இவ் மறையுரையை வழங்குபவர்

அருட்.சகோ. சி. குழந்தை திரேசா FSAG
பிரின் ஆம் கிம்சே,யேர்மனிஞாயிறு மறையுரைகள்

மதிப்பிற்குரிய அருட்பணியாளர்களே, துறவிகளே, அருட் கன்னியரே, உங்கள் ஞாயிறு மறையுரைகளை எமது இணையத்தளத்தின் ஆன்மீக வலத்தில் பிரசுரித்து, ஆண்டவர் இயேசுவின் நற்செய்தியை எல்லோருக்கும் அறிவிக்க விரும்பினால், info@tamilcatholicnews.com என்ற எமது மின்னஞ்சலுக்கு உங்களுடைய ஆக்கங்களை அனுப்பிவைக்கவும். உங்கள் மறையுரைகள் உலகெங்கும் இருக்கும் அனைத்து தமிழ் உள்ளங்களையும் சென்றடையும்.இதோ! ஓநாய்களிடையே ஆடுகளை அனுப்புவதைப்போல நான் உங்களை அனுப்புகிறேன். எனவே பாம்புகளைப்போல முன்மதி உடையவர்களாகவும் புறாக்களைப்போலக் கபடு அற்றவர்களாகவும் இருங்கள்.
(மத்தேயு 10:16)

நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள்; தந்தை, மகன், தூய ஆவியார் பெயரால் திருமுழுக்குக் கொடுங்கள். நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்களும் கடைப்பிடிக்கும்படி கற்பியுங்கள். இதோ! உலக முடிவுவரை எந்நாளும் நான் உங்களுடன் இருக்கிறேன்
(மத்தேயு 28:19-20)

நீ அவற்றை உன் பிள்ளைகளின் உள்ளத்தில் பதியுமாறு சொல். உன் வீட்டில் இருக்கும்போதும், உன் வழிப்பயணத்தின் போதும், நீ படுக்கும்போது, எழும்போதும் அவற்றைப் பற்றிப் பேசு.
(இணைச்சட்டம் 6:7)

