இவ் மறையுரையை வழங்குபவர்

Sr.Merina O.S.M
Chiesa parrocchiale san Vittore rho, Milan, Italy
Email: srmerina31@gmail.com

ஞாயிறு மறையுரைகள்

மதிப்பிற்குரிய அருட்பணியாளர்களே, துறவிகளே, அருட் கன்னியரே, உங்கள் ஞாயிறு மறையுரைகளை எமது இணையத்தளத்தில் பிரசுரித்து, ஆண்டவர் இயேசுவின் நற்செய்தியை எல்லோருக்கும் அறிவிக்க விரும்பினால், info@tamilcatholicnews.com என்ற எமது மின்னஞ்சலுக்கு உங்களுடைய ஆக்கங்களை அனுப்பிவைக்கவும். உங்கள் மறையுரைகள் உலகெங்கும் இருக்கும் அனைத்து தமிழ் உள்ளங்களையும் சென்றடையும்.

இதோ! ஓநாய்களிடையே ஆடுகளை அனுப்புவதைப்போல நான் உங்களை அனுப்புகிறேன். எனவே பாம்புகளைப்போல முன்மதி உடையவர்களாகவும் புறாக்களைப்போலக் கபடு அற்றவர்களாகவும் இருங்கள்.
(மத்தேயு 10:16)

நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள்; தந்தை, மகன், தூய ஆவியார் பெயரால் திருமுழுக்குக் கொடுங்கள். நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்களும் கடைப்பிடிக்கும்படி கற்பியுங்கள். இதோ! உலக முடிவுவரை எந்நாளும் நான் உங்களுடன் இருக்கிறேன்
(மத்தேயு 28:19-20)

நீ அவற்றை உன் பிள்ளைகளின் உள்ளத்தில் பதியுமாறு சொல். உன் வீட்டில் இருக்கும்போதும், உன் வழிப்பயணத்தின் போதும், நீ படுக்கும்போது, எழும்போதும் அவற்றைப் பற்றிப் பேசு.
(இணைச்சட்டம் 6:7)

பொதுக்காலம் 29ம் ஞாயிறு

வரியதை செலுத்தி உரியதை பெறு.

