இவ் மறையுரையை வழங்குபவர்

Rev.Fr.Peter Jayakanthan sss
Congregation of the Blessed Sacrament
Corpus Christi Catholic Church,
Houston, Texas, USஞாயிறு மறையுரைகள்

மதிப்பிற்குரிய அருட்பணியாளர்களே, துறவிகளே, அருட் கன்னியரே, உங்கள் ஞாயிறு மறையுரைகளை எமது இணையத்தளத்தின் ஆன்மீக வலத்தில் பிரசுரித்து, ஆண்டவர் இயேசுவின் நற்செய்தியை எல்லோருக்கும் அறிவிக்க விரும்பினால், info@tamilcatholicnews.com என்ற எமது மின்னஞ்சலுக்கு உங்களுடைய ஆக்கங்களை அனுப்பிவைக்கவும். உங்கள் மறையுரைகள் உலகெங்கும் இருக்கும் அனைத்து தமிழ் உள்ளங்களையும் சென்றடையும்.இதோ! ஓநாய்களிடையே ஆடுகளை அனுப்புவதைப்போல நான் உங்களை அனுப்புகிறேன். எனவே பாம்புகளைப்போல முன்மதி உடையவர்களாகவும் புறாக்களைப்போலக் கபடு அற்றவர்களாகவும் இருங்கள்.
(மத்தேயு 10:16)

நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள்; தந்தை, மகன், தூய ஆவியார் பெயரால் திருமுழுக்குக் கொடுங்கள். நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்களும் கடைப்பிடிக்கும்படி கற்பியுங்கள். இதோ! உலக முடிவுவரை எந்நாளும் நான் உங்களுடன் இருக்கிறேன்
(மத்தேயு 28:19-20)

நீ அவற்றை உன் பிள்ளைகளின் உள்ளத்தில் பதியுமாறு சொல். உன் வீட்டில் இருக்கும்போதும், உன் வழிப்பயணத்தின் போதும், நீ படுக்கும்போது, எழும்போதும் அவற்றைப் பற்றிப் பேசு.
(இணைச்சட்டம் 6:7)
திருவருகைக்காலம்; - முதலாம் ஞாயிறு

இன்றும்… என்றும்….. மாரனாதா!

ஏசா 63:16b-17,19b, 64:2-7,
1கொரி1:3-9,
மாற்;13:33-37கிறிஸ்துவில் பிரியமுள்ளவர்களே புதிய திருவழிபாட்டு ஆண்டின் முதல் திருவருகைக்கால வழிபாட்டிற்கு உங்களை அன்போடு அழைக்கின்றேன். புத்துணர்வை புதிய சிந்தனையை இன்றைய திருவழிபாடு நமக்குதரட்டும். நம் ஒவ்வொரு ஞாயிறு ஒன்றிப்பும் நற;கருணை கொண்டாட்டமும் முதல்கிறிஸ்தவ புதுகிறிஸ்தவ சமூகத்தின் உணர்வை சகோதர சமத்துவத்தை பகிர்வு மகிழ்ச்சியை நம்மில் புதுப்பித்துவாழ நமக்கு தரப்படுகின்ற கொடையும் அழைப்புமாகும். நம் வழிபாடுகளில் நம் கொண்டாட்டங்களில் நம் செயல்பாட்டுகளில் புதியவைகளை அன்றாடம் காண்போம் உருவாக்குவோம். அங்கே கிறிஸ்துவோடு இணைவோம்.

மாற்கு மற்றும் ஜான் இருவரும் நண்பர்கள் தங்களுடைய கல்லூரி விடுமுறையின் நாட்களில் பொதுஇடத்தில் சந்தித்துக்கொண்டபொழுது மாற்கு தன் நண்பன் ஜானைப்பார்த்து நான் ஆலயத்திற்கு ஒரு தியானஉரையைக் கேட்க சென்றுகொண்டிருக்கின்றேன் நீயும் வருகிறாயா? எனக்கேட்க நான் வரவில்லை காரணம் நான் திரைப்படம் பார்க்கபோகிறேன் நீ வேண்டுமானல் என்னோடு வா என ஜான் கேட்க மாற்குவோ நன் வரவிரும்பவில்லை என்ற பதிலை சொல்ல இருவரும் அவரவர்கள் பாதையில் பிரிந்துசென்றனர். சிலவாரங்களுக்கு பிறகு அவர்கள் பொது இடத்தில் சந்தித்துகொண்டபொழுது ஒரே குரலாக இருவரும் சொன்னது “நான் உன்னோடே வந்திருக்கலாம்” ஆலயத்தில் செபக்கூடத்திற்கு சென்ற மாற்கு அங்கே அவன் நினைவெல்லாம் ஜான் சென்ற திரைப்படத்திலிருந்தது. நான் ஜானோடு திரைப்படம் பார்க்க சென்றிருக்கலாம் அவன் என்னை பக்திமான்னு நினைச்சிருப்பான் என்ற மாற்கின் உடல் அங்கிருந்தது ஆனால் மனமும் சிந்தனையும் கடந்தகாலத்தில் மிதந்தது. மறுபுறம் திரைப்படத்திற்கு சென்ற ஜானோ அய்யய்யோ மாற்குஉடன் கோயிலுக்கு போயிருக்கலாம் என்று கடந்தகாலத்தில் இருந்தான். ஆக இருவரும் நிஜத்தில் நிகழ்காலத்தில் வாழவில்லை. சென்றிருக்கலாம் போயிருக்கலாம் என்ற முடிந்துபோன உலகத்து சிந்தனைகள் பல நிகழ்கால ஆசீர்களை காணவிடுவதில்லை.

