இவ் மறையுரையை வழங்குபவர்

அருட்.சகோ. சி. குழந்தை திரேசா FSAG
பிரின் ஆம் கிம்சே,யேர்மனிஞாயிறு மறையுரைகள்

மதிப்பிற்குரிய அருட்பணியாளர்களே, துறவிகளே, அருட் கன்னியரே, உங்கள் ஞாயிறு மறையுரைகளை எமது இணையத்தளத்தின் ஆன்மீக வலத்தில் பிரசுரித்து, ஆண்டவர் இயேசுவின் நற்செய்தியை எல்லோருக்கும் அறிவிக்க விரும்பினால், info@tamilcatholicnews.com என்ற எமது மின்னஞ்சலுக்கு உங்களுடைய ஆக்கங்களை அனுப்பிவைக்கவும். உங்கள் மறையுரைகள் உலகெங்கும் இருக்கும் அனைத்து தமிழ் உள்ளங்களையும் சென்றடையும்.இதோ! ஓநாய்களிடையே ஆடுகளை அனுப்புவதைப்போல நான் உங்களை அனுப்புகிறேன். எனவே பாம்புகளைப்போல முன்மதி உடையவர்களாகவும் புறாக்களைப்போலக் கபடு அற்றவர்களாகவும் இருங்கள்.
(மத்தேயு 10:16)

நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள்; தந்தை, மகன், தூய ஆவியார் பெயரால் திருமுழுக்குக் கொடுங்கள். நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்களும் கடைப்பிடிக்கும்படி கற்பியுங்கள். இதோ! உலக முடிவுவரை எந்நாளும் நான் உங்களுடன் இருக்கிறேன்
(மத்தேயு 28:19-20)

நீ அவற்றை உன் பிள்ளைகளின் உள்ளத்தில் பதியுமாறு சொல். உன் வீட்டில் இருக்கும்போதும், உன் வழிப்பயணத்தின் போதும், நீ படுக்கும்போது, எழும்போதும் அவற்றைப் பற்றிப் பேசு.
(இணைச்சட்டம் 6:7)

