இவ் மறையுரையை வழங்குபவர்

Rev.Fr.Peter Jayakanthan sss
Congregation of the Blessed Sacrament
Corpus Christi Catholic Church,
Houston, Texas, USஞாயிறு மறையுரைகள்

மதிப்பிற்குரிய அருட்பணியாளர்களே, துறவிகளே, அருட் கன்னியரே, உங்கள் ஞாயிறு மறையுரைகளை எமது இணையத்தளத்தின் ஆன்மீக வலத்தில் பிரசுரித்து, ஆண்டவர் இயேசுவின் நற்செய்தியை எல்லோருக்கும் அறிவிக்க விரும்பினால், info@tamilcatholicnews.com என்ற எமது மின்னஞ்சலுக்கு உங்களுடைய ஆக்கங்களை அனுப்பிவைக்கவும். உங்கள் மறையுரைகள் உலகெங்கும் இருக்கும் அனைத்து தமிழ் உள்ளங்களையும் சென்றடையும்.இதோ! ஓநாய்களிடையே ஆடுகளை அனுப்புவதைப்போல நான் உங்களை அனுப்புகிறேன். எனவே பாம்புகளைப்போல முன்மதி உடையவர்களாகவும் புறாக்களைப்போலக் கபடு அற்றவர்களாகவும் இருங்கள்.
(மத்தேயு 10:16)

நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள்; தந்தை, மகன், தூய ஆவியார் பெயரால் திருமுழுக்குக் கொடுங்கள். நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்களும் கடைப்பிடிக்கும்படி கற்பியுங்கள். இதோ! உலக முடிவுவரை எந்நாளும் நான் உங்களுடன் இருக்கிறேன்
(மத்தேயு 28:19-20)

நீ அவற்றை உன் பிள்ளைகளின் உள்ளத்தில் பதியுமாறு சொல். உன் வீட்டில் இருக்கும்போதும், உன் வழிப்பயணத்தின் போதும், நீ படுக்கும்போது, எழும்போதும் அவற்றைப் பற்றிப் பேசு.
(இணைச்சட்டம் 6:7)
புதுவருட திருவிருந்து கொண்டாட்டம்

2014ஜ நினைத்துப்பார்;! …… 2015ஜ நிமிர்ந்துப்பார் !

எண்:;6:22-27, கலா4:4-7, லூக்2:16-21.கிறிஸ்துவில் பிரியமுள்ளவர்களே சகோதர சகோதிரியரே இளைய உள்ளங்களே சிறார்களே இணையதள நண்பர்களே குழுமி குடும்பங்களாக சகோதரங்களாக வந்திருக்கும் அனைவருக்கும் உதித்திருக்கும் புத்தாண்டின் மனம் நிரம்பிய இனிய புதுவருட வாழ்த்துக்கள்.2015-ல்உங்கள் கனவுகள் – விருப்பங்கள் – எண்ணங்கள்- முயற்சிகள் ஆகிய அனைத்தையும் இறைவன் ஆசீர் அளித்து அவருக்குரிய தருணங்களில் நிறைவுறச்செய்வாராக. கடந்த வருட அனைத்து அனுபவங்களுக்காக சந்தித்த புதிய உள்ளங்களுக்காக அடைந்த முன்னேற்றமிகு வெற்றிகளுக்காக நன்றிகூறுவோம். கடந்துவந்த துயரங்களுக்காக மற்றும் இழந்த உயரிய சகோதரங்களுக்காக இறைபீடத்தில் நினைவுகூர்ந்து அர்பணித்து செபிப்போம். துறவற அர்ப்பணவாழ்வை தெரிந்துகொண்ட அனைவரையும் வாழ்த்திஅவர்களுக்காக சிறப்பிக்கபடும் 2015ம் ஆண்டில் அவர்களின் பணி அதிக அழைத்தல்களோடு புதியதிருப்பங்கள்காண செபித்து துணையிருந்து கொண்டாடுவோம்.

2014 யார் கையில் இருந்தது? 2015 யார் கரங்களுக்கு சொந்தமாகப்போகின்றது? என்ற கெள்விகளுக்கு பின்வரும் பதில்கள் கிடைக்கப்பெற்றன:

2014 ல் என்னிடம் டிவி – அலைபேசி – தொலைக்காட்சி – வீடியோ கேம் இவைகளை இயக்க ரீமோட் கருவிகள் இருந்தன ஆனால் பல்வேறு நிகழ்வுகளை நிறுத்தவோ திசை திருப்பவோ மாற்றவோ என்னால் இயலவில்லை எனக்கு சக்தியில்லை. 2014 எப்படி சென்றது என்றே தெரியவில்லை. 2015-ல் நுழைய நான் தயாராகயில்லை. காரணம் பயம் என்னைக்கவ்விக்கொள்கிறது. என்னால் நிமிர்ந்துப்பார்க்கமுடியில்லை எனத்தயாராகயிருக்க மறுப்பவர்களுக்கு இதோ ஒருவாய்ப்பு. 2014ஜ நினைத்துப்பார் உன் நினைவுகளில் நிழலாடும் நிகழ்வுகள் நபர்கள் வருத்தங்கள் மகிழ்ச்சிகள் வெற்றிகள் பயணங்கள் ஆகிய அனைத்தையும் கண்முன் கொணர்ந்து நன்றி கூறுவோம்.

