இவ் மறையுரையை வழங்குபவர்

Sr.Merina O.S.M
Chiesa parrocchiale san Vittore rho, Milan, Italy
Email: srmerina31@gmail.com

ஞாயிறு மறையுரைகள்

மதிப்பிற்குரிய அருட்பணியாளர்களே, துறவிகளே, அருட் கன்னியரே, உங்கள் ஞாயிறு மறையுரைகளை எமது இணையத்தளத்தில் பிரசுரித்து, ஆண்டவர் இயேசுவின் நற்செய்தியை எல்லோருக்கும் அறிவிக்க விரும்பினால், info@tamilcatholicnews.com என்ற எமது மின்னஞ்சலுக்கு உங்களுடைய ஆக்கங்களை அனுப்பிவைக்கவும். உங்கள் மறையுரைகள் உலகெங்கும் இருக்கும் அனைத்து தமிழ் உள்ளங்களையும் சென்றடையும்.



இதோ! ஓநாய்களிடையே ஆடுகளை அனுப்புவதைப்போல நான் உங்களை அனுப்புகிறேன். எனவே பாம்புகளைப்போல முன்மதி உடையவர்களாகவும் புறாக்களைப்போலக் கபடு அற்றவர்களாகவும் இருங்கள்.
(மத்தேயு 10:16)

நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள்; தந்தை, மகன், தூய ஆவியார் பெயரால் திருமுழுக்குக் கொடுங்கள். நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்களும் கடைப்பிடிக்கும்படி கற்பியுங்கள். இதோ! உலக முடிவுவரை எந்நாளும் நான் உங்களுடன் இருக்கிறேன்
(மத்தேயு 28:19-20)

நீ அவற்றை உன் பிள்ளைகளின் உள்ளத்தில் பதியுமாறு சொல். உன் வீட்டில் இருக்கும்போதும், உன் வழிப்பயணத்தின் போதும், நீ படுக்கும்போது, எழும்போதும் அவற்றைப் பற்றிப் பேசு.
(இணைச்சட்டம் 6:7)









பொதுக்காலம் 19ஆம் ஞாயிறு

வெளியே வா .....

