இவ் மறையுரையை வழங்குபவர்

Rev.Fr.Peter Jayakanthan sss
Congregation of the Blessed Sacrament
Corpus Christi Catholic Church,
Houston, Texas, US



ஞாயிறு மறையுரைகள்

மதிப்பிற்குரிய அருட்பணியாளர்களே, துறவிகளே, அருட் கன்னியரே, உங்கள் ஞாயிறு மறையுரைகளை எமது இணையத்தளத்தின் ஆன்மீக வலத்தில் பிரசுரித்து, ஆண்டவர் இயேசுவின் நற்செய்தியை எல்லோருக்கும் அறிவிக்க விரும்பினால், info@tamilcatholicnews.com என்ற எமது மின்னஞ்சலுக்கு உங்களுடைய ஆக்கங்களை அனுப்பிவைக்கவும். உங்கள் மறையுரைகள் உலகெங்கும் இருக்கும் அனைத்து தமிழ் உள்ளங்களையும் சென்றடையும்.



இதோ! ஓநாய்களிடையே ஆடுகளை அனுப்புவதைப்போல நான் உங்களை அனுப்புகிறேன். எனவே பாம்புகளைப்போல முன்மதி உடையவர்களாகவும் புறாக்களைப்போலக் கபடு அற்றவர்களாகவும் இருங்கள்.
(மத்தேயு 10:16)

நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள்; தந்தை, மகன், தூய ஆவியார் பெயரால் திருமுழுக்குக் கொடுங்கள். நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்களும் கடைப்பிடிக்கும்படி கற்பியுங்கள். இதோ! உலக முடிவுவரை எந்நாளும் நான் உங்களுடன் இருக்கிறேன்
(மத்தேயு 28:19-20)

நீ அவற்றை உன் பிள்ளைகளின் உள்ளத்தில் பதியுமாறு சொல். உன் வீட்டில் இருக்கும்போதும், உன் வழிப்பயணத்தின் போதும், நீ படுக்கும்போது, எழும்போதும் அவற்றைப் பற்றிப் பேசு.
(இணைச்சட்டம் 6:7)








பொதுக்காலத்தின் முப்பத்தி இரண்டாம் ஞாயிறு-முதலாம்

ஆண்டவன் இல்லத்தில்… ஆனந்தமாய் இணைவோம்…!!!

எசே47:1-2 8-9 12
1கொரி3:9-11 16-17
யோவா12:13-22



கிறிஸ்துவில் பிரியமுள்ளவர்களே சகோதர சகோதிரியரே இளைய உள்ளங்களே சிறார்களே இணையதள நண்பர்களே. நாம் ஆலயத்தில் ஒன்றுகூடும்பொழுது ஆனந்தமாய் பாடிபோற்றுகிறோம். மேலும் ஒரே விசுவாசத்தை ஒரே ஆர்வஉணர்வோடு கொண்டாட திருப்பலியில் ஒன்றிணைந்து உலகிற்கு சாட்சிபகர்கிறோம். நற்கருணைபீடத்திலிருந்து வெளியேசெல்லும்பொழுது இதே சமத்துவ பங்கேற்பை சமூகத்திலும் பயிற்சிசெய்ய உந்தப்படுகிறோம். நம் ஆலயத்தில் இறைவனோடு ஒன்றிணையும் இடமாக தருணமாக நாம் அனுபவம் பெறுகிறோம்.. நம் ஒவ்வொருவருடைய பங்கு ஆலயமும் நம் முகவரியும் நம் வாழ்வின் ஆதாரமும் மற்றும் ஒரே திருச்சபையோடு இணைக்கின்ற அடையாளமாகவும் அமைகிறது. தொடர்ந்து நாம் இறைவன் இல்லத்தில் ஒன்றுகூடுவோம் அவரோடு ஒன்றிணைந்து அனுபவித்து ஆனந்தம் கொள்வோம்.

ஆலயங்கள் தகர்க்கபடுகின்றன. இருந்தஇடத்தின் அடையாளம் இன்றி தொடக்ககாலத்து வரலாற்று: ஆலயங்கள் எரிக்க மற்றும் அழிக்கப்படுகிறது. இது நாம் காணும் இன்றைய உண்மையாகும். சிரியா மற்றும் ஈராக்கிலிருந்து கிறிஸ்தவர்கள் கட்டாயப்படுத்தி வன்முறையோடு வெளியேற்றபடுகிறார்கள். இரண்டாவது பெரிய நகரமான மொஸலிலிருந்து கிறிஸ்தவம் கிஸ்தவர்களின்றி வெறுமையாக்கப்பட்டுள்ளது. மதவெறிசக்திகள் 1800 வருட வராலாற்று ஆயலயத்தை இடித்து அழித்திருக்கின்றனர். ஆலயத்தை அழிப்பது கிறிஸ்தவத்தை அழிப்பது கிறிஸ்தவ விசுவாசத்திற்கு முற்றுப்புள்ளி வைப்பது என்ற எண்ணமே இந்த வன்முறைகளுக்கு காரணங்களாகும்.

