இவ் மறையுரையை வழங்குபவர்

Rev.Fr.Peter Jayakanthan sss
Congregation of the Blessed Sacrament
Corpus Christi Catholic Church,
Houston, Texas, USஞாயிறு மறையுரைகள்

மதிப்பிற்குரிய அருட்பணியாளர்களே, துறவிகளே, அருட் கன்னியரே, உங்கள் ஞாயிறு மறையுரைகளை எமது இணையத்தளத்தின் ஆன்மீக வலத்தில் பிரசுரித்து, ஆண்டவர் இயேசுவின் நற்செய்தியை எல்லோருக்கும் அறிவிக்க விரும்பினால், info@tamilcatholicnews.com என்ற எமது மின்னஞ்சலுக்கு உங்களுடைய ஆக்கங்களை அனுப்பிவைக்கவும். உங்கள் மறையுரைகள் உலகெங்கும் இருக்கும் அனைத்து தமிழ் உள்ளங்களையும் சென்றடையும்.இதோ! ஓநாய்களிடையே ஆடுகளை அனுப்புவதைப்போல நான் உங்களை அனுப்புகிறேன். எனவே பாம்புகளைப்போல முன்மதி உடையவர்களாகவும் புறாக்களைப்போலக் கபடு அற்றவர்களாகவும் இருங்கள்.
(மத்தேயு 10:16)

நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள்; தந்தை, மகன், தூய ஆவியார் பெயரால் திருமுழுக்குக் கொடுங்கள். நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்களும் கடைப்பிடிக்கும்படி கற்பியுங்கள். இதோ! உலக முடிவுவரை எந்நாளும் நான் உங்களுடன் இருக்கிறேன்
(மத்தேயு 28:19-20)

நீ அவற்றை உன் பிள்ளைகளின் உள்ளத்தில் பதியுமாறு சொல். உன் வீட்டில் இருக்கும்போதும், உன் வழிப்பயணத்தின் போதும், நீ படுக்கும்போது, எழும்போதும் அவற்றைப் பற்றிப் பேசு.
(இணைச்சட்டம் 6:7)
பொதுக்காலத்தின் இருபத்திஇரண்டாம் ஞாயிறு

முன்னால் அல்ல…… என்றும் அவர் பின்னால்…!

ஏரே20:7-9; உரோ12:1-2; மத் 16:21-27கிறிஸ்துவில் பிரியமுள்ளவர்களே சகோதர சகோதிரியரே இளைய உள்ளங்களே சிறார்களே இணையதள நண்பர்களே. இறைவனை போற்றி புகழ்ந்து ஒரே சமூகமாக செபிக்க நாம் இணந்துவந்துள்ளோம். இந்த புதிய நாளில் புதியவாரத்தில் கடந்தவாரத்தில் நம்மை சுற்றி நிகழ்ந்த நிகழ்வுகளை நம் கண்முன்கொண்டுவந்து இறைவன் பாதத்தில் அர்பணித்து செபிப்போம். சிறப்பாக கொடூரமாக தீவிரவாதிகளால் கொல்லப்பட்ட பத்திரிகை நிருபர் ஜேம்ஸ் போலியையும் அவர் குடும்பத்தையும் நினைவுகூர்ந்து செபிப்போம். இயேசுவையும் இறைவிசுவாசத்தையுமே தங்கள்முன்வைத்து ஜேம்ஸ்போலியைப்போல சித்திரவதைக்குள்ளாகியிருக்கும் அனைத்து உள்ளங்களையும் இறைவன் தொடர்ந்து இதேவேகத்தை அவர்களல் தக்கவைத்து பாதுகாக்கவும் இஸ்லாமிய போராளிகளின் வெறும் இஸ்லாமியர்கள்தான; இருக்கவேண்டும் என்றவெறிஉணர்வை கடந்து ஒரே மனிதஉணர்வுநிறை சகோதரசமூகத்தை அவர்கள் உணர நம் எண்ணங்களை விண்ணப்பங்களை சமர்ப்பித்து மன்றாடுவோம்.. .

இயேசுவே நீர் இந்த பெண்மணியின் நோயைமுற்றிலும் நீக்கிவிடும்……...
வல்லவரே நீர் இச்சகோதரரின் கவலையை அகற்றிவிடும்…....
நல்லவரே இப்பிள்ளகளின் குரலைக்கேட்டு அவர்களுக்கு நல்ல பணியைத்தேடிதாரும்……..