I. 1 அரசர்கள் 19:9, 11-13
II. உரோமையர் 9:1-5
III. மத்தேயு 14:22-33

 
இறையேசுவில் மிகவும் பிரியமான அன்பு உள்ளங்களே பொதுக்காலத்தின் 19ம் ஞாயிற்றில் இருக்கக்கூடிய உங்கள் அனைவரையும் வாழ்த்துகிறேன். இன்றைய நற்செய்தி வாசகத்தில் இயேசு கடல்மீது நடந்து வந்த நிகழ்வினை நாம் வாசிக்க கேட்கின்றோம்.  இன்றைய நாளில் நமது வாழ்க்கையும் இந்த அலைக்கழிக்கப்பட்ட படகு போல் தான் இருக்கின்றது.  திரும்புகிற இடமெல்லாம்  தொற்று வியாதியின் பயமுறுத்தல்கள் இறப்புகள் மக்களின் எதிர்பார்ப்புகள் இல்லாமை, இயலாமை என பல்வேறு  கலக்கங்கள் நமது வாழ்க்கையில் இருக்கின்ற. இயேசு கடல் மீது நடக்கின்றார் இந்த நிகழ்வில் மூன்றுவிதமான நபர்களை அவர்களின் செயல்பாடுகளை வார்த்தைகளை சிந்தித்து தியானிக்க உங்களை அழைக்கின்றேன் முதலாவதாக சீடர்கள் இயேசுவின் வார்த்தையை கேட்டு அவரது வற்புறுத்தலுக்கு இணங்க அவரை தனியாக விட்டுவிட்டு  படகேறி மறுகரைக்கு செல்கின்றனர். அவர் நம்மோடு இல்லை என்ற ஏக்கம் அவர்கள் ஒவ்வொருவருக்கும் இருந்திருக்கும்.  இதுவரை ஒன்றாக இருந்தவர்கள் இன்று இரவு அவர் நம்முடன் இல்லை என்ற வருத்தத்தில் தங்களது பயணத்தை தொடங்கி இருப்பார்கள்.  இரவின் நான்காம் காவல் வேளையில்  படகானது காற்றினால் அலைக்கழிக்கப்பட்டு தத்தளிக்கப்படுகின்றது. ஏறக்குறைய மீனவர்கள் ஆன சீடர்களுக்கு கடல் அலைகள் ஒன்றும் புதிதல்ல.  இதுபோல் தங்களது வாழ்வில் மீன்பிடிக்கச் செல்லும் பொழுது பல்வேறுவிதமான அலைகளினால் அவர்கள் அலைக்கழிக்கப்பட்டு இருப்பார்கள். அதனால் இதிலிருந்து எப்படி மீள்வது என்ற தெளிவு சிறிதளவு இருந்தாலும் கடல்மீது நடந்து வரக்கூடிய ஒரு உருவம் அவர்களது தெளிவை சித்தரிக்கின்றது உயிர் பயத்தை விட உணர்வுப் பயத்தால் ஆட் கொள்ளப்படுகின்றனர். அதன்பின் துணிவோடு இருங்கள் நான்தான் அஞ்சாதீர்கள் என்று இயேசுவின் வார்த்தையை அவரது குரலை உணர்ந்து கொண்டவர்களாய் துணி அடைகின்றனர் துணிவு அடைகின்றனர் அவர் படகில் ஏறியதும் உண்மையில் நீர் இறைமகன் என்று சான்று பகர்கின்றன.
 பேதுரு இவர் சீடர்களில் மூத்தவர். முதல் சீடர் என்ற முறையிலும் சரி வயதில் என்றவர் முறையிலும் சரி.  எனவே எல்லோரையும் விட தான் சிறப்பாக செயல்பட வேண்டும் என்று என்ற ஒரு எண்ணம் உண்டு.  துணிவோடு இருங்கள் நான்தான் அஞ்சாதீர்கள் என்று குரல் இயேசு வுடையது என்பதை அறிந்துகொண்டு ஆண்டவரே நீர் தான் என்றால்  நானும் கடல்மீது நடந்து உம்மிடம் வர ஆணையிடும் என்கின்றார். கடலில் நடக்க கால் வைத்தவர் சாதாரண மனிதன் தன்னால் எப்படி கடலில் நடக்க முடியும் என்று எண்ணத்தால் தடுமாறுகிறார்.  திடீரென்று வீசிய பெருங்காற்று அவரை  அலைக்கழிக்கின்றது  இயேசுவின் கையை பிடித்து படகில் ஏறியதும் அவரது உடன் இருப்பால் நம்பிக்கையில் வலு ப்படுகின்றார்.
 அடுத்ததாக இயேசு இவர் தனது ஆன்மீகத்தை பலப்படுத்த ஆண்டவர் மேல் உள்ள உறவை வலுப்படுத்த மலைமேல் ஏறி தனியாக ஜெபிக்கின்றார். சீடர்களின் கலக்கத்தை அறிந்தவராய் அவர்களை நோக்கி நடந்து செல்கின்றார் ஆணையிடும் என்று பேதுரு கூறியபோதும்  வா என்று அன்போடு அழைக்கின்றார்.  அவரது நம்பிக்கை குறைவை கண்டு கையை நீட்டி அவரை பிடித்து ஏன் நம்பிக்கை குன்றியவனே ஏன் ஐயம் கொண்டாய் கொண்டாய் என்கின்றார் இயேசுவிற்கு பேதுருவின் நம்பிக்கை குறித்து முன்னமே தெரியும் ஆனாலும் அவரது முயற்சிக்கு தடையாக இருக்க அவர் விரும்பவில்லை அவரது முயற்சியை பாராட்டுகின்றார். அவர்  கலங்கியபோது வெறும் வார்த்தைகளால் அவருக்கு ஆறுதல் சொல்லவில்லை மாறாக தனது கையை நீட்டி அவரைப் பிடித்து நம்பிக்கை  குன்றியவனே ஏன் ஐயம் கொண்டாய் என்கின்றார்.