ஜரேரப்பாவில் ஆலயங்கள் காட்சியகங்களாக மாறிக்கொண்டிருக்கின்றன. அதிக எண்ணிக்கையில் புனிதர்களை மற்றும் பல்வேறு துறவற சபைகள் உருவாக புனிதர்களை தந்த பிரான்சு நாட்டில் திருப்பலிக்குவருபவர்களின் எண்ணிக்கை எண்ணத்தேவையில்லாத ஒற்றைஇலக்கஎண்களே ஆகும். அமெரிக்காவில் இவ்வருடத்தில் நியூயார்க் மறைமாவட்டத்தில் 112 பங்குஆலயங்கள் 55 பங்கு ஆலயங்களாக குறுகிஇணைக்கப்பட்டுள்ளன. நம்மத்தியில் நம் நாட்டில் நம் நகரங்களில் மறைமாவட்டங்களில் நம் பங்கு ஆலயங்களை நாம் எவ்வாறு காண்கின்றோம். ஆர்வத்தோடு ஒன்றுகூடுகிறோமா? ஆலயத்திற்காக நன்றிகூறுகின்றோமா? நம்மில் சிலர் கேட்கின்ற கேள்விகள்: பல்வேறு போட்டிகள் குறைகள் அங்கே காணப்படுகின்றபோது நான் ஏன் ஆலயம் செல்லவேண்டும்? இருக்கின்ற என்இல்லத்திலே நான் இறைவனோடு இணைந்து செபம்செய்வது போதுமானது. திருச்சபை வரையறைக்குள்ள ஒரு நிறுவனம். அனைவரும் ஒரே இயேசுவையே விசுவசிக்கிறோம். ஏதோ செபவழிபாட்டில் எங்கோ பங்கேற்பது போதுமானது!

இத்தகைய முரண்பாடான கேள்வி மற்றும் வாழ்வுமுறைகளுக்கு மத்தியில் நாம் கொண்டாடும் லரத்தரன; போராலய அர்ப்பணிப்பு திருவிழா ஒன்றிணைந்து ஆலயம் வந்து அனுபவம் பெறுவதின் முக்கியதுவத்தை சிறப்பைநமக்கு நினைவுபடுத்தி அழைக்கிறது. நாம் ஏன் இத்திருவிழாவை கொண்டாடுகிறோம்? இத்திருவிழா நமக்கு எத்தகைய செய்தியை நமக்குதருகிறது? லரத்தரன் பேராலயம் உலகில் உள்ள அனைத்து கத்தோலிக்க ஆலயங்களுக்கும் தலைமையான மற்றும் தாயான ஆலயமுமாகும். பொதுவாக நாம்கருதும் புனித பேதுரு பேராலயம் அல்ல. லாத்தரன் பேராலயமுகப்பில் உரோமை மற்றும் உலகஅனைத்து ஆலயங்களுக்கும் தாயான தலையமான பேரலாயம் என்று குறிப்பிட்டிருப்பதை நாம் காணலாம். ஒவ்வொரு ஆயருக்கும் ஒரு தேவாலயம் ஒப்படைத்து கொடுக்கப்படும். திருத்தந்தையின் தேவாலயம் புனித யோவான் லரத்தரன் பேராலயமே ஆகும்.

