இவ் மறையுரையை வழங்குபவர்

Rev.Fr.Peter Jayakanthan sss
Congregation of the Blessed Sacrament
Corpus Christi Catholic Church,
Houston, Texas, US



ஞாயிறு மறையுரைகள்

மதிப்பிற்குரிய அருட்பணியாளர்களே, துறவிகளே, அருட் கன்னியரே, உங்கள் ஞாயிறு மறையுரைகளை எமது இணையத்தளத்தின் ஆன்மீக வலத்தில் பிரசுரித்து, ஆண்டவர் இயேசுவின் நற்செய்தியை எல்லோருக்கும் அறிவிக்க விரும்பினால், info@tamilcatholicnews.com என்ற எமது மின்னஞ்சலுக்கு உங்களுடைய ஆக்கங்களை அனுப்பிவைக்கவும். உங்கள் மறையுரைகள் உலகெங்கும் இருக்கும் அனைத்து தமிழ் உள்ளங்களையும் சென்றடையும்.



இதோ! ஓநாய்களிடையே ஆடுகளை அனுப்புவதைப்போல நான் உங்களை அனுப்புகிறேன். எனவே பாம்புகளைப்போல முன்மதி உடையவர்களாகவும் புறாக்களைப்போலக் கபடு அற்றவர்களாகவும் இருங்கள்.
(மத்தேயு 10:16)

நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள்; தந்தை, மகன், தூய ஆவியார் பெயரால் திருமுழுக்குக் கொடுங்கள். நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்களும் கடைப்பிடிக்கும்படி கற்பியுங்கள். இதோ! உலக முடிவுவரை எந்நாளும் நான் உங்களுடன் இருக்கிறேன்
(மத்தேயு 28:19-20)

நீ அவற்றை உன் பிள்ளைகளின் உள்ளத்தில் பதியுமாறு சொல். உன் வீட்டில் இருக்கும்போதும், உன் வழிப்பயணத்தின் போதும், நீ படுக்கும்போது, எழும்போதும் அவற்றைப் பற்றிப் பேசு.
(இணைச்சட்டம் 6:7)








திருவருகைக்காலம்; - இரண்டாம் ஞாயிறு –

சீரான பாதையில….. என் விடுதலைப்பயணம்!

ஏசா 40:1-5, 9-11, 2பேது3:8-14, மாற்;1:1-8



கிறிஸ்துவில் பிரியமுள்ளவர்களே உங்கள் அனைவரையும் நம்பிக்கையின் ஆசீர்தரும் திருவருகைக்காலத்தின் இரண்டாம் வாரத்திற்கு அன்பாக அழைக்கின்றோம். இச்சிறப்பு மாதத்தில் அதுவும் வருடத்தின் இறுதிமாதத்தில் பல்வேறு சிந்தனைகளுடன் திட்டங்களுடன் இறைப்பீடத்தை நாடிவந்திருக்கின்றோம். இவற்றோடு 24ம் தேதி இரவுத்திருப்பலிக்கு முன்பாக நாம் செய்துமுடிக்கவேண்டிய பொறுப்புகளையும் நாம் மனதில் சுமந்துவந்திருக்கிறோம். இவைகள் அனைத்தையும் நாம் நற்கருணைபலியில் அர்ப்பணமாக்கி நம் குடும்பங்கள் சமூகங்கள் மகிழ்ச்சியை பகிரும் கிறிஸ்துமஸ் விழா கொண்டாடுவோம். நம் வாழ்வபயணத்தை புதுப்பிக்கும் தருணமாக இத்திருவிருந்து அமையட்டும்.

நம்முடைய சிறப்பு பயணத்திற்கு தேவையானவை என்ன என்று ஒரு மாதம் சமூகப்பணியாற்ற செல்லவிருந்த பள்ளி மாணவ உள்ளங்களைப்பார்த்து கேட்ட ஆசிரியருக்கு பின்வரும் பதில்கள் மாணாக்கர்களால் சொல்லப்பட்டன. உணவு – முதல் உதவி –நண்பர்கள் துணை – வழிகாட்டி துணை – இயற்கை மாற்றுதலை சமாளிக்ககூடிய உடல்நலபக்குவம் – பணம் மற்றும் விருப்பம் இவைகள் அனைத்தும் சிறப்பு பயணத்திற்கு தேவையானதாக சொல்லப்பட்டன. ஆசீரியரோ நீங்கள் சொன்ன அனைத்தும் தேவையே ஆனால் அதே சமயம் இவைகள் அனைத்தோடு மிக அத்தியாவமானது துணிச்சல். துணிச்சலில்லா பயணம் தொடராது. துணிச்சலே எந்த ஒருபயணத்தையும் மேற்கொள்ள மிக மிக முக்கியமானது அது இறைவன் அருகிலிருக்கிறார் என்ற செய்தியை சொல்லக்கூடியது.

