒன்றிப்பை வெளிப்படுத்துகிறது. நம்மை சுற்றியும் இவ்வலகில் நிலவுகின்ற பல்வேறு தீமைகளை இறைவன் தரும் சக்தியால் நமது துணிச்சலால் எதிர்கொள்ள வெற்றிகொள்ள வரம்வேண்டுவோம். நம் குடும்பங்களின் திருச்சபையின் மற்றும் சமூகத்தின் அமைதியை காப்பாற்றும் நமது கடமையுணர்வோடு செயல்படுவோம்.

சில வருடங்களுக்கு முன்பு ஒருபங்கிற்கு அப்பங்கின் பணியாளர் விடுப்புக்கு சென்றபொழுது தற்காலிகமாக உதவிசெய்ய சென்றிருந்தேன். அப்பொழுது ஒரு குடும்பத்தினருக்கு அதிகாலைவேலையில் புதியவீடு திறப்பிற்கு செபித்து ஆசீர்தர ஒப்புக்ககொண்டிருந்தேன். அங்குசென்றவுடன் எனக்கு ஆச்சரியமாக அதிசயமாக மற்றும் பயமாகவும் இருந்தது. அங்கு நுழைவாயிலில் கட்டப்பட்டிருந்த நன்முறையில் தயாரிக்கப்பட்ட ஒருகோழியை கண்டவுடன். மற்றும் வீடு முழுவதும் ஒரே புகையாக தேரற்றமளித்தது. பல்வேறு குழப்பங்களுடன் எதற்காக இவைகளெல்லாம் என்று கேட்டதற்கு அக்குடும்பத்தின் உறவினர் ஒருவர்சொன்னார். ப்பாதர் இந்தவீடு கட்டப்படுவதற்கு முன்பு இந்தஇடத்தில் தீய ஆவி நடமாடியதையும் மற்றும் வீட்டை கட்டி முடிக்க பல்வேறு தடைகளை தீய ஆவி தந்ததால் இந்த பகுதியில மற்றும் இந்த வீட்டில் நடமாடும் பல்வேறு தீமைகளை அந்த கோழியில துரத்தி ஏவிவிட்டு அதைவெட்டினால் எல்லாம் சரியாயிடும் தீயஆவி ஓடிவிடும் என்றார். இதை யார் செய்வார் என்று தொடர்ந்து கேட்டதற்கு யாரோ ஒரு மந்திரவாதி வர்றநேரம் உங்க செபத்தை சொல்லுங்க ப்பாதர் என்றார்.

லக்க லக்க லக்க என்று திரைப்படங்களில் நமக்குச்சொல்லப்படும் தீய ஆவி பேய் பிசாசு என்ற பல்வேறு தீமைகள் நிஜமாக நம்மை சுற்றியிருக்கின்றனவா? அல்லது நாம் உருவாக்குகின்றோமா? இவைகள் மூடபழக்கங்களா? அல்லது நம்மை ஆட்சிசெய்யும் தீமைகளா? நாம் ஏன் பல்வேறு மாய மந்திரங்களை நாடிச்செல்கிறோம்? இதுபோன்ற கேள்விகளுக்கு இன்றைய இறைவார்த்தைகள் மனிதம் அமைத்துக்கொள்ளும் சமூகத்தில் தீமைகள் தீய சக்திகள் தோன்றுகின்றன நம்மை சுற்றி நடமாடுகின்றன நம்மை அடிமைகளாக்க தேடி அலைகின்றன. நமது கடமை நம்மில் சக்திஉண்டு இறைவன் ஆற்றலை தருகிறார் என்ன நம்பிக்கையோடு இறைவன் தரும் அதிகாரத்தோடு அவைகளை எதிர்கொண்டு விரட்டி அடித்து வெற்றிகொள்வதே ஆகும்.

இன்றைய நமது மாற்கு நற்செய்தியாளர் நாம் மேற்கொள்ளும் பல்வேறு வாக்குறுதிகளை நம்மில் நினைவுபடுத்தி அதை புதுப்பித்துகொள்ள அழைக்கின்றார். திருமுழுக்கு திருவருட்சாதனத்தின் பொழுது விட்டுவிடுகிறேன் தீமைகளை தீய சக்திகளை பசாசு மற்றும் பேயின் மீதுள்ள நம்பிக்கைகளை பயங்களை என்று உறுதிஅளித்து இறைஆற்றலை சக்தியை மற்றும் இறைபிரசன்னத்தை முழுமையாக நம்புகின்றேன் என்ற உறுதிப்பாட்டையும் வெளிப்படுத்துகிறோம். அவைகளை எந்நாளும் உணர்ந்து வாழ இன்றைய இறைவார்த்தைகள் நமக்கு அழைப்புவிடுக்கிறது.

