இவ் மறையுரையை வழங்குபவர்

Sr.Merina O.S.M
Chiesa parrocchiale san Vittore rho, Milan, Italy
Email: srmerina31@gmail.com

ஞாயிறு மறையுரைகள்

மதிப்பிற்குரிய அருட்பணியாளர்களே, துறவிகளே, அருட் கன்னியரே, உங்கள் ஞாயிறு மறையுரைகளை எமது இணையத்தளத்தில் பிரசுரித்து, ஆண்டவர் இயேசுவின் நற்செய்தியை எல்லோருக்கும் அறிவிக்க விரும்பினால், info@tamilcatholicnews.com என்ற எமது மின்னஞ்சலுக்கு உங்களுடைய ஆக்கங்களை அனுப்பிவைக்கவும். உங்கள் மறையுரைகள் உலகெங்கும் இருக்கும் அனைத்து தமிழ் உள்ளங்களையும் சென்றடையும்.



இதோ! ஓநாய்களிடையே ஆடுகளை அனுப்புவதைப்போல நான் உங்களை அனுப்புகிறேன். எனவே பாம்புகளைப்போல முன்மதி உடையவர்களாகவும் புறாக்களைப்போலக் கபடு அற்றவர்களாகவும் இருங்கள்.
(மத்தேயு 10:16)

நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள்; தந்தை, மகன், தூய ஆவியார் பெயரால் திருமுழுக்குக் கொடுங்கள். நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்களும் கடைப்பிடிக்கும்படி கற்பியுங்கள். இதோ! உலக முடிவுவரை எந்நாளும் நான் உங்களுடன் இருக்கிறேன்
(மத்தேயு 28:19-20)

நீ அவற்றை உன் பிள்ளைகளின் உள்ளத்தில் பதியுமாறு சொல். உன் வீட்டில் இருக்கும்போதும், உன் வழிப்பயணத்தின் போதும், நீ படுக்கும்போது, எழும்போதும் அவற்றைப் பற்றிப் பேசு.
(இணைச்சட்டம் 6:7)









பொதுக்காலம் 5 ம் ஞாயிறு

சரியான அளவில்

I. எசாயா 58:7-10 II. 1 கொரிந்தியர் 2:1-5 III. மத்தேயு 5:13-16
I. எசாயா 58:7-10 II. 1 கொரிந்தியர் 2:1-5 III. மத்தேயு 5:13-16
I. எசாயா 58:7-10 II. 1 கொரிந்தியர்


இறையேசுவில் மிகவும் பிரியமான அன்பு உள்ளங்களே, பொதுக்காலத்தின் 5ஆம் ஞாயிற்றில் இருக்கக்கூடிய நம்மை இறைமகன் இயேசுசரியான அளவில் உப்பாக ஒளியாக வாழ அழைக்கின்றார். இன்றைய வாசகங்கள் அனைத்தும் நம்மை ஆசீர்வதிப்பனவாக, நமக்கு ஆறுதல் தருவனவாக இருக்கின்றன.
முதல் வாசகத்தில் ஏராளமான ஆசீர்வாதங்களை கடவுள் நமக்கு கொடுக்கின்றார். இரண்டாவது வாசகத்தில் புனித பவுலடியார் தனது பழைய நிலைமையை சொல்லி சிலுவையில் அறையப்பட்ட இயேசுவை அறிந்ததால் அவர் பெற்றுக்கொண்ட மகிமையை எடுத்துரைக்கின்றார். இறுதியாக நற்செய்தி வாசகத்தில் இயேசு தனது சீடர்களை உப்பாக ஒளியாக வாழ அழைக்கின்றார். இன்றைய காலகட்ட சீடர்களாகிய நாமும் உப்பாக ஒளியாக வாழ அவரால் இன்றைய நாளில் அழைக்கப்படுகின்றோம்.

