இவ் மறையுரையை வழங்குபவர்

Sr.Merina O.S.M
Chiesa parrocchiale san Vittore rho, Milan, Italy
Email: srmerina31@gmail.com

ஞாயிறு மறையுரைகள்

மதிப்பிற்குரிய அருட்பணியாளர்களே, துறவிகளே, அருட் கன்னியரே, உங்கள் ஞாயிறு மறையுரைகளை எமது இணையத்தளத்தில் பிரசுரித்து, ஆண்டவர் இயேசுவின் நற்செய்தியை எல்லோருக்கும் அறிவிக்க விரும்பினால், info@tamilcatholicnews.com என்ற எமது மின்னஞ்சலுக்கு உங்களுடைய ஆக்கங்களை அனுப்பிவைக்கவும். உங்கள் மறையுரைகள் உலகெங்கும் இருக்கும் அனைத்து தமிழ் உள்ளங்களையும் சென்றடையும்.



இதோ! ஓநாய்களிடையே ஆடுகளை அனுப்புவதைப்போல நான் உங்களை அனுப்புகிறேன். எனவே பாம்புகளைப்போல முன்மதி உடையவர்களாகவும் புறாக்களைப்போலக் கபடு அற்றவர்களாகவும் இருங்கள்.
(மத்தேயு 10:16)

நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள்; தந்தை, மகன், தூய ஆவியார் பெயரால் திருமுழுக்குக் கொடுங்கள். நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்களும் கடைப்பிடிக்கும்படி கற்பியுங்கள். இதோ! உலக முடிவுவரை எந்நாளும் நான் உங்களுடன் இருக்கிறேன்
(மத்தேயு 28:19-20)

நீ அவற்றை உன் பிள்ளைகளின் உள்ளத்தில் பதியுமாறு சொல். உன் வீட்டில் இருக்கும்போதும், உன் வழிப்பயணத்தின் போதும், நீ படுக்கும்போது, எழும்போதும் அவற்றைப் பற்றிப் பேசு.
(இணைச்சட்டம் 6:7)









திருவருகைக்காலம் மூன்றாம் ஞாயிறு

/>மகிழ்வின் தூய  வழி

I. எசாயா 35:1-6,10
II. யாக்கோபு 5:7-10
III. மத்தேயு 11:2-11



மகிழ்ச்சி என்ற உணர்ச்சி இல்லாவிட்டால் வாழ்க்கை சுமக்க முடியாத பெரிய சுமையாகிவிடும் என்பார் பெர்னாட்ஷா. பிறரை மகிழ்விப்பது தான் மகிழ்ச்சிக்கு வழி என்பர் கற்றறிந்தவர்கள். ஆக மகிழ்ச்சி மனிதனுக்கு மிக முக்கியமானது. இத்தகைய மகிழ்ச்சியை நாம் நிலையாக பெற இன்றைய திருவருகைக்கால மூன்றாம் ஞாயிறு நம்மை அழைக்கின்றது. முதல் வாசகம் மகிழ்வின் தூய வழி எப்படிப்பட்டது என்பதையும்,
இரண்டாம் வாசகம் அவ்வழியை அடைய நாம் எப்படி இருக்க வேண்டும் என்பதையும்,
நற்செய்தி வாசகம் அவ்வழி நடந்தால் நாம் எப்படிபட்டவர்களாவோம் என்பதையும் எடுத்துரைக்கின்றது.

மகிழ்ச்சி மனித வாழ்வில் மிக அவசியமானது. எல்லோரும் மகிழ்வாக வாழவே ஆசைப்படுகின்றனர். ஆனால் மகிழ்ச்சிக்கு முன்னர் ஏராளமான துன்பங்களை அனுபவிக்கின்றனர். ஏனெனில் நம்முடைய மகிழ்ச்சி நம்மை சார்ந்து பெரும்பாலும் இருப்பதில்லை. ஏதாவது ஒரு தேவையை முன்னிட்டே இருக்கின்றது. அது கைக்கு கிடைத்துவிட்டால் சந்தோஷம் மகிழ்ச்சி நிலைத்துவிடும் என்று நினைக்கின்றோம் ஆனால் அவ்வாறு நிலைப்பதில்லை. கிடைக்காதவரை துன்புற்றே வருந்துகின்றோம். வயது தகுதி நிலைமைக்கு ஏற்ப நம்முடைய எதிர்பார்ப்புகள் இருக்கின்றன. இப்படிப்பட்ட நிலையற்ற மகிழ்விற்காக எதிர்பார்த்து ஏமாற்றமடைவதை விட நிலையான உண்மையான மகிழ்ச்சியை அடைந்து நலமுடன் வாழ இன்றைய வாசகங்கள்  நமக்கு அழைப்புவிடுக்கின்றன.

