இவ் மறையுரையை வழங்குபவர்

Rev.Fr.Peter Jayakanthan sss
Congregation of the Blessed Sacrament
Corpus Christi Catholic Church,
Houston, Texas, USஞாயிறு மறையுரைகள்

மதிப்பிற்குரிய அருட்பணியாளர்களே, துறவிகளே, அருட் கன்னியரே, உங்கள் ஞாயிறு மறையுரைகளை எமது இணையத்தளத்தின் ஆன்மீக வலத்தில் பிரசுரித்து, ஆண்டவர் இயேசுவின் நற்செய்தியை எல்லோருக்கும் அறிவிக்க விரும்பினால், info@tamilcatholicnews.com என்ற எமது மின்னஞ்சலுக்கு உங்களுடைய ஆக்கங்களை அனுப்பிவைக்கவும். உங்கள் மறையுரைகள் உலகெங்கும் இருக்கும் அனைத்து தமிழ் உள்ளங்களையும் சென்றடையும்.இதோ! ஓநாய்களிடையே ஆடுகளை அனுப்புவதைப்போல நான் உங்களை அனுப்புகிறேன். எனவே பாம்புகளைப்போல முன்மதி உடையவர்களாகவும் புறாக்களைப்போலக் கபடு அற்றவர்களாகவும் இருங்கள்.
(மத்தேயு 10:16)

நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள்; தந்தை, மகன், தூய ஆவியார் பெயரால் திருமுழுக்குக் கொடுங்கள். நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்களும் கடைப்பிடிக்கும்படி கற்பியுங்கள். இதோ! உலக முடிவுவரை எந்நாளும் நான் உங்களுடன் இருக்கிறேன்
(மத்தேயு 28:19-20)

நீ அவற்றை உன் பிள்ளைகளின் உள்ளத்தில் பதியுமாறு சொல். உன் வீட்டில் இருக்கும்போதும், உன் வழிப்பயணத்தின் போதும், நீ படுக்கும்போது, எழும்போதும் அவற்றைப் பற்றிப் பேசு.
(இணைச்சட்டம் 6:7)
பொதுக்காலத்தின் முப்பத்திநான்காம் ஞாயிறு

எனக்கே செய்தாய்……..!

எசே34:10-12 15-17
1கொரி15:20-26 28
மத்25:31-46கிறிஸ்துவில் பிரியமுள்ளவர்களே சகோதர சகோதிரியரே இளைய உள்ளங்களே சிறார்களே இணையதள நண்பர்களே.திருவழிபாட்டு ஆண்டின் இறுதி ஞாயிறு மற்றும் இறுதி வாரத்தில் நாம் ஒன்று கூடியிருக்கிறோம். இன்றைய கிறிஸ்து அரசர் திருவிழா வழியாக அனைத்து காலங்களுக்கும் துவக்கமும் முடிவும் அவரே என திருச்சபை நமக்கு உணர்த்தி நினைவுறுத்துகிறது. கிறிஸ்து அரசரே நம் வாழ்வின் மையமாகயிருக்க நம் குடும்பங்களை சமூகங்களை அவர் பாதுகாப்பில் சமர்ப்பிப்போம். இதன் வழியாக இயேசுவின் மென்மையான ஆயனுக்குரிய கவனிப்பை அனுபவித்து அதே கவனிப்பை நம்சுற்றியிருக்கும் சகோதரங்களுக்கு வழங்குவோம்.

கிறிஸ்து அரசர் திருவிழாவை நாம் ஏன் கொண்டாடுகிறோம்? இன்றைய நாட்களில் இத்திருவிழா ஏதாவது அர்த்தமளிக்கிறதா? நாம் வாழும் இன்றைய உலகில் சில நாடுகளில் மட்டுமே முடியாட்சி நிகழ்கிறது. அச்சில நாடுகளில் மட்டுமே அரசர்கள் நாட்டின் தலைவர்களாக ஏற்றுக்கொள்ளப்படுகிறார்கள். இருந்தாலும் அதிகாரத்தின் மீது ஆசை மற்றும் அதிகாரத்திற்காக போராடுவது என்றும் மனித சமுதாயத்தில் நிலவக்கூடியஒன்றாகும். இன்று ஆணவத்தோடு ஆட்சிசெய்ய அலெக்சாண்டரோ – ஹிட்லரோ-முசோலினியோ-பதினான்காம் லூயியோ அல்லது மற்றுமொரு கடாபியோ நம்மிடம் இல்லை. அதே சமயம் ஆணவம் அதிகார ஆசை கட்டுபடுத்தகூடிய சக்திகள் பலவகைகளில் இன்றும் இருக்கின்றன.

