இவ் மறையுரையை வழங்குபவர்

Rev.Fr.Peter Jayakanthan sss
Congregation of the Blessed Sacrament
Corpus Christi Catholic Church,
Houston, Texas, US



ஞாயிறு மறையுரைகள்

மதிப்பிற்குரிய அருட்பணியாளர்களே, துறவிகளே, அருட் கன்னியரே, உங்கள் ஞாயிறு மறையுரைகளை எமது இணையத்தளத்தின் ஆன்மீக வலத்தில் பிரசுரித்து, ஆண்டவர் இயேசுவின் நற்செய்தியை எல்லோருக்கும் அறிவிக்க விரும்பினால், info@tamilcatholicnews.com என்ற எமது மின்னஞ்சலுக்கு உங்களுடைய ஆக்கங்களை அனுப்பிவைக்கவும். உங்கள் மறையுரைகள் உலகெங்கும் இருக்கும் அனைத்து தமிழ் உள்ளங்களையும் சென்றடையும்.



இதோ! ஓநாய்களிடையே ஆடுகளை அனுப்புவதைப்போல நான் உங்களை அனுப்புகிறேன். எனவே பாம்புகளைப்போல முன்மதி உடையவர்களாகவும் புறாக்களைப்போலக் கபடு அற்றவர்களாகவும் இருங்கள்.
(மத்தேயு 10:16)

நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள்; தந்தை, மகன், தூய ஆவியார் பெயரால் திருமுழுக்குக் கொடுங்கள். நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்களும் கடைப்பிடிக்கும்படி கற்பியுங்கள். இதோ! உலக முடிவுவரை எந்நாளும் நான் உங்களுடன் இருக்கிறேன்
(மத்தேயு 28:19-20)

நீ அவற்றை உன் பிள்ளைகளின் உள்ளத்தில் பதியுமாறு சொல். உன் வீட்டில் இருக்கும்போதும், உன் வழிப்பயணத்தின் போதும், நீ படுக்கும்போது, எழும்போதும் அவற்றைப் பற்றிப் பேசு.
(இணைச்சட்டம் 6:7)








பொதுக்காலத்தின் பதிமூன்றாம் ஞாயிறு

வித்தியாசமான …. அத்தியாவசமான:
திருப்புமுனையும்….தலைமைப்பணியும்

தி.ப 12: 1-11; 2திமொ 4:6-8இ 17-18; மத்; 16: 13-19



கிறிஸ்துவில் பிரியமுள்ளவர்களே அனைவருக்கும் இறைவனின் நாளின் வாழ்த்துக்களையும் ஆசீரையும் உரித்தாக்கிகொள்கிறேன். திருச்சபையும் விசுவாசமும் விழுதாக வளர உயர ஆழப்படுத்தப்பட காரணம் இருநபர்களின் பிடிப்பும் அவர்களின் தலைமைத்துவ பணியுமே ஆகும். அவர்கள் இருவரின் பெருவிழாவை திருச்சபை இன்று நினைவுகூற அழைக்கிறது. அவர்கள் நிமிர்ந்து நிற்கும் நிரந்தர திருச்சபையின் தூண்களான பேதுரு மற்றும் பவுல் ஆவர். அவர்களின் தெளிவான பாதை – விசுவாசப்பிடிப்பு – பணிவேகம் நம்மையும் ஆட்கொள்ளட்டும்.
தலைவர்கள் பிறப்பிலிருந்தே உருவாகிறார்களா?
வாரிசு உரிமையால் உயர்கிறார்களா?
உழைப்பால் தங்களை உருவாக்குகிறார்களா?
சூழ்நிலையால் உதயமாகின்றார்களா?
இத்தகைய மேலுள்ள கேள்விகளுக்கு பதில்களை நம்மால் தரமுடியாது எனினும் எதுவும் முழு உண்மை அல்லது நிறைவானது எனசொல்லமுடியாது. சூழ்நிலையினால் உதயமானவர்கள் நெல்சன் மண்டேலா – மார்டின்லூதர்கிங் ஜீனியர் - காந்திஜி எனலாம். எலிசபெத் மகாராணி வாரிசு உரிமையால் ஆளும் பதவியை தக்கவைத்துக்கொள்கிறார்கள். பில்கேட்ஸ் - ஸ்டீவ் ஜாப்ஸ் போன்றோர் ஒருதுறையில் கடினப்பட்டு முன்னேறி சாதித்து தலைமைபதவியைபெற்றார்கள். அதே சமயம் ஒருகாலக்கட்டத்தில் திருச்சபையின் திருப்புமுனையாக இறைவன் அனுப்பும் தலைவர்கள் உண்டு புனித 23ம் அருளப்பர் மற்றும் தற்போதைய திருத்தந்தை பிரான்சிஸ் இவர்களின் தலைமைத்துவம் வித்தியாசமானது தற்போதைய சூழ்நிலைக்கு அத்தியாவசமானதுமாகும். அந்த வித்தியாசமான அதேசமயம் அத்தருணத்தில் திருச்சபைக்கு அத்தியாவசமான இறைவன் தெரிந்தெடுத்து தந்தவர்களே பேதுரு மற்றும் பவுல் ஆவர்.

