இவ் மறையுரையை வழங்குபவர்

Rev.Fr.Peter Jayakanthan sss
Congregation of the Blessed Sacrament
Corpus Christi Catholic Church,
Houston, Texas, USஞாயிறு மறையுரைகள்

மதிப்பிற்குரிய அருட்பணியாளர்களே, துறவிகளே, அருட் கன்னியரே, உங்கள் ஞாயிறு மறையுரைகளை எமது இணையத்தளத்தின் ஆன்மீக வலத்தில் பிரசுரித்து, ஆண்டவர் இயேசுவின் நற்செய்தியை எல்லோருக்கும் அறிவிக்க விரும்பினால், info@tamilcatholicnews.com என்ற எமது மின்னஞ்சலுக்கு உங்களுடைய ஆக்கங்களை அனுப்பிவைக்கவும். உங்கள் மறையுரைகள் உலகெங்கும் இருக்கும் அனைத்து தமிழ் உள்ளங்களையும் சென்றடையும்.இதோ! ஓநாய்களிடையே ஆடுகளை அனுப்புவதைப்போல நான் உங்களை அனுப்புகிறேன். எனவே பாம்புகளைப்போல முன்மதி உடையவர்களாகவும் புறாக்களைப்போலக் கபடு அற்றவர்களாகவும் இருங்கள்.
(மத்தேயு 10:16)

நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள்; தந்தை, மகன், தூய ஆவியார் பெயரால் திருமுழுக்குக் கொடுங்கள். நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்களும் கடைப்பிடிக்கும்படி கற்பியுங்கள். இதோ! உலக முடிவுவரை எந்நாளும் நான் உங்களுடன் இருக்கிறேன்
(மத்தேயு 28:19-20)

நீ அவற்றை உன் பிள்ளைகளின் உள்ளத்தில் பதியுமாறு சொல். உன் வீட்டில் இருக்கும்போதும், உன் வழிப்பயணத்தின் போதும், நீ படுக்கும்போது, எழும்போதும் அவற்றைப் பற்றிப் பேசு.
(இணைச்சட்டம் 6:7)
பொதுக்காலத்தின் இருபத்தஆறாம் ஞாயிறு

வாக்குறுதிச்சொல்லா……. வாழ்வுறுதிசெயலா!!

ஏசே18:25-28; பிலிப்2:1-11 மத் 21:28-32கிறிஸ்துவில் பிரியமுள்ளவர்களே சகோதர சகோதிரியரே இளைய உள்ளங்களே சிறார்களே இணையதள நண்பர்களே. இறைவன் நம்ஒவ்வொருவருக்கும் தெரிந்தெடுத்துதந்திருக்கும் பல்வேறு கொடைகளுக்காக நன்றிகூற உங்களை அழைக்கின்றேன். இவைகள் நாம் முன்னேறபல்வேறு வாய்ப்புகள் - உயர்ந்துநிற்க அநேகதிறமைகள் – தொடர்டந்துபயணம்செய்ய பலனுள்ள உறவுகள் என்று அவர்நமக்கு கொடுக்கப்படுகின்ற ஆசீரான அருளுக்காக நன்றிஉணர்வோடு அவரை நாடுவோம். இவைகளுக்கு நாம் காட்டும் பதில் என்ன? நம் பதில்கள் வெறும்வாக்குறுதிச்சொற்களாகயில்லாமல் வாழ்வின் உறுதியான செயல்களாக அமையவேண்டும். இதுவே இறைவன் விடும் அழைப்பை நாம் ஏற்கும் பதிலாகும். இன்றைய திருப்பலி கொண்டாட்டம் நம் மனங்களை இத்தகைய செயல்பாட்டுள்ள வாழ்வுக்கு அழைத்துச்செல்ல இணைவோம் செபிப்போம்.