இந்த மூவரின் செயல்பாடுகளில் நாமும் மற்ற சீடர்கள் போல உயிர் பயத்தை விட உணர்வு பயத்தால் பல நேரங்களில் ஆட்கொள்ள படுகிறோம் 
ஆண்டவர் இயேசு நம்மோடு எல்லா நேரமும் இருக்கின்றார்.  நாம் கூப்பிடாத போதும் நமது கலக்கம்,  நமது சூழ்நிலை அறிந்து அவர் நம்மை நோக்கி நடந்து வந்து கொண்டிருக்கின்றார் என்பதை நாம் உளமார நம்ப வேண்டும்.  அவர் எல்லா நேரத்திலும் எல்லா சூழ்நிலையிலும் நம்முடன் நடக்க நம்மை நோக்கி வர ஆற்றல் உள்ளவர் எனவே நாமும் நமது கலக்கமான சூழ்நிலையில் நம்மை சுற்றிலும் குழப்பமும் சந்ததிகளும் நிறைந்த நேரத்திலும், துணிவோடு இருங்கள் நான்தான் அஞ்சாதீர்கள் என்று இயேசு கூறக்கூடிய அந்த வார்த்தைகள் நம் காதில் விழ அதை தெளிவாக கேட்கக் கூடியவர்களாக நாம் இருக்க வேண்டும். பேதுரு நமது நம்பிக்கையின் அளவு பற்றி இயேசுவுக்கு நன்றாக தெரியும்  உன்னால் இதை செய்ய முடியாது என்று ஒருபோதும் அவர் நம்மை தட்டிக் கழிப்பது இல்லை மாறாக நாம் எடுக்கக்கூடிய ஒவ்வொரு முயற்சிகளையும் அவர் பாராட்டி வளர்க்கின்றார் அவர் நம்மை வளர்த்தெடுப்பது போல நாமும் நம்முடன் இருப்பவர்கள் பாராட்டி வளர்க்க வேண்டும். 
நம்முடன் இருப்பவர்களை பாராட்டி வளர்க்க வேண்டும் துன்ப நேரத்தில்ஆண்டவரே என்னை காப்பாற்றும் என்று உரத்த குரல் எழுப்பி அவரின் கையை பற்றி பிடித்துக் கொள்ள அருள் வேண்டுவோம்.  இயேசு தன் உடன் இருப்பவர்களை ஆணையிட்டு அடிபணியச் செய்யாமல் அன்போடு அரவணைத்து வாழ்ந்தவர்.  இன்றைய காலச் சூழலில் பிறரை அன்போடு அரவணைப்போம்.
 இன்றைய முதல் வாசகத்தில் எலியாவை பார்த்து ஆண்டவர், எலியா நீ இங்கே என்ன செய்கிறாய் என்று கேட்கின்றார் இன்று நம் ஒவ்வொருவரையும் பார்த்து இறைவன் கேட்கின்றார் இன்று நீ இங்கே என்ன செய்கிறாய் எலியாவின் புலம்பல் தான் இருந்தது இஸ்ரயேல் மக்கள் உடன்படிக்கையை முறித்து விட்டனர் கட்டளைகளை மீறி விட்டனர் இறைவாக்கினரை கொள்கின்றனர் என்னையும் கொல்ல பார்க்கின்றனர் என்று தன்னுடைய புலம்பலை இறைவன் முன்வைக்கின்றார்.  இந்த புலம்பல்கள் சுழல் காற்றாக நிலநடுக்கம் தீயாக அவரைச் சுற்றி வலம் வருகின்றது.  இவை அனைத்தையும் கேட்டு இறைவன் வெளியே வா என்கின்றார்.  இன்று நாமும் பல்வேறுவிதமான சமூகச் சூழ்நிலைகளால் சமூக சூழ்நிலை இன்னும் சிலர் காற்றால் இறப்பு விகிதம் என்னும் நிலநடுக்கத்தால் அத்தியாவசிய தேவைகளின் குறைவு என்னும் தீயினால் புலம்பிக் கொண்டு இருக்கின்றோம். நமக்கு இறைவன் சொல்வது வெளியே வா.  வீட்டை விட்டு வெளியே வர தடை விதிக்கப்பட்டிருக்கும் கூடிய காலத்தில் இறைவன் நம்மை வெளியே வா என்கின்றார் இயேசுவும் பேதுருவை நோக்கி என்னை நோக்கி  வா என்கின்றார்.  நாம் நமது என்ற உள்ளிருந்து வெளியே வருவோம்.  வா என்று அன்போடு அழைக்கும் இயேசுவை நோக்கி செல்வோம்.  அப்பொழுது நம் உள்ளத்தில் மெல்லிய ஒலி எனும் இறைவனின் ஆற்றல் ஆசீர் நம்மை நிரப்பும்.  இதனால் எங்கிருந்து வந்தாரோ அதே இடத்திற்கு திரும்பிச்செல்ல எலியாவுக்கு வந்து துணிச்சல் போல, இயேசுவின் கைபிடித்து மீண்டும் கடல்மேல் நடந்து படகை அடைந்த பேதுரு போல நமக்கும் துணிச்சலும் துணிவும் வரும்.  நம்மை சூழ்ந்து இருக்கக்கூடிய இந்த சமூகச் சூழலிலும் நம் உள்ளத்தில் எழக்கூடிய அந்த இறை அமைதியை நம்மால் உணர இயலும் நாம் மட்டுமல்ல நம்மால் நமது குடும்பமும் நமது நாடும் இறை ஆசியால் நிரம்பும் இன்றைய திருப்பாடல்களில் கூறப் பட்டிருப்பது போல நல்லதை ஆண்டவர் அருள்வார் நல் விளைவை நம்நாடு நல்கும். இறைவனின் ஆசீரும் அருளும் என்றும் நம்மோடு நம் குடும்பத்தில் உள்ள ஒவ்வொருவருடனும் இருந்து செயல்பட இறைவன் நம்மை நிறைவாக ஆசீர்வதிப்பாராக ஆமென்