இவ் மறையுரையை வழங்குபவர்

அருட்.சகோ. சி. குழந்தை திரேசா FSAG
பிரின் ஆம் கிம்சே,யேர்மனிஞாயிறு மறையுரைகள்

மதிப்பிற்குரிய அருட்பணியாளர்களே, துறவிகளே, அருட் கன்னியரே, உங்கள் ஞாயிறு மறையுரைகளை எமது இணையத்தளத்தின் ஆன்மீக வலத்தில் பிரசுரித்து, ஆண்டவர் இயேசுவின் நற்செய்தியை எல்லோருக்கும் அறிவிக்க விரும்பினால், info@tamilcatholicnews.com என்ற எமது மின்னஞ்சலுக்கு உங்களுடைய ஆக்கங்களை அனுப்பிவைக்கவும். உங்கள் மறையுரைகள் உலகெங்கும் இருக்கும் அனைத்து தமிழ் உள்ளங்களையும் சென்றடையும்.இதோ! ஓநாய்களிடையே ஆடுகளை அனுப்புவதைப்போல நான் உங்களை அனுப்புகிறேன். எனவே பாம்புகளைப்போல முன்மதி உடையவர்களாகவும் புறாக்களைப்போலக் கபடு அற்றவர்களாகவும் இருங்கள்.
(மத்தேயு 10:16)

நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள்; தந்தை, மகன், தூய ஆவியார் பெயரால் திருமுழுக்குக் கொடுங்கள். நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்களும் கடைப்பிடிக்கும்படி கற்பியுங்கள். இதோ! உலக முடிவுவரை எந்நாளும் நான் உங்களுடன் இருக்கிறேன்
(மத்தேயு 28:19-20)

நீ அவற்றை உன் பிள்ளைகளின் உள்ளத்தில் பதியுமாறு சொல். உன் வீட்டில் இருக்கும்போதும், உன் வழிப்பயணத்தின் போதும், நீ படுக்கும்போது, எழும்போதும் அவற்றைப் பற்றிப் பேசு.
(இணைச்சட்டம் 6:7)

பொதுக்காலம் 19 ஆம் ஞாயிறு

தொடர் பயணம்

1அரசர்கள் 19:4-8
எபேசியர் 4:30 5-2
யோவான் 6:41-51

இன்றைய முதல் வாசகம் நமது வாழ்க்கையை, பயணத்திற்கு ஒப்புமைப்படுத்திக் கொள்ளலாம் என விழிப்புணர்வு கொடுக்கிறது. வாழ்க்கைப்பயணம் பாதுகாப்பானது தான், ஆனால் வளைந்து செல்லும் பாதை சிரமமானது. பாதையில் நிறைவுடன் செல்ல வேண்டும் என்ற எண்ணத்தில் தினமும் முயன்று கொண்டே இருப்பவர்கள் தான் மனிதன். வாழ்க்கை என்னும் பயணத்தில் இன்பம், துன்பம், மேடு, பள்ளம், வளர்ச்சி, தளர்ச்சி, சுறுசுறுப்பு, சோர்வு என்று சுழன்றுக் கொண்டே இருக்கிறது. அதை தான் எலியா வாழ்க்கையில் பார்க்கிறோம். சோர்வு நிறைந்து, மனத்தளர்ச்சியுடன் சூரைச்செடியின் அடியில் அமர்ந்து கொண்டு மன்றாடுகிறார் என வாசிக்க கேட்கிறோம்.
சூரைச்செடி:
சூரைச்செடி என்பது பெரும் பாலும் முட்புதர் காடுகளில் வளரும் செடி. இதன் அமைப்பு ரோசா செடியில் இருக்கும் முட்கள் போல் காட்சியளிக்கும், மேலும் நெல்லிக்காய்களை போன்று கிளையோடு இணைந்து காய்கள் இருக்கும். முந்திய தலைமுறையினர்கள் இதனை பயன்படுத்தினார்கள். ஆனால் இவை அழிந்துக்கொண்டிருக்கும் செடிகளில் ஒன்று.
இவ்வாறு காட்சியளிக்கும் செடியின் அடியில் இருந்து வாழ்க்கையே வேண்டாம் எனது உயிரை எடுத்துக்கொள்ளும் நான் நல்லவன் அல்ல என எதிர்மறையான தாங்க முடியாத முட்களை தனது வாழ்க்கையில் சுமந்துக்கொண்டு இருப்பதை வெளிப்படுத்துகிறார் எலியா, மேலும் சோர்வுற்று அயர்ந்து உறங்கிவிடுகிறார். இதில் குறிக்கப்படும் உறக்கம் முரண்பாட்டு எண்ணங்களையும், சக்தியற்ற நிலையயும் குறிக்கிறது. இந்த எண்ணத்தில் இருந்து விடுதலை கிடைக்க கடவுளது இரக்கம் நிறைந்த அன்பு… வருங்காலம் குறித்த சந்தேகங்களையும், பதற்றத்தையும் உதறித்தள்ளிவிட கடவுளது பராமரிப்பு… சுய அழிவை நோக்கி செல்லும் பாதுகாப்பற்ற நிலையிலிருந்து மனம் அமைதி கொள்ள கடவுளின் அரவணைப்பு….தெளிவாக சிந்திப்பதற்கும் திட்டங்கள் தீட்டி தீர்மானங்கள் எடுப்பதற்கும் கடவுளின் துணை…. இவை அனைத்தும் எலியாவின் அனுபவத்தில் இருந்து பார்க்கிறோம். அவர் இந்த நிகழ்வுக்கு பின் வலிமை அடைத்தார் என்றும் தொடர்ந்து கடவுளோடு இணைந்தார் எனவும் வாசிக்க கேட்கிறோம்.
நமது வாழ்க்கை பயணத்தில் உடலளவாலும், மனத்தளவாலும், சோர்வுறும் போது நமது சுமைதாங்கியாக இருந்து சுகமான வாழ்வு கொடுக்கும் இறைவனிடம் நமது எண்ணங்களை சோர்வுகளை கொடுக்க முன்வருகிறோமா? வலிமை அடைகிறோமா?