ஆண்டின் 7ம் ஞாயிறு

பகைவரிடம் அன்பு கூருங்கள்

லேவியர் 19:1-2.17-18
1கொரிந்தியர் 3:16-23
மத்தேயு 5:38-48

அன்பு தான் நம்முடைய இயல்புநிலை, இதற்கு எதிர்மறை தான் பகைமை. நல்லவனாக நடந்து கொள்ள நமக்கு கிடைக்கும் வாய்ப்பு தான் அன்பு. நாம் அமைதியை உருவாக்க நம் அன்பின் ஆனந்தத்திற்கு எப்போதும் ஒத்துழைக்கவும், நமது மனசாட்சிக்கு ஏற்ற வாழ்க்கை வாழவுமே இன்றைய 7ம் ஞாயிறு அழைக்கிறது.
அன்பு
அன்பு பொறுமையுள்ளது; நன்மை செய்யும்; பொறாமைப்படாது; தற்புகழ்ச்சி கொள்ளாது; இறுமாப்பு அடையாது.அன்பு இழிவானதைச் செய்யாது; தன்னலம் நாடாது; எரிச்சலுக்கு இடம் கொடாது; தீங்கு நினையாது.அன்பு தீவினையில் மகிழ்வுறாது; மாறாக உண்மையில் அது மகிழும்.அன்பு அனைத்தையும் பொறுத்துக் கொள்ளும்; அனைத்தையும் நம்பும்; அனைத்தையும் எதிர்நோக்கி இருக்கும்; அனைத்திலும் மனஉறுதியாய் இருக்கும்.இறைவாக்கு உரைக்கும் கொடை ஒழிந்துபோம்; பரவசப்பேச்சு பேசும் கொடையும் ஓய்ந்துபோம்; அறிவும் அழிந்துபோம். ஆனால் அன்பு ஒருபோதும் அழியாது. (1கொரி4-5 )
என் தந்தை என் மீது அன்பு கொண்டுள்ளது போல நானும் உங்கள்மீது அன்பு கொண்டுள்ளேன். என் அன்பில் நிலைத்திருங்கள்.(யோவான் 15:1 )இவை நம் உணர்வில் இருக்கும் போது இறைவனின் விருப்பத்தயையும், அற்புதமான உறவுகளையும் நாம் இவ்வுலகில் உருக்கமுடியும்.
பகைமை
பகைமை என்பது முதலில் நம்மில் தோற்றும் எதிர்மறை உணர்வுகளையும், மன அழுத்தத்தையும், நான் என்ற ஆணவத்ததையும் தொரியப்படுத்தும் ஒரு எச்சரிக்கை ஒலி. இந்த ஒலியை மட்டும் கேட்போமேயானால் அன்புக்கு எதிராக தோற்றும் பகைமையை நம்மில் உருவாக்குகிறோம். சன.02,2017. திருத்தந்தை பிரான்சிஸ் , மறைக்கல்வி, மூவேளை உரையில் பகைமை, வன்முறைக்கு மறுப்பு, ஒப்புரவுக்கு ஆம் துருக்கியின் இஸ்தான்புல் நகரில் இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதல் குறித்து தன் ஆழ்ந்த கவலையை வெளியிட்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், பகமைக்கும் வன்முறைக்கும் மறுப்புச் சொல்லி, சகோதரத்துவத்துக்கும் ஒப்புரவுக்கும் ஆம் சொல்வோம் என அழைப்பு விடுத்தார்.
மாவீரன் அலெக்சாண்டரின் தந்தை பிலிப் சிறந்த அறிவாற்றல் மிக்கவர். பலம் பொருந்திய மன்னராக ஆட்சி செய்து வந்தார். அவரது பகுதிக்குட்பட்ட ஜமீன்தார் ஒருவர் மன்னரைப்பற்றி எப்போதும் குறைகூறிக் கொண்டிருப்பார். இது மன்னரின் காதிற்கு எட்டியது. அந்த நாட்டு வழக்கப்படி அது தேசவிரோதம். அந்த ஜமீன்தார் ஆர்க்கீடியஸ் இருக்கும் பகுதிக்கு சென்ற மன்னர் தன் அதிகாரிகளிடம் அந்த ஆர்க்கீடியஸை அழைத்து வரும்படி கூறினார். தன் மந்திரியிடம் ஆர்க்கீடியஸ் என்னிடம் கொண்டுள்ள பகைமைக்கு இன்று முடிவு கட்டுகின்றேன் என்றார்.
விபரம் அறிந்த ஆர்க்கீடியஸ் மிகவும் பதற்றம் அடைந்தார். தன் ராஜதுரோகச் செயலுக்கு மரணதண்டனைதான் கிடைக்கும் என்ற கலவரத்தில் புறப்பட்டுச் சென்றார். அவர் வந்ததும் மன்னர், எல்லா அதிகாரிகளையும் வெளியில் அனுப்பி விட்டு தனிமையில் சந்தித்தார்.
மன்னரின் தண்டனையை நிறைவேற்ற அதிகாரிகள் வெளியில் தயாராக காத்திருந்தனர். சிறுது நேரம் கழித்ததும் மன்னரும் ஆர்க்கீடியஸும் கைக்கோர்த்துக் கொண்டு புன்முறுவலுடன் வெளியில் வந்தனர். எல்லோருக்கும் அதிர்ச்சி. மந்திரி, ‘மன்னா பகைவனை ஒழித்துக் கட்டுவேன் என்றீர்கள்’ என ஆச்சரியத்தின் விழிம்பில் கேட்டார்.
அதற்கு மன்னர், ‘ஆம், பகைவனை ஒழித்து கட்டிவிட்டு அவனிடத்தில் ஒரு புதிய நண்பனை உருவாக்கிவிட்டேன். ஆர்க்கீடியஸ் நல்ல மனிதர், என்னைப் பற்றி தவறாக புரிந்து கொண்டிருந்துள்ளார். நேரில் பேசியதில் அது புரிந்து எங்களிடையே இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கியது. என்னைச் சரியாக புரிந்து கொண்டதால் அவர் என்மீது கொண்டிருந்த பகை உணர்வுகள் நீங்கி நட்பு மலர்ந்ததுள்ளது’ என்றார்.
பகைவனை அழிப்பது என்றால் பகைமையை அழிப்பது என்றுதான் அர்த்தம், பகைவனைக் கொல்வதல்ல! அப்படிசெய்தால் பகைமை அழியாது வம்ச வம்சமாகத் தொடரும் என்றார்.
பகைமை என்பது ஒரு புற்றுநோய் போலாகும். ஆனால் இந்த புற்றுநோயை எளிதாகக் குணப்படுத்த முடியும் என இறைமகன் யேசு நமக்கு ஆரோக்கியத்தையும், நம்பிக்கையும் கொடுக்கும் மருத்துவராக இருக்கிறார். அதையை என் வாழ்வில் வாழ்ந்து காட்டினேன் எனவும் கூறுகிறார். இதற்கு உதவியாக அமைவது செபம். இறைமகன் யேசு தனது தந்தையை நோக்கி எல்லா நேரத்திலும் செபித்தார் என விவிலியத்தில் வாசிக்க கேட்கிறோம். அதாவது மலைக்கு சென்று செபித்தார் என்றும், நோயாளிகளை குணப்படுத்தும் முன்பு செபித்தார் என்றும், நன்றி கூறும் போது செபித்தார் என்றும், துன்பத்தில் / இவர்கள் செய்வது என்னவென்று தெரியாது செய்கிறார்கள் என்று மன்னிக்கவேண்டுகிறார். இதையை நமக்கு கற்றுக்கொடுக்கிறார். உங்கள் பகைவரிடமும் அன்பு கூருங்கள்; உங்களைத் துன்புறுத்துவோருக்காக இறைவனிடம் வேண்டுங்கள். மத்தேயு 5:44
செபிக்கும் போது பகைமை அழித்துவிடும் நம்மில் ஆரோக்கியம் தோன்றும் என்று மறுத்துவராகிய இயேசு கூறுகிறார். பகைமை நம் மனதில் அழுத்தத்தை, அகங்காரத்தை உருவாக்கும் போதெல்லாம் மனவல்லிய செபத்தை நம்மில் ஒரு சிறிய மருந்தா எடுக்க பழக்கப்படுத்தினால், எளிதில் நாம் அன்பை பெற்று, அமைதியை உருவாக்க முடியும் என இன்றைய 7ம் ஞாயிறு நமக்கு உறுதியளிக்கிறது. ஆமென்.