திருமணநாளில் மணமகனும் மணமகளும் கணவனும் மனைவியுமாக இன்ப துன்பங்களில் இணைந்துவாழ்வோம் எனவாக்குறுதி கொடுக்கின்றனர். இன்றை நாட்களில் மேற்கத்தியநாடுகளுக்கு ஈடாக நம்மத்தியிலும் விவகாரத்துகள் பிரிந்துவாழ்வது அதிகமாகிகொண்டிருக்கிறது. இதற்கு காரணம் இது வெறும் ஒருநாள் வாக்குறுதிச்சொல்லாகயிருந்தவிடுவதாலே எனலாம். மாறாக இது ஒரு வாழ்வுறுதிச்சொல்லாகயிருக்க வேண்டும். அப்பொழுது இல்லறம் எந்த இடையுறுகளையும் எதிர்கொள்ளமுடியும்.

அதுபோல திருமுழுக்கின்பொழுது ஆம்விசுவசிக்கின்றேன் தீமைகளை விட்டுவிடுகின்றேன் என வாக்குறுதியளிக்கின்றோம் பிள்ளைகளுக்கு சார்பாக பிள்ளைகளுக்குப் பெறுப்பாக பெற்றோர் மற்றும் ஞானப்பற்றோர் அந்தவாக்குறுதிச்சாட்சிபகர்கின்றனர். இது ஒருநாள் வாக்குறுதிச்சொல்லாகயிருந்துவிட்டால் பிள்ளைகள் பலவிதசபைகளுக்கோ அல்லது விசுவாசவாழ்வு ஒருதொடர்வாழ்வாகயிருக்கலாம். அதே சமயம் இது அன்றாட வாழ்வுறுதிச்செயலாகயிருந்தால் நிச்சயம் அங்கே தொடர்ந்து ஆன்மிக தாக்கம்யிருக்கும் பிள்ளைகளும் இறைவனின்பிள்ளைகளாக உயர நிலைத்துநிற்பார்கள் என உறுதிச்சொல்லலாம்.

வாக்குறுதிச்சொல் ஒருநாள் ஆம் என்ற பதிலாக வெறும் வார்த்தையளவில்யிருந்துவிடுகிறது. அதேசமயம் வாழ்வுறுதிசெயல் என்பது நாம் எடுக்கும் வாக்குறுதி அன்றாட ஆம்என்ற பதிலாகஅமையும்பொழுது அங்கு உறுதியான வாழ்வுசம்பந்தப்பட்டசெயல்கள் நிகழ்ந்தேறும். நம் வாழ்வில் நாம் சந்திப்பது மேற்கொள்வது வெறும்வாக்குறுதிச்சொற்களா? அல்லது வாழ்வுறுதிச்செயல்களா? எனநம்மை சுயஆய்வுசெய்ய இன்றைய இறைவார்த்தைகள் நமக்கு அழைப்புவிடுக்கின்றன.

