இவ் மறையுரையை வழங்குபவர்

Rev.Fr.Peter Jayakanthan sss
Congregation of the Blessed Sacrament
Corpus Christi Catholic Church,
Houston, Texas, US



ஞாயிறு மறையுரைகள்

மதிப்பிற்குரிய அருட்பணியாளர்களே, துறவிகளே, அருட் கன்னியரே, உங்கள் ஞாயிறு மறையுரைகளை எமது இணையத்தளத்தின் ஆன்மீக வலத்தில் பிரசுரித்து, ஆண்டவர் இயேசுவின் நற்செய்தியை எல்லோருக்கும் அறிவிக்க விரும்பினால், info@tamilcatholicnews.com என்ற எமது மின்னஞ்சலுக்கு உங்களுடைய ஆக்கங்களை அனுப்பிவைக்கவும். உங்கள் மறையுரைகள் உலகெங்கும் இருக்கும் அனைத்து தமிழ் உள்ளங்களையும் சென்றடையும்.



இதோ! ஓநாய்களிடையே ஆடுகளை அனுப்புவதைப்போல நான் உங்களை அனுப்புகிறேன். எனவே பாம்புகளைப்போல முன்மதி உடையவர்களாகவும் புறாக்களைப்போலக் கபடு அற்றவர்களாகவும் இருங்கள்.
(மத்தேயு 10:16)

நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள்; தந்தை, மகன், தூய ஆவியார் பெயரால் திருமுழுக்குக் கொடுங்கள். நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்களும் கடைப்பிடிக்கும்படி கற்பியுங்கள். இதோ! உலக முடிவுவரை எந்நாளும் நான் உங்களுடன் இருக்கிறேன்
(மத்தேயு 28:19-20)

நீ அவற்றை உன் பிள்ளைகளின் உள்ளத்தில் பதியுமாறு சொல். உன் வீட்டில் இருக்கும்போதும், உன் வழிப்பயணத்தின் போதும், நீ படுக்கும்போது, எழும்போதும் அவற்றைப் பற்றிப் பேசு.
(இணைச்சட்டம் 6:7)








பொதுக்காலத்தின் இருபத்திமூன்றாம் ஞாயிறு-

காயங்கள்… வெளியேற்றும்! கனிவுதாகங்கள்..….. உள்கொணரும்!

எசே33:7-9; உரோ13:8-10; மத் 18:15-20



கிறிஸ்துவில் பிரியமுள்ளவர்களே சகோதர சகோதிரியரே இளைய உள்ளங்களே சிறார்களே இணையதள நண்பர்களே. நம்மை ஒன்றாக இணைத்து மீண்டும் ஒரு புதிய வாரத்தை நமக்களிக்கும் இறைஇயேசுவுக்கு உளமார நன்றிசெலுத்துவோம். கடந்த வார நம் அனுபவங்களை புதிய சந்திப்புகளை இறைபீடத்தில் அர்பணித்து அருள்வேண்டுவோம். ஈராக்கில் துன்புறும் வேதனையுறும் ஒவ்வொரு கிறிஸ்தவஉள்ளமும் தாங்கள் இயேசுவின் துன்பப்படும் உடலோடு இணைந்திருக்கின்றோம் என்ற ஆறுதலையும் உலகெங்குமிருக்கும் அனைத்து கிறிஸ்தவ உள்ளங்களின் சக்திமிகு செபங்களும் அவர்களை திடப்படுத்தட்டும். இந்த நினைவுகளுடன் இணைவோம் இறைப்பலியில்.

சமூகங்கள் பிரிந்திருக்க காரணங்கள் என்ன? குடும்பங்கள் முறிந்திருக்க காரணங்கள் என்ன? உறவுகள் உடைந்திருக்க காரணங்கள் என்ன? பகைவர்களாவதற்கு என்ன காரணம்? நாடுகள் எதிரிகளாகவதற்கு காரணம் என்ன? மதங்கள் பலவாகி மலிவானதற்கு காரணங்கள் என்ன? சபைகளிடையே வேற்றுமைகளுக்கு காரணம் என்ன? பிரிவுகளுக்கு முறிவுகளுக்கு உடைபாடுகளுக்கு பகைவர்களாவதற்கு எதிரியாவதற்கு வேற்றுமைதன்மைக்கு காரணங்கள் காயங்களே சமூகத்திலிருந்து குடும்பத்திலிருந்து உறவுகளிலிருந்து வெளியேற்றும் காயங்களே. இக்காயங்கள் மன்னிப்பின்றி திருத்துதலின்றி திசைமாறி கிடக்கின்றன.