உப்பிட்டவரை உள்ளளவும் நினை இதற்கு பல்வேறு விதமான அர்த்தங்கள் உண்டு. உப்பிட்டவரை, உப்பு இவ்விடத்தில் உணவாக கருதப்படுகிறது. உணவு நம் அனைவருக்கும் இன்பம் தரக்கூடியது. நிறைவினைத் தரக்கூடியது. அந்த இன்பத்தினை நிறைவினை நமக்கு தந்தவர்களை, நமது பசியை ஆற்றிய அவர்களை உள்ளத்தில் எப்போதும் மறக்காமல் நினைக்க வேண்டும். இந்த அர்த்தத்திலேயே உப்பிட்டவரை உள்ளளவும் நினை என்பது சிலரது கருத்து. (வாழ்வில் இனிமை சேர்த்த அவர்களை இதயம் உள்ளவரை நினை என்பது) இரண்டாவதாக நாம் திருமணங்களில் பலமுறை கண்டிருப்போம் உணவு பரிமாறுவதற்கு முன் உப்பையும் இலையில் வைப்பார்கள். உப்பு இலையில் வைத்து பரிமாறப்படுவதற்கான காரணம் என்னவென்றால் அனைவருக்கும் உணவு பரிமாறப்பட்டு இருக்கும் போது யாராவது ஒரு சிலர் உப்பில்லை என்று கூறி விருந்தின் தன்மையை மாற்றிவிடக் கூடாது,அல்லது கேட்க வருத்தப்பட்டுக்கொண்டு உப்பில்லா உணவை உண்டு வருந்தக்கூடாது என்பதற்காகவே.


மனிதனுடைய வாழ்வில் மிக முக்கியமானது உணவு. அத்தியாவசிய தேவைகளில் ஒன்று உணவு. அந்த உணவிற்கு சுவையை ஊட்டுவது உப்பு. உப்பு சரியான நிலையில் இருக்க வேண்டும் அதிகமானாலும் கார்ப்பு என்பதை கரிப்பு, உப்பு கரிக்கிறது என்றும், குறைவானால் இதென்ன சப்புன்னு இருக்கு என்று சொல்லிவிடுகிறோம் இவ்வாறாக, அந்த உப்பு இல்லாத உப்பு மிகுதியான உணவினை நாம் நமது வார்த்தைகளால் வெளிப்படுத்துவோம். உப்பு கரிக்கிறது, உப்பில்லாமல் சப்பென்று இருக்கிறது என்று கூறிவிடுகிறோம்.

நமது நாம் உணவிற்கு பயன்படுத்தக்கூடிய பலவிதமான பொருட்களில் அறுசுவைகளில் இரண்டு மூன்று ஒன்றாக இணைந்து செய்யப்படுகின்றன.பொதுவாக நமக்கு பரிமாறப்படும் உணவில் புளிப்பு இல்லை என்றாலோ காரம் இல்லை என்றாலும் அதனை ஈடுகட்ட எந்த பொருளும் அந்நேரத்தில் நமது இலையில் வைக்கப்படுவதில்லை மாறாக உப்பு இல்லை என்றால் உடனடியாக உப்பு இலையில் வைக்கப்பட்டு உணவோடு சேர்க்கப்பட்டு அந்த குறையை உடனடியாக நிவர்த்தி செய்கிறது. உப்பு தனது குறையை உடனடியாக நிவர்த்தி செய்யும் தன்மை பெற்றது. இத்தகைய உப்பு போல நாம் வாழ, இயேசுவின் சீடர்களாகிய நாம் வாழ, இயேசு அழைக்கின்றார். தனது குறையை சுட்டிக் காட்டும் பொழுது அதை நிவர்த்தி செய்யக்கூடியவர்களாக நாம் வாழ சரியானவர்களாக, சரியான சுவை தருபவர்களாக நாம் வாழ அழைக்கின்றார்

அடுத்து ஒளி அதிகமான ஒளி தீபம் என்றும் ஜோதி என்றும் அழைக்கப்படுவதில்லை மாறாக தீப்பந்தம் என்று அழைக்கப்படும். அதுவே மிகவும் குறைவாக எரிந்தால் மங்கிய வெளிச்சம் என்று அழைக்கப்படும். எனவே ஒளியாகிய நமது நற்செயல் நமது வாழ்வில் சுடர்விட்டு எரியச்செய்வோம். வெளிச்சம் தரக்கூடிய ஒளியாக மாற வேண்டும். மங்கியதாகவும் இல்லாமல் அதிக தீப்பந்தம் போலவும் இல்லாமல் சரியான ஒளியாக, சரியான தீபமாக சரியான ஜோதியாக நாம் வாழ வேண்டும் என்று அழைப்பு விடுக்கின்றார். நம்மில் பலர் கொஞ்சம் எக்ஸ்ட்ரா செய்கிறென் பேர்வழி என்று நினைத்து வம்பில் மாட்டிக் கொள்வதும் உண்டு ( என்னையும் சேர்த்து தான் ).