இன்றைய முதல்வாசகத்தில் இறைவாக்கினர் எசேக்கியேல் இறைவன் வழி செம்மையற்றது நேர்மையற்றது எனநீங்கள் எவ்வாறு குறைகூறமுடியும். நீங்களே உங்கள் வாழ்வுக்கு நிலைமைக்கு பொறுப்பு எடுக்கவேண்டும் என .இஸ்ராயேல் மக்களுக்கு எடுத்துச்சொல்கிறார். இந்தகுறைபாட்டிற்கு இஸ்ராயேல் மக்கள் மத்தியில் நிலவிய இரு எண்ணங்களே காரணமாகும். இறைவாக்கினர் எசேக்கியேல் அந்த இரு எண்ணங்களை தூக்கிஎறிந்து பொறுப்புள்ள இறைபிள்ளைகளாக மக்களாக வாழசவால்விடுகிறார். அந்த இரு எண்ணங்கள் என்ன? இந்த இரு எண்ணங்கள் எங்கிருந்து அவர்கள் பெற்றுக்கொள்கிறார்கள்? என்ற கேள்விகளுக்கு நம் பதில் முதல் எண்ணம்: நம்முடைய இன்றைய துன்பங்கள் பாபிலோனிய அடிமைத்தனவாழ்வுக்கு இறைவன் அவர்கள் முன்னோர்கள் செய்த ஏதோ ஒரு தவற்றிற்கு பாவத்திற்கு இந்த தண்டனையை தந்திருக்கிறார் என்பதும் இரண்டாவதாக அவர்களின் இன்றைய துயரங்களுக்கு அவர்களின் பழையஏதோ பாவங்களுக்கு குறைபாடுகளுக்கு காரணமாக அமையலாம் என்ற எண்ணம் மிகவும் ஆழமாகயிருந்ததால் இறைவனின் வழி அணுகுமுறை எங்களை பொறுத்தமட்டில் செம்மையற்றது நேர்மையற்றது என்பதன்மூலம் இறைவன் நேர்மையற்றவர் செம்மையற்றவர். என்று குறைபட்டுக்கொண்டனர். அவர்களுக்கு இறைவாக்கினர் எசேக்கியல் இறைவன் பழையதவறுகளை நினைவிற்கொள்பவர் அல்ல முன்னோர்கள் தவற்றிக்காக தண்டிப்பவர் அல்ல. முன்னோர்கள் பாவமோ அல்லது தவறோ என்றும் தொடர்வதுகிடையாது. இறைவன் நம் மனமாற்றத்தையே என்றும் எதிர்நோக்குகிறார். ஆகவே உங்கள் எண்ணங்களை மாற்றிக்கொண்டு உங்கள் வாழ்வுக்கு நிலைமிக்குநீங்களே பொறுப்புஎடுங்கள் உங்கள்வாழ்வுறுதிச்செயல் அவைரையே மையமாககொண்டு அமையட்டும். என எடுத்துரைக்கிறார்.

மத்தேயு நற்செய்தியாளர் கடந்தசிலவாரங்களில் இயேசுவின் உவமைகளை நமக்கு பாடமாக முன்வைக்கிறார். இதன் தொடர்ச்சியாக இன்று தலைமைகுருக்கள் மூப்பர்கள் மற்றும் அதிகாரத்தில் இருப்போர் அனைவருக்கும் சவாலாக இயேசுவின் இந்த இருமகன்களின் பொறுப்பற்ற பதில் உவமையை எடுத்துச்சொல்கிறார். அதிகாரத்திலிருந்தவர்கள் குறிப்பாக தலைமைக்குருக்கள் மற்றும் மூப்பர்கள் இயேசுவின் அதிகாரத்தை குறையோடு சுட்டிகாட்டி கேள்விகேட்டு ஏற்றுக்கொள்ள மறுத்தனர். இதற்கு அவர்கள் பின்பற்றிய மோசேயின் சட்டங்களையே பற்றிக்கொண்டு இவைதான் இறைவன் கொடுத்தது இறைவன் விரும்புவது இதைபின்பற்றுவதன்வழியாக நாங்கள் இறைவனோடு இணைந்து நெருக்கமாகயிருக்கிறோம் உங்கள் இயேசு என்றும் அதற்கு மாறாகவே பேசுகிறார். எங்கள் சட்டத்தில் தீட்டுபட்வர்ககளான இறைவனின் சாபங்களாககருதப்படும் வரிதண்டுவோர் பாவிகள் நோயாளிகள் சமாரியர்கள் அனைவரோடும் பழகும் சமமாக உணவருந்தும் இவர் எவ்வாறு இறைவன்பெயரால் செயல்பட முடியும் எனகுற்றம் சாட்டினர்.

