இவ் மறையுரையை வழங்குபவர்

அருட்.சகோ. சி. குழந்தை திரேசா FSAG
பிரின் ஆம் கிம்சே,யேர்மனிஞாயிறு மறையுரைகள்

மதிப்பிற்குரிய அருட்பணியாளர்களே, துறவிகளே, அருட் கன்னியரே, உங்கள் ஞாயிறு மறையுரைகளை எமது இணையத்தளத்தின் ஆன்மீக வலத்தில் பிரசுரித்து, ஆண்டவர் இயேசுவின் நற்செய்தியை எல்லோருக்கும் அறிவிக்க விரும்பினால், info@tamilcatholicnews.com என்ற எமது மின்னஞ்சலுக்கு உங்களுடைய ஆக்கங்களை அனுப்பிவைக்கவும். உங்கள் மறையுரைகள் உலகெங்கும் இருக்கும் அனைத்து தமிழ் உள்ளங்களையும் சென்றடையும்.இதோ! ஓநாய்களிடையே ஆடுகளை அனுப்புவதைப்போல நான் உங்களை அனுப்புகிறேன். எனவே பாம்புகளைப்போல முன்மதி உடையவர்களாகவும் புறாக்களைப்போலக் கபடு அற்றவர்களாகவும் இருங்கள்.
(மத்தேயு 10:16)

நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள்; தந்தை, மகன், தூய ஆவியார் பெயரால் திருமுழுக்குக் கொடுங்கள். நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்களும் கடைப்பிடிக்கும்படி கற்பியுங்கள். இதோ! உலக முடிவுவரை எந்நாளும் நான் உங்களுடன் இருக்கிறேன்
(மத்தேயு 28:19-20)

நீ அவற்றை உன் பிள்ளைகளின் உள்ளத்தில் பதியுமாறு சொல். உன் வீட்டில் இருக்கும்போதும், உன் வழிப்பயணத்தின் போதும், நீ படுக்கும்போது, எழும்போதும் அவற்றைப் பற்றிப் பேசு.
(இணைச்சட்டம் 6:7)

பொதுக்காலம் பத்தாம் ஞாயிறு

உயிருள்ள நம்பிக்கை

1அரசர்கள் 17:17-24
கலாத்தியர்1:11-19
லூக்கா7:11-17

பரிவு (sympathy) என்பது அடுத்தவரின் சோகத்தினை போக்க எடுக்கும் நடவடிக்கை ஆகும். பிறரின் துயரினை புரிந்து கொண்டு, அதனை போக்க தன்னாலான செயல்களை செய்வதும் அடுத்தவர்க்கு பரிந்துரைப்பதும் பரிவு எனக்கொள்ளலாம். இதை இயேசு இங்கே செய்கிறார், அதன் மூலம் மனித தன்மையோடு வாழ வேண்டும் என எண்பிக்கிறார். எண்பித்ததோடு விட்டுவிடாமல் கடவுளைச் சந்தித்த மனிதன் கவலை, அழுகை, அங்கலாய்ப்பு என பழைய நிலையை கடந்து புதிய ஆற்றல் பெறுகிறான். புதிய உயிரையும், புதிய வாழ்க்கையையும் பெறுகிறான். கடவுள் ஒருவரைச் சந்தித்துவிட்டால் அங்கே அவருக்கு பழைய வாழ்க்கை நிலை தேவையில்லை. அதே போன்று நம்மை சந்திக்கும் மனிதர்களும் இப்படிப்பட்ட பரிவை பெறவேண்டும் என தெளிவுப்படுத்துகிறார்.
`பரிவின் அறிக்கை` இயேசுவின் பரிவன்பின் மூலமே நாம் அமைதியான ஆனந்தமான வாழ்க்கை வாழ்கிறோம் என நமது வாழ்வின் மூலம் மற்றவர்களுக்கு தெளிவுப்படுத்துவோம். பரிவின் பண்பை விரிவுப்படுத்துவோம்.
நம்பிக்கை (belief) என்பது ஒரு உளவியல் சார்ந்த விடயமாகும். ஒருவர் அல்லது ஓரமைப்பு, ஒன்றின் மீது அல்லது ஒருவரின் மீது வைக்கும் மிகுந்தப் பற்று அல்லது கூடிய விருப்பு போன்றவற்றின் அடிப்படையில் அதனை உண்மை என நம்பும் நிலையிலேயே நம்பிக்கை, மனித மனங்களில் ஏற்படுகின்றது. அது சரியானதாகவோ தவறானதாகவோ இருக்கலாம். உண்மையானதாகவோ உண்மையற்றதாகவோ கூட இருக்கலாம். ஆனால் அது அறிவியலின் அடிப்படையில் ஏற்றுக்கொள்ளக்கூடிய உண்மையாக இருக்க வேண்டும் என்பதில்லை. பெரும்பாலும் "நம்பிக்கை" என்பது அறிவிற்கு அப்பால் ஒருவரின் அல்லது ஒன்றின் மிகுந்தப் பற்றாலும் கூடிய விருப்பினாலும் ஏற்படுபம் உளம் சார்ந்த வெளிபாடாகவே இருக்கும். ஒருவர் கொண்ட நம்பிக்கையினை இன்னொருவர் அல்லது இன்னொரு அமைப்பு கொண்டிருக்க வேண்டும் என்பது கிடையாது.
'நம்பிக்கை அறிக்கை.' இயேசுவின் அற்புதத்தைக் கண்ட மக்கள் ஆரவாரம் செய்கின்றனர். 'நம்மிடையே இறைவாக்கினர் ஒருவர் தோன்றியுள்ளார். கடவுள் தம் மக்களைத் தேடி வந்திருக்கிறார்' என அக்களிக்கின்றனர். இது மக்களின் நம்பிக்கை அறிக்கை மட்டுமல்ல. இந்த நிகழ்வை வாசிக்கும் நம் ஒவ்வொருவருக்கும் நமது உள்ளத்தில் இந்த நம்பிக்கையை அறிக்கையிட வேண்டும் என இன்றைய நற்செய்தி அறிவுறுத்துகிறது. இந்த நம்பிக்கையை என் வாழ்வில் பின்பற்ற எது தடையாக இருப்பதாக உணர்கிறேன்? அதை கடந்து என்னால் நம்பிக்கை அறிக்கையை இவ்வுலகத்திற்கு கொடுக்க முடியும் என ஆழ்ந்த விசுவாசம் கொள்வோம். ஆமென்.