நாம் நிகழ்காலத்தில் வாழ்வது சிந்திப்பது மிககுறைவாகும். காரணம் நம் சிந்தனைகள் அனைத்தும் ஒன்று கடந்த காலத்து கவலைகளாகவோ அல்லது எதிர்காலத்து பயங்களாகவோ இருக்கின்றன. நான் இந்த வீட்டை 10வருடத்திற்கு முன்னதாகவே வாங்கியிருக்கலாம்.நான் என்பெற்றோரின் நிலத்தை விற்றிருக்கடாது…எனக்கு என் உடன்பிறந்தசகோதரி இவ்வாறு என்னை இழிவுபடுத்தியிருக்ககூடாது. இவைகளெல்லாம் கடந்து காலத்து கவலைகளுக்கான சில எடுத்துக்ககாட்டுகள். நிகழ்காலத்தைவிட இக்கடந்தநாட்களின் சிந்தனைகளில் தான் நாம் பெரும்பாலன நேரத்தைசெலவழிக்கின்றோம். கடந்துவந்த பாதையைமாற்ற முடியாது ஆனால் கடந்த நம்வரலாற்றை திருப்பி எழுதநம்மால் இயலும்.

தாஜ்மகால் அருகில்நின்றோ அல்லது கோவாவில் புனித சவேரியார் புனித உடல் தரிசனத்தில் நின்றுகொண்டு அடுத்தவருடம் இந்த அருமையான இடத்திற்கு வந்து முழுநாள் இருந்து முழு அனுபவம் பெறவேண்டும் என்ற நமது பேச்சு நான் இப்பொழுது இங்கே நிற்கின்றேன் அந்த முழு அனுபவத்தை தற்போது நிஜத்தில் ஈடுபட்டு அனுபவிப்பது கிடையாது. மாறாக இவ்வார இறுதியில் எத்தகைய தட்ப வெப்பம் நிலவப்போகிறது என்ற நாளைய சிந்தனைகள் நம்மில் தேவையில்லா பயங்களை ஏற்படுத்துகின்றன. நிகழ்கால ஆசீரை மறைக்கின்றன. திருவருகைக்காலத்து முதல்வார வழிபாட்டு இறைவார்த்தைகள் நிகழ்காலத்தில் இறைவனை கண்டு அனுபவித்து வாழ்வது இறைவனை அவர் ஆசீரை வாழ்வது ஆகும் என நமக்கு உணர்த்துகின்றன.

