இவ் மறையுரையை வழங்குபவர்

Rev.Fr.Peter Jayakanthan sss
Congregation of the Blessed Sacrament
Corpus Christi Catholic Church,
Houston, Texas, USஞாயிறு மறையுரைகள்

மதிப்பிற்குரிய அருட்பணியாளர்களே, துறவிகளே, அருட் கன்னியரே, உங்கள் ஞாயிறு மறையுரைகளை எமது இணையத்தளத்தின் ஆன்மீக வலத்தில் பிரசுரித்து, ஆண்டவர் இயேசுவின் நற்செய்தியை எல்லோருக்கும் அறிவிக்க விரும்பினால், info@tamilcatholicnews.com என்ற எமது மின்னஞ்சலுக்கு உங்களுடைய ஆக்கங்களை அனுப்பிவைக்கவும். உங்கள் மறையுரைகள் உலகெங்கும் இருக்கும் அனைத்து தமிழ் உள்ளங்களையும் சென்றடையும்.இதோ! ஓநாய்களிடையே ஆடுகளை அனுப்புவதைப்போல நான் உங்களை அனுப்புகிறேன். எனவே பாம்புகளைப்போல முன்மதி உடையவர்களாகவும் புறாக்களைப்போலக் கபடு அற்றவர்களாகவும் இருங்கள்.
(மத்தேயு 10:16)

நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள்; தந்தை, மகன், தூய ஆவியார் பெயரால் திருமுழுக்குக் கொடுங்கள். நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்களும் கடைப்பிடிக்கும்படி கற்பியுங்கள். இதோ! உலக முடிவுவரை எந்நாளும் நான் உங்களுடன் இருக்கிறேன்
(மத்தேயு 28:19-20)

நீ அவற்றை உன் பிள்ளைகளின் உள்ளத்தில் பதியுமாறு சொல். உன் வீட்டில் இருக்கும்போதும், உன் வழிப்பயணத்தின் போதும், நீ படுக்கும்போது, எழும்போதும் அவற்றைப் பற்றிப் பேசு.
(இணைச்சட்டம் 6:7)
திருவருகைக்காலம்; -நான்காம் ஞாயிறு

என் மெசியா…..இயங்குகிறார்

2சாமு7:1-5, 8b-12,14a,16 உரோ16:25-27 லூக்;1:26-28.கிறிஸ்துவில் பிரியமுள்ளவர்களே சகோதர சகோதிரியரே இளைய உள்ளங்களே சிறார்களே இணையதள நண்பர்களே இறைவனின் நாளில் உங்கள் அனைவரையும் இன்றைய நற்கருணை திருவிருந்திற்கு அழைக்கின்றேன். ஒவ்வொரு ஞாயிறும் நாம் தனியாக இங்கு வருவதுகிடையாது மாறாக குடும்பங்களாக – இறைசமூகங்களாக இனணந்து கூடுகிறோம். இது நமது பலமும் ஆதரவும் ஆகும். இத்திருவருகைக்காலத்தின் கடந்து மூன்று வாரங்களாக நாம் சிந்தித்தது:இன்றும்-என்றும் மாரனாதா! – சீரான என்விடுதலைப்பயணம் – மகிழ்ச்சியின் குரலாவோம் என்ற சிந்தனைகளாகும். நான்காவது-இறுதிவாரத்தில் நாம் குடும்பமாக மற்றும் சமூகமாக அழைத்தலை ஏற்க அழைக்கப்படுகிறோம். ஆலயம் என்பது ஒரு கட்டிடமோ ஒரு நிறுவனமோ அல்ல மாறாக இறைமக்கள்விரும்பி ஒன்றித்திருக்கும் இடமே தருணமே ஆலயம் ஆகும். வெறும் ஆலயத்தை அல்ல மாறாக இறைவன் தங்கும் – வாழும் மற்றும் இயங்கும் மக்களின் சமூகங்களை கட்டி எழுப்புவதே நம்முடைய அழைப்பும் பொறுப்புமாகும்.

