இவ் மறையுரையை வழங்குபவர்

அருட்.சகோ. சி. குழந்தை திரேசா FSAG
பிரின் ஆம் கிம்சே,யேர்மனிஞாயிறு மறையுரைகள்

மதிப்பிற்குரிய அருட்பணியாளர்களே, துறவிகளே, அருட் கன்னியரே, உங்கள் ஞாயிறு மறையுரைகளை எமது இணையத்தளத்தின் ஆன்மீக வலத்தில் பிரசுரித்து, ஆண்டவர் இயேசுவின் நற்செய்தியை எல்லோருக்கும் அறிவிக்க விரும்பினால், info@tamilcatholicnews.com என்ற எமது மின்னஞ்சலுக்கு உங்களுடைய ஆக்கங்களை அனுப்பிவைக்கவும். உங்கள் மறையுரைகள் உலகெங்கும் இருக்கும் அனைத்து தமிழ் உள்ளங்களையும் சென்றடையும்.இதோ! ஓநாய்களிடையே ஆடுகளை அனுப்புவதைப்போல நான் உங்களை அனுப்புகிறேன். எனவே பாம்புகளைப்போல முன்மதி உடையவர்களாகவும் புறாக்களைப்போலக் கபடு அற்றவர்களாகவும் இருங்கள்.
(மத்தேயு 10:16)

நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள்; தந்தை, மகன், தூய ஆவியார் பெயரால் திருமுழுக்குக் கொடுங்கள். நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்களும் கடைப்பிடிக்கும்படி கற்பியுங்கள். இதோ! உலக முடிவுவரை எந்நாளும் நான் உங்களுடன் இருக்கிறேன்
(மத்தேயு 28:19-20)

நீ அவற்றை உன் பிள்ளைகளின் உள்ளத்தில் பதியுமாறு சொல். உன் வீட்டில் இருக்கும்போதும், உன் வழிப்பயணத்தின் போதும், நீ படுக்கும்போது, எழும்போதும் அவற்றைப் பற்றிப் பேசு.
(இணைச்சட்டம் 6:7)

பொதுக்காலம் 26ஆம் ஞாயிறு

வாய்ப்புக்கள்

ஆமோஸ் 6:1.3-7 1திமொத்தேயு 6:11-16 லூக்கா 16:19-31

இறைவனது ஆசீர்வாதம் இவ்வுலகில் அனைவருக்கும் கொடுக்கப்பட்டிருக்கிறது. இவ்வுலகம் கூறும் வாய்ப்புக்கள் உலகம் என்பது இறைவன் படைப்பில் அழகுமிக்கது. இறைவனால் உருவாக்கப்பட்ட உன்னத கொடை. இதில் தோன்றிய மனிதனும் உயர்ந்தவனாக இருக்க வேண்டும் என எல்லாவற்றிலும் மாண்புமிக்கவனாக உருவாக்கினார். அதன் தொடர்ச்சியாகவே மனிதன் அனைத்தையும் ஆண்டு கொள்ள நல்ல வாய்ப்பு கொடுத்தார். ஆனால் மனிதனுக்கு என கொடுக்கப்பட்ட சுதந்திரத்தை முழுமையாக பயன்படுத்திக் கொள்ளாமல் தேடல், பேராசை என்னும் இழந்து போகும் வாய்ப்புக்களை தேடி தொடர் பயணம் மேற்கொண்டார்கள் நம் ஆதிபெற்றோர்கள். மனிதன் மூளையினால் உருவாக்கப்பட்ட இயந்திரங்களும், பொருட்களும் மற்றும் அனைத்து உற்பத்திகளையும் கையாள வாய்ப்புக்கள் கொடுக்கப்பட்டிருக்கிறது. ஆதிபெற்றோர் செய்த பாவத்தையே அல்லது அவர்கள் தொலைத்த அருள்வாழ்வை தேடி நாம் இக்காலக்கட்டத்திற்கு ஏற்றார்போல் பலவழிகளில் வாய்ப்புக்களை தேடி செல்கிறோம். எவ்வாரெனில் துப்பாக்கி, வெடிகுண்டுகள் என பயன்படுத்துவதால் எனது திறமைகள் வெளிவர வேண்டும் என்றும், நான் உயர்ந்தவன் எனது நாடு, மதம் உயர்ந்தது என நல்லதுக்கு பயன்படுத்த வாய்ப்புக்கள் கிடைத்தும், தீமை செய்ய மனிதன் பயன்படுத்துகிறான். அதன்மூலம் சமுதாயத்தில் குழப்பங்களையும், போராட்டங்களையும், அமைதிக்கு எதிர்மறையான சூழ்நிலைகளையும் உண்டாக்கி, இறைவன் கொடுத்த இந்த உலகவாழ்க்கையில் நல்லது செய்ய வாய்ப்புக்கள் கொடுத்தும் வாய்ப்புக்களை நழுவவிடுகிறோம். துப்பாக்கிகள், வெடிகுண்டுகள் மட்டும் அல்ல, தொலைகாட்சி, அலைபேசி என அனைத்து விதமான பொருட்களை பயன்படுத்துவதில் நாம் நமது நல்ல வாய்ப்புக்களை அழித்துவிட்டு தற்போதைய சுகத்தை மட்டும் தேடி வாய்ப்புக்களை சேகரித்துக்கொள்கிறோம். திருப்பலி அல்லது நோயாளிகளை சந்திக்கும் நேர வாய்ப்புகளில் தொலைக்காட்சியில் வரும் செய்திகள் முக்கியமானதாக தோற்றுகிறது. அம்மா, அப்பா இது போன்ற உறவுகளுக்கு நேரம் ஒதுக்க வாய்ப்பு கிடைக்கும் போது கைபேசிக்கு முக்கியத்துவம் கொடுத்துவிடுகிறோம். இன்றைய நற்செய்தியில் செல்வர் இவ்வாறாக வாழ்ந்து விடுகிறார். தன்னை சுற்றியிருப்பவருக்கு நன்மை செய்ய வாய்ப்பு அருகில் இருந்தும் நழுவவிட்டுவிட்டார். பிறகு அந்த சூழ்நிலையை குறித்து விண்ணக வாழ்வில் வருத்தப்படுகிறார். வருத்தப்படும் நேரம் செல்வருக்கு தாமதமாகிவிடுகிறது. வாழும் போது கிடைக்கும் நல்ல வாய்ப்புக்க்ளை மற்றவறோடு மகிழ்ச்சியாய் பகிர்ந்து வாழ்ந்திட வரம் வேண்டுவோம். ஆமென்.