இவ் மறையுரையை வழங்குபவர்

Rev.Fr.Peter Jayakanthan sss
Congregation of the Blessed Sacrament
Corpus Christi Catholic Church,
Houston, Texas, US



ஞாயிறு மறையுரைகள்

மதிப்பிற்குரிய அருட்பணியாளர்களே, துறவிகளே, அருட் கன்னியரே, உங்கள் ஞாயிறு மறையுரைகளை எமது இணையத்தளத்தின் ஆன்மீக வலத்தில் பிரசுரித்து, ஆண்டவர் இயேசுவின் நற்செய்தியை எல்லோருக்கும் அறிவிக்க விரும்பினால், info@tamilcatholicnews.com என்ற எமது மின்னஞ்சலுக்கு உங்களுடைய ஆக்கங்களை அனுப்பிவைக்கவும். உங்கள் மறையுரைகள் உலகெங்கும் இருக்கும் அனைத்து தமிழ் உள்ளங்களையும் சென்றடையும்.



இதோ! ஓநாய்களிடையே ஆடுகளை அனுப்புவதைப்போல நான் உங்களை அனுப்புகிறேன். எனவே பாம்புகளைப்போல முன்மதி உடையவர்களாகவும் புறாக்களைப்போலக் கபடு அற்றவர்களாகவும் இருங்கள்.
(மத்தேயு 10:16)

நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள்; தந்தை, மகன், தூய ஆவியார் பெயரால் திருமுழுக்குக் கொடுங்கள். நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்களும் கடைப்பிடிக்கும்படி கற்பியுங்கள். இதோ! உலக முடிவுவரை எந்நாளும் நான் உங்களுடன் இருக்கிறேன்
(மத்தேயு 28:19-20)

நீ அவற்றை உன் பிள்ளைகளின் உள்ளத்தில் பதியுமாறு சொல். உன் வீட்டில் இருக்கும்போதும், உன் வழிப்பயணத்தின் போதும், நீ படுக்கும்போது, எழும்போதும் அவற்றைப் பற்றிப் பேசு.
(இணைச்சட்டம் 6:7)








பொதுக்காலத்தின் பதிநான்காம் ஞாயிறு

எளிதான சுமை…….. அழுத்தாத நுகம்….!!!

செக் 9:9-10; உரோ8:9இ 11-13; மத் 11:25-30



கிறிஸ்துவில் பிரியமுள்ளவர்களே சசோதர சகோதிரியரே இளைய உள்ளங்களே சிறார்களே இணையதள நண்பர்களே உங்கள் அனைவரையும் நற்கருணை பீடத்திற்கு ஒரே சமூகமாக பங்கெடுக்க அழைப்பதில் பெருமகிழ்ச்சியடைகின்றேன். சுமக்;க மறுக்கும் சுமக்க விரும்பா நம் சுமைகளை பாரங்களை இறைபீடத்திற்கு கொண்டுவருவோம் அவர் எளிதாக்குவார் நம் கடினங்களை – மன அழுத்தங்களை ஆற்றுப்படுத்துவார் அவரோடு அவரில் இணைவோம்.

சுமைகள் எளிதாகுமா?......சுகங்களாக மாறமுடியுமா? ஏன்ற கேள்விக்கு மாணவன் சுரேஷ் சொன்ன பதில்:
சர்க்கரைநோயினால் இனிப்பில்லா குடிக்கும் காபி… பழகிப்போய் எளிதாகிறது.
புரியாமல் வகுப்பறையில் உட்கார்ந்திருக்கும் நேரம்…. பழகிப்போய் எளிதாகிறது
நேரம் கணக்கில்லாமல் மறையுரையிருக்கும் ஞாயிறு திருப்பலி….. பழகிப்போய் எளிதாகிறது
இவைகள் அனுதின பழக்கங்கள் மேலும் பொறுப்புகள்; நாம் பாரங்களாக இவைகளை பார்ப்பதற்கு பாரணம் நம்பார்வைNயு ஆகும். மாறாக மன அழுத்தங்கள் - பெரிய குறைபாடுகளே நாம் சுமக்க விரும்பாமல் மறுக்கும் சுமைகளும் பாரங்களும் ஆகும்.