2014-ல் மனித அறிவியல் கண்டுபிடிப்பை கேள்விகுறியாக்கிய நிகழ்வுகள். அகோர விபத்துக்குள்ளாகி மறைந்த தொலைந்த மூன்று விமானங்கள் மற்றும் ஒன்றுமறியா பயணிகள் அனைத்தும் கற்றறிந்த விமானிகள் – பணிப்பெண்கள். மார்ச்சில் 239பேர் ஜீலையில் 298பேர் மற்றும் இந்த வாரங்களில் 162பேர் ஏன் விஞ்ஞான முன்னேற்றம் விமானத்துக்கு வேறுபாதையை காண்பிக்கமுடியவில்லை…விபத்தை நிறுத்த இயலவில்லை!

2014-ல் மருத்துவத்திற்கு மருத்துவ ஆராய்ச்சிகளுக்கு சவாலாக அமைந்தது 6000 பேருக்குமேல் பலிவாங்கிய ஈபோலா என்ற கொடிய வைரஸ். ஏன் இத்தனை பேரின் இறப்பையோ நோயின் தாக்குதலுக்குப்பிறகு தடுப்புமுறையையோ கையாளமுடியவில்லை?

2014-ல் விசுவாசத்திற்கு பாடமாய் அமைந்தது ஈராக் மற்றும் சிரியா போன்ற நாடுகளிலிருந்து வெளியேற்ற்பட்ட கிறிஸ்தவர்களின் வாழ்வு. ஆயிரக்கணக்கான ஆண்டுகளாய் வாழ்ந்த விசுவாசத்தை உறவை மூதாதையர்களின் நிலத்தை ஆலயத்தை பற்றை விட்டு விட்டு விரட்டியடிக்கப்பட்ட கொடூர நிலை பலியானவர்களின் பரிதாபநிகழ்வுகள் ஏன் உலக நாடுகளால் இத்தகைய மதவெறித்தன ஜஸிஎஸின் போக்கை எதிர்க்க தடுக்க நினைத்துப்பார்க்கவில்லை?

2014-ல் கிடைக்கப்பெற்ற சுதந்திரத்தை வேண்டாம் என ஸ்காட்லாந்து மக்கள் சொல்லி தொடர்ந்து பிரிட்டனோட என வாக்களிக்க காரணம் ஏன்?

2014-ல் மனதை உருக்கிய நிகழ்வுகள் தங்கள் வாழ்வை பணியை பத்திரிகை சுதந்திரத்தை வாழ்ந்த ஜேம்ஸ் –ஸீடபன் – வேிட் – ஆலன் மற்றும் பீட்டர் என இவர்கள் பகிரங்கமாக தலைவெண்டுட்டு அதை வீடியோ பதிப்பாக வெளியிட்டு கசப்பை உருவாக்க. அடுத்து யாரோ என்ற பயத்தை ஏன் யாரும் வருவதில்லை?

2014ல் குழுவாக பலியாக்கப்பட்டவர்கள் மாணவ மாணவியர்கள். தாலிபானால் பாக்கிஸ்தான் பள்ளி கல்லூரி வளாகத்தில் இறந்தது 145 இளம் உள்ளங்கள் ஆவர்.. ஏன் நம் ரீமோட் – பலகருவிகள் பல அகோர அபாயகரமான – கொடூரமான நிகழ்வுகளை தடுக்க முயற்சிகள் எடுக்கப்படுவதில்லை?

2014ன் அனைத்து நிகழ்வுகளையும் நினைத்துப்பார்ப்போம் நினைவிற்கொள்வோம் பாடமாகயிருக்க பலியானவர்கள் பரமனோடு இணைய தொடர்ந்து செபித்து வாழ்வோம். 2015ல் நுழைய நிமிர்ந்துப்பார்போம் ஆசீர்களை நாமும் ஆசீர்களாவோம்.