நாங்கள் தான் அதிகாரம் படைத்த வல்லரசு நாடு – உலகில் வெற்றியும் அறிவியல் –தொழில்நுட்பத்தில் உயர்ந்துயிருக்கும் நாடு எங்களதே – நியூகிலியர் சக்தியோடு அழிக்கின்ற சக்திபெற்ற நாடு எங்களதே. மறுபுறம் நாடுமுழுவதும் எங்கள் மதமே பொதுமதமாக வணங்கி ஏற்றுக்கொள்ளக்கூடிய மதமாக அறிவிக்ப்படவேண்டும் என்ற வன்முறையான கோரிக்கை. இவைகள் எல்லாம் நம்மை சுற்றியுள்ள தவறான அதிகாரசக்திகள் ஆகும்.

இவைகளினால் ஏழைகள் – பசியிலிருப்போர் – தனிமையிலிருப்பபோர் – புறக்கணிக்கபபட்டோர் – கடைநிலையிலிருப்போர்-வீடுயின்றி சாலையோரம் வாழ்வோர் அனைவரும் வலுவற்றவர்களாக உரிமையில்லாதவர்களாக விடப்படுகிறார்கள். இதுபோன்ற ஒரு சூழ்நிலையில் தான் 9-ம்தேதி டிசம்பர் மாதம் 1925-ல் திருத்தந்தை பதினொன்றாம் பத்தநாதாரால் அன்றைய நாசீச மற்றும் பயங்கரவாத சக்திகளுக்கு மத்தியில் கிறிஸ்து அரசர் திருவிழாவானது ஏற்படுத்தப்பட்டது. இது அனைத்து காலங்களுக்கும் நேரங்களுக்கும் என்றென்றும் அன்பும் அக்கறையும் சக்தியும் நிறைந்த தலைவரும் வழிநடத்தும் ஆயனும் கிறிஸ்து அரசர் ஒருவர் மட்டுமே என்பதை நமக்கு நினைவூட்டுகிறது.

கிறிஸ்து மற்ற அரசர்களிடமிருந்து எவ்வாறு வேறுபட்டவர்? எவ்வாறு ஒதுக்கப்பட்ட அனைவரரையும் தன் அரசில் ஏற்றுக்கொள்கிறார்?. உலக தலைவர்கள் அரசர்கள் அதிகாரபொறப்பில் உள்ள அனைவரும் அவர்களுடைய பெருமைக்காகவே அதைநிலைநரட்டவே ஆட்சிசெய்கின்றனர் அவர்கள் செயலும் அதைநோக்கியே அமைகிறது. ஆனால் இயேசுவின் செயல் பாடுகள் அனைத்தும் மற்றவர்கள் அதுவும் தேவையிலிருக்கும் அனைத்து சகோதர சகோதரியின் நன்மைத்தனத்தை மையப்படுத்தியே அமைகிறது. உலக தலைவர்கள் தங்கள் அதிகாரத்தினால் கட்டுப்படுத்த குழுவை ஏற்படுத்தி பிரிவினையை ஏற்படுத்தினர். ஆனால் இயேசுவோ அவரே தன் மென்மையான அக்கறையோடு தன் மந்தையை பேணி கண்காணித்தார். தொடர்ந்து கண்காணிக்கின்றார்.”உலகமுடியும;வரை நான் எந்நாளும் உங்களோடு இருப்பேன்” என்ற அவரது உறுதிவார்த்தைகள் நம்மோடு இன்றும் இருந்து வழிநடத்தும் அவருடைய பண்பை வெளிக்கொணர்கிறது. அவர் வழிநடத்துதலில் நாமும் இத்தகைய மென்மையான அக்கறையோடு பிறருக்கு ஆயனாக இருக்கும் பொழுது ஒருநாள் நம்மைப்பார்த்து “எனக்கே செய்தாய்” என அவர் சொல்வார்.