எசாயா 45:1, 4-6
1 தெசலோனிக்கர் 1:1-5
மத்தேயு 22:15-21

வங்கிக்கு சென்ற ஒருவர் அங்குள்ள அலுவலரிடம் எனது சேமிப்பு இப்போது நான் எடுக்கலாமா?. என்றார். அதற்கு அவர் ஃபார்ம் நிரப்பினால் இன்னும் மூன்று நாளில் கிடைத்துவிடும். என்றார். அதற்கு அந்த நபர் நான் வங்கியின் எதிர் வீட்டில் தான் இருக்கிறேன். என் வீடு கூட ரொம்ப தூரம் இல்லையே ஏன் இவ்வளவு நாள் ஆகிறது. என்று கேட்டார். கடுப்பான அதிகாரி சார் ரோட்டுல நடந்து போறிங்க திடீர்னு இறந்துடுறீங்க .சுடுகாடு பக்கத்துல இருக்குதுங்குறதுக்காக உங்கள அங்க கொண்டு போயிடுவாங்களா? வீட்டுக்கு கொண்டு போய் செய்ய வேண்டிய காரியம் எல்லாம் செஞ்சதுக்கு அப்புறமா தான் சுடுகாடுக்கு கொண்டு போவாங்க . அது போல தான் நீங்க ஃபார்ம் நிரப்பினாலும் வங்கிக்கு உள்ளயே நீங்க தங்கி இருந்தாலும் நாங்க செய்ய வேண்டிய சில கடமைகள் காரியங்களை செய்தால் தான் உங்கள் வேலை நடக்கும் என்று கூறினார். பதில் ஏதும் கூற முடியாமல் நடையைக் கட்டினார் வந்தவர்.
நமக்குரியதை நாம் சரியாக பெற நாம் செய்ய வேண்டியதை முறையாக செய்ய வேண்டும். இன்றைய நற்செய்தியில் இயேசு வரி செலுத்துவதைப் பற்றி கூறுகின்றார். வரி என்பது மக்களின் நலனுக்காகவும் மேம்பாட்டிற்காகவும் அரசாங்கம் நம்மிடம் கேட்கும் ஒரு நிதி. வரியை முறையாக செலுத்தி நமக்குரிய உரிமைகளை நாம் பெற்றுக் கொள்ள வேண்டும் என்று வலியுறுத்துகிறார். நற்செய்தி வாசகத்தில் இயேசுவை சோதிக்கும் நோக்குடன் பரிசேயர்கள் குழுமம் அவரிடம் வருகின்றது. அவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு எதிர்பாராத விதமாக பதிலளிக்கிறார் இயேசு. நாணயத்தின் முலமாக அவர்களுக்கு விளக்கமளிக்கின்றார். நாணயம் - பணமாகவும் செயல்பாடாகவும் இரண்டு விதங்களில் இங்கு பார்க்கப்படுகிறது. பரிசேயர்களின் நாணயம் ( பணம்) இயேசுவின் நாணயம் (நன் மதிப்பீடு)
பரிசேயர்களின் நாணயம் :
பரிசேயர்களின் நாணயம் பணம் சார்ந்ததாக இருக்கிறது. அவர்கள் நல்ல நோக்கத்தோடு இயேசுவிடம் வரவில்லை. மாறாக அவர்கள் இயேசுவை தங்களின் பேச்சில் சிக்க வைக்க வேண்டும் என்று நினைத்து வருகின்றனர். அவர்களின் எண்ணத்தில் இல்லாத நாணயம் (நன் மதிப்பீடு) வார்த்தையில் வெளிப்படுகிறது. இயேசுவிடம் வந்து , நீர் உண்மையுள்ளவர், கடவுளின் நெறியை உண்மையுடன் கற்பிப்பவர். ஆள் பார்த்து செயல்படாதவர். என்று வாயினால் புகழ்ந்து பேசுகின்றனர். இதனால் அவரின் நன்மதிப்பை பெறவும், அவரை சுற்றியுள்ள மக்கள் அனைவரும் அவர்களின் குண நலங்களை அறிந்துகொள்ளவும் வழி ஏற்படுத்துகின்றனர். அதாவது பிறர் முன் தங்களைப் பற்றி நல்ல விதமான வெளிப்புறத்தோற்றத்தை உருவாக்க முயற்சிக்கின்றனர். ஏனெனில் பரிசேயர்கள் பற்றியும் ஏரோதியர்கள் பற்றியும் யூத மக்களிடத்தில் நல்ல விதமான எண்ணம் கிடையாது. ஏனெனில் பரிசேயர்கள் யூதமக்கள் அனைவரையும் தங்களை விட கீழானவர்களாகவே கருதினர். இரண்டாவது அவர்களுக்கு பரிசேயர்களாகிய தாங்கள் மட்டுமே அறிவாளிகள் , அரசருக்கு மிகவும் வேண்டப்பட்டவர்கள், மேலும் மக்கள் அதிகம் விரும்பும் இயேசுவையும் ஏற்றுக்கொள்பவர்கள் என்ற கருத்துக்களை வலுப்படுத்துவதற்காகவும் அவர்கள் இயேசுவிடம் இவ்வாறு பேசினார்கள் .
