இவ் மறையுரையை வழங்குபவர்

Sr.Merina O.S.M
Chiesa parrocchiale san Vittore rho, Milan, Italy
Email: srmerina31@gmail.com

ஞாயிறு மறையுரைகள்

மதிப்பிற்குரிய அருட்பணியாளர்களே, துறவிகளே, அருட் கன்னியரே, உங்கள் ஞாயிறு மறையுரைகளை எமது இணையத்தளத்தில் பிரசுரித்து, ஆண்டவர் இயேசுவின் நற்செய்தியை எல்லோருக்கும் அறிவிக்க விரும்பினால், info@tamilcatholicnews.com என்ற எமது மின்னஞ்சலுக்கு உங்களுடைய ஆக்கங்களை அனுப்பிவைக்கவும். உங்கள் மறையுரைகள் உலகெங்கும் இருக்கும் அனைத்து தமிழ் உள்ளங்களையும் சென்றடையும்.



இதோ! ஓநாய்களிடையே ஆடுகளை அனுப்புவதைப்போல நான் உங்களை அனுப்புகிறேன். எனவே பாம்புகளைப்போல முன்மதி உடையவர்களாகவும் புறாக்களைப்போலக் கபடு அற்றவர்களாகவும் இருங்கள்.
(மத்தேயு 10:16)

நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள்; தந்தை, மகன், தூய ஆவியார் பெயரால் திருமுழுக்குக் கொடுங்கள். நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்களும் கடைப்பிடிக்கும்படி கற்பியுங்கள். இதோ! உலக முடிவுவரை எந்நாளும் நான் உங்களுடன் இருக்கிறேன்
(மத்தேயு 28:19-20)

நீ அவற்றை உன் பிள்ளைகளின் உள்ளத்தில் பதியுமாறு சொல். உன் வீட்டில் இருக்கும்போதும், உன் வழிப்பயணத்தின் போதும், நீ படுக்கும்போது, எழும்போதும் அவற்றைப் பற்றிப் பேசு.
(இணைச்சட்டம் 6:7)









பொதுக்காலம் 6ஆம் ஞாயிறு

மெல்லிய கோடா??? மீளா கோடா???

I. எரேமியா 17:5-8
II. 1 கொரிந்தியர் 15:12,16-20
III. லூக்கா 6:17,20-26


இறையேசுவில் மிகவும் பிரியமான அன்பு உள்ளங்களே பொதுக்காலத்தின் ஆறாம் ஞாயிற்றில் அடியெடுத்து வைத்திருக்கும் நம்மை, இன்றைய வாசகங்கள் அனைத்தும் சிந்தித்து செயல்பட அழைப்பு விடுக்கின்றன. மனிதராய் பிறந்த நாம் அனைவருமே நல்லவர் கெட்டவர் என்ற இரு நிலைகளில் அடங்குவோம். நற்செயல் புரிந்து நன்மைகளை செய்தால் நல்லவர் என்றும் தீய செயல்களில் ஈடுபட்டு தீச்செயல் புரியும் போது கெட்டவர் என்றும் அழைக்கப்படுகின்றோம். இவை இரண்டிற்கும் இடையில் இருப்பது ஒரு கோடே.. அந்த கோட்டினை மெல்லிய கோடாக -மறைந்து போகக்கூடிய கோடாகவும், மீளாக் கோடாக- மறைந்து போகா கோடாகவும் மாற்றுவது நம்மிடமே உள்ளது. இன்றைய வாசகங்களனைத்தும் நமது இத்தகைய நிலையினை நமக்கு தெளிவாக எடுத்துரைத்து, நாம் எந்நிலையில் இருக்கின்றோம் என்பதனை கண்டுணர்ந்து வாழ அழைப்புவிடுக்கின்றன.
இன்றைய முதல் இரண்டாம் வாசங்களும் சரி பதிலுரைப்பாடல் முதல் நற்செய்தி வாசகம் வரை அனைத்தும் இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன.
ஆண்டவரில் நம்பிக்கை வைப்பவர், மனிதரில் நம்பிக்கை வைப்பவர்
நீரோடை அருகில் நடப்பட்டவர், பாலை நில புதர்ச்செடிக்கு ஒப்பானவர்.
நற்பேறு பெற்றோர், நற்பேறு பெறாதோர்.
தூயஆவியால் உருப்பெற்ற கடைசி ஆதாம் இயேசு, களிமண்ணால் உண்டான முதல் ஆதாம்
ஆவியின் இயல்பு ,மனிதரின் இயல்பு
ஏழைகள் , பணக்காரர்
பட்டினியாய் இருப்போர், உண்டு கொழித்திருப்போர்.
அழுது துன்புறுவோர், சிரித்து இன்புறுபவர்.
வெறுத்து ஒதுக்கப்படுவோர், புகழப்படுபவர்.
ஆக இரண்டு விதமான மனிதர்கள் சித்தரிக்கப்படுகிறார்கள்.
இந்த இரண்டில் நாம் யார் என்பதைக் கண்டறிய மூன்று கேள்விகள் உங்கள் நம் முன் வைக்கப்படுகின்றன.
1. தற்போது வெளியான நவீன ரக தொலைதொடர்பு சாதனம் உன்னிடம் இல்லை ... இருப்பினும் நீ மகிழ்ச்சியாக இருக்கின்றாயா???
2. அளவுக்கு அதிகமான பணம் துன்பத்தைத் தரும் என்பதை உணர்கின்றாயா???
3. நீ இப்போது இருக்கும் நிலைக்காக இறைவனுக்கு நாள்தோறும் நன்றி சொல்கின்றாயா??? இந்த மூன்று கேள்விகளுக்கும் பதில் ஆம் இல்லை என்று தெளிவாக பதில் சொல்லுமிடத்து நாம் யார் என்பது தெளிவாக விளங்கும். எப்போதாவது ஒரு சில நேரங்களில் பல நேரங்களில் என்று பிரித்து பதில் கூறுவோமானால் நாம் இரண்டிற்கும் நடுவில் ஒரு மெல்லிய கோட்டினை உருவாக்கிக் கொண்டிருக்கின்றோம் என்பதே உண்மை. இயேசு கூறிய பேறுபெற்றவர்கள் கூட்டத்தில் நாமும் ஒருவராக இருக்க முயல்வோம்.
ஏழைகளைப் போல எளிய மனம் உடையவர்களாக வாழ்ந்து இறையாட்சியை நமதாக்குவோம்.
இறைத்தாகம் பசி உடையவர்களாக திகழ்ந்து, இறையாசீரால் நிறைவு பெறுவோம்.
நன்மை செய்ய துணிந்து வெற்றி பெற்று நிறைவு பெறுவோம். எதுவும் நம்மிடம் இல்லை இருப்பினும் எதிலும் குறைவுமில்லை என்ற மனப்பான்மையுடன் வாழ்வோம். நமது குணங்களுக்கிடையேக் காணப்படும் அந்த மெல்லியக் கோட்டினை இறை நம்பிக்கையால் தகர்த்தெறிவோம். இறையாசீர் என்றும் நம்மோடும் நம் குடும்பத்தாரோடும் இருப்பதாக ஆமென்.