மாற்கு அன்றைய தருணத்தில் பல்வேறு குழப்பங்களுடன் உரோமையில் போரடிக்கொண்டிருந்த சமூகத்திற்கு இந்நற்செய்தியின் வரிகளை எழுதுகிறார். அவர்களுடைய போரட்டம் உரோமை அதிகாரத்தின் பல்வேறு தீமைகள் மற்றும் அழுத்துகின்ற அடிமைபடுத்துகின்ற தீய சக்திகளுக்கு மத்தியில் எவ்வாறு இறை நற்செய்தியை எடுத்துரைப்பது என்பதே ஆகும். இந்த தீய தீமைநிறைந்த சக்திகள் பல்வேறு வகைளில் கட்டாய புகுத்தப்பட்ட சட்டங்களில் பயத்தை அவர்களில் ஏற்படுத்தியது. திருவெளிப்பாட்டில்12:9“அலகை என்றும் சாத்தான் என்றும் அழைக்கப்பெற்ற அரக்கப்பாம்பு தொடக்கத்தில் தோன்றியதே உலகு முழுவதையும் ஏமாற்றிய அது மண்ணுலகுக்கு தள்ளப்பட்டது அதன் தூதர்களும் அதனுடன் வெயியே தள்ளப்பட்டார்கள்” வரும் வார்த்தைகள் உரோமைநகரில் அவர்களின் அனுபவங்ளை நமக்கு உணரவைக்கிறது. இவைகளோடு பல மூடபழக்கங்களும் தீய சக்திகளாக அவர்களின் போரட்டத்திற்கு காரணமாக அமைந்தது.

இவைகளுக்கு பதிலுரையாக இவைகளை எதிர்கொள்ள மாற்கு இறைஇயேசுவின் அணுகுமுறையை அவர்கள் முன்வைக்கிறார். இயேசு எவ்வாறு தீமைகளை தீய சக்திகளை எதிர்கொண்டார் வெற்றிகொண்டார் அமைதிபடுத்தினார் என்று எடுத்துரைக்கிறார். இறைஇயேசு வெளிப்படுத்தும் பாடம் அணுகுமுறைகள்; நம்மிலுள்ள இறைஅதிகாரத்தை உணர்வதும் மற்றும வெளிப்படுத்துவதும் மேலும் தீமைகளை தீய சக்திகளை எதிர்கொள்வதுமே வெற்றியை பெற்றுதரும் நம்மிடமிருந்து அவைகளை விலகி ஓடச்செய்யும் என்கிறார்.

அதிகாரத்தோடு கற்பித்தார்…அமைதிபடுத்தினார்: அன்று பத்து யூதகுடும்பங்களுக்கு ஒருதொழுகைகூடம் அமைந்திருந்தது. அங்கு அவர்கள் மூன்று காரணங்களுக்காக ஒன்றுகூடினர். செபம்செய்ய….இறைவார்த்தைகளை படித்து எடுத்துரைக்க மேலும் இறைவார்த்தையின் விளக்கங்களை கற்பிக்க இவைகளுக்காக ஒன்றுசேர்ந்து வந்தனர். மறைநூல் அறிஞர்கள் தங்கள் போதனையில் பலரின் மேற்கோள்களை குறிப்பிட்டு போதித்தனர். அவர்களின் போதனையில் ஒரு ஈடுபாடு நம்பிக்கை மற்றும் பிடிப்பு பற்றுவெளிப்படவில்லை மாறாக அவர்களை பதவியை சட்டத்தை தக்கவைத்து பாதுகாக்க அமைந்திருந்த அவர்களின் போதனை அவர்களின் இதயத்திலிருந்து அல்ல மாறாக அவர் வாயிலிருந்து வந்தது. இங்கு இயேசு இதயத்திலிருந்து ஒருவேகத்தோடு மிக ஆழமான நம்பிக்கைமிகு பற்றோடு அதிகாரத்தோடு போதிக்கின்றார். அதிகாரத்ததோடு பேசாதே வாயை மூடு என தீயசக்திகளுக்கு அதிகாரமிகு கட்டளையிடுகின்றார். நாம் நம் குடும்பங்களில் நம் பிள்ளைகளுக்கு முன்பாக எவ்வாறு செயல்படுகிறோம் தீயசக்திகளை அதிகாரத்தோடு அமைதிபடுத்த சொல்லிக்கொடுக்கின்றோமா அல்லது நம் அதிகாரத்தை இழந்துவிடுகின்றோமா?