தங்களைப் பற்றியும் தங்களது செயல்பாடுகளைப் பற்றியும் வெளிப்படையாக பேசும் இயேசுவை குறித்து அதிக கோபமும் வருத்தமும் கொண்டிருந்தவர்கள். அவரை நேரடியாக எந்த விதத்திலும் குறை சொல்ல முடியாத நிலையில் அவர்கள் இருந்தனர். எனவே தக்க சமயம் பார்த்து அவருக்கு எதிரான குற்றச்சாட்டை தயார் செய்ய காத்திருந்தனர். சட்டங்கள் பற்றியும் மறைநூல் பற்றியும் இவரிடத்தில் வாதாட இயலாது என்பதை நன்கு அறிந்த அவர்கள், அரசியல் சார்பாக அவரை சிக்க வைக்க நினைத்தனர். இவர்களது எண்ணம் அனைத்தும் சூழ்ச்சியை மையமாகக் கொண்டு இருந்தது. நாமும் பல நேரங்களில் பரிசேயர் போல செயல்படுகிறோம். பிறரை சூழ்ச்சி செய்து ஏமாற்ற வேண்டும், அவரின் நற்பெயருக்கு கலங்கம் விளைவிக்க வேண்டும், நல்லவர் போல செயல்பட்டு கெட்டதுசெய்ய வேண்டும் என்று எண்ணும் போதெல்லாம் நாமும் பரிசேயர்களே . இயேசு கூறுவது போல நாமும் வெளிவேடக்காரர்களே.
இயேசுவின் நாணயம்: ( நன்மதிப்பீடு)
இயேசு மக்களின் நண்பர். எந்நிலையிலும் தன்னிலை மாறாதவர். பரிசேயர்கள் சொன்ன புகழ்ச்சி வார்த்தைகள் அனைத்திற்கும் மயங்காதவர். உள்ளதை உள்ளவாறு சொல்பவர். யாருக்கும் அஞ்சாதவர். சூழ்ச்சியோடு அவர்கள் வருகின்றார்கள் என்பதை உணர்ந்து அதற்கேற்ப செயல்பட்டவர். நாணயம் ஒன்றை அவர்களிடமிருந்தே வாங்கி அதில் பொறிக்கப்பட்ட உருவமும் எழுத்தும் யாருடையது என்று கேட்கின்றார். சீசருக்கு உரியதை சீசருக்கும் கடவுளுக்கு உரியதை கடவுளுக்கும் கொடுங்கள் என்கின்றார். அவர்கள் கேள்வி சீசருக்கு வரி செலுத்துவது முறையா இல்லையா? என்பது மட்டும் தான். கடவுளின் காரியம் பற்றி சிந்தியாதிருந்தவர்களை, அரசனுக்கு மட்டுமல்ல அதைவிட மேலான கடவுளுக்கும் நீங்கள் வரி செலுத்த வேண்டும் என்பதை எடுத்துரைக்கின்றார். கேட்டதிற்கும் அதிகமாக கொடுப்பவர் அவர். அவர் செய்த புதுமைகள் அனைத்திலும் கேட்டவற்றை விட அதிகமாக கொடுத்தவராக தான் அவர் இருந்திருக்கின்றார். கானாவூர் திருமணம் தொடங்கி, அப்பம் பலுகுதல் தொழுநோயாளிகள் நலம் பெறுதல், குருடன் , முடமானவன் என அனைவருக்கும் அவர்கள் கேட்டதை விட நினைத்ததை விட அதிகமாக செய்திருக்கின்ற இறைமகன் அவர். அதனால் தான் பரிசேயர்களின் கேள்விக்கும் மேலான ஒரு பதிலை அவர்களுக்கு கொடுக்கின்றார்.
இதன் மூலமாக அரசன் என்பவன் நிரந்தரமற்ற ஒரு மனிதன். அவன் பதவி அவன் கடமை மக்களை காப்பாற்றுவது. ஆனால் அரசனை விட மேலானவர் இறைவன் அவருக்கு நாம் நம் வரிகளை செலுத்த வேண்டும் என்கின்றார். தன்னை ஆள்வது யார்?தான் யாருடைய அரசாட்சியின் கீழ் இருக்கிறேன் என்பதனையும் தெரிந்து கொண்டவர்களா? பரிசேயர்கள் என்பதை அறிய இந்த நாணயத்தில் இருப்பது சீசர் இது அவருடைய எழுத்து என்பதையும் அவர்கள் வார்த்தையின் மூலமாகவும் கூற வைக்கின்றார். வரி என்பது மக்களை ஆளும் அரசர்கள் மக்களின் மேம்பாட்டிற்காகவும் நன்மைக்காகவும் செயல்கள் பல செய்ய மக்களிடம் இருந்து பெற்றுக்கொள்ளும் ஒரு நிதி. (ஆனால் இப்போது வரி என்பது மக்களின் இரத்தத்தை சுரண்டி எடுக்கப்படும் ஒரு செயலாக மாறி வருகிறது.) மேம்பாடும் இல்லை நலனும் இல்லாமல் வரி செலுத்துவதற்காகவே வாழ வேண்டிய சூழலை நெருங்கி வருகின்றோம். இயேசு கூற விரும்புவது இதுதான். உன்னை குருகிய காலம் ஆளும் அரசனைப் பற்றியும் அவரின் வார்த்தைகளையும் அறிந்துள்ள நீ, உன்னை உன் ஆயுட்காலம் முழுதும் காத்து நடத்தும் ஆண்டவரைப் பற்றியும் அவர்தம் வார்த்தைகள் பற்றியும் நீ அறிந்து இருக்கிறாயா? அதை அறிந்து கொள்ள முயற்சி செய்வோம்.