தவக்காலம் 3ம் ஞாயிறு

தணியாத தாகம்

விடுதலை பயண நூல் 17:3-7
உரோமையர் 5:1-2,5-8
யோவான் 4:5-42

தவக்கால இறைவாசகங்கள் அனைத்தும் நாம் அன்றாடம் பயன்படுத்தும் அத்தியாவசிய தேவைகளை மையப்படுத்துபவைகளாக அமைகிறது. இன்றையவாரம் தாகம் என்பதை நம் கண்முன் சிந்தனைக்கு கொண்டு வரப்படுகிறது.
'தாகம்'' என்பது ஆர்வம், எதிர்பார்ப்பு, ஏக்கம், தவிப்பு போன்ற பல இல்லாத ஒன்றை அடைவதற்கான ஒரு உள் உந்து சக்தியை, ''தாகம்'' என்று பொதுவாக பொருள் கூறலாம்.தாகம் என்பது மனிதருக்கு மனிதர் வேறுபட்டது. இன்றைய நற்செய்தியில் இயேசுவிற்கும், சமாரியப்பெண்ணிற்கும் இருந்த தாகம் சற்று வேறுபட்டதாக இருப்பதை நற்செய்தியாளர் கூறுகிறார்.
இயேசு
பாவியாகிய சமாரியப்பெண் மீட்பு அடைய அவளுக்குள் இருக்கும் தாகத்திற்கு தண்ணீர் கொடுக்கிறார். யோவான் 4:6
உண்மையாய் வாழ ஆர்வத்தைக் கொடுக்கிறார். யோவான் 4:23-24
இயேசுவை அறிந்துக்கொள்ள வாய்ப்பு கொடுக்கிறார். யோவான் 4:25-26
தான் பெற்ற இன்பத்தை மற்றவரோடு பகிர்ந்திட. யோவான் 4:28-29
சமாரியப்பெண்
தாகத்தை தணிப்பதற்கு தன்னிடம் தேவையானவைகள் இருப்பினும் கொடுக்க தாராள மனம் இல்லை. யோவான் 4:9
தாகத்திற்கான காரணிகள் மற்றும் அதை தடுப்பதற்கான உதவிகள் வரும் போது அதன் மீது சந்தேகம் கொள்ளல். யோவான் 4:11-12
பாலைவனத்தில் பயணம் செய்து கொண்டிருந்த ஒருவன் குடிக்கத் தண்ணீர் இல்லாமல் மயங்கி விழும்நிலைக்கு வந்து விட்டான். தாகத்தால் உயிர் போய்விடுமோ என்று நினைத்த போது தூரத்தில் ஒரு குடிசை போல ஏதோ ஒன்று தெரிந்தது.மிகவும் கஷ்டப்பட்டு அவன் அந்த இடத்திற்கு சென்று விட்டான். அங்கே ஒரு கையால் அடித்து இயக்கும் பம்ப்பும், அதன் அருகில் ஒரு ஜக்கில் தண்ணீரும்இருந்தன.ஒரு அட்டையில் யாரோ எழுதி வைத்திருந்தார்கள். “ஜக்கில் உள்ள தண்ணீரை அந்தப் பம்ப் செட்டில் ஊற்றி அடித்தால் தண்ணீர் வரும். குடித்து விட்டு மறுபடியும் ஜக்கில் தண்ணீரை நிரப்பி வைத்து விட்டுச்செல்லவும்.”…அந்தப் பம்ப்போ மிகவும் பழையதாக இருந்தது. அது இயங்குமா, தண்ணீர் வருமா என்பது சந்தேகமாக இருந்தது. அது இயங்கா விட்டால் அந்தத் தண்ணீர் வீணாகி விடும். அதற்குப் பதிலாக அந்தத் தண்ணீரைக் குடித்து விட்டால் தாகமும் தணியும், உயிர் பிழைப்பதற்கு உத்திரவாதமும் உள்ளது. அவன் யோசித்தான். தண்ணீரைக் குடித்து விடுவதே புத்திசாலித்தனம் என்று அறிவு கூறியது.ஒரு வேளை அதில் எழுதி வைத்திருப்பது போல் அந்தப் பம்பு இயங்குவதாக இருந்து அது இயங்கத் தேவையான அந்தத் தண்ணீரைக் குடித்து விட்டால், இனி தன்னைப்போலத் தாகத்தோடு வருபவர்களுக்கு அது பயன்படாமல் போகத் தானே காரணமாகி விடுவோம் என்று மனசாட்சி எச்சரித்தது.அவன் அதற்கு மேல் யோசிக்கவில்லை.ஆனது ஆகட்டும் என்று அந்தப் பம்பில் அந்தத்தண்ணீரை ஊற்றி விட்டு அதை அடித்து இயக்க ஆரம்பித்தான். தண்ணீர் வர ஆரம்பித்தது.தாகம் தீர, வேண்டிய அளவு தண்ணீர் குடித்து விட்டு அந்த ஜக்கில் நீரையும் நிரப்பி விட்டுச் செல்கையில் அவன் மனமும் நிறைந்திருந்தது.
நாம் அவசியமான காலத்தில் அனுபவிப்பதை அடுத்தவருக்கும் அதே போல பயன்படும்படி விட்டுப் போக வேண்டும். எந்த நன்மையும் நம்முடன் நின்றுவிடலாகாது. இந்தக் காலக் கட்டத்தில் பெரும்பாலான மனிதர்களிடம் அந்த நல்லெண்ணம் குறைந்து காணப்படுகிறது. நம் வேலை ஆனால் சரி, அடுத்தவர் எப்படி இருந்தால் நமக்கென்ன என்ற அலட்சியம் பலரிடமும் மேலோங்கி உள்ளது. “யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்” என்ற மனநிலையில் ஒவ்வொருவரும் இருந்தால் இந்த உலகம் இன்பமயமாகி விடுமல்லவா?
சமாரியப்பெண் தனது தாகத்திற்கு தண்ணீர் கிடைத்துவிட்டது போதும்என்று இருந்துவிடவில்லை, மாறாக தாகத்திலிருந்து மற்றவரும் செழுமை பெற விரைந்து சென்றாள் என்று வாசிக்க கேட்டோம். தேவனின் அருள் நம்மில் நிறைந்து என்பதில் சந்தேகம் கொள்ளால் அவரை போல நாமும் மற்றவர்கள் மேல் அன்பும், அக்கறையும் கொள்வோம்.
நமக்குள்ளும் பல தாகங்கள் குறைகள் சமாரியப்பெண் போல் உள்ளன – தவறான கண்ணோட்டம், தவறான பயிர்ச்சிகள், பயம், தெய்வ விசயத்தில் சோம்பல், பயம், சந்தேகம், இன்னும் பல – இவையெல்லாம் நாம் இயேசுவை உண்மையாய் ஆர்வத்தோடு பார்ப்பதற்கு தடையாக இருக்கின்றன. நமக்குள்ளும், பல குறைவான குணங்கள் உள்ளன. கடவுளோடு ஒப்பிடுகையில், நாம் மிகவும் சிறியவர்களே, கடவுளின் மேலான குணங்கள், அவர் பார்ப்பது போன்று நம்மால் பார்க்க இயலாது, நம் குறைவான குணங்களால், இயேசு நம்மை நிராகரித்து விட்டார் என்று சமாரியப்பெண் போல நாமாக சில நேரங்களில் காரணிகள் மற்றும் அதை தடுப்பதற்கான உதவிகள் வரும் போது அதன் மீது சந்தேகம் கொள்கிறோம். மாறாக, நாம் இயேசுவை அறிந்துக்கொள்ள வாய்ப்பு தேட வேண்டும். இயேசுவை முழுதுமாக கண்டுக்கொள்ள வேண்டும் என்று விருப்பத்துடன், எல்லா வகையான வழியிலும், முயற்சி செய்து, எல்லா தடைகளையும் மீறி அவரிடம் செல்ல வேண்டும். கடவுளோடு நாம் இணைவதற்கு மிகவும் உதவிடும் செயல், பாவசங்கீர்த்தனம். அதன் மூலம், நம் பாவங்கள் அனைத்தும் மன்னிக்கப்பட்டு, கிறிஸ்துவின் நல்லுரவு நமக்கு கொடுக்கப்படுகிறது என்பதில் மனம் தளராமல் இருக்கவேண்டும். இந்த மூன்றாம் வார தவக்காலத்தில் இயேசுவின் உடனிருப்பை உணர்ந்து, அனைத்து வகையான பாவத்தில் இருந்தும் மீட்பு உண்டு என சமாரியபெண் போன்று நம்பிக்கை கொண்டு மற்றவருக்கும் நம்பிக்கையின் நபராக திகழ முற்படுவோம். ஆமென்.