ஆசீர்கள் மீட்பின் வரலாற்றில் மையமாககருதப்பட்டது. பெற்றோரின் ஆசீர் குருத்துவத்தின் ஆசீர் பெரியவர்களின் ஆசீர். ஆனால் அவர்கள் அனுபவித்த ஆசீர் இறைவனை அவர்களுக்கு நெருக்கமாக அல்ல தொலைவில் தனித்து பெட்டகத்தில் கூடாரத்தில் தனித்துவைத்தது. இத்தருணத்தில் ஆரோனின் ஆசீர் நிமிர்ந்துபார்த்து செயல்பட அழைக்கிறது. .இத்தகைய ஆசீர்கள் இறைபிரசன்னத்தை வளர்ச்சியை அமைதியை நம்முன் கொண்டுவருவனாக அமைகிறது.

இந்த ஆசீருக்கு உயரிய முறையான எடுத்துக்காட்டு மரியாள். இறைவனின் தாயாக அவளை இன்று விழா எடுத்து மகிழும் நாம். இறைக்குழந்தையை தாங்கிய இறைவனின் தாய் என்ற இத்திருவிழா கி.பி431 எபேசு சங்க பேரவையிலிருந்து வெளியிடப்பட்டு பல்வேறு வகைகளில் கொண்டாடப்படுகிறது. எலிசபெத்தம்மாள் தன்வெளிப்பாட்டில் இறைவனின் தாய் என்னிடம் வர என்ற பயன்பாடு மரியாளை இறைவனை தாங்கியவள் சுமந்தவள் என்பது ஆசீரை தாங்கி ஆசீரானவள் என்ற பெரிய பாக்கியத்தை அவருக்கும் அவரின் விசுவாசிகளுக்கும் பெற்றுத்தருகிறது . 2015ஜ மரியாள் பாதத்தில் அர்ப்பணித்து நமக்கும் நம் சமூகத்திற்கும் உலகிற்கும் அமைதியான ஆசீர்களை பெற்றுதர தொடர்ந்து அவரையே நாடுவோம்..

பல்வேறு 2014 நினைவுகளோடு 2015ஜ நிமிர்ந்து பார்த்து பயணம் செய்ய ஆசீரை உணர்ந்து வெளிப்படுத்தி வாழுகின்ற மூன்றுபேர்களின் வாழ்வு அணுகுமுறை நம்மோடு இணைந்து நமதாகட்டும்.

17வயதில் நோபல்பரிசு வென்ற ஒரே மாணவி முதல் இளம் மாணவி மலாலா யூசாபி. அவர்பரிசு பெற்று பேசும்பெழுது சொன்னது “ என் சிறகுகளை வெட்டிவிடாமல் உரிமையோடு பறக்க தைரியத்தை பொருளாதார சக்தியைப்பெற்றுதந்த என்பெற்றோருக்கு என்மனதார நன்றிகள். பெண் அடிமையல்ல என உலகிலுள்ள அனைத்துப்பெண்பிள்ளைகளின் படிப்புக்கும் தொடர்ந்து குரல் தரும் மலாலா என்றம் ஆசீரே.

19வயது கேன்சரினால் படுக்கையிலிருக்கும் ஸ்டீபன் ஆசீராக அமைவது அவரின் நன்மைத்தனமான நேர்மறைசிந்தனைக்கு சிறந்த எடுத்துக்காட்டு .இளம்பருவ மாணவரின் கேன்சர் அமைப்பு என்ற அவரின் தொடக்கதிற்கு கிடைத்திருப்பது 5 மில்லியன்கள் ஆகும்.. ஸ்டீபன் ஒர் உயரிய ஆசீர் உலகிற்கு உண்மைமனிதத்திற்கு!

பலவகைகளில் உலகின் கவனத்தை ஈர்க்கும் திருத்தந்தையின் ஆசீர் மிக அத்தியாவசமானதே. குடும்பத்தலைப்பில் நிகழ்ந்த பேரவை – ஜரோப்பிய பாரளுமன்றத்தில் உலக தலைவர்களுக்கு சவாலான மற்றும் உற்சாகவார்த்தைகளில் உரையாற்றிய வேகம். திறந்த மனத்தோடு வெளிப்படையான அணுகுமுறையாடு பயணிக்கின்ற திருத்தந்தை பிரான்சிஸ் காலத்தின் ஆசீரே எனலாம். நிமிர்ந்து நடப்போம் ஆசீர்பெற்று ஆசீர் தரும் நிமிர்நது நடக்கும் இவர்களோடு எண்ணத்தால் இணைந்து நடப்போம்.

ஆட்சிகள் மாறலாம் அணுகுமுறைகள் மாறலாம் அழிவுகள் மாறலாம் ஆனால் ஆசீர்கள் மாறாது ஆசீராவோம் ஆசீர் வழங்குவோம் 2015 நம்மை நிமிர்ந்து நடக்கவைக்கட்டும்.-ஆமென்.