ஸ்பானிய கதையொன்றிலே ஒருதந்தை வாக்குவாதத்தினால் கோபத்தினால் தனகாணாமற்போன வீட்டைவிட்டு ஓடிச்சென்ற மகனைத்திரும்பப்பெற பலநாட்கள் கழித்து நாள் பத்திரிகையிலே இவ்வாறு விளம்பரப்படுத்தியிருந்தார். அன்பு மகன் ஜோசப் இது உன் வீடு உன் தேவையை நிறைவேற்றுவேன். நீ இல்லாமல் குடும்பம் வீடு வெறுமையாகிகிடக்கிறது. உன்தாய் படுக்கையிலேயிருக்கிறாள். நான் நானாக இல்லை. உன்னை புரிந்துகொள்ளாது பேசிய என்னை மன்னித்துவிடு. உனக்காக வீட்டின் கதவுகள் திறக்கப்பட்டிருக்கின்றன வீட்டிற்குவர கடினமாகயிருந்தால் சந்தையருகேயிருக்கும் பூங்காவில் வருகின்ற ஞாயிறுகாலை விருப்பமிருந்தால் வா…ஆவவோடு எதிர்நோக்கும் பாசமுள்ள தந்தை ஸடீபன். குறிப்பிட்டநாள்வந்தது ஞாயிறு சிறிதுகாலம் கடந்து தயக்கத்தோடு பூங்காசென்ற ஸ்டீபன் திகைத்துநின்றார். காரணம் அங்கு கூடியிருந்த ஜோசப்புகள் 800 பேர்கள் ஆவர். எத்தனை காயங்கள் பல்வேறு உறவுகளை விட்டு குடும்பங்களை விட்டு சமூகங்களை விட்டு வெளியேற்றப்பட்டிருக்கின்றார்கள் என் தெளிவாக தெரிகிறது. அதே சமயம் அவர்களிடம் இருக்கின்ற தாகம் மீண்டும் அனைத்துஉறவோடு இணையவேண்டும் என்ற மன்னிப்பை விரும்பும் தாகத்தை நாம் உண்டுபண்ணவேண்டும் என எடுத்துச்சொல்கிறது.

இன்றைய நற்செயதியிலே மத்தேயு இயேசுவின் வார்த்தைகளிலே சமூகத்தின் பல்வேறு வெளிப்பாடுகளை நம்முன்வைக்கிறார். உனக்கு எதிராக குற்றம் புரியும் சகோதரர் மேலும் – இரண்டு மூன்றுபேர் – திருச்சபை சமூகம் என்ற வார்த்தைகள் மன்னிப்பின்றி காயங்களினால் உடைந்து களைந்து பிரிந்து வெளியேற்றப்பட்டிருக்கிறதை விளக்குகிறார். மத்தேயு இவைகளை எழுதும்பொழுது வாரந்தோறும் இறைவார்த்தையை எடுத்துரைத்து சிந்திக்க உடமைகளை பகிர இறைஉடலால் இணைக்கப்பட ஒரே மனமாய் ஒரே எண்ணமாய் ஒரேவிசுவாசத்தினால் கிறிஸ்வர்களானவர்கள் அருள்வரம்பெற்றவர்கள் திருத்தூதர்கள் என வாரந்தோறும் கூடினார்கள் ஒன்றாய் ஒற்றுமையாயிருந்தார்கள். ஆனால் பலவீனங்களால் தடுமாற்றத்துடன் பொய்சிலைகளை வணங்கிய புறஇனத்தவர் –யூதமதவெறிகொண்டவர்கள்-உரோமை அரசு கடவுள்களை வணங்கியவர்களின் வாழ்க்கைமுறையை கிறிஸ்தவர்களும் அனுபவிக்க விரும்பி தடுமரற்றத்திலிருந்தபொழுது காயங்கள் மற்றவர்களை போல உங்களை வெளியேற்றிவிடும். என்தெளிவுபடுத்துகிறார். காயங்களை கனிவுடன் களைந்து இறைதாகத்தினால் சமூகத்தினுள் கொணர அழைப்புவிடுகிறார்.

