இவ் மறையுரையை வழங்குபவர்

அருட்.சகோ. சி. குழந்தை திரேசா FSAG
பிரின் ஆம் கிம்சே,யேர்மனிஞாயிறு மறையுரைகள்

மதிப்பிற்குரிய அருட்பணியாளர்களே, துறவிகளே, அருட் கன்னியரே, உங்கள் ஞாயிறு மறையுரைகளை எமது இணையத்தளத்தின் ஆன்மீக வலத்தில் பிரசுரித்து, ஆண்டவர் இயேசுவின் நற்செய்தியை எல்லோருக்கும் அறிவிக்க விரும்பினால், info@tamilcatholicnews.com என்ற எமது மின்னஞ்சலுக்கு உங்களுடைய ஆக்கங்களை அனுப்பிவைக்கவும். உங்கள் மறையுரைகள் உலகெங்கும் இருக்கும் அனைத்து தமிழ் உள்ளங்களையும் சென்றடையும்.இதோ! ஓநாய்களிடையே ஆடுகளை அனுப்புவதைப்போல நான் உங்களை அனுப்புகிறேன். எனவே பாம்புகளைப்போல முன்மதி உடையவர்களாகவும் புறாக்களைப்போலக் கபடு அற்றவர்களாகவும் இருங்கள்.
(மத்தேயு 10:16)

நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள்; தந்தை, மகன், தூய ஆவியார் பெயரால் திருமுழுக்குக் கொடுங்கள். நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்களும் கடைப்பிடிக்கும்படி கற்பியுங்கள். இதோ! உலக முடிவுவரை எந்நாளும் நான் உங்களுடன் இருக்கிறேன்
(மத்தேயு 28:19-20)

நீ அவற்றை உன் பிள்ளைகளின் உள்ளத்தில் பதியுமாறு சொல். உன் வீட்டில் இருக்கும்போதும், உன் வழிப்பயணத்தின் போதும், நீ படுக்கும்போது, எழும்போதும் அவற்றைப் பற்றிப் பேசு.
(இணைச்சட்டம் 6:7)

