இவ் மறையுரையை வழங்குபவர்

Rev.Fr.Peter Jayakanthan sss
Congregation of the Blessed Sacrament
Corpus Christi Catholic Church,
Houston, Texas, USஞாயிறு மறையுரைகள்

மதிப்பிற்குரிய அருட்பணியாளர்களே, துறவிகளே, அருட் கன்னியரே, உங்கள் ஞாயிறு மறையுரைகளை எமது இணையத்தளத்தின் ஆன்மீக வலத்தில் பிரசுரித்து, ஆண்டவர் இயேசுவின் நற்செய்தியை எல்லோருக்கும் அறிவிக்க விரும்பினால், info@tamilcatholicnews.com என்ற எமது மின்னஞ்சலுக்கு உங்களுடைய ஆக்கங்களை அனுப்பிவைக்கவும். உங்கள் மறையுரைகள் உலகெங்கும் இருக்கும் அனைத்து தமிழ் உள்ளங்களையும் சென்றடையும்.இதோ! ஓநாய்களிடையே ஆடுகளை அனுப்புவதைப்போல நான் உங்களை அனுப்புகிறேன். எனவே பாம்புகளைப்போல முன்மதி உடையவர்களாகவும் புறாக்களைப்போலக் கபடு அற்றவர்களாகவும் இருங்கள்.
(மத்தேயு 10:16)

நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள்; தந்தை, மகன், தூய ஆவியார் பெயரால் திருமுழுக்குக் கொடுங்கள். நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்களும் கடைப்பிடிக்கும்படி கற்பியுங்கள். இதோ! உலக முடிவுவரை எந்நாளும் நான் உங்களுடன் இருக்கிறேன்
(மத்தேயு 28:19-20)

நீ அவற்றை உன் பிள்ளைகளின் உள்ளத்தில் பதியுமாறு சொல். உன் வீட்டில் இருக்கும்போதும், உன் வழிப்பயணத்தின் போதும், நீ படுக்கும்போது, எழும்போதும் அவற்றைப் பற்றிப் பேசு.
(இணைச்சட்டம் 6:7)
பொதுக்காலத்தின் இருபத்திஒன்பதாம் ஞாயிறு

100% ஒன்றிணைவோம்……. 0%புறக்கணிப்போம்!!

ஏசா45:1 4-6 1தெச1:1-5 மத் 22:15-21கிறிஸ்துவில் பிரியமுள்ளவர்களே சகோதர சகோதிரியரே இளைய உள்ளங்களே சிறார்களே இணையதள நண்பர்களே. இன்றைய திருவிருந்திற்கு உங்களை அன்போடு அழைக்கின்றேன். நம்முடைய புதியவாரத்தின் முதல் நாளை முதல் தருணத்தை இறைவனிடம் அர்பணித்து ஒரே நற்கருணை சமூகமாக நன்றியோடு போற்றி புகழ;வோம். இன்று சிறப்பாக திருச்சபையில் கடந்த இருவாரங்களாக நிகழ்வுபெற்ற சிறப்பு ஆயர்பேரவையின் இறுதி நிறைவுநாளில் அனைத்து சிந்தனைமிகு கருத்து பரிமாற்றங்களும் கிறிஸ்தவ குடும்பங்களை உற்சாசப்படுத்தி இயேசவையே மையமாகக்கொண்டு இறைவிசுவாசத்திற்கு 100 % ஆம் என்ற பதில்அளிக்கின்ற குடும்பங்களாக உருவாக துணையாயிருக்க மன்றாடி செபிப்போம். உலகின் அனைத்து நாட்டு தலைவர்களும் மதச்சுதந்திரத்தை கடைபிடித்து மதநல்லிணக்க மதிப்பீடுகளை வலியுறுத்தி செயல்பட வரம்வேண்டுவோம்.

பதினான்காம் லூயி அடிக்கடிச் சொல்லி தன்அதிகாரத்தை வலியுறுத்திய வார்த்தைகள் “நானே அரசு” நானே கடவுள் என்பதே ஆகும். நானே அதிகாரத்தின் உச்சம் என்பதை தொடர்ந்து செயலாற்றிக்கொண்டிருந்தான். அரசர்களும் தலைவர்களும் ஒரு தருணத்தில் ஒரு பதவிவெறி உணர்வோடு தங்கள் ஆட்சி மதத்திலிருந்து விடுதலைபெற்றது. மதம் கடவுள் விசுவாசம் தேவையில்லை எல்லாம் நாங்களே என்று ஆணவத்தோடு ஆட்சிசெய்தனர். மதம் புறக்கணிக்கப்பட்டது மக்கள் நாடு தனித்துசெயல்பட்டது. எட்டாம் ஹென்றின் வார்த்தைகள் நான் எங்கும் இருக்கின்றவன் என்பதே. பதவி ஆசையோடு திருச்சபையை திருத்தந்தையை தன் கட்டுகாட்டிற்குள் கொணர்ந்து தானே அதை ஆட்சிசெய்ய விரும்பி போராடினான். அதற்காக அவனோடு இணையமறுத்து உனக்கு 0 % இறைஇயேசுவுக்கு 100 % என்று பதில்சொன்ன அவரை பலியாக்கினான்.