பரிசுத்தரே பல்வேறு வலிகளோடு உம்முன்வந்திருக்கும் உள்ளங்களின் வலிகளை எடுத்துக்கொள்ளும்……...
நான் கட்ளையிடுகிறேன்…நான் ஆணையிடுகிறேன்…துன்பம் வலிகள் வேதனைகள் கழுவப்படட்டும் இயேசுவை அனைத்கையும் எடுத்துக்கொள்ளும்……...
இத்தகைய செபங்கள் நம்மத்தியில் அதிகமாகிக்கொண்டிருக்கின்றன. செபத்தில் நம்வாழ்வில் ஆன்மிகத்தில் யார் மையம் முக்கியம் யார் நம்முன்னால் என்றால் அதிகமாக தருணங்களில் நான் என் சுயநலமே எனச்சொல்லலாம். மேடைஏறினால் மைக்கையிலிருந்தால் பிரசங்கமேடையிலிருக்கும் பொழுது அங்கே இயேசுவே என்இறைவனே மையம் முக்கியம் அவரே என்முன்னால் எனஉணர்ந்து நம் செபங்களை தியானங்களை வாழ்வை அமைத்துக்கொள்ள இன்றைய இறைவார்த்தைகள் நமக்கு அழைப்புவிடுக்கின்றன. நான் எதை செய்யவேண்டும் என எனக்கு யாரும் சொல்லதேவையில்லை என்ற இளைய பிள்ளைகளின் பேச்சுகளையே பெற்றேரர்களாகிய நம்மால் ஏற்றுக்கொள்ளமுடியாதபோது எப்படி இயேசுநம் கட்டளைகளை ஏற்பார். நீ இருக்கவேண்டிய இடம் என்பின்னால் உன் எண்ண்தை என்னில் புகுத்த முயற்சிக்காதே எண் எண்ணத்தை திட்டத்தை விருப்பத்தை ஏற்று பின்பற்று என அழைப்புவிடுக்கிறார். .

கடந்த ஞாயிறு நற்செய்தியில் நீ உறுதியான பாறை என்று அழைத்த பேதுருவை இன்றைய நற்செய்தியிலே சாத்தானே என்பின்னால்போ என்கிறார். நீ தலைவராகயிருப்பதற்குபதிலாக தடையாகயிருக்கிறாய் என கோபமாக பேசுகிறார். ஏன் உறுதியான கல்லாகிய பேதுரு இங்கே உடைந்துபோன தடைக்கல்லாகயிருக்கிறார் என இயேசு சொல்கிறார்? பேதுரு தன் எண்ணத்தில் மனதில் பார்வையில் துன்மில்லாத – துயரில்லாத – போராட்டமில்லா – வேதனையில்லா .இயேசுவாக காண்கிறார். எனவே தன் எண்ணத்திறகு இயேசுவை அழைக்க கட்டாயப்படுத்த முயற்சிசெய்கிறார். இத்தருணத்தில்தான் இயேசு நீ எனக்கு என்னசெய்ய வேண்டும் என சொல்லதேவையில்லை உன் இடம் எனக்கு முன்னால் அல்ல மாறாக எந்நாளும் என் பின்னாலே என தெளிவாக சொல்கிறார். என்பின்னால் வர உங்கள் எண்ணங்கள் மாறட்டும் என்கிறார். இது பேதுருவின் வார்த்தை தடையாகயிருந்தரலும் இங்கே அனைத்து திருத்தூதர்களின் சார்பாக அவர்கள் எண்ணத்தைபிரதிபலித்து முன்வைப்பதாலே அனைவரையும் இயேசு கோபமாக நான் அழைத்தது என்முன்னால் என்பயணத்தை முடிவுசெய்ய அல்ல மாறாக எந்நாளும் என்பின்நடக்கவே என்று சொல்லி என்னை வெறும் கலிலேயா இயேசுவாக காணாமல் எருசலேம் இயேசுவாக அங்கே துன்பம் பாடுகள் மீட்பின் இயேசுவாக காண பின் வாருங்கள் என அழைக்கிறார். .