தவக்காலம் முதல் ஞாயிறு

இறைவன் அருகில் நானிருப்பேன்

தொடக்கநூல் 2:7-9;3:1-7
உரோமையர் 5:12-19
மத்தேயு 4:1-11

பழைய ஏற்பாட்டிலும் புதிய ஏற்பாட்டிலும் அலகையினால் நம் ஆதிப்பெற்றோர், இறைமகன் இயேசு சோதனைக்கு உட்பட்டதை இன்றைய தவக்கால முதல் ஞாயிறு நம் கண்முன் வைக்கின்றது.
பாவம் என்றால் என்ன?
இறைவன் நமக்கு அளித்த சாயலை அழித்தல் பாவம் என பொருள் கொள்ளலாம். ஏனெனில் இறைவன் அவர் சாயலாக நம்மை படைத்திருக்கிறார்.
ஒரு மனிதன் பாவம் செய்வதற்கு தூண்டும் சக்தியாக எதை பயன்படுத்துகிறான் என இன்றைய தொடக்கநூல் 3:6 ஆம் வசனம் தெளிவாக கூறுகிறது
உண்பதற்குச் சுவையானதாகவும்
கண்களுக்குக் களிப்பூட்டுவதாகவும்
அறிவு பெறுவதற்கு விரும்பத்தக்கதாகவும்
ஒரு மனிதன் பாவம் செய்த பிறகு அவனில் ஏற்படும் தாக்கங்களைப்பற்றியும் தொடக்கநூல் 3:7 ஆம் வசனம் இவ்வாறாக கூறுகிறது
கண்களும் திறக்கப்பட்டன
மறைக்க முற்படுகின்றன
பயமான உணர்வுகள் தோன்றுகின்றன
அடுத்தவர்கள் மீது பழி போடுகின்றனர்
முதல் பாவம் அல்லது ஏமாற்றம் தொடக்கநூல் 3:1
பாவம் செய்வதால் மடமையும் இறையுறவு முறிவும் காணப்படும். எவ்வாறனில்
ஆதாம் -கடவுள் மேல் பழிபோடுகிறார் நீர் கொடுத்த இந்த பெண் என்று......
ஏவாள் -கடவுள் படைத்த இயற்கை மேல் பழிபோடுகிறாள் எனக்கு பாம்பு கொடுத்தது என்று.....
இந்த பேதமை அல்லது அறியாமையில் இருந்து கடவுள், மனிதர், இயற்கை என ஒற்றுமையின் உறவில், பாவம் என்னும் நிலை உருவெடுக்கிறது.
இவ்வுலகம் வளர்ந்து வரும் காலத்திற்கு ஏற்ப நம்மை சோதனைக்கு உட்படுத்துகிறது எப்படியென்றால்
சுவையூட்டுபவை
சுவையூட்டும் உடனடி தயாரிப்பு நிறைந்த தரமற்ற உணவு பொருட்கள், அதன் மூலம் குடும்பத்தில் ஆரோக்கியமற்றத்தன்மை உருவாகுதல், உணவு தயாரிக்கும் நேரம் குறைவு என்று சிறுசேமிப்பு குடும்பத்தில் மறைந்து போகுதல், இதன் மூலம் அலகை நம் வீட்டிற்குள் நுழைந்து குடும்பத்தில் குழப்பத்தை தோற்றுவிக்கிறான்.
களிப்பூட்டுபவை
தேவையின் பொருட்டு பொருட்கள் வாங்குகின்றோம். ஆனால் நுகர்வு கலாச்சர நிறுவனங்கள் அடுத்ததடுது புதிய இயந்திரங்கள், கருவிகள் என அறிமுகப்படுத்துகின்றன. நமக்கு அந்த இயந்திரங்கள், கருவிகளின் தேவைகள் குறைவாக இருப்பினும், சமுதாயத்தில் வசதிநிறைந்தவர்கள் என காட்டிக்கொள்வதற்காக பொருட்களை வாங்கிகொள்ளுதல், இதன் மூலம் குறைந்த வருவாயில் அதிகமான செலவு, இதன் மூலம் குடும்பத்தில் ஒருவரை ஒருவர் புரிந்துக்கொள்ளவும், ஒருவர் மற்றவர் மீது குற்றம் கூறவும்.......இவ்வாறாக அலகை நம் வீட்டிற்குள் நுழைந்து குழப்பத்தை தோற்றுவிக்கிறான்.
அறிவூட்டுபவை
குழந்தைகளின் அறிவுக்கு, திறமைகளுக்கு ஏற்ற விதத்தில் அல்லாமல் அதிகமாக படிப்பதற்கு கட்டாயப்படுத்தும் போது தவறான வழியில் திருப்தியையும், நிறைவையும் இளம் உள்ளங்கள் தேடிச்செல்ல வாய்ப்பை பல நேரங்களில் தெரிந்தும்,தெரியாமலும் அலகை மகிழ்ச்சியடையும் படி செய்துவிடுகிறோம். பின்பு காலம் கடந்த பின்பு மனதில் நிறைவை காணாமல் எங்கே தொலைத்தோம் என தேடிச்செல்கிறோம். ஆகவே அலகை நம்மில், நமது குடும்பத்தில், வாழும் சமுதாயத்தில் நுழையாமல் இருக்க நம்மால் ஆன சிறிய் வழிகளை கடைப்பிடிக்க முற்படுவோம். ஆமென்.
இறைமகன் இயேசுவையும் அலகை சோதிக்கிறான்
கற்கள் அப்பமாகும்படிக் கட்டளையிடும் மத் 4:3
நீர் இறைமகன் என்றால் கீழே குதியும் மத் 4:6
நீர் நெடுஞ்சாண் கிடையாக விழுந்து என்னை வணங்கினால், இவை அனைத்தையும் உமக்குத் தருவேன் மத் 4:9
இவ்வுலகத்தை படைத்த பரமனிடம் கேட்கும் கேள்விகள் அல்ல. இருப்பினும் அலகை சோதிக்கிறான். இயேசுவின் பணிவாழ்வில் அலகையினால் சோதனை வருகின்றது. இயேசுவிற்கு தந்தையால் கொடுக்கப்பட்ட மீட்பு பணிக்கு சவாலாக அலகை சோதிக்கிறான். இயேசு தனது வல்லசெயல்களை செய்யவில்லை, மாறாக மீட்பு பணிக்கு சவாலாக வருபவற்றை சோதனைகளை இறைவார்த்தையால் வெல்ல இயலும் என எண்பிக்கிறார். இறைத்தந்தையின் வழியாக கொடுக்கப்பட்ட மீட்பு பணியில் இறுதிவரை சென்றிட கடினமான சிலுவையை தனது வாழ்வில் இலட்சியமாக கொண்டு தன் தந்தைக்கு கீழ்ப்படுகிறார். ஒருவரின் கீழ்ப்படிதலால் பலர் கடவுளுக்கு ஏற்புடையவர்கள் ஆவார்கள். (உரோமையர் 5:19)
நமது வாழ்வில் வரும் மனம், உடல், மற்றும் உள்ளம் சார்ந்த சோதனைகளை கடந்து வர இறைமகன் இயேசு கற்றுத்தருபவை இறைவார்த்தை, தொடர்செபம். இறைவார்த்தை மூலமாகவும்,தொடர்செபம் மூலமாகவும், வென்றிட முடியும் என தனது வாழ்க்கை மூலம் வாழ்ந்து காட்டினார். நாமும் அனுதினம் விவிலியத்தை வாசிக்க நம்மையே பழக்கப்படுத்துவோம். ஆமென்.