ஏன் புனித பேதுரு பேராலயமில்லாமல் லாத்தரன் பேராலயம் தலைமை ஆலயமாகதிகழ்கிறது? என்றதொருகேள்வி நம்மில் எழலாம். இதற்கு நாம் வரலாற்று உண்மைக்கு செல்லவேண்டும். தொடக்கதிருச்சபையில் கிறிஸ்தவர்கள் துன்புறுத்தப்பட்டு கொல்லப்பட்டதற்கு காரணம் கிறிஸ்தவம் மறுக்கப்பட்ட மறைமுகமாக செயல்பட்டமதமாக காண்கின்றோம். மறைசாட்சியானவர்கள் இரத்தத்தால் திருச்சபை உருவரக்கப்பட்டுது. எப்பொழுது கான்ஸ்டன்டைன் ஆளுநர் திருமுழுக்கு பெற்று கிறிஸ்துவை ஏற்று கிறிஸ்துவ விசுவாசத்தை அரவணைத்தாரோ அப்பொழுதே வணங்கப்பட்ட அனைத்து உரோமைமுறை வழிபாட்டு சிலைகள் முறைகளை களைத்தெறிந்து கிறிஸ்தவத்தை கி.பி313-ல் அதிகாரப்பூர்வ மதமாக அறிக்கையிட்டு புதியசகாப்தத்தை உருவாக்கினார். மக்கள் விசுவாசத்தை பொதுவில் வெளிப்படுத்த துவங்கினர். லாத்தரன் என்ற செல்வ குடும்ப சமூகம் தங்களது பெரிய மாளிகையை கானஸ்டன்டைனுக்கு அளித்தனர். அவர் அதை திருத்தந்தையின் கரங்களில்; அர்ப்பணிக்க இதே நாளில் நவம்பர் 9-ம்தேதி 324-ல் லாத்தரன் ஆலயமாக அர்பணிக்கப்பட்டது. பின் திருத்தந்தையின் தேவாலயமாக ஏற்றுக்கொள்ப்பட்டு புனித யோவானின் லாத்தரன் பேராலயமாக அர்ப்பணிக்கப்பட்டது. பின்பு போர்காலங்களில் திருத்தந்தை உரோமையைவிட்டு வெளியில் பாதுகாப்போடுயிருந்தபொழுது லாத்தரன் தாக்கப்பட்டது நிலநடுக்கம் பாதிப்பை ஏற்படுத்தியது மற்றும் எரிக்கப்பட்டது. திருத்தந்தை திரும்பவந்தபொழுது புனித பேதரு பேராலயத்துக்கு செயல்பாடுகள் மாற்றப்பட்டன.

இது அனைத்து ஆலயங்களுக்கும் தலையான மேலும் தலைமையான ஆலயமாக திகழ்வதற்கு காரணம்: பேதுருவின் தலைமை பீடம் இங்கே காணப்படுகிறது. இதிலிருந்து திருத்தந்தை பிரான்சிஸ் இயேசுவின் மறுமுகமாக புனித பேதுருவின் வழித்தோன்றலாக திருச்சபையை வழிநடத்துகிறார். எனவே அவர் அதிகாரத்தை ஏற்று அவர்வழியில் நம் விசுவாசத்தைஏற்று நாமும் தாய்திருச்சபையில் ஒன்றாகிறோம். மேலும் வரலாறு மற்றும் பாராம்பரியமாக நாம் காண்பவைகள் பல இப்பேராலயத்தில் உள்ளன. பேதுரு பயன்படுத்தியதாக சொல்லபப்படும் மரத்தினாலான திருப்பலிபீடம் இறுதிஇரவுஉணவு பீட மேஜையின் ஒருபகுதி வெண்கலத்திலான இறுதிஇரவ உணவு. புனிதபடிக்கற்கள் இங்கே துவக்கத்தில் வைக்கப்பட்டிருந்தது இபபொழுது மக்கள் அனுபவம் பெற அருகில் வைத்து பாதுகாப்பற்றபடுகின்ன.

இன்றைய அனைத்து இறைவார்த்தைகளும் ஆலயத்தை கோயிலை முன்வைக்கின்றன. எசேக்கியேல் இறைவாக்கினர் திரும்பச்சென்று வாழ்வையும் எருசலேம் ஆலயத்தையும் மீண்டும் உருவாக்க உற்சாகப்படுத்துகிறார். திருத்தூதர் பவுல் இயேசுவே நம் ஆலயங்களின் அடித்தளம் என்கிறார். யோவான் நற்செய்தியாளர் இயேசு பிரிவினை வன்முறை அர்த்தமில்லா பலிகள் இவைகளிலிருந்து ஆலயத்தை சுத்தப்படுத்தி இறைவன் உறையும் இல்லமாக அனுபவிக்க அழைக்கின்றார். இரண்டாம் வத்திக்கான் ஏடுகள்சொல்வதுபோல விண்ணக வாழ்வை வெளிக்காட்டும் அடையாளங்கள் அருங்குறிகளால் நிரப்பப்பட்ட ஆலயங்களாக திகழவேண்டும். நாம் ஒவ்வொருமுறையும் அப்பத்தை பகிர ஒன்றாக ஒன்றிணையும்பொழுது நம் தாயாகிய தலைமையாகிய லாத்தரன் பேராலயத்தோடு இனணகிறோம்

எத்தனை இல்லங்கள் உள்ளன என்று ஒருமுறை அன்னைதெரேஸாவுக்கு கேள்வி எழுப்பப்பட்டபொழது அவர்கள் சொன்னது எங்களிடம் இருப்பது 584 நற்கருணை பீடங்கள் என்றாராம். நற்கருணை பீடங்களாக வாழ்ந்து சாட்சிபகர பங்கு ஆலயத்தில் ஒன்றுகூடி ஒன்றிணைந்து ஆனந்தம் காண்போம். ஒவ்வொரு ஞாயிறு நற்கருணை கொண்டாட்டமும் தலைமை போரலயத்தோடும் விண்ணகவாழ்வோடும் நம்மை இணைக்கட்டும்-ஆமென்.