இயேசுஇவர்களுக்கு எச்சரிக்கையாக சொல்லும் உவமையை மத்தேயு நம்முன்வைக்கிறார். இது இருமகன்கள் உவமையாக அமைகிறது. முதல்மகன் தந்தையின் அழைப்பிற்கு போகவில்லை எனச்சொல்லி மனத்தைமாற்றிக்கொண்டு சென்றது இது வெறும் வாய்ச்சொல் வாக்குறுதிமட்டுமல்ல மாறாக இது மனதிலிருந்து வரும் வாழ்வுறுதி இது இந்தமகன் பொறுப்பை உணர்ந்து ஆம் எனச்செல்வது அவன் மனதிலிருந்து வருகிறது. இது அன்றைய புறக்கணிக்கப்பட்ட இறைவனின் மக்கள்இல்லை என ஒதுக்கப்பட்ட வரிதண்டுவோர் சமூகபாவநிலையிலிருந்தவர்கள் தீராதநோயிலிருப்போர்.அனைவரும் இறைவனை துவக்தில் அந்த முதல் மகனைப்போல மறந்துயிருந்தாலும் பின்இயேசுவின் போதனையில் மனம்மாறி ஈடுபடுவதால் இறையரசு அவர்களுக்கு உறுதி என்கிறார். இரண்டாவது மகனின் போகிறேன்என வார்த்தையளவில் சொல்லிவிட்டு போகாதது இது வெறும் வாக்குறுதிச்சொல் இது மாறும் எண்ணத்திலிருந்துவருவது மனத்திலிருந்து அல்ல. இது தலைமைக்குருக்கள் மூப்பர்கள் மோசேசட்டத்தைப்பயன்படுத்தி வெறும்வார்த்தையால் இறையரசை நாடமுடியாது. அவர்கள் வாழ்வில் செயலில் ஒன்றும் ஈடுபடுவது கிடையாது. மக்களைவிட்டு சமுதாயதேவைகளைவிட்டு தொலைவிலிருக்கிறார்கள் என்றுரைத்து நம்வாழ்வு வெறும் வாக்குறுதிச்சொல்லாகயில்லாமல் வாழ்வுறுதிகளாகயிருக்க சவால்விடுகிறார்.

சமீபத்திய திருத்தந்தையின் அல்பேனிய திருப்பயணத்தில் அருட்பணியாளர்கள் துறவியர்கள் குருமடமாணவர்கள் மத்தியில் கொடூரகம்யூனிச அதிகாரஆதிக்கத்தின் இறுதிநபராக வாழும் 84வயது நிரம்பிய அருட்பணியாளர் எர்னஸ்ட் சைமோனி தன் வாழ்வு சாட்சியைபகிர்ந்துகொண்டார். சிறையிலும் சித்தரவதையிலும் மரணதண்டனையிலும் தன்கண்முன்னால் கொல்லப்பட்ட பலஅருட்பணியாளர்களை நினைவுகூர்ந்தார். தொடாந்து 26 ஆண்டுகள் அடிமைவேலையாளாய் நடத்தப்பட்டபொழுது மறைமுகமாக நிறைவேற்றிய நற்கருணைதிருப்பலி அருட்சாதனங்களில் ஒவ்வொருநாள் ஆம் என்ற வாழ்வுறுதிசெயல் தொடர்ந்துவாழவைத்தது என்றுச்சொல்லி திருதந்தை உடல் நலத்தோடு அனைத்துஆற்றலோடு மக்களை வழிநடத்தசெபித்தார். திருத்தந்தை பிரான்சிஸ் கண்ணீர்மல்க அருட்பணியாளரை அரவணத்து அன்பைவெளிப்படுத்தினார்.

நம் திருமண – திருமுழுக்கு – பொதுவாழ்வு – இல்லற – ஆன்மிக மற்றும் சமுதாய வாக்குறுதிகள் வெறும் ஒருநாள் வாய் வாக்குறுதிச்சொல்லாகயில்லாமல் அன்றாட வாழ்வுறுதிச்செயலாக இருக்கட்டும். நாம் வெறும் ஞாயிறு கிறிஸ்தவர்கள் அல்ல மாறாக அன்றாடம் செயல்படும் கிறிஸ்தவர்கள்-ஆமென்