ஞாயிற்றுகிழமை ஆலயம் முழுவதும் மக்கள் நிரம்பியிருந்தனர். அருட்பணியாளர் நற்செய்தி வாசகத்தை முடித்து மறையுரையை துவங்கபோகும் தருணம். அனைவரும் உட்கார்ந்தபொழுது இரண்டுபேர் மட்டும் நின்றுகொண்டிருந்தனர். திடீரென இரண்டுபேரில் ஒருவன் ஆலயத்தின் நுழைவாயின்பக்கம் மக்கள் உட்கார்ந்துயிருக்கும் இடத்தில் சென்றுநிற்க மற்றொருவன் பீடத்திற்கு முன்பாகச்சென்று பாக்கெட்டிலுள்ள துப்பாக்கியை கையில் எடுத்து யாரெல்லாம் இயேசுவுக்காக குண்டுகளை தாங்க சந்திக்க விருப்பப்படுகிறீர்களோ அவர்கள் எல்லாம் உங்கள் இடத்தில் உட்காருங்கள் என்ற அழைப்பிற்குபிறகு கூட்டம் கூட்டமாக மக்கள் விரைந்து வெளியேறினார்கள். பாடற்குழுவினரும் தொடர்ந்து வெளியேறினர். இனணப்பங்குதந்தையும் மக்களோடு வெளியேறினார் இறுதியாக இருபதுபேர் மட்டும்இருக்க துப்பாக்கிஏந்திமுன்னால் இருந்தவன் துப்பாக்கியை பாக்கெட்டில் வைத்துவிட்டு சொன்னது _ ப்பாதர் வெளிவேடக்காரர்கள் எல்லாம் வெளியேறிவிட்டார்கள் இனிமேல் நீங்க மறையுரையை துவங்கலாம் என்றான். கடமைக்காக பெற்றோரின் கட்டாயத்திற்காக அவர்களின் திருப்திக்காக ஆலயம் வருவோர் பலர்.

கோயில் கட்டுபவர் கட்டடங்கள் கட்டுபவர் ந்ல்ல அருட்தந்தை….ஆனால் நன்கொடை கொடுங்கள் தாரளாமாக தாருங்கள் என எப்பொழுதும் ஏதாவது கட்டடம் கட்டணும் என்று பேசுபவர் நல்ல அருட் தந்தை அல்ல. ஆலயம் கட்டப்பட்டு புதிதாக தோற்றமளிக்கிறது ஆனால் அன்பியங்கள் செயலற்று இருக்கிறது. வழிபாட்டுநேரங்களில் ஆலயம் முழுவதும் நிரம்பாமல் வெறுமையாகயிருக்கிறது. இறைவனை வெறும் ஆலயத்தில் மட்டும் காணுகிறேன் என்பது சரியா? என்னைப்பார்த்து ஒருவர் ப்பாதர் நீங்கள் பங்கு பணியாளராக 7வருடங்கள் இருந்தீர்கள் என்பதன் அடையாளமாக ஒரு சிற்றாலயம் கட்டினால் நன்றாகயிருக்குமே என்றார். நான் யோசித்தேன் சிற்றாலயம் என் தேவையா…இறைமக்கள் தேவையா? என்னை மையப்படுத்த ஆலயம் கட்டுவது என் அழைப்பா? அல்லது ஆலயவழிபாட்டையும் இறைமக்களின் ஒன்றிப்பையும் இணைத்து இறைபிரசன்னத்தை காண்பது என் பணியா!.

இன்றைய இறைவார்த்தைகள் நம் குடும்பங்களில் நம் சமூக உறவுகளில் வாழுகின்ற இயங்குகின்ற மெசியாவை இறைவனை காண அழைப்புவிடுக்கின்றது. மிகவும் சுவாரசியமான உரையாடலை இன்றைய முதல்வாசகம் நம்முன் வைக்கிறது. இந்த உரையாடல் இஸ்ராயேலில் பெயரும் புகழோடும் ஆண்ட தாவீது அரசருக்கும் இறைவனின் வார்த்தையை எடுத்துரைக்கும் இறைவாக்கினர் நாதானுக்கும் இடையே ஏற்படுகிறது. தாவீதின் தொடர் சாதனைகளான: எருசலேமை ஜெபுசேயர்களிடமிருந்து கைப்பற்றி அதை தன் அரசியல் தலைநகராக அறிவித்து பெருமைகொணர்ந்தது – தன் தந்தை சவுலரசரின் பாதையில் தொடர்ந்து முயற்சிசெய்து பிரிந்திரிந்த இரு அரசுகளான இஸ்ராயேல் மற்றும் யூதாவை அதன்மக்களை ஒன்றுசேர்த்தது – இவ்வாறு தாவீது பல்வேறு நிர்வாக திறமைகளை வெளிப்படுத்தி பல்வேறு அரசுகளின் தாக்குதலை எதிர்த்து நின்று வெற்றிகொண்டது இவை அனைத்தும் தாவீதை ஒரு நிலையான யாரும் அசைக்கமுடியா அரசை நிலைநாட்டிவிட்டேன் என்ற ஒரு அபரித தன்னம்பிக்கையை ஏற்படுத்திக்கொடுத்தது. இந்த அசைக்கமுடியா நிலையான அரசின் தன்னம்பிக்கை உணர்வு அவரில் தன்க்கென்று புதிதான சிறப்பான அனைவரும் அதிசயப்படக்கூடிய பிரமாண்டமிகு அரண்மனையை உருவாக்க தூண்டியது இந்த அரண்மனையை கட்டிமுடித்து அதில் தானும் தன் குடும்பமும் தங்கள் சொகுசான உயரிய வாழ்வை வாழத்தெடங்கினர்.