தீரா நோய்களும் அதன் வலிகளும் சுமைகளாகலாம்……. பல ஆண்டு கடன் அதைச்சார்ந்த பொருளாதார குறைபாடு சுமையாகலாம்……புரிந்துகொள்ளா மற்றும் முறிந்த உறவுகள் சுமைகளாகலாம்…வேலைப்பாரங்கள் சுமையாகலாம்……அன்றாட சிக்கல் நிறைந்த பயணங்கள்……….சுமையாகலாம். நிறுத்தஇயலா பலவீனம் மற்றும் தவறான பழக்கங்கள்…….சுமையாகலாம்
இந்த சுமைகள் நம்மோடு ஒன்றாவதால்….. நமக்கு மனஅழுத்தங்கள் ஏற்படுகின்றது……இந்த மனஅழுத்தங்கள் நம்மை நம் உடல் நலத்தை பாதிக்கலாம். நம்மிடம் கோபம் நிறைந்த அணுகுமுறையை அல்லது அதற்கு மாறான உயிரோட்டமில்லா கசப்பான மனதை உருவாக்கலாம். என்னால் ஏன் சுமக்கமுடியவில்லை? என்ற கேள்விகளுக்கு இன்றைய இறைவார்த்தைகள் வாருங்கள் எளிதாக்குவோம் என்றழைக்கின்றன.

இன்றைய நற்செய்தியில் மத்தேயு திருத்தூதர்களுக்கும் இயேசுவைப்பின்பற்றவிரும்பிய அனைவருக்கும் மாறுபட்ட செய்தியை அழைப்பை தருகிறார். இறைவன் தந்த அன்புகட்டளையை மறுத்து தாங்கள் இணைத்துக்கொண்ட 613 கட்டளைகளை அதன் புரியாத விவரங்களை யூதமத தலைவர்கள் கட்டாயப்படுத்தி மற்றவர்கள் பின்பற்ற அமுத்தினர். இந்த கடின அர்த்தமில்லா பாரங்களை சுமைகளை எடுத்து வாருங்கள் என்னிடம் இறக்கிவையுங்கள் எளிதாக்குவோம் என்கிறார் இறைமகன் இயேசு. எவ்வாறு அவைகள் எளிதாகும் என்பதற்கு அவர் நான் கனிவும் மனத்தாழ்மையும் உடையவன் என்கிறார் பின் நுகம் அழுத்தாமல் சுமையை எளிதாக்கும் என்கிறார்.

என் கனிவும் மனத்தாழ்மையும்…..

இது தாழ்ச்சியை மௌனமான குணத்தைச்சொல்லவில்லை. மாறாக மனத்தாழ்மை என்பது கிரேக்கமொழியில் கோபமான மனஅழுத்தநிலையின்றி கசப்பான அமைதியான பேசாத மௌனஅழுத்தநிலையுமின்றி இரண்டுக்கும் இடைப்பட்ட நடுத்தரமான பக்குவமான மனநிலைநிரம்பயி குணம் அணுகுமுறை ஆகும். இந்த அணுமுறை மனநிலை குணம் இறைவனை நோக்கியபார்வை மற்றும் இறைவனை சார்ந்து வாழ்வதை குறிக்கிறது இதுவே மனத்தாழ்மை ஆகும். தன்னை தன் அறிவாற்றலை திறமையை மட்டுமே நம்பும் எண்ணம் மற்றும் அணுகுமுறையிலிருந்து மாறுபட்டது. ஆத்திரமில்லா……மறுத்துப்போன மனநிலைகளிலிருந்து பக்குவமான மனதை அணுகுமுறையை உள்ளடக்கியது.

எளிதான சுமை…….அழுத்தாத நுகம்:

பாலஸ்தீன பகுதியில் நுகம் பெரிய மரக்கட்டை இரு எருதுகள் தாங்கிசெல்ல சுமக்கும் வகையில் அமைந்திருக்கும். இது இரு எருதுகள் சுமப்பதால் சுமையும் எளிதாகிறது நுகமும் அழுத்தாது. இதுபோல சுமைகளை பாரங்களை இயேசுவிடம் இறக்கி வைத்தால் நாம் நுகத்தின் ஒருபுறமிருக்க இயேசு மறுபுறம் தோள்கொடுத்து சுமக்கின்றார். சுமையை பங்கிட்டு எளிதாக்குகிறார் அழுத்தாவண்ணம் பக்குவமாக்குகிறார். அவர் இருந்தால் சுமைகள் மத்தியில் அமைதி உண்டு ஆனந்தம் உண்டு அருள் உண்டு.

