இவ் மறையுரையை வழங்குபவர்

Sr.Merina O.S.M
Chiesa parrocchiale san Vittore rho, Milan, Italy
Email: srmerina31@gmail.com

ஞாயிறு மறையுரைகள்

மதிப்பிற்குரிய அருட்பணியாளர்களே, துறவிகளே, அருட் கன்னியரே, உங்கள் ஞாயிறு மறையுரைகளை எமது இணையத்தளத்தில் பிரசுரித்து, ஆண்டவர் இயேசுவின் நற்செய்தியை எல்லோருக்கும் அறிவிக்க விரும்பினால், info@tamilcatholicnews.com என்ற எமது மின்னஞ்சலுக்கு உங்களுடைய ஆக்கங்களை அனுப்பிவைக்கவும். உங்கள் மறையுரைகள் உலகெங்கும் இருக்கும் அனைத்து தமிழ் உள்ளங்களையும் சென்றடையும்.

இதோ! ஓநாய்களிடையே ஆடுகளை அனுப்புவதைப்போல நான் உங்களை அனுப்புகிறேன். எனவே பாம்புகளைப்போல முன்மதி உடையவர்களாகவும் புறாக்களைப்போலக் கபடு அற்றவர்களாகவும் இருங்கள்.
(மத்தேயு 10:16)

நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள்; தந்தை, மகன், தூய ஆவியார் பெயரால் திருமுழுக்குக் கொடுங்கள். நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்களும் கடைப்பிடிக்கும்படி கற்பியுங்கள். இதோ! உலக முடிவுவரை எந்நாளும் நான் உங்களுடன் இருக்கிறேன்
(மத்தேயு 28:19-20)

நீ அவற்றை உன் பிள்ளைகளின் உள்ளத்தில் பதியுமாறு சொல். உன் வீட்டில் இருக்கும்போதும், உன் வழிப்பயணத்தின் போதும், நீ படுக்கும்போது, எழும்போதும் அவற்றைப் பற்றிப் பேசு.
(இணைச்சட்டம் 6:7)

பாஸ்கா காலம் இரண்டாம் ஞாயிறு.

நம்புங்கள் வாழ்வு பெறுங்கள்

>திருத்துதர் பணிகள்; 4; 32-35
1 யோவான்; 5;1-6
யோவான் 20; 19-31

உயிர்த்த ஆண்டவர் இயேசுவின் மகிழ்வில் திளைத்துக்கொண்டிருக்கும் அன்பு உள்ளங்களே , இன்றைய இறைவார்த்தையின் வழி இயேசு நம்பிக்கை கொண்டவர்களாய் வாழும்படி நம்மை அழைக்கின்றார். நம்புங்கள் வாழ்வு பெறுங்கள் என்கின்றார். இயேசுவின் வாக்குறுதி வெற்று வாக்குறுதி அல்ல. அது உண்மையின் வாக்குறுதி. அவரை நம்பி வாழ்வு பெற்றவர்கள் ஏராளம். இன்றைய நாளில் இயேசு நமக்கு மூன்று விதங்களில் தன்னை வெளிப்படுத்துகிறார்.
1. வல்லமையுள்ளவர், 2. அமைதி அருள்பவர், 3. ஆசீர் அளிப்பவர்.

1. வல்லமையுள்ளவர்:
இயேசு உயிர்த்த பின்பும் தான் வல்லமையுடையவர் என்பதனை பல விதங்களில் தன் சீடர்களுக்கு வெளிப்படுத்துகின்றார். பலர் சேர்ந்து புரட்டி வைத்த கல்லறையை விட்டு வெளியே வல்லைமையுடன் வந்தார். பூட்டி இருந்த வீட்டின் உள்ளே வந்து தம் சீடர்களுக்கு காட்சி அளிக்கின்றார். சீடர்களின் பசியைப் போக்க, தாயன்போடு மீன் சுட்டு தருகின்றார். இப்படி பல விதங்களில் தன்னை வெளிப்படுத்துகிறார். குறிப்பாக இன்றைய நற்செய்தி வாசகத்தில், பூட்டியிருந்த வீட்டில் சீடர்கள் பயத்துடன் பதுங்கி இருக்க, இயேசு அவர்கள் முன் பிரசன்னமாகின்றார். அவர்களுக்கு தன்னுடைய வல்லமையை பரிசாகக் கொடுக்கின்றார். உயிர்த்த பின்பும் தான் வல்லமையுடன் இருப்பதை அவர்களுக்கு எடுத்துக்காட்டுகின்றார்.

