இவ் மறையுரையை வழங்குபவர்

அருட்.சகோ. சி. குழந்தை திரேசா FSAG
பிரின் ஆம் கிம்சே,யேர்மனிஞாயிறு மறையுரைகள்

மதிப்பிற்குரிய அருட்பணியாளர்களே, துறவிகளே, அருட் கன்னியரே, உங்கள் ஞாயிறு மறையுரைகளை எமது இணையத்தளத்தின் ஆன்மீக வலத்தில் பிரசுரித்து, ஆண்டவர் இயேசுவின் நற்செய்தியை எல்லோருக்கும் அறிவிக்க விரும்பினால், info@tamilcatholicnews.com என்ற எமது மின்னஞ்சலுக்கு உங்களுடைய ஆக்கங்களை அனுப்பிவைக்கவும். உங்கள் மறையுரைகள் உலகெங்கும் இருக்கும் அனைத்து தமிழ் உள்ளங்களையும் சென்றடையும்.இதோ! ஓநாய்களிடையே ஆடுகளை அனுப்புவதைப்போல நான் உங்களை அனுப்புகிறேன். எனவே பாம்புகளைப்போல முன்மதி உடையவர்களாகவும் புறாக்களைப்போலக் கபடு அற்றவர்களாகவும் இருங்கள்.
(மத்தேயு 10:16)

நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள்; தந்தை, மகன், தூய ஆவியார் பெயரால் திருமுழுக்குக் கொடுங்கள். நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்களும் கடைப்பிடிக்கும்படி கற்பியுங்கள். இதோ! உலக முடிவுவரை எந்நாளும் நான் உங்களுடன் இருக்கிறேன்
(மத்தேயு 28:19-20)

நீ அவற்றை உன் பிள்ளைகளின் உள்ளத்தில் பதியுமாறு சொல். உன் வீட்டில் இருக்கும்போதும், உன் வழிப்பயணத்தின் போதும், நீ படுக்கும்போது, எழும்போதும் அவற்றைப் பற்றிப் பேசு.
(இணைச்சட்டம் 6:7)