அனைத்து வசதிகளும் நிரம்பிய அரண்மனையிலிருந்துகொண்டு தாவீது ஒருநாள் தன் கவனத்தை அதிக நேரம் கூடாரத்தில் தனிப்படையாக வைக்கப்பட்டிருந்த வாக்குறுதி பெட்டகத்தை நோக்குகின்றார். இறைபிரசன்னம் எவ்ளவு நாட்கள் இவ்வாறு தனித்துயிருப்பது. என் அரசு நிலையாகயிருக்க இறைபிரசன்னமும் நிலையாகயிருக்கவேண்டும் என விரும்பி ஒருபெரிய ஆலயம் எழுப்பி அதில் வாக்குறுதி பெட்டகத்தை வைக்கவிரும்பினார். இந்த ஆவலை விருப்பத்தை நாதான் இறைவாக்கினர் கேட்டபிறகு தொடக்கத்தில் மிகஆழமாக சிந்தித்து தாவீதுக்கு இவ்வாறு இறைவனின் சவாலை முன்வைக்கிறார்.

தாவீது உன்னிடமிருப்பது எல்லாம் இறைவன் கொடுத்தது சிறுவயதிலிருந்தே உன்னை அழைத்து அனைத்து ஆசீரை வலிமையை மனத்திடனை வெற்றிகளை தந்தது யாவே இறைவனே. நெருப்பு – நீர் – மலைஉச்சி என எங்கோ இறைவனி;ன சக்தியை தேடிய தன்மக்களுக்கு யாவே இறைவன் வெளிப்படுத்திய அந்த பத்து படிப்பினைகளின் பலகைகளையும் – ஆரோனின் கைத்தடியையும் – மன்னா உணவையும் தாங்கிய வாக்குறுதி பேழையை வாழும் உங்களோடு உறையும் பிரசன்னமுமாக கடந்த 200 ஆண்டுகளாக எடுத்துச்சென்றீர்கள் உங்களோடு பயணம் செய்த இறைவனை ஏன் ஓரிடத்தில் தனித்து வைக்கமுயற்சிசெய்கின்றாய். இறைவனின் இடத்தை நீ சுருக்கி குறுகிவைக்கமுடியாது நிலையான உன் அரசை அல்ல இறையரசை மக்களின் அரசை அவர் நிலைநாட்டுவார். இறைவனாகிய ஆண்டவரின் பிரைசன்னத்தை வாக்குறுது பேழையை உன் சிந்தனைக்குள் வரையறுக்காதே மாறாக வாழுகின்ற தொடர்து இயங்குகின்ற இறைவனின் பிரசன்னத்தை பிருக்கு எடுத்துககூறு வாழ்ந்துகாட்டு என அழைக்கின்றார்.

இன்றைய நற்செய்தியாளர் லூக்கா திருத்தூதர் பவுலின்போதனையில் கவரப்பட்டு கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டு கி.பி50முதல் அவரோடு பயணத்திலும் துணையிருந்து இயேசுவின் வாழ்வை நற்செய்தியை இறையரசை கற்று அறிந்தவர். இந்நற்செய்திபகுதியை உரோமையர்கள் தங்கள் ஆதிக்கத்தை ஏற்படுத்தி எருசலேமை கி.பி 70ல் அழித்த சமயத்தில் யூதரல்லாது கிறிஸ்துவ சமூகத்தில் இணைந்திருந்த மக்கள் மெசியாவாகிய இயேசுவின் பிறப்பு நிகழ்வை முழுமையாக அறியாமலிருந்தனர். அவர்களுக்கு தன்நற்செய்தியில் வாக்குறுதியின் நிறைவாக உலகுக்கு மீட்பராக நமக்கு அனுப்பப்பட்டு நம்மத்தியில் வந்தவரே இயேசு கிறிஸ்து. நம்மத்தியில் மனிதமாக நம் நிலையில் நம்மை ஏற்றுக்கொண்டவரே இறைதந்தையின் மகனாகிய மீட்பராகிய இயேசு. இதுவே அவர் பிறப்பின் சிறப்பு என விளக்குகிறார்.

