இவ் மறையுரையை வழங்குபவர்

அருட்.சகோ. சி. குழந்தை திரேசா FSAG
பிரின் ஆம் கிம்சே,யேர்மனி



ஞாயிறு மறையுரைகள்

மதிப்பிற்குரிய அருட்பணியாளர்களே, துறவிகளே, அருட் கன்னியரே, உங்கள் ஞாயிறு மறையுரைகளை எமது இணையத்தளத்தின் ஆன்மீக வலத்தில் பிரசுரித்து, ஆண்டவர் இயேசுவின் நற்செய்தியை எல்லோருக்கும் அறிவிக்க விரும்பினால், info@tamilcatholicnews.com என்ற எமது மின்னஞ்சலுக்கு உங்களுடைய ஆக்கங்களை அனுப்பிவைக்கவும். உங்கள் மறையுரைகள் உலகெங்கும் இருக்கும் அனைத்து தமிழ் உள்ளங்களையும் சென்றடையும்.



இதோ! ஓநாய்களிடையே ஆடுகளை அனுப்புவதைப்போல நான் உங்களை அனுப்புகிறேன். எனவே பாம்புகளைப்போல முன்மதி உடையவர்களாகவும் புறாக்களைப்போலக் கபடு அற்றவர்களாகவும் இருங்கள்.
(மத்தேயு 10:16)

நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள்; தந்தை, மகன், தூய ஆவியார் பெயரால் திருமுழுக்குக் கொடுங்கள். நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்களும் கடைப்பிடிக்கும்படி கற்பியுங்கள். இதோ! உலக முடிவுவரை எந்நாளும் நான் உங்களுடன் இருக்கிறேன்
(மத்தேயு 28:19-20)

நீ அவற்றை உன் பிள்ளைகளின் உள்ளத்தில் பதியுமாறு சொல். உன் வீட்டில் இருக்கும்போதும், உன் வழிப்பயணத்தின் போதும், நீ படுக்கும்போது, எழும்போதும் அவற்றைப் பற்றிப் பேசு.
(இணைச்சட்டம் 6:7)









