இவ் மறையுரையை வழங்குபவர்

அருட்.சகோ. சி. குழந்தை திரேசா FSAG
பிரின் ஆம் கிம்சே,யேர்மனிஞாயிறு மறையுரைகள்

மதிப்பிற்குரிய அருட்பணியாளர்களே, துறவிகளே, அருட் கன்னியரே, உங்கள் ஞாயிறு மறையுரைகளை எமது இணையத்தளத்தின் ஆன்மீக வலத்தில் பிரசுரித்து, ஆண்டவர் இயேசுவின் நற்செய்தியை எல்லோருக்கும் அறிவிக்க விரும்பினால், info@tamilcatholicnews.com என்ற எமது மின்னஞ்சலுக்கு உங்களுடைய ஆக்கங்களை அனுப்பிவைக்கவும். உங்கள் மறையுரைகள் உலகெங்கும் இருக்கும் அனைத்து தமிழ் உள்ளங்களையும் சென்றடையும்.இதோ! ஓநாய்களிடையே ஆடுகளை அனுப்புவதைப்போல நான் உங்களை அனுப்புகிறேன். எனவே பாம்புகளைப்போல முன்மதி உடையவர்களாகவும் புறாக்களைப்போலக் கபடு அற்றவர்களாகவும் இருங்கள்.
(மத்தேயு 10:16)

நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள்; தந்தை, மகன், தூய ஆவியார் பெயரால் திருமுழுக்குக் கொடுங்கள். நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்களும் கடைப்பிடிக்கும்படி கற்பியுங்கள். இதோ! உலக முடிவுவரை எந்நாளும் நான் உங்களுடன் இருக்கிறேன்
(மத்தேயு 28:19-20)

நீ அவற்றை உன் பிள்ளைகளின் உள்ளத்தில் பதியுமாறு சொல். உன் வீட்டில் இருக்கும்போதும், உன் வழிப்பயணத்தின் போதும், நீ படுக்கும்போது, எழும்போதும் அவற்றைப் பற்றிப் பேசு.
(இணைச்சட்டம் 6:7)

பொதுக்காலம் 20ஆம் ஞாயிறு

எத்தகைய அமைதி

எரேமியா 38:4-6.8-10
எபிரேயர் 12:1-4
லூக்கா 12:49-53

இறைமகன் இயேசு 3விதமான அமைதியை ஏற்படுத்த வந்தேன் என கூற விரும்புவதாக நான் உணர்கிறேன், அதை உங்களிடம் பகிர்ந்து கொள்கிறேன். அன்பு, இரக்கம், தன்னையே முழுமையாக கொடுத்தல்.
ஆம் இதற்கும் இன்றைய நற்செய்திக்கும் எவ்வாறு தொடர்பு இருக்கிறது என்றால், உண்மையையும், நீதியையும், நேர்மையையும், இவ்வுலகில் நிலை நாட்ட வேண்டுமானால் தீயசக்தியை முதலில் இனம் கண்டு கொள்ள வேண்டும். அவை இவ்வுலகில் காணப்படும் பிரச்சனைகள், பிளவு, அமைதியில்லாமை, மன்னிப்பில்லாமை, என நாம் கருதலாம்.
அன்பு