லூக்கா இயேசுவின் பிறப்பு நற்செய்தியில் மரியாவை மையமாக வைத்து எடுத்துரைக்கிறார். வானதூதரின் அறிவிப்புமுதல் கல்வாரி வரை ஏன் திருத்தூதர்களை திடப்படுத்தி தொடக்க கிறிஸ்தவ சமூகத்தின் வளர்ச்சிவரை மரியா இயங்குகின்ற இறைபிரசன்னமாக இறைவெளிப்பாடாக பயணிக்கின்ற வாக்குறுதி பெட்டகமாக வாழ்கின்றாள் எனச்சுட்டிகாட்டுகின்றார். அவளுடைய ஆம் ஆகட்டும் நிகழட்டும் இதோ உமது அடிமை நான் உம்மோடு பயணிக்க நடக்க தயார் என்ற பதில் அனைத்து இறைவாக்கினர்கள் அழைக்கப்பட்ட தலைவர்களின் வாழ்வில் நாம் காண்கின்றோம் ஆம் இதோ இருக்கின்றேன் நிகழட்டும் ஆகட்டும் என்பது ஒரு சமூகத்திற்கு ஒரு சமூக அழைப்பிற்கு ஆம் என்ற பொறுப்பை உணர்வதாகும். மனித குலத்தின் சார்பாக நிகழட்டும் என்ற மரியா இஸ்ராயேல் மக்கள் எடுத்துச்சென்ற வாக்குறுதிபெட்டகத்தை தாங்கிசென்றாள் -. என்னை அழைத்த என்னில் உறைகின்ற இறைவன் இயங்குகின்ற இறைவன் என தன் பயணத்தை தளராது நசரேத்திலிருந்து பெத்லேகமுக்கு சென்று பின் எகிப்துக்கு பயணம் செய்து பின் எருசலேம் வரை இயங்குகின்ற இறைவனை வெளிப்படுத்தினாள். நாமும் நற்கருணையில் திருவழிபாட்டில் திருஅருட்சாதனங்களில் அனுபவிக்கின்ற இறைவனை நம் குடும்பங்களில் சமூக உறவுகளில் காண வாழ அவரோடு பயணிக்க அழைக்ப்படுகிறோம்.

ஆலயங்கள் தகர்க்கப்படலாம்…கிறிஸ்தவர்கள் தாக்கப்படலாம் ஆனால் தொடர்ந்து பயணித்து சமூகங்களில் இயங்குகின்ற இறைவனை நிறுத்த யாராலும் இயலாது. என் அரசு என்றும் நிலையானது என்றும் இயங்கும் என்பது இன்றைய உலகில் அறிவியல் – தொழில்நுட்ப வளர்ச்சியில் மனிதம் பொருளை மற்றொரு மனிதத்தை ஏன் ஏவுகணைகளை தன்விருப்பத்திற்கு ஏற்ப இயக்குகிறது ஆனால் இயங்குகின்ற இறைவனை அனைத்தையும் இயக்குகின்ற இறைவனை நாம் நம்மத்தியல் காண்போம் அவரோடு பயணித்து செயல்படுவோம். குடிலில் மட்டுமல்ல கோவிலில் குடும்பங்களில் இயங்கும் மெசியாவை காண்போம்.

புதிதாக ஏற்படுத்தபட்ட பங்குதளத்தில் அருட்பணியாளர் ஒருவளாகத்தில் திருப்பலி நிறைவேற்றிவருகையில் மக்கள் ப்பாதர் ஏன் கோயில்கட்டதுவங்ககூடாது என அவர்சொன்னது. நம் பங்குதளம் அறிவிக்கப்பட்டு மூன்றுமாதம் தான் ஆகியிருக்கிறது முதலில் இயங்குகின்ற இறைபிரசன்னத்தால் நம் சமூகத்தை கட்டுவோம் பின் இறைசமூகமாய் ஆலயம் கட்ட அவர் நம்மை இயக்குவார் என்றார். என்னை மெசியா எவ்வாறு இயக்குகின்றார்! எனக்கு அருகாமையில் எங்கு மெசியா இயங்குகின்றார்.-ஆமென்.