விவிலியப் பேராசிரியர் சால்ட் + லய்ட் தொலைகாட்சியின் வழியாக நற்செய்தியை அறிவிக்கும் அருட்தந்தை தாமஸ் ரொசிகா சொல்கிறார். அவர் ஆசீர் பெற்ற அன்னை தெராசா அவர்களின் மடத்து சகோதரிகளுக்கு உரோமையிலுள்ள அவர்கள் இல்லமொன்றில் விவிலிய வகுப்புநடத்திக்கொண்டிருந்த தருணத்தில் அன்னை அவர்கள் சந்திப்புக்காக மடத்திற்கு வந்திருந்தார்களாம். ஒருநாள் மாலைவேளையில் அன்னை தெரேஸா அவர்களை அணுகி அருட்தந்தை “ஒவ்வொரு நாளும் எவ்வாறு எது உங்களை இந்தப்பணியில் அந்த கடினப்பட்ட மக்களை சந்திக்க சக்தியாக தூண்டுகிறது? என்றார். அன்னை அவர்களோ தன் கரங்களை அருட்தந்தை முன் காண்பித்து “எனக்கே செய்தீர்கள்” என்று பதிலளித்தார். இயேவுக்கே செய்கிறோம் இயேசுவையே காண்கின்றோம் என்ற ஆணித்தரமான அசைக்கமுடியதா அனுபவநம்பிக்கை அவர்களை வழிநடத்தியது.

எனக்கே செய்தாய்: இந்த வார்த்தைகள் இயேசு எவ்வாறு முழுமையாக பசியில் நோயில் ஆடையின்றி சிறையில் தனிமையில் தாகத்தில் இருந்தவர்களோடு ஒன்றித்தார் அவர்களில் தன்னை அடையாளம் கண்டு ஜக்கியமானார் என்பதை விளக்கிகூறுகிறது. நானே அவர்களில் வாழ்கிறேன் என்பது (ஏசா53:4 63:9) அவர் நம் பிணிகளை சுமந்துகொண்டார் நம் காயங்களை தாங்கிகொண்டார் என்பதின் வெளிப்பாடக அமைகிறது. அதிகாரத்தோடு கிறிஸ்தவர்களை கொன்று பயணித்துகொண்டிருந்த பவுலை நிறுத்தி அவர் கீழேவிழுந்தபொழுது கேட்ட குரல் ஏன் என்னை நீ துன்புறுத்துகிறாய் நீர் யார் என்ற கேள்விகேட்ட பொழுது அவர் கேட்ட குரல் நீ துன்புறுத்தும் இயேசுவே நான் என்பது எவ்வாறு இயேசு துன்புறும் மக்களிடம் ஒன்றித்து தன்னை என்றும் அடையாளம் கண்டுகொண்டார் என்பதை எடுத்துக்கூறுகிறது.

முதல் வாசகத்தில் இறைவாக்கினர் எசேக்கியேல் அதிகார அரசுகளால் உரிமையை இழந்து எருசலேம் ஆலயத்தை இழந்து வாக்குறுதி பெட்டகத்தை மோசே கட்டளை பலகைகளை இழந்து பாபிலோனிய அடிமைதனத்தில் இந்த இழப்புகள் இறைவனின் தண்டனையே உலகமுடிவுக்கு நம்முடிவுக்கு அறிகுறியே என்ற மனஅழுத்த தளர்ச்சியான உணர்வுகளில் “உங்களோடுயிருந்து சிதறியஉங்களை தேடிகூட்டி ஒன்றுசேர்த்து அக்கறையுடன் வழிநடத்த ஆயன் தோன்றுவார் எதிர்நோக்குங்கள் என் அழைப்புவிடுக்கின்றார்.

இயேசுவை மென்மையுள்ள அக்கறையுள்ள ஆயனாக நாம் அனுபவிக்கின்றோமா? நாமும் இதே அக்கறையோடு நம் உறவுகளை சகோதரங்களை அணுகுகிறோமா? நம்மத்தியில் சிறியோராகிய சகோதரர் யார்? எனக்கே செய்தாய் என இயேசு என்னிடம் சொல்வாரா?

திருத்தந்தை பிரான்சிஸ் கடந்தவார உலகநாடுகள் அமைப்பின் கருத்தரங்கில் தெருவில் பசியிலிருப்போரின் உரிமைகளைப்பற்றி நாம் நினைக்கும்பொழுது நாம் தெரிந்துகொள்ள உணர வேண்டியது அவர்கள் உணவை விட உதவியைவிட வறுமை நிரப்பபடுவதைவிட அவர் வேண்டுவது ஏங்குவது கேட்பதெல்லாம் மனித சுய மரியாதை மனித மாண்பும் சமத்துவமே நாங்களும் உங்கள் சகோதரம் என்ற அன்பு அக்கறைநிரம்பிய உயரிய உரிமையையே” என்றார். பலவகைகளில் வெறுமையிலிருப்போரை நிரப்புவோம் நீங்களும் என் சகோதரி என் சகோதரி என்ற சகோதர அக்கறையால் அப்பொழுது இறையரசில் எனக்கே செய்தாய் என நமக்குச் சொல்லப்டும்-ஆமென்.