இவர்கள் இருவரிடம் அநேக வேறுபாடுகள் இருக்கின்றன இவைகளை கடந்து இருதூண்களாக திருச்சபையை கட்டி எழுப்பி இன்றும் என்றும் நிமிர்ந்து நிற்க செய்த அவர்கள் அணுகுமுறைக்கு காரணமானது அவர்கள் சந்தித்த திருப்புமுனையே ஆகும்.

பேதுரு – பவுலின் வேற்றுமைதன்மைகள்

பேதுரு மீனவர்…….பவுல் கூடாரம் அமைக்கும் தொழிலில் ஈடுபட்டிருந்தவர்
பேதுருவின் படிப்பறிவு கேள்விக்குறி…..பவுல் முறையாக கற்றுத்தேர்ந்தவர்
பேதுரு அராமாயிக்மொழி பேசினார்…….பவுல் அராமாயிக் - ஹீப்ரு – கிரேக்கமொழி அறிந்தவர்.
பேதுரு யூத கிறிஸ்தவர்களுக்கு பணியாற்றினார்……….பவுல் புறஇனத்தவர்களுக்கு பணியாற்றினார்.
பேதுரு இயேசுவோடு இருந்த அனுபவம் பெற்றவர்……பவுல் இயேசுவை பார்த்ததில்லை பேதுருவின் நூல்கள் இரண்டு…….பவுலின் எழுத்து நூல்கள் 14 ஆகும்.
பேதுரு சிலுவையில் கொல்லப்பட்டார்……பவுல் தலைவெட்டுண்டு இறந்தார்.
பேதுரு திருச்சபையின் கிறிஸ்துவின் தலைமைத்துவ உறுதிப்படுத்தும் பணிக்கு அழைக்கப்பட்டார்……. பவுல் கிறிஸ்துவை எடுத்துரைக்கும் நற்செய்தி அறிவிப்பு போதிக்கும் பணிக்கு அழைக்கப்பட்டார்.
இருவரிடம் பல்வேறு வேறுபாடுகள் இருப்பினும் ஒரே கிறிஸ்துவுக்காக ஒரே விசுவாசத்தோடு ஒரே இறையரசுக்காக ஒரே திருச்சபையின் தூண்களாக நிமிர்ந்து நிற்க காரணம் இருவரின் வாழ்வில் ஏற்பட்ட திருப்புமுனையும் அதற்கு அவர்களின் பதில்செயல்பாடுகளுமே ஆகும்.

பவுலின் திருப்புமுனை:

கற்றுஅறிந்த யூதபற்றுள்ள இளைஞனாக கிரேக்க தத்துவ ஞானங்களை உள்வாங்கிய அறிவாளியாக வேகமாக வளர்ந்து வரும் கிறிஸ்தவகுழுக்களை தடுத்துநிறுத்த சென்று கொண்டிருந்த பவுல் விழுகிறார்….பார்வை இழக்கிறார்…….கமாலியேலிடம் தெளிவுபெற்று இருளிலிருந்து புதிய ஒளியை பெறுகிறார். நீ துன்புறுத்தும் இயேசுவை நீ போதிக்து அறிவிக்து உன் வாழ்வாக்கவேண்டும் என்ற அழைப்பை ஏற்பு ஒருதிருப்புமுனையாக அவர் தலைமைத்துவம்அமைகிறது எதுவும் அவரை நிறுத்தமுடியவில்லை.