நானே நிரந்தரமுதல்வர் நானே தெய்வீக அரசர் என்று நம்மத்தியிலும் மனிதங்களை கடவுளாக முன்நிறுத்தி இறைவனை மதத்தினை புறக்கணித்து தனித்துவைக்கிறோம். மதமும் இறைவனும் தேவையில்லை என்ற எண்ணத்தோடு வாழ்வோரையும் நாம் பார்க்கின்றோம். அமெரிக்காவில் பிரிட்டனி மேயாட் என்ற 29வயது பெண்மணி கேன்சரினால் கடினதுயரத்திற்குப்பிறகு கையில் மருத்துவரிடமிருந்துபெற்ற லெத்தல்-உயிர்க்கொல்லி மாத்திரையை தன்கையில் வைத்துக்கொண்டு நவம்பர் 1-ம்தேதி நான் என் வாழ்வைமுடித்துக்கொள்ளப்போகிறேன். என் முடிவு என்கையிலே. என்று பகிரங்கவெளிப்படுத்துதலோடு மதமும் இறைவனும் எனக்கு ஒன்றுமில்லை தேவையில்லை என்று இளைய உள்ளங்களை பாதிப்புக்குள்ளாகுகிறார். இறைவனே வாழ்வின் தொடக்கமும் நிறைவும் உயிரின் சொந்தம் அவரே என்ற மதமதிப்பீடுகளை புறக்கணிப்பது மிகத்தவறாகும். நாம் புறகணிக்கின்றோமா? அல்லது ஒன்றிணைக்கின்றோமா?

இனறைய இறைவார்த்தைகள் மதத்தை இறைவன விசுவாசத்தை நம் வாழ்வோடு என்றும் ஒன்றிணைத்து வாழ சவால் விடுகின்றன. முதல் வாசகத்தில் ஏசாயா இறைவாக்கினர் அருமையான சைரஸ் அரசனை முன் உதாரணமாக வைக்கிறார். நற்செய்தியில் மத்தேயு இயேசு என்றும் எதிர்ப்பு சக்தியின் படியில் விழவில்லை என்பதை எடுத்துச்சொல்கிறார்.

இன்றைய தெற்கு ஈரான் பகுதியிலே சைரஸ் அரசனின் கல்லறை பாதுகாக்கப்படுகிறது. இரண்டாம் சைரஸ் அல்லது மகா சைரஸ் என்றழைக்கப்பட்ட அவரின் பெயர் எபிரேய புனித நூலில் 22 முறைகுறிப்பிடப்படடிருக்கிறது. அவர் வெற்றிகளை கைப்பற்றிய சிறந்த அரசராக ஏற்றுக்கொள்ளப்பட்டார். மெசப்பட்டோமிய மற்றும் பாபிலோனிய பகுதிகளைப்பெற்ற சைரஸ் 70 ஆண்டுகளாக பாபிலோனிய அடிமைத்தனத்தில் துயரத்தில் பழகிப்போன நம்பிக்கைஇழந்திருந்த இஸ்ராயேல் மக்கள் சார்பாக போரிட்டு வெற்றிகொண்டு பாபிலோனியர்களிடமிருந்து அவர்கள் அனைவரையும் விடுவித்தார். தான் மத இறைவிசுவாச ஒருங்கிணைக்கின்ற அரசன் என்பதை வெளிப்படுத்த விடுதலை பெற்ற இஸ்ராயேல் மக்களை மீண்டும் அவர்களின் வரக்குறுதியின் நிலத்திற்கு செல்ல அனுப்பிவைத்தான். உங்கள் எருசலேமையும் உங்கள் வாழ்வையும் மீண்டும் கட்டி எழுப்புங்கள் என்று அனைத்து உதவிகளையும் தந்து பாபிலோனிய அரசகன் நெபுகத்நேசர் எருசலேமை தாக்கி கைப்பற்றிய அனைத்து நகைகளையும் இஸ்ராயேல் மக்களிடம் ஓப்படைத்தான். வழக்கமாக ஒருநாட்டை கைப்பற்றும்பொழுது அம்மக்களை அடிமைகளாக்குவதும் அந்நாட்டின் செல்வங்களை அபகரிப்பதுமே அரச வழக்கமாகயிரந்தது. ஆனால் சைரஸ் அரசன் அவர்களுக்கு விடுதலையும் அவர்களி;ன ஆன்மிக அன்றாட மற்றும் அரசியல் சக்தியை வாழ்வை கட்டி எழுப்ப வாழ்த்தும் உதவியும் தந்து அனுப்பினார்.