பத்துமாதங்கள் ஒருதாய் தன்பிள்ளையோடு பயணம் செய்கிறாள். மானவன் மாணவி பலவருடங்கள் தங்கள் படிப்பில் பட்டம்பெற தொடர்ந்து பயணிக்கின்றனர். நாட்டுக்காக நாட்டின் பாதுகாப்பிற்காக பணிபுரிய கனவு காணும் பொழுது ஒருவர் பலவருடங்கள் இராணுவ பயிற்சியில் பயணிக்கின்றனர். தீவிரவாத சக்திகளால் பிணயக்கைதிகளாக பிடிக்கப்பட்ட பல்வேறு உள்ளங்கள் தொடர்ந்து பயணிக்கின்றனர். இந்த அனைத்துப் பயணிகளும் பயணங்களும் துணிச்சலோடு தொடர்ந்து முன்னேற நம் கண்கள் முன்னோக்கியே அமையவேண்டும்.

இன்றைய முதல் வாசகத்தில் இஸ்ராயேல் மக்களுக்கு அவர்கள் முன்னோர்களின் விடுதலைப்பயணத்தை நினைவிற்கொண்டுவர அழைக்கின்றது. அது பல்வேறு அடிமைத்தன நிலை – எகிப்பதிய வீரர்களின் தொடர் தாக்குதல் – பாலைவனப்பயணம் தந்த பசி – வெறுமை கசப்பான கோபங்கள் இவைகள் அனைத்திற்கும் மத்தியில் யாவே இறைவனின் துணிச்சலே விடுதலைப்பயணத்தை வெற்றிப்பயணமாக்கியது. ஏன் புதியதொரு விடுதலைப்பயணத்திறகு தயாராக்குகிறது? இதோ 60-70 ஆண்டுகளின் பாபிலோனிய அடிமைத்தனத்திலிருந்து புனித எருசலேமுக்கு தனித்து பிரிக்கப்பட்டிருந்த இஸ்ராயேல் மக்களை பாரசீக அரசன் சைரஸ் விடுவித்து சயநலத்தோடு அதிகாரத்ததோடு தன்னோடு அடிமைகளாக வைத்துக்கொள்ள விரும்பாமல் விடுதலைப்பயணத்தை நம்பி விடுவிக்கிறார்

பின்வரும் வார்த்தைகளில் இறைவாக்கினர் ஏசாயா புதியதொரு விடுதலைப்பயணத்தை துவங்கி தொடர அறைகூவல் விடுக்கின்றார். “அஞ்சவேண்டாம் உங்கள் ஆயனாகிய இறைவன் தொடர்ந்து அவர்களுடன் இருந்து ஆற்றலாக நிரம்பியிருந்த துணிச்லலாக துணையிருந்து கரங்களை பற்றி ஒன்றுசேர்ந்து அயாந்துபோகும்பொழுது தோளில் சுமந்;து கவனத்துடன் உடனிருந்து வழிநடத்தி செல்வார்.

இப்பயணத்திற்காக அனைத்துப்பாதைகளும் சீராக்கப்படும் சமமாக்கப்படும் மற்றும் அவர்பிரசன்த்தினால் ஆறுதலும் ஆற்றலும் நிரப்பப்படும்.. இப்பயணம் எங்கே செல்கிறது? இப்பயணம் எவ்வாறாக அமையும்.? எவ்வாறு முன்னோர்கள் அடிதத்தன எகிப்;திய நிலத்திலிருந்து வாக்களிக்கப்பட்ட நிலத்திற்கு சென்றதுபோல தங்கள் வாழ்வை மீண்டும் கட்டிஎழுப்ப யூதாவை எருசலேமை நோக்கி அவர்கள் பயணம் அமைகிறது.