பேதுருவின் திருப்புமுனை:

சாதாரண மீனவ அனுபவத்திலிருந்த பேதுரு துன்பம் வேண்டாம் எருசலேம் வேண்டாம் என்று தயக்கம் நிறைந்த பயங்களையே வெளிப்படுத்தியவர் பாறையாக மாற்றப்படுகிறார். இயேசுவுவின் மூன்று கேள்விகள்…..பேதுரு தயாரிக்கவிரும்பிய மூன்று கூடாரங்கள்…..பேதுருவின் மும்முறை மறுதலிப்பு என்ற மூன்று என்ற எண்ணிக்கை அவரை ஆழப்படுத்திய உறுதிப்படுத்திய பக்குவப்படுத்திய தருணங்கள் அனுபவங்கள் எனலாம். தன் தவறை உணர்ந்து தலைமைபொறுப்பேற்று பாறையாக திருச்சபையை உருவாக்குகிறார் உறுதியான நிரந்தரமான தெளிவான திருச்சபைக்கு காரணம் இவர்கள் இருவருமே ஆவர்.

நம்மிடம் நிலவுகின்ற வேற்றுமைகளை வேறுபாடுகளை கடந்து நாம் சந்திக்கும் திருப்புமுனைகளுக்கு ஆம் என்று சொல்லி பாறையாக பணியாற்ற தயாரா?
திருப்புமுனை என்பது ஒரு முழுமையான மாற்றம் என்பதைகுறிக்கிறது.
இதுவரை நடந்த பாதையிலிருந்து முற்றிலும் வேறுபட்ட பாதை….
இதுரை இருந்த அணுகுமுறையிலிருந்த வேறுபட்ட அணுகுமுறை…
இதுவரை சிந்தித்த சிந்தனைகளிலிருந்து வேறுபட்ட சிந்தனை..
இதுவரை செய்த செயல்களிலிருந்து மாறுபட்ட செயல்பாடு….. இதுவே திருப்புமுனையின் தாக்கங்கள் எனலாம். இது தனிப்பட்ட நபரை மட்டுமல்ல அவர்களை சுற்றியிருக்கும் சூழ்நிலையையும் அவர்கள் சார்ந்திருக்கும் குழுக்கள் - நிறுவனங்களையும் புதியதாக மாற்றுகிறது.

திருத்தந்தை பிரான்சிஸ் இதன் சிறப்பு உதாரணம் எனலாம்…….மொழியால்…இனத்தால்….இடத்தால்…..பணியால் இதுவரை இருந்த திருத்தந்தைகளிடமிருந்து வேறுபட்டிருந்தாலும் அவரின் திருப்புமுனை அணுகுமுறை திருச்சபையின் திருப்புமுனை அனுபவமாக மாறிக்கொண்டேயிருக்கிறது. நோயாளிகள்….முதியவர்…ஆதரவற்றவர்கள்….குழந்தைகள்…ஏழைகள் என அவர்களுக்கு முதல் இடம் கொடுப்பது மாறுபட்ட அத்தியாவசமான அணுகுமுறையாகும். ஏளிமையாக முழுமையாக பணியாற்ற அழைக்கப்பட்டவர்களுக்கு அறைகூவல்விடுப்பது அத்தியாவசமான மாறுபட்ட அழைப்புஆகும்.

திருச்சபையை உயர்த்த உறுதிப்படுத்த வேற்றுமைகளை கடந்து திருப்புமுனைகளுக்கு ஆம் என்று வித்தியாசமாக பணியாற்றிய பேதுரு மற்றும் பவுலை இறைவன் உயர்த்;தினார் தூண்களாக என்றும் நிமிர்ந்து நிற்கவைக்க. நாமும் நம்மிடம் உள்ள வேற்றுமைகளை கடந்து ஆம் என்றும் சந்திப்போம் திருப்புமுனைகளை இறைவனை; நம்மை உயர்த்துவார் பாறையாம் திருச்சபைக்கு பணியாளர் ஆகும்பொழுது – ஆமென்.