ஏன் சாத்தானே என்கிறார்? இறைவன் எண்ணத்தை விருப்பத்தை திட்டத்தை முன்வைக்காமல் நம் எண்ணத்தை திட்டத்தை முன்வைக்கும்போது இயேசுவை நம்முன்வைக்கமறுத்து நம்மையே மையமாக முன்வைக்கிறோம் நாம் நமது எண்ணம் தடைக்கல்லாகிறது இறைவன் விருப்பத்திற்கு அருளுக்கு தடையாகயிருக்கும் எதுவும் தீயது தீயச்செயலாகும் எனவே தடைசெய்யும் உன் எண்ணம் தீயது என சுட்டிககாட்டவே சாத்தான் என்கிறார். இத்தடைக்கற்களை நம் மனிதபோரட்டத்தில் மறுத்து எந்நாளும் இயேசுவை முன்வைப்போம் பின்செல்வோம். .

எரேமியா இறைவாக்கினர் இன்றைய முதல் வாசகத்தில் தன் மனஅழுத்தத்தை போராட்டத்தை வெளிப்படுத்துகிறார். எரேமியா நாற்பது ஆண்டுகள் இறைவனின் பணியில் ஈடுபட்டிருந்தார். அவர் பணியாற்றியது யூதேயாவின் தலைநகரான எருசலேம் ஆகும். ஜோசையா அரசனின் அரசியல் மற்றும் ஆன்மிக மறுமலர்ச்சிக்கு காரணமாகஉடனிருந்து எருசலேமை பல்வேறு எதர்ப்புகளிலிருந்து காப்பாற்ற துணயாகயிருந்தார். ஆனால் சிலைவழிபாடும் நேர்மையில்லாதனமும் மக்களை தொற்றிக்கொண்டது. கி’மு597-ல் பாபிலோனியர்களால் ஆக்கிரமிக்கப்பட்டபோது கி.மு587-ல் எருசலேம் ஆலயம் தகர்க்கப;பட்டபொழுதும் அங்கே மனவேதனையோடு யூதேயா சாகிறது எனவெளிப்படுத்தினார். அவர் நான்கு நூற்றாண்டு யூத ஆட்சியில் இறைவன் வாக்குறுதியை மறந்ததிற்கு சிலைவழிபாட்டை பின்பற்றியதற்கு எருசலேம் அழிக்கப்டும் என இறைவன் எண்ணத்தை முன்எடுத்துச்சொன்னதற்காக எங்களை காட்டிக்கொடுத்தவர் என பழித்துரைக்கப்பட்டு ஆலயகுருக்களினால் கொடூராக சித்திரவைதைக்குள்ளானார். இத்தருணத்தில் தான் இறைவா என்னை கைவிட்டுவிட்டீர் ஏமாற்றிவிட்டீர் என பகிர்ந்து போராடடம் எதிர்ப்பபு நிறைந்த தன் அழைப்பில் இறைவன் எண்ணம் தான் தனக்குமுன்னால் என தொடர்வதாக உறுதியளிக்கிறார். .

நாம் வாழும் இன்றைய தருணத்தில் எத்தனையோ கிறிஸ்தவ உள்ளங்கள் ஈராக்கில் இயேசுவை எத்தனையோ போராட்டத்திலும் வேதனையிலும் முன்வைத்து சாட்சிபகர்வதை நாம் காண்கிறோம். க்குஸா என்ற பகுதியில் இன்னும் ஒரேவாரம்தான் உங்களுக்கு கொடுக்கின்றோம் புறப்படுங்கள் அல்லது இஸ்லாமிர்களாக மாறுங்கள் அல்லது இங்கேயே இறக்கதயாரகயிருங்கள் என்ற எச்சரிக்கையில் அவர்கள் உறுதியாக இறுதியாக சொல்வது இயேசு தான் எங்கள் முன்னால் அவர்பின்னால் நாங்கள் நடக்கின்றோம் என்ற விசுவாசஉண்மைவார்த்தையே. மோசேல் என்ற பகுதியிலிருந்து கடைசி கிறிஸ்தவ குடும்பம்வெளியேறிவிட்டது. மனம்மாறுங்கள் அல்லது வரிகட்டுங்கள் அல்லது வாளை சந்திக்க தாயாராயிருங்கள் என்பதைக்கேட்டு அனைவரும் வெளியேறுகிறார்கள் இயேசுவின் பின்னால் அவர்காட்டும் பாதையில் நடக்கிறார்கள். இவர்களின் சாட்சியம் நம் பாதையில் இயேசவை எந்நாளும் முன்வைத்து போராட்டங்களை சுமப்போம் பின் நடப்போம்-ஆமென். .