இவ் மறையுரையை வழங்குபவர்

Rev.Fr.Peter Jayakanthan sss
Congregation of the Blessed Sacrament
Corpus Christi Catholic Church,
Houston, Texas, USஞாயிறு மறையுரைகள்

மதிப்பிற்குரிய அருட்பணியாளர்களே, துறவிகளே, அருட் கன்னியரே, உங்கள் ஞாயிறு மறையுரைகளை எமது இணையத்தளத்தின் ஆன்மீக வலத்தில் பிரசுரித்து, ஆண்டவர் இயேசுவின் நற்செய்தியை எல்லோருக்கும் அறிவிக்க விரும்பினால், info@tamilcatholicnews.com என்ற எமது மின்னஞ்சலுக்கு உங்களுடைய ஆக்கங்களை அனுப்பிவைக்கவும். உங்கள் மறையுரைகள் உலகெங்கும் இருக்கும் அனைத்து தமிழ் உள்ளங்களையும் சென்றடையும்.இதோ! ஓநாய்களிடையே ஆடுகளை அனுப்புவதைப்போல நான் உங்களை அனுப்புகிறேன். எனவே பாம்புகளைப்போல முன்மதி உடையவர்களாகவும் புறாக்களைப்போலக் கபடு அற்றவர்களாகவும் இருங்கள்.
(மத்தேயு 10:16)

நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள்; தந்தை, மகன், தூய ஆவியார் பெயரால் திருமுழுக்குக் கொடுங்கள். நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்களும் கடைப்பிடிக்கும்படி கற்பியுங்கள். இதோ! உலக முடிவுவரை எந்நாளும் நான் உங்களுடன் இருக்கிறேன்
(மத்தேயு 28:19-20)

நீ அவற்றை உன் பிள்ளைகளின் உள்ளத்தில் பதியுமாறு சொல். உன் வீட்டில் இருக்கும்போதும், உன் வழிப்பயணத்தின் போதும், நீ படுக்கும்போது, எழும்போதும் அவற்றைப் பற்றிப் பேசு.
(இணைச்சட்டம் 6:7)
பொதுக்காலத்தின் இருபத்திஜந்தாம் ஞாயிறு

கதவருகே நிற்போருக்கும்…. கடைசிப்பெஞ்சிக்கும்…- சொந்தமானவர் இறைவன்!

ஏசா55:6-9; பிலிப்1:20 c-24,27a; மத் 20:1-16 aகிறிஸ்துவில் பிரியமுள்ளவர்களே சகோதர சகோதிரியரே இளைய உள்ளங்களே சிறார்களே இணையதள நண்பர்களே. இறையவனின் பிள்ளைகளாக நம் விசுவாசம் மகிழ்ச்சி மற்றும் நன்மைத்தனங்களை பகிர்ந்துகொள்ள மீண்டும் இறைசந்திதானத்தில் நாம் ஒன்றுகூடி வந்திருக்கிறோம். ஒரே கிறிஸ்தவ சகமூகத்தினராக சகோதர சகோதிரியராக ஒற்றுமையாகயிருக்க அழைக்கப்படுகிறோம் என்பதை நற்கருணைபீடம் நமக்கு நினைவுபடுத்துகிறது. மேலும் சமத்துவ வழ்வு வாழ்ந்து சாட்சிபகர சொல்லிக்கொடுக்கிறது. சமய வேற்றுமைகளும் சமூகபிரிவினைகளும் பரவியிருக்கும் இன்றையசழலில் இது மிகவும் கடினமானது அதேசமயம் கட்டாயமானது. நற்கருணை பிடுதலும் பகிர்தலும் அடைத்து தடைகளையும் கடந்து ஒரே பீடத்திலுருந்து பகிரும் நம் வாழ்வை அர்த்தமுள்ளதாகவும் மிகவும் பலனுள்ளதாகஅமைய செபிப்போம் செயல்படுவோம்.

ஆலயத்தில் கடைசி பெஞ்சில் இருப்பவர்கள் கதவருகில் நிற்பவர்கள் முன்வந்து ஈடுபடவிரும்பவில்லையா அல்லது விடப்படுவதில்லையா? என் பதில் விடப்படவதில்லை என்பதே. எனது பங்கு அனுபவங்களில் மிக மிக சவாலானது பழமைகளோடு புதுமைகளை இணைப்பது அல்லது சேர்ந்து செயல்படவைப்பது. அது வழிபாடாகவோ திருவிழாவாகவோ திருவருட்சாதங்களாகவோ அல்லது நிர்வாகசெயல்பாடுகளாவோ இருக்கலாம். அநேக தருணங்களில் புதுமைகளை புதினங்களை ஏற்றுக்கொள்ள தயக்கங்களும் பல்வேறு காரணங்களால் புறக்கணித்து வெறுப்பதும் புரிந்துகொள்ளவைக்ககடினமான பணிஎனலாம்.