தீயசக்தியின் வேலை தீமை நம்மை எவ்வாறு தாக்கி அடிமையாக்குகிறது என்பதை சிந்தித்தால். அதன் ஒரே பணி நம் பாதையை மாற்றி அமைப்பதே ஆகும் நாம் நடக்கும் நன்மையின் நம்பிக்கையின் பாதையிலிருந்துநம்மை அழிவின் பாதைக்கு அடிமையான பாதைக்கு மாற்றுவதே அதன் பணியாகும் .தீய சக்தி உமக்கு இங்கு என்னவேலை நாசரேத்தூர் இயேசுவே நீர்; கடவுளுக்கு அர்ப்பணமானவர் என்பதன் மூலம் அச்சமூகத்திற்கு அவரை அரசராக்கி அவர்பணியின் பாதையை அணுகுமுறையை வன்முறைநிறைந்ததாக மாற்ற தூண்டுகிறது.. இதுவே சாத்தானின் வேலையாகும். அலகை இயேசு நாற்பது நான் பாலைவன அனுபவத்தின்பொழுது அவர் பாதையை அவர் பணியை ஒரு வன்முறை அணுகுமுறையாக மாற்ற அலகை எவ்வாறு முயற்சிசெய்தது மற்றும் பேதுரு ஆண்டவரே எருசலேம் வேண்டாம் துன்பம் வேண்டாம் என்ற பொழுது இயேசு விலகி விடு சாத்தானே என்பதும் எவ்வாறு இயேசு தன் மீட்பின் பணியில் சிலுவையின் பாதையில் உறுதியாக இருந்து எந்த தீமை சக்தியும் தன் எண்ணத்தை மாற்றாவண்ணம் எதிர்கொண்டு அமைதிபடுத்தி விரட்டி அடித்து செயல்பட்டார் என்பது நமக்கு தரும் சிறப்பு பாடமும் படிப்பினையும் அழைப்பும் ஆகும்.

நாம் தீய சக்திகளை எவ்வாறு சந்திக்கின்றோம்? நாம் அதிகாரத்ததை பயன்படுத்தி நம்மத்தியிலுள்ள தீமைகளை அமைதிபடுத்துகின்றோமா அல்லது மற்வர்கள் முன் நம் நண்பர்கள் பிள்ளைகள் முன் இறைவன் தரும் அதிகாரத்தை இழந்து அடிமையாகியிருக்கின்றோமா? பிள்ளைகள் – இளைய உள்ளங்கள் மற்றும் பெரியவர்கள் யாராகயிருந்தாலும் நம்மை நம்பாதையை ஒரு போதைபழக்கத்திற்கோ – தவறான செயல்பாட்டிற்கோ – தீய நண்பர்கள் கூட்டத்திற்கோ – ஒருசெயலை நிறைவேற்றாமல் தள்ளிபோடுவதற்கோ கோயில் தேவையில்லை என் விசுவாச ஆன்மிக பாதையிலிருந்து விலகிநடக்க என்று நம்பாதையை சாத்தான் அலகை தீயசக்தி மாற்றி அமைக்க அலைந்து கொண்டிருக்கிறது. அதிகாரத்தோடு எதிர்கொள்வோம் அமைதிபடுத்தி வெற்றிகொண்டு விரட்டி அடிப்போம். நம் குடும்பங்களில் யாராகயிருந்தாலும் தீமைகளை எதிர்கொள்ள இறைவன் தரும் அதிகாரத்தை பயன்படுத்தோம் எதிர்கொள்வோம் இறைபாதையில் தொடர்ந்து நடப்போம்-ஆமென்.