முதல் வாசக இறைவார்த்தைகள் இறைவாக்கினர் எசேக்கியேல் வழியாக இறைவன் கொடுத்த அழைப்பை எடுத்துரைக்கின்றதை நமக்குச்சொல்கிறது. பாபிலோனிய அரசனின் ஆக்கிரமிக்குப்பிறகு மக்களோடு இறைவாக்கினர் எசேக்கியேல் துன்ப்பபட அடிமைநிலைக்கு அனுப்பப்படுகிறார். யாவே இறைவன் எசேக்கியலிடம் நீ ஒரு காவலாளி காயங்களிலிருந்து இறைசமூகத்தை உள்கொணர்ந்துவைக்க அழைக்கப்படுகின்றார். இச்சிறப்பு பொறுப்பு அவருக்கு சமூகத்தின் மீது சமூகத்தை ஒன்றசேர்க்க அவர்களிடம் தாகத்தை ஏற்படுத்த காயங்களை கழுவி. அனைவரையும் உள்கொணர கொடுக்கப்படுகிறது.

மருத்துமனை பணியில் இருவருடங்களுக்கு முன்பு சிறார்கள் மருத்துவமனைக்கு அழைக்கப்பட்டு நான் சென்றபொழுது பெரிய அறுவைசிகிச்சைக்கு செல்லவிருந்த ஒரு 14வயது பெண் மகளுக்கு நோயுற்பூசுதல் திருவருட்சாதனதம் அளிக்கச்சொன்னார்கள். அப்பெண்தலை மற்றும் கழுத்துபகுதியில் அடிபட்டு பாதிமயக்க நிலையில் இருந்ததால் நரம்பியல் அறுவைசிகிச்சைதேவை எனதெளிவாகியது. ஒரே ஒருவர் மட்டும் தான் அப்பெண்பிள்ளையோடு உதவியாகயிருந்தார். மருத்துவஉதவியாளர்கள் அறுவைசிகிச்சைக்கு அழைத்துச்சென்றதுடன் அந்நபர் என்னிடம் பகிர்ந்ததிலிருந்து இப்பெண்ணின் மாமா இவர். பெண்ணின் தந்தை கடந்த சில நாட்களாக கோபமாக வாக்குவதங்களில் ஈடுபட்டிருந்ததாகவும் திடீரென்று வாக்குவாதம் சண்டையானபொழுது துப்பாக்கியை எடுத்து சிறிய மகளை சுட்டதாகவும் அடுத்து மனைவியை பின் பெரியமகளாகிய இப்பெண்பிள்ளையைசுட்டதாகவும் இவள் தாயுடன் வெளியே பயந்து தப்பித்து ஒடியபொழுது இறுதியில் தந்தை தன்னையே சுட்டு இறந்ததாகவும் சொல்லி யோராடிக்கொண்டிருக்கும் தாய் மற்றெருமருத்துமனையில் இருப்பதாகவும் சொன்னார். இரு நாட்கள் கழித்து மீண்டும் சந்திக்க சென்றபொழுது அறுவைசிகிச்சை வெற்றிகரமாகயிருந்ததாகவும் அவள் பேச்சும் திறனை மீண்டும்பெற பலவாரங்கள் ஆகும் எனசொன்னார் பெண்ணின் மாமா. தொடர்ந்து நான் சந்தித்துக்கொண்டிருந்தபொழுது சில வாரங்கள் கழித்து அவள் மெதுவாக பேசபயிற்சிஎடுத்தக்கொண்டிருந்தபொழுது என்னிடம் செபம் செய்யசொன்னார். செபம் செய்தபிறகு. இறந்த என் சகோதரி எங்கேயிருப்பாள் என கேட்க நரன் சிறிது யோசித்து நிச்சயம் இறைவனிடம் மோட்சத்தில் என்றேன். அடுத்து அவள் கேட்டாள் என் தந்தைக்கும் மோட்சத்தில் இடம்கிடைக்குமா என்றுகேட்க நான் ஆடிப்போய்நின்றேன். குடும்பத்தையே முடிக்க கொலைசெய்ததந்தையை உள்கொணரும் அவளின் மன்னிப்பு உயர்ந்தது உண்மையானது சமூகத்திலிருந்து யாரையும் பிரிக்கவிடாதது.

கருணைதாகங்களோடு அனைவரையும் உள்கொணர்வோம்..இலலையென்றால் காயங்கள் நம்மை வெறியேற்றிவிடும்-ஆமென்.