இவ் மறையுரையை வழங்குபவர்

Rev.Fr.Peter Jayakanthan sss
Congregation of the Blessed Sacrament
Corpus Christi Catholic Church,
Houston, Texas, US



ஞாயிறு மறையுரைகள்

மதிப்பிற்குரிய அருட்பணியாளர்களே, துறவிகளே, அருட் கன்னியரே, உங்கள் ஞாயிறு மறையுரைகளை எமது இணையத்தளத்தின் ஆன்மீக வலத்தில் பிரசுரித்து, ஆண்டவர் இயேசுவின் நற்செய்தியை எல்லோருக்கும் அறிவிக்க விரும்பினால், info@tamilcatholicnews.com என்ற எமது மின்னஞ்சலுக்கு உங்களுடைய ஆக்கங்களை அனுப்பிவைக்கவும். உங்கள் மறையுரைகள் உலகெங்கும் இருக்கும் அனைத்து தமிழ் உள்ளங்களையும் சென்றடையும்.



இதோ! ஓநாய்களிடையே ஆடுகளை அனுப்புவதைப்போல நான் உங்களை அனுப்புகிறேன். எனவே பாம்புகளைப்போல முன்மதி உடையவர்களாகவும் புறாக்களைப்போலக் கபடு அற்றவர்களாகவும் இருங்கள்.
(மத்தேயு 10:16)

நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள்; தந்தை, மகன், தூய ஆவியார் பெயரால் திருமுழுக்குக் கொடுங்கள். நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்களும் கடைப்பிடிக்கும்படி கற்பியுங்கள். இதோ! உலக முடிவுவரை எந்நாளும் நான் உங்களுடன் இருக்கிறேன்
(மத்தேயு 28:19-20)

நீ அவற்றை உன் பிள்ளைகளின் உள்ளத்தில் பதியுமாறு சொல். உன் வீட்டில் இருக்கும்போதும், உன் வழிப்பயணத்தின் போதும், நீ படுக்கும்போது, எழும்போதும் அவற்றைப் பற்றிப் பேசு.
(இணைச்சட்டம் 6:7)








பொதுக்காலத்தின் இருபத்திஏழாம் ஞாயிறு

மறுக்கப்பட்டவர்களுக்கு……. மறுபாதையாவோம்!!

ஏசா5:1-7; பிலிப்2:6-9 மத் 21:33-43



கிறிஸ்துவில் பிரியமுள்ளவர்களே சகோதர சகோதிரியரே இளைய உள்ளங்களே சிறார்களே இணையதள நண்பர்களே. புதிய வாரத்தின் வணக்கங்கள். இன்றைய திருவழிப்பாட்டு திருவிருந்திற்கு உங்கள் அனைவரையும் அன்போடு அழைக்கின்றேன். வருகின்ற நாட்கள் திருச்சபையின் வரலாற்றில் நமக்கு மிகமுக்கியமான நாட்களும் தருணங்களும் ஆகும். அக்டோபர் 5ம்தேதியிலிருந்து 19ம்தேதிவரை உலகமுழுவதிலுமிருந்து நூற்றுக்கணக்கான ஆயர்கள்உள்பட பல்வேறு பிரதிநிதிகளும் வத்திக்கானில் சிறப்பு ஆயர்பேரவையில் இணைந்திருப்பர். பல்வேறு உரைகள் மற்றும் கலந்துரையாடல்களுக்குபிறகு திருத்தந்தைக்குபரிந்துரைகளாக முன்வைப்பர். இன்றைய உலகில் நற்செய்திமறைபோதனையில் குடும்பங்களுக்குள்ள சவால்கள் என்பதே பேரவையின் மையகருத்தாகும். பேரவையில் உள்ள அனைவரையும் நம் திருப்பலியில் நினைவுகூர்ந்து தூய ஆவியின் செயலால் வெற்றியுள்ள பலனுள்ள பேரவையாக அமைய வேண்டுவோம்.