பேயோ பூதமோ என்று சீடர்கள் அலறி இருக்கக்கூடும். தன்னுடைய காயம்பட்ட கைகளையும் கால்களையும் விலாவையும் அவர்களுக்குக் காட்டுகின்றார். பயத்துடன் இருந்த அவர்களுக்கு தன்னுடைய காயத்தின் தளும்புகள் கொண்டு வல்லமை அளிக்கின்றார். அவருடைய காயங்களால் நாம் சுகமானோம். அவருடைய தளும்புகளால் நாம் வல்லமை பெறுகின்றோம். இயேசு நமக்குக் கூறுவதும் இதுவே. இன்றைய உன்னுடைய காயங்கள் நாளைய தளும்புகள் . இன்றைய உன்னுடைய தளும்புகள் நாளை வேறொருவருக்கு வல்லமை தரக்கூடியதாக மாறலாம். நமது வல்லமை நமது துன்பத்தோடு கூட மறைந்து போய்விடுவதில்லை. துன்பத்திலிருந்து நாம் மீண்டு வந்த பிறகும் நமது வல்லமை இரட்டிப்பு மடங்கு பலம் பெறுகிறது. எனவே துன்பத்தைக் கண்டு தளராது வாழ்வோம். உயிர்த்த இயேசுவின் வல்லமை பெறுவோம்.

2. அமைதி அருள்பவர்:
இயேசு அமைதியை அருள்பவர். அவர் வாழ்ந்த போதும் சரி. இறக்கும் தருவாயிலும் சரி, ஏன் இறந்த பிறகும் சரி, அமைதியின் வடிவமாக காட்சி அளிப்பவர். இவ்வுலகு அமைதி பெறவே வந்தேன் அதுவும் நிறைவாக பெறவே வந்தேன் என்றவர், அதனை முழுமையாக நிறைவாக இவ்வுலகுக்குக் கொடுத்தவர். கொடுக்கும் பாத்திரமான இயேசு நிறைவாகவேக் கொடுக்கின்றார். அதனைப் பெறும் நாம் தான் அதனை முழுமையாக பெறுவதில்லை. இன்றைய சூழலில் மன அமைதி இன்றி நம்மில் பலர் இருக்கின்றோம். நமது எண்ண அலைகளை அறிபவர் இயேசு. எவ்வாறு குழப்பத்திலும் பயத்திலும் இருந்த சீடர்கள் முன் தோன்றி உங்களுக்கு அமைதி உரித்தாகுக என்றாரோ அது போல இன்று மனக்குழப்பத்தில் இருக்கக் கூடிய நம் முன்னும் தோன்றி அதே அமைதியை நமக்கும் அருள்கின்றார்.

நமது உள்ளக்கதவுகள் பயம், குழப்பம் என்னும் கதவினால் அடைக்கப்பட்டிருந்தாலும் இயேசு நம் உள்ளே வந்து நமக்கு அமைதி அளிக்கக்கூடியவர். அவரது அமைதி நமக்கும் நம்மை சுற்றி இருப்பவர்கள் அனைவருக்கும் புது வாழ்வு அளிக்கும். எவ்வாறு உயிர்த்த இயேசுவின் அமைதியைப் பெற்ற சீடர்களின் வாழ்வு புது மாற்றம் பெற்றதோ அது போல நமது வாழ்வும் அவருடைய அமைதியினால் புது வாழ்வு பெறும். அமைதியைப் பெறுபவர்களாக மட்டுமில்லாமல் அதனைப் பிறருக்கும் அளிப்பவர்களாக நாம் மாற வேண்டும். அதற்காகவே இயேசு உயிர்த்தார். தந்தை அவரை அனுப்பியது போல இயேசு நம்மை அனுப்புகின்றார். தந்தையின் திருவுளத்தை நிறைவேற்ற அமைதியைப் பிறருக்கு அளிக்கக் கூடியவர்களாவோம்.