ஆண்டின் 5ம் ஞாயிறு

உப்பாய் ஒளியாய் இருக்கிறார்கள்

ஏசா 58 :7-10
1கொரி 2: 1-5
மத் 5 :13-16

உப்பு, உப்பின் தன்மை, பயன்கள்
< உணவிற்கு சுவை கூட்ட உப்பு பயன்படுகிறது. இறந்த மீன்களை கருவாடாகப் பதப்படுத்த, விலங்குகளின் தோல்கள் கெடாமல் பதனிட உப்பு பயன்படுத்தப்படுகிறது. பனிக்கட்டியுடன் உப்பைக் கலந்தால் மேலும் பனிக்கட்டி குளிர்ச்சி அடையும் எனவே குளிர் இயந்திரங்களில் உப்பு பயன்படுத்தப்படுகிறது. ஊறுகாய் போன்ற உணவுப் பொருட்கள் கெடாமல் இருக்க உப்பு உதவுகிறாது. வேதியியல் பொருட்கள் தயாரிக்கவும் மருந்துகள் செய்யவும் உப்பு தேவைப்படுகிறது. நமக்குச் சாதாரணமாக உண்டாகும் பல்வலி, தொண்டைவலி நீங்க உப்பு நீரால் வாய்க் கொப்பளித்தல் போதும் வலி நீங்கிவிடும். வயல்களில் வளரும் பயிர்களுக்குத் தேவையான இரசாயன உரத் தயாரிப்பிற்கும் உப்பு தேவைப்படுகிறது. எளிதில் கரையக் கூடியது மேலும் இருக்கும் இடம் தெரியாமல் உருகலைந்து செல்வது, உப்பின் அளவைஅதிகரித்தாலோ, குறைத்தாலோ அது வெளியில் கொட்டப்பட்டு மனிதரால் மிதிபடும்; வேறு ஒன்றுக்கும் உதவாது. மனித உணவின் இன்றியமையாதப் பகுதியாக அமைந்திருப்பது உப்பு ஆகும். உப்பு மனித அடிப்படையான சுவைகளில் ஒன்று.. உப்பு வெண்மை நிறம் கொண்டது. கல் உப்பு, தூள் உப்பு, அமில உப்பு, கார உப்பு, இரட்டை உப்பு என பலவாறு அழைக்கின்றோம்.
ஆனால் இன்றைய நற்செய்தியில் இறைமகன் யேசு தம் சீடரை பார்த்து கூறியது, நீங்கள் மண்ணுலகிற்கு உப்பாய் இருக்கிறீர்கள் என்றார். இறைமகன் அடிச்சுவட்டை பின் தொடந்தவர்கள் சீடர்கள், அதே மரபு வழியில் நாமும் வருகிறோம், நம்மையும் பார்த்து கூறுகிறார் நீங்கள் மண்ணுலகிற்கு உப்பாய் இருக்கிறீர்கள் என்கிறார். உப்பு என்பது மனிதனை குறிப்பதாக இங்கு உருவகப்படுத்தப்படுகிறது. உப்பின் தன்மைகள் போல் நம்மிடமும் மற்றவருக்காக விட்டுக்கொடுத்தல், பிறருக்கு உதவுதல், பிறரை பாதுக்காத்தல், எதையும் எதிர்ப்பார்க்காமல் தன்னையே பிறருக்காக கொடுத்தல், உப்பு இயேசுவின் வாழ்க்கையை எடுத்துக்கூறும் பொருளாக இருக்கிறது. இயேசு நமக்காக தன்னையே கொடுத்தார், நாம் ஒவ்வொருவரும் உப்பாக வாழவும் பணிக்கிறார். இறுதியாய் உப்பிட்டவரை உள்ளளவும் நினைத்தல் வேண்டும்! முன்னோர் சொன்னார்…
இருளைப் போக்கும் ஒளி பைபிள்
< தொடக்கநூல் 1:3 கடவுள், “ஒளி தோன்றுக!” என்றார்; ஒளி தோன்றிற்று. கடவுள் ஒளி நல்லது என்று கண்டார்.
2 சாமுவேல்22:29 ஆண்டவரே! நீரே என் ஒளி விளக்கு! ஆண்டவர் என் இருளை ஒளிமயமாக்குகின்றார்.
திருப்பாடல்27:1 ஆண்டவரே என் ஒளி
திருப்பாடல் 36:9 உமது ஒளியால் யாமும் ஒளி பெறுகின்றோம்.
திருப்பாடல் 43:3 உம் ஒளியையும் உண்மையையும் அனுப்பியருளும்
ஏசாயா 60:1 எழு! ஒளிவீசு! உன் ஒளி தோன்றியுள்ளது.
யோவான் 1:4 அவரிடம் வாழ்வு இருந்தது; அவ்வாழ்வு மனிதருக்கு ஒளியாய் இருந்தது.
2 கொரிந்தியர் 4:6 இருளிலிருந்து ஒளி தோன்றுக! என்று சொன்ன கடவுளே எங்கள் உள்ளங்களில் அவரது ஒளியை வீசச் செய்தார். அது கிறிஸ்துவின் திருமுகத்தில் வீசும் கடவுளின் மாட்சியாகிய அறிவொளியே.
ஒளியில் முன்னேறுதல்
< ஒளியின் அறிவை நாம் பெற்றது முதற்கொண்டு, நம்மில் என்ன மாற்றங்களைப் பார்க்கிறோம்? சில சமயங்களில், நாம் செய்திருக்கிற ஆவிக்குரிய முன்னேற்றத்தை நினைத்துப் பார்ப்பது நல்லது. என்ன கெட்ட பழக்கங்களை நாம் விட்டொழித்திருக்கிறோம்? நம் வாழ்க்கையில் என்ன பிரச்சினைகளை நம்மால் சரிசெய்ய முடிந்திருக்கிறது? எதிர்காலத்திற்கான நம் திட்டங்கள் எவ்வாறு மாற்றப்பட்டிருக்கின்றன? இறைமகன் யேசு தரும் பலம் மற்றும் பரிசுத்த ஆவியின் உதவியால், நம்முடைய தனித்தன்மையிலும் சிந்திக்கும் விதத்திலும் நாம் தொடர்ந்து மாற்றங்களை செய்து வரலாம். அது ஒளிக்கு சாதகமாக நாம் செயல்படுவதைக் காட்டும்.
எபேசியர் 4:23, 24 பவுல் இதை இவ்வாறு குறிப்பிடுகிறார்: “ஒருகாலத்தில் இருளாய் இருந்த நீங்கள் இப்போது ஆண்டவரோடு இணைந்து ஒளியாய் இருக்கிறீர்கள். ஆகவே ஒளி பெற்ற மக்களாக வாழுங்கள். ஏனெனில், ஒளியே எல்லா நன்மையையும் நீதியையும் உண்மையையும் விளைவிக்கிறது.”
எபேசியர் 5:8, 9, இறைமகன் யேசுவின் ஒளி நம்மை வழிநடத்தும்படி அனுமதிப்பது, நமக்கு நம்பிக்கையையும் நோக்கத்தையும் அளிக்கிறது, அதோடு நம்மை சுற்றியுள்ளோரின் வாழ்க்கையில் இன்பத்தைக் கூட்டுகிறது. மேலும், அத்தகைய மாற்றங்களை நாம் செய்வது இறைமகன் யேசுவின் இருதயத்திற்கு எத்தகைய மகிழ்ச்சியைத் தருகிறது!—நீதிமொழிகள் 27:11.
1. எவ்வகையில் இயேசு ‘உலகத்திற்கு ஒளியாயிருக்கிறார்’?
2. ஒளி எவ்வாறு என் வாழ்க்கையுடன் தொடர்புடையதாய் இருக்கிறது?
3. ஒளியிடம் வருவதன் மூலம் என்ன வழிகளில் நாம் நன்மை அடைந்திருக்கிறோம்?