இன்றைய காலகட்டத்தில் அன்பின் வழியில் செல்வது மிகவும் கடினமானதாக உலகம் நம் கண்முன் ஊடகங்களால் ஊக்கப்படுத்தப்படுகிறது. மற்றவர்களை அக்கறையோடு கவனித்துக்கொள்வதும், தேவையிலிருப்போருக்கு உதவுவதும் அன்பின் வெளிப்பாட்டு அடையாளமாய் இருக்கிறது. நான் அன்பு செய்கிறேன் என்று மற்றவர்களிடம் வாய் வார்த்தையில் வாழ்த்து சொல்வதோடு நிறுத்திக்கொள்வதில்லை, மாறாக அன்பை வளர்த்துக்கொள்ள நமது உடனிருப்பை கொடுத்து, ஊக்கப்படுத்துகிறோம். அப்படிப்பட்ட அன்பிற்கு, நமது உடனிருப்பை கொடுக்க தவறுவதற்கு ஊடகங்கள் பலமுறை தடங்கலாக உள்ளது. எவ்வாரெனில் நேரத்தை முழுமையாக அலைபேசியை வைத்து செலவழிப்பதில் கவனத்தை காட்டுகிறோம். இதனால் உறவுக்கு பாலமாக இருக்கும் சாதனமே, பல நேரங்களில் பிளவுகளை,பிரச்சனைகளை உருவாக்குகிறது. ஊடகத்தைக் கொண்டு உறவுகளை வளர்த்து அமைதியை ஏற்படுத்துவோம்.
இரக்கம்

நம்மைச் சுற்றி பஞ்சம், வியாதி, வறுமை, வன்முறை, உள்நாட்டு கலவரங்கள், இயற்கை பேரழிவுகள் ஆகியவற்றால் பரிதாபமாகப் பாதிக்கப்படுகிறார்கள். எனவே, இவர்கள்மீது இரக்கப்பட்டு உதவிக்கரம் நீட்ட வேண்டிய நிலை உருவாகியிருக்கிறது. இரக்கம் காட்டுவது என்றால், மற்றவர்கள் படுகிற கஷ்டத்தையும் துன்பத்தையும் பார்த்து பரிதாபப்படுவதோடு அவர்களுடைய கஷ்டத்தை முடிந்தளவுக்கு நீக்க வேண்டுமென்று விரும்புவதே ஆகும். குளிரில் நடுங்கும் ஒருவருக்கு சூரிய ஒளி எவ்வாறு கதகதப்பூட்டி, இதமளிக்கிறதோ அதேபோல் துயரத்தில் வாடும் ஒருவருக்கு இரக்கம் காட்டுவது, அவருடைய வேதனையைக் குறைத்து அவருக்கு நம்பிக்கையளிப்பதற்குச் சமமாக இருக்கிறது. நம்முடைய இரக்கத்தைச் சொல்லிலும் செயலிலும் காட்ட முடியும். எப்படியெனில், மற்றவர்கள்மீது அக்கறை காட்டி, அவர்களுக்கு தேவைப்படுகிற சமயத்தில் உடனடியாக உதவிக்கு வருவதன்மூலம் நாம் அதைச் செய்ய முடியும். வெறுமனே நம் குடும்பத்தார், நண்பர்கள், தெரிந்தவர்கள் என்று இவர்களிடம் மட்டுமே இரக்கம் காட்டுவதோடு நிறுத்திக்கொள்ளாமல் முன்பின் தெரியாதவர்களிடமும் இரக்கம் காட்டுவது நல்லது. எங்கும் நிறைந்திருப்பது, இறை இரக்கம்; எச்சூழலிலும், எவ்வேளையிலும், எல்லாரையும் காக்கக்கூடியது, இறைவனின் இரக்கம். இத்தகைய இரக்கத்தை இனம் கண்டு கொண்டு வளர்க்க நம் குடும்பத்திலிருந்து, நாம் வாழுகின்ற சமுதாயத்திலிருந்து கிடைக்கின்ற வாய்ப்புக்களை தேடிச்சென்று அமைதியை வளர்ப்போம்.
தன்னையே முழுமையாக கொடுத்தல்

அன்பு, பணிவு, கனிவு, இரக்கம், பொறுமை, விட்டுக் கொடுத்தல் போன்ற பல குணங்களை உடையவர் இறைமகன் இயேசு. தன்னையே முழுமையாக கொடுத்து நாம் உயர்வடைய, அமைதி கொள்ள தன்னைத் தந்த இறைவனது உறவில் இருக்கும் அப்பா, தந்தாய் உறவை புதுமையாக்குவோம் ஆமென்.