உதாரணத்துக்கு திருநாளின்நவநாட்கள் செபத்தோடு நம் அனுபவித்த புதுமை அற்புதங்களின் பகிர்வும் கொண்டு அமையட்டும் தினமும்புதிய நபர்கள் அதைசெபிக்கலாம் என்றபுது கருத்துக்கு நான்அந்தகாலத்திலிருந்து செய்துவருகிறேன். எங்களுக்கு தான் தெரியும் எவ்வாறு நவநாள் செபிக்கவேண்டும் என்று நேற்று பங்குக்கு வந்தவர்கள் எல்லாம் திருவழிபாட்டில் ஈடுபடமுடியுமா? என்ற எதிர்ப்புகள் எத்தனை எத்தனை. மற்றும் பாடல் குழுவில் மாற்றம் மறைக்கல்வி பயிற்சியில் மாற்றம் எனபலரை ஈடுபடுத்தமுயற்சிஎடுத்தால் காலம்காலமாக நாங்கள் தான் இதைசெய்கிறோம் என்ற அதிகாரஎண்ணத்தோடு மற்றவர்களை கடைசி இடத்திலும் கதவருகிலும் நிறுத்தும் உள்ளங்கள் இன்றும் உண்டு. இத்தகைய அன்றைய சமூகத்திற்கு இறைவனுக்கு அனைவரும் சமமானவர்கள். அனைவரும் முக்கியமானவர்கள். என்ற உயரிய கருத்தை நம்மை அழைக்கிறது. உணர்ந்து சமத்துவ சகோதரங்களாக வாழ இறைவார்த்தைகள் இறைவன் அனைவருக்கும் உரியவர்.

திராட்சை தோட்டபணியாளர்கள் உவமைகளில் இயேசு அன்றைய பாலஸ்தீன மக்களின் அன்றாட எதார்த்த அனுபவங்களை கண்முன்கொணர்ந்து தன்படிப்பினையை புரியவைக்கிறார். செப்டம்பர் மாதங்களில் திராட்சைகள்அதிகமாக பலன்தரும். மழைக்காலத்திற்கு முன்பு அனைத்தையும் பறித்து எடுக்காவிட்டால் திராட்சைகள் அழுகி கெட்டுபோய்விடும். எனவே நில உரிமையாளர் பணியாற்றவிருப்பமுள்ளஅனைவரையும் நாள்முழுவதும் பணிசெய்து முழுமையாக்க சந்தைகளுக்கு ஜந்துமுறைசென்று அழைத்துவருகிறார். யூதர்கள் தங்கள் நேரங்களை காலை முதல் மாலை 6மணிவரை எனபிரித்து பின்பற்றினர். ஒருநாள்கூலியாக ஒரு தெனாரியம் எனபது அன்றைய நாளுக்குரிய ஒருகுடும்பதுக்குரிய உணவாகும். யூதசட்டப்படி நாளின் மாலைக்குள் கதிரவன் மறையும் முன் கொடுத்தாகவேண்டும். கூலிகொடுக்கும்பொழுது கடைசியில்வந்தோரிடமிருந்து கொடுக்கத்துவங்குவார்கள் . கடைசி நேரத்தில் வந்து வேலைசெய்தவர்களுக்கும் அதே ஒருதெனாரியம் கொடுப்பதைப்பார்த்து முதலில் வந்தவர்கள் நியாயமாக கோபப்பட்டு புலம்புகிறார்கள். நம்முடைய புலம்பலும் இவ்வாறாகவேயிருந்திருக்கும். இதுநியாயமான குற்றசாட்டாகயிருந்தாலும் அது உண்மையானதல்ல. நாம் மற்றவர்மீது குற்றம்சாட்டும்பொழுது நம்மை சுயஆய்வுசெய்துபார்த்தோமானால் நம்மைவிருப்பத்தை நிறைவேற்றவே அக்குற்றச்சாடடை பழியைவெளிப்படுத்தியிருப்போம் இதன்மூலம் மற்றவர்களை அவர்களாக இருக்க செயல்படவிடாமல் தடுக்கிறோம்.