தவக்காலம் ஜந்தாம் ஞாயிறு

படைப்பின் அடையாளமாக

எசேக்கியேல் 37:12-14
உரோமையர் 8:8-11
யோவான் 11-1-45

இன்றைய ஜந்தாம் தவக்கால சிந்தனையாக படைப்பு பற்றி தியானிக்கவும், இறைவசனத்தோடு ஒன்றிக்கவும் அழைக்கப்படுகிறோம்.
முதல் வாசகம் -படைப்பு
இரண்டாம் வாசகம் -மறுபடைப்பு
நற்செய்தி வாசகம் –புதுபடைப்பு
முதல் வாசகம் –படைப்பு - உருகொடுத்து உருவாக்க
ஆண்டவராகிய கடவுள் நிலத்தின் மண்ணால் மனிதனை உருவாக்கி, அவன் நாசிகளில் உயிர் மூச்சை ஊத, மனிதன் உயிர் உள்ளவன் ஆனான். (தொநூ 2:7)
உங்களுக்குள் உயிர்மூச்சு புகச் செய்வேன். நீங்களும் உயிர்பெறுவீர்கள். அப்போது நானே ஆண்டவர் என அறிந்து கொள்வீர்கள்.(எசே37:6)
நமது ஆதிபெற்றோரை ஆண்டவராகிய கடவுள் படைத்து அவர்கள் பலுகி பெறுகவேண்டும் என விரும்பினார். ஆனால் இறைவனது கட்டளையை மீறி பாவம் என்னும் சாபத்திற்கு அடிமைகளாக்கப்பட ஆதிபெற்றோரின் வாழ்க்கைமுறை அமைந்த்து. இதன் மூலம் உருகொடுத்த இறைவனுக்கு எதிரான பாவம் உருவானது. இறைவாக்கினர் எசேக்கியல் கூறுவது இஸ்ரேயல் மக்கள் அடிமைகளாக பாபிலோனியாவுக்கு நாடுகடந்தப்பட்டு அங்கு அடிமையாக்கப்பட்டனர். ஆனால் கடவுளின் இரக்கம் மீண்டுமாக எண்பிக்கப்பட்டு அவரால் படைக்கப்பட்ட மனிதனுக்கு மீண்டும் வாழ்வு கொடுக்கிறார். என் ஆவியை உங்கள்மீது பொழிவேன். நீங்களும் உயிர் பெறுவீர்கள். நானும் உங்களை உங்கள் சொந்த நாட்டில் குடியமர்த்துவேன். “ஆண்டவராகிய நான் உரைத்தேன்; நானே இதைச் செய்தேன்” என அப்போது அறிந்து கொள்வீர்கள், என்கிறார் தலைவராகிய ஆண்டவர்.(எசே37:14)
இன்றைய சூழ்நிலையில் திருச்சபை வழியாக நமக்கு மீண்டும் வாழ்வு பெற வாய்ப்பு கொடுக்கப்படுகிறது. நமது பாவத்தை அறிந்துக்கொள்ளவும், அடிமைகளாக வாழ்ந்திடாமல் விசுவாசத்தில், நம்பிக்கையில் வாழ்ந்திட முதல் வாசகம் நமக்கு படைப்பு வழியாக அழைப்புவிடுக்கிறது.
இரண்டாம் வாசகம் -மறுபடைப்பு
கடவுளின் ஆவி உங்களுக்குள் குடிகொண்டிருந்தால், நீங்கள் ஊனியல்பைக் கொண்டிராமல், ஆவிக்குரிய இயல்பைக் கொண்டிருப்பீர்கள். கிறிஸ்துவின் ஆவியைக் கொண்டிராதோர் அவருக்கு உரியோர் அல்ல.பாவத்தின் விளைவாக உங்கள் உடல் செத்ததாயினும், கிறிஸ்து உங்களுள் இருந்தால், நீங்கள் கடவுளுக்கு ஏற்புடையவர்கள் ஆக்கப்படுவீர்கள்; அதன் பயனாகத் தூய ஆவி உங்களுக்குள் உயிராய் இருக்கும். (உரோ 8:9-10)
இங்கு பாவம் சாவோடு நெருங்கியத் தொடர்பு உடையது என்பதை தூய பவுல் சுட்டிக்காட்டுகிறார். இத்தகைய பாவ அடிமைத்தனத்திலிருந்தும் அதனால் வரும் சாவிலிருந்தும் நமக்கு விடுதலை கொடுக்கவே இயேசு இவ்வுலகிற்கு தந்தையால் அனுப்பி வைக்கப்பட்டார். இறந்த இயேசுவை உயிர்த்தெழச் செய்தவரின் ஆவி உங்களுள் குடிகொண்டிருந்தால், கிறிஸ்துவை உயிர்த்தெழச் செய்த அவரே உங்களுள் குடிகொண்டிருக்கும் தம் ஆவியினாலே சாவுக்குரிய உங்கள் உடல்களையும் உயிர் பெறச் செய்வார். (உரோ 8:11)
தூய ஆவி கொடுக்கும் மறுபடைப்பு நம்மில் குடிகொள்ளவும், அதனால் நம் மனசாட்சிக்கு ஏற்றவாழ்வு வாழவும் அழைக்கப்படுகிறோம். மனசாட்சிக்கு ஏற்றவாழ்வு வாழும் போது நாம் கடவுளுக்கு பயந்து, பாவத்தை ஒழிக்க முற்படுகிறோம். அதனால் தூயஆவி நம்மில் கூறும் செய்திகளை கேட்டு, இறைவனால் கொடுக்கப்பட்ட படைப்பிற்கும், மறுபடைப்பிற்கும் உருகொடுப்பவர்களாக வாழ முடியும் என தூய பவுல் அழைக்கிறார்.
நற்செய்தி வாசகம் –புதுபடைப்பு
இன்றைய நற்செய்தி வாசகத்தில் சுட்டிக்காட்டப்படும் இலாசர் மனித குலத்திற்கு அடையாளமாக இருக்கிறார். “கட்டுகளை அவிழ்த்து அவனைப் போகவிடுங்கள்” (யோ11:44) பாவத்தால் கடவுளின் மீது கொண்டுள்ள நம்பிக்கையில் இறந்து வாழுவோருக்கு புதுவாழ்வு கொடுத்து படைப்பை புதுப்பிக்கிறார். இன்றைய நற்செய்தியில் உயிர்ப்பித்தது இலாசரை மட்டுமல்ல; மாறாக நம்பிக்கை கொள்ளாமல் இருந்த தம் சீடர்களையும் தான்.
நம்பிக்கையற்ற கிறிஸ்தவ வாழ்வு செத்த மனிதர்களின் வாழ்வுக்கு சமம். செத்த மனிதர்களின் வாழ்வு உணர்வற்ற, உயிரோட்டமற்ற இல்லாமையை கூறிக்கிறது. கிறிஸ்துவில் புதுபிறப்பு அடைந்து, நாம் நமது கிறிஸ்தவ வாழ்வுக்கு அடையாளம் கொடுக்கும் நபராக திகழ இலாசரைப்போல நம் வாழ்வு அமைய இன்றைய நற்செய்தி நம்மை பார்த்து அழைப்புவிடுக்கிறது.