இப்படி நமது வாழ்வு சரியான உப்பாக சரியான ஒளியாக மாறும் பொழுது நமது ஒளி விடியல் போய்விடும் நமக்கு நலமான வாழ்வு துளிர்க்கும். நேர்மை நமக்கு முன் செல்லும். ஆண்டவரின் மாட்சி நம்மைப் பின் தொடரும். இதுவரை மிகுந்த அச்சமும் நடுக்கமும் கொண்டவர்களாக இருந்த நாம், சொல்வன்மை உடையவர்களாக ஞானம் உடையவர்களாக மாறுவோம். இந்த சரியான உப்பாக, சரியான ஒளியாக மாற மனித ஞானம் அவசியமில்லை. மாறாக கடவுளின் வல்லமை மிகவும் தேவை என்பதை இன்றைய நாள் நமக்கு வலியுறுத்துகிறார். நமது வாழ்வின் உப்பை சாரமற்றதாக மாற்றும் வாய்ப்பு கொண்டது இந்த மனிதன் ஞானம். மரக்காலுக்குள் ஒளித்து வைக்கப்பட்ட ஒளியாக நமது வாழ்வை மாற்றக்கூடும். கடவுளின் வல்லமை ஒன்று மட்டுமே சுவையான உப்பாக சுவையூட்டக்கூடிய உப்பாக, ஒளி தரக்கூடிய ஒரு தீபமாக ஜோதியாக நமது வாழ்வை மாற்றும்.

இதுவரை இருந்த நிலை மாறி நம்மிடமுள்ள அனைத்தையும் பிறருடன் பகிர்ந்து கொள்பவர்களாக நாம் மாறமுடியும். முதல் வாசகத்தில் சொல்லப்பட்டிருப்பது போல,நமது உணவை பகிர, வீடு இல்லாதவர்களுக்கு நமது இல்லத்தில் இடம் கொடுக்க, உடையற்றவர்களுக்கு உடையளிக்க நாம் அழைக்கப்படுகின்றோம். சுவையோடு கூடிய உப்பாக ஒளியாக இருக்கும் போது நம் இறைவன் நாம் மன்றாடும் போது நமக்கு பதில் அளிப்பார் நாம் கூக்குரல் இடும் போது இதோ என பதிலிறுப்பார். நாம் செய்ய வேண்டியதெல்லாம் ஒன்றே ஒன்றுதான் நம்மைப் பற்றியும் நம்மைச் சுற்றியுள்ளவர்கள் பற்றியும் நாம் தவறாக நினைத்துக் கொண்டிருக்கக் கூடிய அந்த நுகம் எனும் சுமையை கீழே இறக்கி வைத்தல் அல்லது அதை நம்மிடமிருந்து அகற்றுதல், குற்றம் சாட்டுதல் பொல்லாத பேசுதல் போன்ற தீய பண்புகளை நம்மிடம் இருந்து நீக்கி வாழும் போது இருள் நடுவே நாம் ஒளி என திகழ்வோம். இருண்டு கிடந்த நமது வாழ்க்கை நண்பகல் போல வெளிச்சம் தரும் ஆக மனித ஞானத்தை விட கடவுளின் வல்லமையை நம்புவோம். வாழ்விற்கு இனிமை சேர்க்கக்கூடியவர்களாக, நமது வாழ்விற்கும் பிறரது வாழ்விற்கும் சுவை ஊட்ட கூடியவர்களாக வாழ இறைவனிடம் அருள் வேண்டுவோம். சரியான உப்பாக, தரமான ஒளியாக வாழ இறைவனிடம் அருள் வேண்டுவோம். இறைவனின் அருளும் ஆசீரும் என்றும் நம்மோடும் நம் குடும்பத்தில் உள்ள அனைவருடனும் இருப்பதாக ஆமென்