வட ஈராக் பகுதியிலுள்ள நினிவேயில் கடந்த 2000-ம் ஆண்டுகளில் முதன்முறையாக கடந்தவாரம் நற்கருணை மறுக்கப்பட்டது. அனைத்து ஆலயங்களும் மூடப்பட்டது. அனைத்து மக்களும் வெளியேறினர்;. பல பெரிய நகர்ப்புறங்களில் கிறிஸ்தவர்களே இல்லைஎன்றேசொல்லாம். ஆங்காங்கேயிருப்பவர்களும் ஏழ்மையினால் நடக்க செயல்பட இயலாதவர்களே எனலாம். பெரியநகரமான மூசல் இஸ்லாமிய அரசுகளால் கைப்பற்றபட்டதால் ஈராக்கில் கிறிஸ்தவத்தின் முடிவுநெருங்கிவி;ட்டது என்கின்றனர். ஆயிரக்கண்ககில் கொடூரமாக கொல்லப்பட்டனர். தப்பித்தவர்கள் பலர் காடுகளில் வாழ்கின்றனர். வெளிப்படையாக மறுக்கப்படுகின்றனர் கிறிஸ்தவர்கள்..

நூற்றுக்கணக்கான ஈராக் கிறிஸ்தவர்கள் அம்மனிலுள்ள புனித மரியன்னை ஆயலத்தில் தற்காலிக அடைக்கலம் அடைந்தனர். இஸ்லாமியத்துக்கு மனம்மறறுங்கள்…தப்பிஓடுங்கள்..அல்லது சாகத்தயாராகயிருங்கள் என்பதே அவர்களுக்கு தொடர்ந்து சொல்லப்படுவது ஆகும்….

அக்டோபர் 03-ம்தேதி பிரிட்டனைச்சார்ந்த ஆலன் ஹென்னிங் தலைவெட்டபட்டு இறந்தார்….. மனிதத்தை மறுப்புது இறைவனை மறுப்பதுஆகும்…இறைவனை மறுப்பது நன்மைதனத்தை மறுப்பது ஆகும். பெற்றோர்களின் பிரிவினையால் பிள்ளைகள் மறுக்கப்படுகின்றனர். பல்வேறு போதைகளுக்கு அடிமையாகி பரிதாபமாக சீரழியும் பலர் சொல்வது அவர்கள் சிறுவயதில் மறுக்கப்பட்டது புறக்கணிக்கப்பட்டது ஆழமான காயமாக நீ தேவையில்லை என்பது பதிந்துவிட்டது. நான் தேவையில்லாத சமூகத்தில் எனக்கு தேவையானதை நான் பின்பற்றுகிறேன் என்பதேயாகும். நீ தேவையில்லை என்ற மறுப்புகள் மறுத்தல்கள் மிகவும் கொடிய வேதனைதரக்கூடியது ஆழமான வலியை தரக்கூடியது இருளில் தள்ளக்கூடியது.

மதத்தினால்….மொழியினால்….இனத்தினால்….இடத்தினால்….மனிதங்கள் மறுக்கப்படுகின்றனர். நீங்கள் தேவையில்லை என்று புறக்கணிக்ப்படுகின்றனர். நம்மை எத்தருணத்திலும் ஏற்றுக்கொள்கின்ற இறைவனை நாம் பற்றிக்கொண்டால் நம்மாலும் பிறரை என்றும் ஏற்று அதே அன்புணர்வை கொடுக்கமுடியும். நீ தேவை என்ற உணர்வை பிறருக்கு கொடுக்க இன’றைய இறைவார்த்தைகள் நமக்கு அழைப்புவீடுக்கின்றன.