3. ஆசீர் அளிப்பவர்:
இயேசு நமக்கு ஆசீர் அளிப்பவர். நானே நல்ல ஆயன் நீங்கள் என் மந்தைகள். நானே உலகின் ஒளி .உங்கள் ஒளி மனிதர் முன் ஒளிரட்டும் என்று பல நேரங்களில் அவருடைய அருளாசீரை நமக்கு அள்ளித் தந்திருக்கின்றார். இறந்து உயிர்த்த பின்பும் தன்னுடைய சீடர்களுக்கு ஆசீர் அளித்து சென்றதைப் போல நமக்கும் இன்றைய நாளில் ஆசீர் அளிக்கின்றார். சீடர்களில் ஒருவரான திதிம் என்னும் தோமா அவருடைய உயிர்ப்பை நம்பாத போது, மீண்டும் ஒரு முறை தோன்றி தன்னை வெளிப்படுத்தியவர். அவரது நம்பிக்கையின்மையைக் கண்டு வெறுக்காது அன்போடு அவரது சந்தேகம் தீர்க்கின்றார். தோமா இயேசுவின் காயங்களைக் கண்டதால் மட்டும் நம்பவில்லை மாறாக இயேசுவின் தாயன்பை கண்டு அவரை அடையாளம் கண்டு கொள்கின்றார். நம்புகின்றார் அதன் அடையாளமாக நம்பிக்கை பிரகடனம் ஒன்றை வெளிப்படுத்துகிறார். என் ஆண்டவரே, என் தேவனே என்ற அந்த செபத்தின் மூலமாக தன்னுடைய ஒட்டு மொத்த நம்பிக்கையையும் வெளிப்படுத்துகின்றார். தோமாவின் நம்பிக்கையின்மையினால் காணாமலே விசுவசிக்கும் நம்முடைய நம்பிக்கை போற்றப்படுகிறது உயிர்த்த இயேசுவால். நாம் பேறுபெற்றவர்கள் என நமக்கு ஆசீர் அளிக்கின்றார். எல்லா நிலையிலும் என் ஆண்டவரே என் தேவனே என்று அவரை நினைத்து வாழ அழைக்கின்றார். நம்முடைய நம்பிக்கையின்மை உயிர்த்த இயேசுவின் பிரசன்னத்திற்கு பின் முழு மாற்றம் பெற்றதாக இருக்க வேண்டும். "நம்பிக்கை இழந்தவன் வெல்வது கடினம் ஆனால் நம்பிக்கை இருப்பவனை வீழ்த்துவது கடினம்". என்பதற்கேற்ப நம்முடைய வாழ்வு வீழ்ந்து போகாத ஒன்றாக இருக்க வேண்டும்.

நம்மை சுற்றி இருக்கக் கூடிய எல்லோரும் நம்மால் முடியாது முடியாது என்று சொன்னாலும் நம் ஆழ்மனதில் சிறு மெல்லிய சத்தம் உன்னால் முடியும் என்று சொல்லும் போது நம்முடைய நம்பிக்கை கொண்டு நாம் எழுந்து வருவோம். அதுவே நம்முடைய உயிர்ப்பு. இயேசு வருடத்தில் ஒரு நாள் மட்டும் உயிர்க்கவில்லை. அவரது உயிர்ப்பின் மகிழ்வை நாம் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமை திருப்பலிக் கொண்டாட்டத்தின் போதும் கொண்டாடி மகிழ்கின்றோம். நாமும் ஒவ்வொரு முறையும் நம்முடைய நம்பிக்கையில் அவரோடு உயிர்க்க வேண்டும். வல்லமையருளும், அமைதியருளும், ஆசீர் அளிக்கும் இயேசு நம்மோடு இருந்து நம்முடைய நம்பிக்கையின் தரத்தை உயர்த்தட்டும். அவரது வல்லமையும் அமைதியும், ஆசீரும், நம்மை நம்பிக்கையினால் நிரப்பி நமது வாழ்வை வளம் பெறச்செய்யட்டும். உயிர்த்த இயேசுவின் வல்லமையும் அருளும் ஆசீரும் நம்மோடும் நம் குடும்பத்திலுள்ள அனைவரோடும் இருந்த்து நம்மை வழி நடத்துவதாக .. ஆமென்.

நம்புங்கள் வாழ்வு பெறுங்கள்.
பாஸ்கா காலம் இரண்டாம் ஞாயிறு.
திருத்துதர் பணிகள்; 4; 32-35 1 யோவான்; 5;1-6 யோவான் 20; 19-31