இன்றைய முதல்வாசகத்தில் இறைவாக்கினர் ஏசாயா இஸ்ராயேல் மக்களின் புலம்பலை முன்வைத்து அதன்பின் அவர்களுக்கு கொடுக்கப்படும் அழைப்பைவெளிக்கொணர்கிறார். எருசலேமை தகர்த்து இஸ்ராயேலர்களை அகதிகளாக அடிமைகளாக பாபிலோனியர்கள் அழைத்துச்சென்றனர். இந்த அடிமைவாழ்வு எழுபது ஆண்டுகளாக தொடர்ந்தது அதன்பிறகு பாரசீக அரசனால் விடுவிக்கப்பெற்று எருசலேமை நோக்கி எதிர்காலத்தைப்பற்றி புலம்பலை வெளிப்படுத்துகின்றனர். தீட்டுப்பட்டவர்களாக அழுக்கடைந்த ஆடைகளாக கருகிய இலைகளாக நிற்கின்றோம் என்ற புலம்பலுக்குபிறகு இறைவாக்கினரோடு இணைந்து இறைவா உம்மைத்தவிர தந்தை எங்களுக்கு யாரும் எப்பொழுதும் இருக்கமுடியாது. .நீர் ஒருவரே எங்களை புரிந்துகொண்டு எங்கள் மீது அக்கறைகாட்டுகின்றவர். நாங்கள் வெறும் களிமண் - நீரே குயவராக இருந்து எங்களை உருவாக்குகின்றீர். நாங்கள் உம் கைவேலைப்பாடுகள் என அழைத்து அவர் பிரசன்னத்தில் தங்களின் புதிய நிகழ்கால விடுதலை அனுபவத்தை துவக்கி அவரின் ஆசீரில் அன்றாடவாழ்வை அமைத்துக்கொள்வதை எடுத்துச்சொல்கிறது. நாம் நம் கடந்தகாலத்தை குறித்துகாட்டி புலம்புகின்றோமா? அல்லது இறையவனை இன்று நம் எதார்த்தங்களில் அவர் உடனிருப்பையும் அவரின் ஆசீரையும் கண்டுபிடிக்கின்றோமா?.

மாற்கு நற்செய்தியாளர் குழப்பத்தோடு நடைமுறையைவிட்டு விலகி நாளைய தினத்து பயங்களிலிருந்த மக்களுக்கு அன்றைய நிகழ்வுகளில் இயேசுவின் உற்சாக வார்த்தைகளில் கவனமாயிருக்க கட்டளையிடுகிறார் .

என்ன எதிர் காலத்து பயங்கள்? எத்தகையான குழப்பங்கள்? தங்களுடைய துன்பநேரங்களில் ஆண்டவர் வந்து நமக்கு ஆறுதலாய் அருகிருந்து செயல்படுவார். என நம்பி எதிர்பார்த்த கிறிஸ்தவ சமூகம். உரோமை அரசு பாலஸ்தீன இடங்களை ஆக்கிரமித்து கிறிஸ்தவர்களுக்கு நெருக்கடிகொடுத்து தங்கள் விசுவாசவழிபாடுகளுகளை தடுத்து நிறுத்த விரும்பி வன்முறைக்கு ஆளாக்கியது. தொடக்க கிறிஸ்தவ சமூகம் பல வகைகளில் துன்புறுத்தப்பட்டனர். எருசலேமும் தாக்கப்படலாம் எனவே விண்சென்ற இயேசு திரும்பவருவேன் என்றவர் வரவில்லையே அழியப்போகிறோமா என்ற பயங்களால் நிரம்பியிருந்தபொழுது மாற்கு இயேசுவின் கட்டளை வாக்கியங்களாக கவனமாயிங்கள் விழிப்பாயிருங்கள் என 19தடவைகள் உறுதியாகசொல்கிறார். பொய் தலைவர்களின் பேச்சுக்கு உங்களை இழக்காதீர்கள்.தலைவராகிய இறைவனை அன்றாட நிகழ்வகளில் அவர்உடன்இருப்பை மனக்கண் திறந்து கண்டுகொள்ளுங்கள் ஈடுபடுங்கள் என்ற அழைப்பு இன்று நமக்கும் தரப்படுகிறது அன்றாட நிகழ்வுகள் இயேவின் நிஜங்களாக நாம் செயல்படுவோம் .என் நிகழ்கால நிஜங்களை நான் எவ்வாறு செலவிடுகின்றேன்? இன்றைய இறைஆசீர்களை கண்டு ஏற்று ஈடுபட்டு வாழ்கின்றேனா? அல்லது கடந்தகால கவலைகளிலும் எதிர்கால பயங்களிலும் என்னை இழக்கின்றேனா?

தொடக்ககிறிஸ்தவர்கள் தங்கள் துன்பங்கள் வேதனைகளில் இயேசுவின் உடனிருப்பை என்றும் உணர்ததிக்கொள்ள யூதர்கள் பயன்படுத்திய “சாலோம்” என்ற வார்த்தைக்கு பதிலாக “மாரானாதா” என்ற அரமாயிக் சொல்லை பயன்படுத்தினர். அவர் வருகிறார் என்ற அர்த்தம் தரும் இவ்வார்த்தை அன்றுமட்டுமல்ல இன்றும் என்றும் இயேசுவின் இறுதிவருகைவரை நம் உள்ளங்களில் தங்கட்டும் அவரின் உடனிருப்போடு ஒன்றித்து வாழ திருவருகைக்காலம் நமக்கு நினைவுபடுத்தட்டும்-ஆமென்.