இன்றைய முதல் வாசகத்தில் ஏசாயா இறைவாக்கினர் எவ்வாறு மக்கள்அவர்களது பிரிவினையால் யாவே இறைவனை வேண்டாம் என மறுத்தனர் பாதைமாறினர் என்றும் மீண்டும் அவர்களை மெசியா ஏற்றக்கொண்டு ஒன்றாக இணைப்பார் என அழைக்கிறார். வடஅரசு இஸ்ராயேலாக சமாரியாவை தலைநகராக பிரிந்து அசீரியர்களினால் கைப்பற்றபட்டது. தென்அரசு யூதா என எருசலேமை தலைநகராக கொண்டு பிரிந்தது. இவர்களின் முறையற்ற வாழ்வு – சிலைவழிபாடு மற்றும் அரசர்களின் உலக அழைப்பை பின்பற்றுவது இவைகளினால் யாவே இறைவனை வேண்டாம் என்றார்கள். அப்பொழுது தான் பல்வேறு சோதனைகளுக்குள்ளானர்கள். நரன் உங்களை மறவேன் மீண்டும் இணைப்பேன் என அழைப்பும் மறுவாய்ப்பும் தருகின்றார் யாவே இறைவன் ஏசாயா இறைவாக்கினர் வழியாக..

மத்தேயு நற்செய்தியாளர் மீண்டும்தொடர்ந்து திராட்சை தோட்டத்தை நம்முன்வைக்கிறார். பாலஸ்தின மக்களுக்கு பரிச்சயமான அவர்கள் வாழ்வோடு ஒன்றித்த திராட்சை தோட்ட அனுபவங்களை எடுத்துக்காட்டாககூறி இறைவனின் பாராமரிப்பை மற்றும் மக்களின் மறுத்தல்களையும் சுட்டிக்காட்டுகிறார். இவ்உவமையிலிருந்து நம்மிடம் எழும் கேள்விகளை சிந்திப்போம்.

ஏன் குத்தகையாளர்கள் கோபப்படுகின்றனர்? என்ன செய்கின்றனர்? யாருக்கு ஒப்பிடப்பபடுகின்றனர்? திராட்சைதோட்டஉரிமையாளர்கள் தங்களுக்கு சொந்தமான நிலத்தை குத்தகையாளர்களிடம் ஒப்படைத்து பலஇடங்களுக்கு தொலைதூரபயணம் செல்வதுண்டு. அத்தருணங்களில் அவர்கள் தங்கள் பணியாளர்களை தோட்டத்தின்பலனான கனிகளை பெற்றுவர அனுப்புவதுண்டு. நாங்கள் உழைக்கின்றோம் நீங்கள் எளிதாக பங்குஎடுத்துக்கொள்கின்றீர்களே என கோப்பட்டு மறுத்து உதைக்கின்றனர் கொலைசெய்கின்றனர் மற்றும் கல்லால் எறிந்து விரட்டுகின்றனர்.

• தோட்ட உரிமையாளர் – இறைவன்:
• திராட்சை தோட்டம் – திருச்சபை:
• பணியாளர்கள் – தெரிந்தெடுத்து அனுப்பட்ட இறைவனின் பிரதிநிதிகள்:
• தொழிலாளர்கள் – மறுத்த தேவையில்லை என விலகிச்சென்ற இஸ்ராயேல்.
• புதிய தொழிலாளர்கள் – புறஇனத்தவர் ஆவர்.
ஆசீர்பெற்ற அன்னைதெரேசா அவர்கள் சிசுக்கொலை இறைவனையே மறுதலிப்பதாகும் என்றார். மேலும் நம்மிடம் இருக்கும் கொடிய நோய் மறுத்தல் வேண்டாம் தேவையில்லை என புறக்ணிப்பதே ஆகும் என்றார்.

எந்நாளும் மறவாமல் …..வழிநடத்துகின்ற…..நிபந்தனையில்லா அன்பு காட்டும் இறைவனை நான் மறுத்துதிருக்கினறேனா? புறக்கணித்திருக்கின்றேனா?

நீ வேண்டாம் என எந்த உறவையாது காயப்படுத்தியிருக்கின்றேனா?
மறுக்கபட்ட மற்றும் நீ தேவையில்லை என ஒதுக்கப்பட்ட உள்ளங்களை ஏற்போம் அவர்களில் இயேசுவின் சாயலை கண்டு அவரின் அரவணைக்கும் அன்புக்கும் சொந்தமாக்குவோம்-ஆமென்.