எப்படிப்பட்டது ?
     மகிழ்வின் தூய வழி எப்படிப்பட்டது? வெறுமை நிறைவு அடையும் என்கின்றார் எசாயா இறைவாக்கினர். பாலைநிலம், பாழ்வெளி, பொட்டல் நிலம்,அனைத்தும் அகமகிழும் அக்களிக்கும், மகிழும், பூத்துக்குலுங்கும். எழில், மாட்சி, மேன்மை அதற்கு அளிக்கப்படும் என்கின்றார். இதிலிருந்து பழைய துன்பமான நிலைமை மாறி இன்பமான புதிய நிலைக்கு நீங்கள் அழைத்து செல்லப்படுவீர்கள் என்றுமுள மகிழ்ச்சியால் உங்கள் முகம் நிறைந்திருக்கும். துன்பமும் துயரமும் பறந்தோடும். இதற்கு நாம் செய்ய வேண்டியது தளர்ந்து போன நம் கைகளை திடப்படுத்தவேண்டும். தள்ளாடும் முழங்கால்களை உறுதிப்படுத்த வேண்டும். ஆண்டவரைத் தேடி நட, அவருக்கு பிரியமான பணிகளை கைகளால் செய், என்பதே அவர் நமக்கு தரும் செய்தி.

எப்படி இருக்க வேண்டும்?
 விதைத்து விட்டு அறுவடைக்காகக் காத்திருக்கும் விவசாயி போல பொறுமையோடு காத்திருக்கச் சொல்கின்றார். மேலும் உள்ளத்தை உறுதிப்படுத்துங்கள். பொறுமையோடிருங்கள். முறையிடாதீர்கள். இறைவாக்கினரை உங்களுக்கு முன்மாதிரிகையாகக் கொள்ளுங்கள். என்கின்றார். பெரும்பாலும் நாம் முன்மாதிரிகையாக கொண்டிருப்பது சினிமா பிரபலங்களைத் தான் அதைவிடுத்து வர இருப்பதை நமக்கு சுட்டிக்காட்டும் நல்ல இறைவாக்கினர்களின் வாழ்வை முன்மாதிரிகையாகக் கொள்ளச்சொல்கின்றார்.  ஆக பொறுமையோடு நாம் அவரின் மகிழ்வான வருகைக்காகக் காத்திருந்தால் அம்மகிழ்வு நமக்கு நிலையாகக் கிடைக்கும்.

நாம் எப்படிப்பட்டவர்களாவோம்?
           இயேசு சொல்கின்றார் என்னை தயக்கம் இன்றி ஏற்றுக்கொள்வோர் பேறுபெற்றோர் என்று . நாம் அவரை தயக்கம் இன்றி ஏற்கின்றோமா? அவரது உருவத்தை பார்க்க அவரது குரலைக் கேட்க நாம் ஆற்றல் பெற்றிருக்கின்றோமா? நம் வெளிப்புற உறுப்புக்களான கண் காது கை கால்  அனைத்தும் நலமாய் இருந்தாலும் ஆண்டவரைத் தேடுவதில் அவரை நாடுவதில் நாம் காட்டும் ஈடுபாடு மிகக் குறைவே. இந்நிலைமை மாறி அவரை நாம் முழுமனதோடு தேடும் போது நாமும் விண்ணரசில் இடம் பெறுவோம். நமது மகிழ்ச்சியும் நிறைவடையும் .

ஆக பொறுமையோடும் வேண்டுதல்களோடும் நாம் ஆண்டவர் இயேசுவின் வருகைக்காக காத்திருக்கும் போது அவர் காட்டும் மகிழ்வின் தூய வழியை நாமும் கண்டடைவோம் அவ்வழியில் பயணம் செய்து பேறுபெற்றோர்கள் கூட்டத்தில் நாமும் ஒருவராக இணைவோம். இவ்வாறு வாழ்ந்து மகிழ்வின் தூய வழியை அடைய இறைவன் இயேசு நமக்கு ஆசீர் பொழிந்து காப்பாராக ஆமென்.