அன்றைய நாட்களில் இஸ்ராயேலின் அரசர்களாகிய மற்றும் தலைவர்களுக்கு கொடுக்கப்பட்ட அடைமொழிகள் திருப்பொழிவு செய்யப்பட்டவர் மற்றும் ஆயன் என்பதாகும். இங்கே ஒரு புற இனத்து அரசரான சைரசை இதோ யாவே இறைவனால் திருப்பொழிவுசெய்யப்பட்டு நமக்காத் தெரிந்தெடுக்கு அனுப்பட்டவர் இவரே என்று பாராட்டி அவரில் மகிழ்ச்சியடைய அழைக்கிறார். இறைவனை மதவிசுவாசத்தை தன்னோடு தன்அரசோடு வாழ்வோடு ஒன்றிணைத்த சைரசைப்போல நாமும் மத மற்றும் இறைவசுவாச ஒருங்கிணைப்பு மனிதம் எனச் சொல்லிக்கொள்ளலாமா?

நற.செய்தியிலே இரண்டு குழுவினர் இயேசுவை மாட்டிக்கொடுக்க விரும்புவதைப்பார்க்கின்றோம். பரிசேயர்கள் உரோமை அரசை விரும்பாமல் புறக்கணித்து வரிகட்டமுடியாது என எதிர்த்தார்கள். ஏரோதியர்கள் உரோமை அரசை தங்கள் நலனுக்காக பயன்படுத்திக்கொள்ள தற்காலிக சமரசத்தோடு அரச சலுகைக்காக வரியைகட்டினார்கள். இவ்விரு குழுக்களும் இயேசுவை பொதுஎதிரியாக பார்த்தார்கள். பாலஸ்தீனம் உரோமைஅரசின் கீழ் இருந்தது. வரிகள் நில – வருமான – மற்றும் கணக்கெடுப்புவரி என மூன்றுவிதமாக இருந்தன. ஒருநாள் வருமானமே கணக்கெடுப்புவரியின் வரித்தொகைமதிப்பாக இருந்தது. அவர்களின் கேள்விக்கு ஆம் என்று சொன்னால் பரிசேய யூதர்கள் இயேசுவைப்புறக்கணிக்கலாம். மாறாக இல்லை என்ற பதிலைத்தந்தால் ஏரோதியர் இயேசுவை உரோமை அரசிடம் எதிரி எனக்கையளிக்ககூடும். இயேசுவோ அவர்கள் வாழ்வில் மதத்தை புறக்கணித்து ஆண்டவனைப்புறக்கணித்து அரசனை அரசுகளை முழுமையாக நம்பி வாழ்ந்த அவர்கள் எண்ணங்களை அறிந்து சவாலான செயலையும் பதிலையும் தருகிறார். நாணயத்தைஎடுத்துவரச்’சொல்லி யாரின் உருவம் அதில்பொறிந்துள்ளது என திபேரியுசு அகஸ்டுசீசரின் மகன் எனக்குறிப்பிடுகின்றனர். அரசனே எல்லாம் ஆட்சிபுரியும் அவனே அவர்களின் ஆண்டவன் என்ற அதிகார ஆணவம் உயர்தோங்கியிருந்தது. இயேசு அதிகாரகடவுள் எண்ணத்தை புறக்கணித்து இறைவனோடு இணைந்த வாழ்வுக்கு அழைப்புவிடுகிறார்.

தாமஸ் மூர் “எனக்கு இறைஇயேசுவும் விசுவாசமும் கிறிஸ்தவமும் தான் மையம் முதல் முக்கியம் அவைகள் என்வாழ்வோடு என்றும் ஒன்றிணைத்துள்ளன. நாடு அரசு என்பணி அனைத்தும் பிறகே” என்று திருச்சபையை ஆட்சிசெய்ய எட்டாம்ஹென்றியால் தூக்கிலடப்பட்டு சரட்சிபகர்ந்தார். காந்தியடிகள் சொன்னது “மதவிசுமாசமின்றி என்னால் ஒருநொடி கூடவாழமுடியாது இறைவனே உன் சுவாசத்தை ஆளுகிறார் என்றார்” . இறைவனோடு நம்மை100% ஒன்றிணைப்போம்-ஆமென்.