முதல் வாசகத்தில் செக்கரியா இறைவாக்கினர் பாபிலோனிய நாடுகடத்தல் மீட்புக்குபிறகு இச்சுமைகள் முடியாது கடினமானது என்று மறுத்தபொழுது கட்டி எழுப்புங்கள் உங்கள் வாழ்வை நகரங்களை. பிரிந்திருக்கும் இஸ்ராயேல் மற்றும் யூதேயா அரசுகள் ஒன்றாகும் என்று சொல்லி மெசியா அரசராக கழுதையின் மேல் வருவார் என்பது அன்றைய காலத்தில் அரசர் போருக்கு செல்வதன் போரை நினைவுறுத்துவதின் அடையாளமாக குதிரையில் வருவதும் மற்றும் போரில்லா மற்றும் போர்விரும்பா நேரத்தில் பவனியாக அமைதியின் அடையாளமாக கழுதையில் வருவதும் பழக்கமாகஅமைந்திருந்தது. இது வருகின்ற அரசர் மெசியா அமைதியை தருவார் அனைத்துச்சுமைகளையும் எளிதாக்குவார் என்பதை எடுத்துரைக்கிறது. நம்மையும் இஸ்ராயேல் மக்கள் போல மருத்துப்போன மனநிலையிலிருந்து மற்ற கசப்பான ஆத்திர மனநிலையிலிருந்து பக்குவமான தாழ்வுமனநிலைக்கு அழைக்கிறது.

சுமைகளை எளிதாக்க அவரையே உற்றுநோக்கி அவரிடம்செல்வோம்..அவர் தோள்கொடுத்து எளிதாக்குவார்….எந்த ஒருசுமையும் நம்மைஅழுத்தாது…..மாறாக அமைதியையே தரும்……மனத்தாழ்மையுடன் அணுகுவோம்……அவராக மாறுவோம்.

திருச்சபையின் வரலாற்றில் திருப்புமுனையாக பல்வேறு எதிர்ப்பு கருத்துகளுக்கு மத்தியில் இரண்டாம் வத்திக்கான்சங்கத்தின் வழியாக மாற்றுப்பார்வையோடு இயங்கிக்கொண்டிருந்தபொழுது இதற்கு மையகாரணமான புனித திருத்தந்தை 23ம் அருளப்பர் தன்னுடைய அனைத்து பாரங்கள் எதிர்ப்புகள் மனஅழுத்தங்கள் சுமைகள் ஆதகங்கள் அனைத்தையும் ஒவ்வொரு இரவும் உறங்க போவதற்குமுன் தன் இரவுச்செபத்திலே இவ்வாறு சொல்லிச்செல்வாராம். “இயேசு ஆண்டவரே நான் என் படுக்கைக்குப்போகிறேன் இது உம் திருச்சபை நீரே அதை கவனித்துகொள்ளும்”. இவர் அமைதியான நகைச்சுவைமிகுந்த மனிதநேய மகிழ்ச்சியான திருத்தந்தை என ஏற்றுக்கொள்ளப்பட்டதன் காரணம் நமக்கு புரிந்துகொள்ளமுடிகிறது. இயேசுவையே உற்றுநோக்கினார் தன் சுமைகளையெல்லாம் மனத்தாழ்மையுடன் இNயுவிடம் இறக்கிவைக்க அதுஅவருக்கு தேiயான அமைதியைதந்தது.

அமைதியின் அன்னை ஆசிர்பெற்ற அன்னை தெரேசா அவர்களிடம் அவர் எவ்வாறு அன்றாட சுமைகளை சுமக்கமுடிகிறது என்ற கேள்விக்குப்பதிலா அவர் சொன்னது “நான் இறைவள் கரங்களில் இருக்கும் சிறுபென்சில் அவரே சிந்திக்கிறார் அவரே எழுதுகிறார் அவரே அளைத்தும் செய்கிறார் பல தருணங்களில் உடைந்திருக்கும் சிறு பென்சிலாகிய நான் அவர்கரங்களில் இருக்கும்பொழுது என்னை கூர்மையும் பக்குவப்படுத்துகிறார்” என்றார். அவர் கரங்களில் நம் சுமைகளோடு சங்கமமாகுவோம் நம்மனத்தாழ்மை அனைத்தையும் எளிதாக்காட்டும்-ஆமென்.