தினக்கூலியாகிய தெனாரியம் இறைவன் எல்லோருக்கும் சமமாககொடுக்கவிரும்பும் மகிழ்ச்சியே. காரணம் அது அன்றையநாள் குடும்ப உணவிற்கு வாழ்விற்கு அத்தியாவசமானது. மத்தேயு நற்செய்தியாளர் கி.பி 50லிருந்து 60 க்குள் தன்நற்செய்தியை எழுதியிருக்கவேண்டும். அவர் அன்றை யூதகிறிஸ்தவ சமூகத்திற்கு இந்த திராட்சை தோட்ட பணியாளர் உவமையை இயேசுவின் செய்தியாக அவர்கள் முன்வைக்கிறார். அவர்களை எச்சரித்து சுயஆய்வு செய்ய அழைப்புவிடுக்கிறார். அவர்களிடம் இருந்தபிரச்சனை புதிதாக கிறிஸ்தவர்களான யூதரல்லாத மற்றவர்களை ஏற்றுக்கொள்ள மறுத்துவெறுத்ததுதான் ஆகும். தாங்கள் தெரிந்தெடுக்கப்பட்டவர்கள் என்ற தலைகனத்தோடு மற்றவர்களை குறிப்பாக புறஇனத்தவர்களை தங்களைவிடக் குறைந்தவர்களாக பார்த்தார்கள் புறக்கணித்தார்கள். இரண்டாம் தரமக்களாக அவர்களை நடத்தினர். இந்த யூதுகிறிஸ்தவமக்களை மத்தேயு சவால்விடுகிறார் இந்தஉவமையின்வழியாக. நிலஉரிமையாளர் திராட்சைதோட்ட உரிமையாளர் இறைவனே ஆவார்; அவர் அனைவரையும் சமமாக பார்க்க நடத்தவிரும்புகிறார். அவர்தாரளமனத்தோடு அனைவரும் அன்றாடம் நலமாகயிருக்க நிறைவோடுவாழ வாய்ப்பு தந்து சமமாக ஊதியம் தருகிறார்; நம் எண்ணம் விருப்பம்வேறு இறைவன் திட்டம் வேறுஎனலாம். கடைசிநேரத்தில் வருபவனுக்கும் இறக்கும் நேரத்தில் முழுவிருப்பதோடு திருமுழுக்குபெறுபவனுக்கும் மீட்புஉண்டு அவரிடம் இடம்உண்டு என்பதை வெளிப்படுத்துகிறார். இதையே கடைசியில் ஏற்றுக்கொண்டோரும் முழு ஆசீருக்கு உரிமையுள்ளவர்கள் எனஉறுதிப்படுத்துகிறார்.

இன்றே என்வான்வீட்டில் இருப்பாய் என கடைசிநேரத்தில் சிலுவையில் மனம்மாறியவனை புதுமனிதமாக மாற்றவில்லையா! பல்வேறு போராட்டங்களுக்குபிறகு திருமுழுக்குபெற்ற அகுஸ்தினாரை அனைத்து அருளோடு புனிதராக சிறந்த மறைவல்லுநராக இறைவன் உயர்த்தவில்லையா! தொடக்கதிலிருந்தே கிறிஸ்தவர்களாகயிருக்கும் காலம்காலமாக பங்கில் ஈடுபடுவருக்கும் புதிதாகவந்தவர்களுக்கும் என்னவித்தியாசம் என்ன சிறப்பு பரிசு சலுகை எனநாம் கேட்டோமானால் இன்றைய முதல் வாசகம் பதில் தருகிறது.

பாபிலோனிய அடிமைத்தனத்திலிருந்து சைரஸ் விடுதலை பெற்றுதந்து எருசலேமை அவர்கள் வாழ்வை கட்டிஎழுப்ப அனுப்பும் பொழுது திரும்பிபார்த்து நீங்கள் நினைத்ததுநடக்கவில்லை எனநினைக்கவேண்டாம். ஆண்டவரின் எண்ணங்கள் வழிமுறைகள் உயர்ந்தவை அர்த்தமுள்ளவை தாராளமானவை தொடருங்கள் எனஎடுத்துரைக்கிறார்.

திருத்தந்தை பிரான்சிஸ் தன் சமீபத்திய தென்கொரிய திருப்பயணத்தின்பொழுது அங்கு இந்த வருடத்துவக்கத்தில் படகுவிபத்தில் பலியான 280 இளம்உள்ளங்கில் ஒருஇளைஞனுடைய தந்தையான லீ ஹோன் என்ற 62வயதுள்ளவர் பிரன்சிஸ் என்ற பெயருடன் கத்தோலிக்க கிறிஸ்தவனாக திருமுழுக்குபெறவிரும்பி திருத்தந்தை திருமுழுக்கும் உறுதிப்பூசுதலும் அளித்தது லீ இறைவனின் முழுஅருளை முழு சமத்துவ சமூகத்துக்குள் ஒன்றித்ததை குறிக்கிறது. திருதந்தை திராட்சை தோட்ட உரிமையாளராக இறைவன் நிலையில் லீ மற்றும் அனைவரிடம் நன்மையானதை நிறைவானதை பார்க்கும் ஏற்றுக்கொள்ளும் சமமான உரிமையை ஊதியத்தை தரும் தந்தையாக வெளிப்படுத்தியது சிறப்பாகும்.

நம்மை சமமாக நடத்தி நிறைவான ஊதியங்களை தரும் இறைவனின் இந்ததாராளதனத்தை நாம் பிறருக்கு தருகின்றோமா? நான் ஆதி அந்தகால கிறிஸ்தவன் நீ நேற்றய கிறிஸ்தவன் என வேறுபடுத்துகிறோமா? பெரியபிள்ளைகளிலிருந்து கடைசிபிள்ளைரை சமமாக நாம் பார்த்து நடத்துவதில்லையா? திருச்சபை பெரிய குடும்பத்தில் சமத்துவத்தின் இறைவன் பாதையில் கதவருகில் நிற்போருக்கும் கடைசிபெஞ்சில் இருப்போருக்கும் முதல் இடம் தருவோம் இறைபீடத்திற்கு நெருக்கமாகி ஒன்றாக பயணமாவோம்-ஆமென்.