மாற்கு நற்செய்தியாளர் திருமுழுக்குயோவானை துவக்கமாக மையமாக தன்நற்செய்தின் கூறாக விவரிக்கிறார்… புனிதபேதுருவின் துணையாக எந்நாளும் இணைந்திருந்து பயணத்திவரே மாற்கு ஆவார். மாற்கு இயேசுவின் வாழ்வை அருகிலிருந்து பார்க்கவைில்லையென்றாலும் பேதுருவின் வாய்மொழி பகிர்விலிருந்து மாற்கு இயேசுவை இறைமகனாக முன்வைக்கிறார் திருச்சபை பல்வேறு எதிர்ப்புகளை சோதனைகளை கண்டதருணமிது. பல்வேறு திசைக்கு பன்னிரெண்டு திருத்தூதர்கள் சென்றுவிட பாலஸ்தீனத்தையும் ஆக்கிரமித்த உரோமை அரசுகள் தங்களை கடவுளாக காணவிரும்பி கடடாயப்படுத்த முதல்கிறிஸ்தவர்களின் துன்பம் வலிகள் சித்தரவதைகள் உடனிருக்கும் உயிருள்ள இயேசுவக்கு சாட்சிபகர்ந்தன. இயேசுவின் பயணம் நிறைவுறவில்லை திருச்சபையில் என்றும் தொடரும்.

அதே சமயம் குழப்பங்களுடன் தயக்கங்களுடன் இருந்த மக்களுக்கு திருமுழுக்குயோவான் முதல் விடுதலைப்பயணம் எகிப்திலிருந்து வாக்களிக்கப்பட்ட நாட்டை நோக்கி அமைந்தது அடுத்து முதல் வாசக இறைவார்த்தைகள் சொல்வதுபோல பாபிலோனியாவிலிருந்து தங்களின் யூதேயாவைநோக்கி எருசலேம் நகரை நோக்கி அமைந்தது இரண்டாவது விடுதலைப்பயணம். இப்பொழுது யோர்தானைநோக்கி திருமுழுக்கு பெற்று அவரின் பாதையில் அவரின் துணையில் அவரின் உடனிருப்பில் பயணிக்க அழைக்கிறார். இப்யணத்திலும் பாதைகள் சமமாக சீராக செம்மையாக மாற்றப்படும். இறைவன் தரும் துணிச்சலினாலே இப்பயணமும் மீட்பின்பயணமாக அமையும்.

நான் தேவ அழைத்தல்இயக்குநகராக இருந்தபொழுது தமிழகம் முழுவதிலும் பல்வேறு பள்ளிகளுக்கு சென்று சந்தித்திருக்கிறேன். அப்பொழுது என்பயணத்தின்பொழுது நான் கண்டு ஆச்சரியப்பட்டது நெடுஞ்சாலை முழுவதும் மக்கள் செய்யும் திருப்பயணம். பழனியைநோக்கி பலர் – மேலமருவத்தூரைநோக்கி பலர் – திருச்சி ஶ்ரீரங்கத்தை நோக்கி சிலர் – திருச்செந்தூரைநோக்கி பலர் – சபரிமலையை நோக்கி பலர் என்று நடைபயணமாக பலர் வெறுங்காலோடு அதிகசுமையின்றி தொடர்ந்து பயணிப்பதை கண்டு ஆச்சரியப்பட்டதுண்டு. இவற்றை என்னால் புரிந்துகொள்ள முடிந்தது என் பங்குமக்களோடு நடைப்பயணம் சென்றபொழுது தவக்காலத்தில் தொடர்ந்து நான்கு வருடங்கள் இரவு 10 மணிக்கு துவங்கி காலை 4 மணிக்கு ஒரு திருத்தலம் அடைந்து சிலுவைப்பாதை மற்றும் சிறப்பு திருப்பலியோடு நிகழ்த்தினோம் நானும் நடந்தேன் இறைமக்களையும் ஒருகருத்தை மனதிற்கொண்டு செபித்து நடக்கச்சொன்னேன். இறுதி ஆண்டில் 300 பேர் கலந்துகொண்டனர். அவர்களின் குறைகள் கவலைகள் தேவைகள் பிள்ளைவரம் வேலைவாய்ப்பு உடனேதுதீரவில்லை ஆனால் எங்கள்வாழ்க்கை பயணத்தில் இயேசு உடன்நடக்கிறார் ஆற்றலை துணிச்சலை தருகிறார் என்ற செய்தியை அவர்களோடு நானும் புரிந்து விடுதலைப்பயணத்தை நிஜத்தில் கண்டேன்.

நம்முடைய விடுதலைப்பயணங்கள் எத்தகையது? நாம் இறைவனை நம்பி துணிச்சலோடு பயணித்திருக்கின்றோமா? சந்தேகங்களோடு பயத்தோடு எங்கெல்லாம் தயங்கி நின்றுயிருக்கிறோம்.? இறைமகன் இயேசு ஆயானக கரங்களைப்பற்றி உடன்நடந்து வழிநடத்த துணிச்சலோடு நடப்போம் தொடர்ந்து பலவேறு விடுதலைப்பயணங்களை காண்போம்.- ஆமென்