ஆண்டவருக்கு உரியதை நாம் அவருக்கு செலுத்தும் போது அவர் நமக்குரியதை கட்டாயம் எதிர்பார்ப்பதைவிட அதிகமாக தருவார். குடியாட்சியில் நம்மை ஆள்பவர்களுக்கு நாம் வரிப்பணம் செலுத்தி அவர்களது பணியை செம்மையாக செய்ய, நம்முடைய உரிமைகளை முழுமையாக பெற உதவி செய்கின்றோம். அது போல ஆண்டவர் தம் இறையாட்சியில் நற்செயல்கள் என்னும் வரியை செலுத்தி நமக்குரிய உரிமைகளை நாம் பெறுவோம். முதல் வாசகத்தில் எசாயா இறைவாக்கினர் கூறுவது போல கதிரவன் உதிக்கும் திசை முதல் மறையும் திசை வரை இருப்பவர் ஆண்டவர் ஒருவரே. அவரை அறியாதிருந்தாலும் யாக்கோபு இஸ்ரயேல் மக்களுக்கு காட்டிய இரக்கத்தின் பொருட்டு சைரசு மன்னனுக்கு வலிமை அளித்தவர் ஆண்டவர். நாமும் ஆண்டவருக்கு நேரடியாக நம்முடைய வரிகளை நற்செயல்களை செய்ய முடியாவிட்டாலும், சைரசு மன்னர் போல யாக்கோபு இஸ்ரயேல் மக்கள் என்னும் நம்முடன் வாழும் பிற மக்களுக்கு உதவும் போது நாமும் ஆண்டவரின் வலிமையையும் இரக்கத்தையும் பெறுவோம். எவ்வாறு சீசரின் ஆட்சியின் கீழுள்ள மக்களின் நாணயம் சீசருடைய உருவத்தையும் எழுத்தையும் தாங்கி இருந்ததோ அது போல நாமும் கடவுளின் கீழ் அவரது ஆட்சியின் கீழ் இருக்கும் மக்கள். நமது சாயல் அவரது உருவம் . நம்முடைய நற்செயல்கள் அவரின் எழுத்து. நாணயங்கள் அதில் பொறிக்கப்பட்டுள்ள எண்களின் அடிப்படையில் 1,10,100,1000 என்று மதிக்கப்படுவதுண்டு. நாம் செய்யும் நற்செயல்களின் அடிப்படையில் நாமும் எவ்வளவு உயர்ந்தவர்கள் என்று கணிக்கப்படுகின்றோம். பவுலடியார் இரண்டாம் வாசகத்தில் கூறுவது போல நாம் தேர்ந்து கொள்ளப்பட்டவர்கள். நற்செய்தியை சொல்லளவின்றி தூய ஆவி தரும் வல்லமை மிகுந்த உள்ள உறுதியோடு செய்யும்போது செயல்படுத்தும் போது நாமும் உயர் மதிப்புள்ள நாணயங்களாக மதிக்கப்படுவோம். கடவுளுக்கு உரியதை கடவுளுக்கு செலுத்துவோம். நான் நற்செயல்கள் தான் செய்கிறேன் நினைக்கின்றேன். எனக்கு எதுவும் நல்லது நடக்கவில்லை என்று வருந்த வேண்டாம். எல்லாவற்றிற்கும் ஒரு நேரம் காலம் உண்டு. இயேசு கூட தன்னிடம் சுகம் பெற வந்தவர்களுக்கு அவர்கள் நோய்வாய்ப்பட்டு ஒரு சில மணி துளிகளில் குணமாக்கவில்லை சிலருக்கு ஒரு நாள் (யாயீர் மகள்) சிலருக்கு மூன்று நாள் ( லாசர்) சிலருக்கு 18 ஆண்டுகள் (பெரும்பாடுள்ள பெண்) . நாம் நம் வரியை செலுத்துவோம் நற்செயல் வரும் என நம்புவோம். ஏமாற்றும் கடவுள் அல்ல நம் கடவுள் எதிர்பார்த்ததை விட மேலானவற்றை தரும் கடவுள் . வரியதை செலுத்தி உரியதைப் பெறுவோம் . இறையாசீர் என்றும் நம்மோடும் நம் குடும்பத்திலுள்ள அனைவரோடும் நிறைவாக இருப்பதாக ஆமென்.

ராத விதமாக பதிலளிக்கிறார் இயேசு. நாணயத்தின் முலமாக அவர்களுக்கு விளக்கமளிக்கின்றார். நாணயம் - பணமாகவும் செயல்பாடாகவும் இரண்டு விதங்களில் இங்கு பார்க்கப்படுகிறது. பரிசேயர்களின் நாணயம் ( பணம்) இயேசுவின் நாணயம் (நன் மதிப்பீடு)