இவ் மறையுரையை வழங்குபவர்

அருட்.சகோ. சி. குழந்தை திரேசா FSAG
பிரின் ஆம் கிம்சே,யேர்மனிஞாயிறு மறையுரைகள்

மதிப்பிற்குரிய அருட்பணியாளர்களே, துறவிகளே, அருட் கன்னியரே, உங்கள் ஞாயிறு மறையுரைகளை எமது இணையத்தளத்தின் ஆன்மீக வலத்தில் பிரசுரித்து, ஆண்டவர் இயேசுவின் நற்செய்தியை எல்லோருக்கும் அறிவிக்க விரும்பினால், info@tamilcatholicnews.com என்ற எமது மின்னஞ்சலுக்கு உங்களுடைய ஆக்கங்களை அனுப்பிவைக்கவும். உங்கள் மறையுரைகள் உலகெங்கும் இருக்கும் அனைத்து தமிழ் உள்ளங்களையும் சென்றடையும்.இதோ! ஓநாய்களிடையே ஆடுகளை அனுப்புவதைப்போல நான் உங்களை அனுப்புகிறேன். எனவே பாம்புகளைப்போல முன்மதி உடையவர்களாகவும் புறாக்களைப்போலக் கபடு அற்றவர்களாகவும் இருங்கள்.
(மத்தேயு 10:16)

நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள்; தந்தை, மகன், தூய ஆவியார் பெயரால் திருமுழுக்குக் கொடுங்கள். நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்களும் கடைப்பிடிக்கும்படி கற்பியுங்கள். இதோ! உலக முடிவுவரை எந்நாளும் நான் உங்களுடன் இருக்கிறேன்
(மத்தேயு 28:19-20)

நீ அவற்றை உன் பிள்ளைகளின் உள்ளத்தில் பதியுமாறு சொல். உன் வீட்டில் இருக்கும்போதும், உன் வழிப்பயணத்தின் போதும், நீ படுக்கும்போது, எழும்போதும் அவற்றைப் பற்றிப் பேசு.
(இணைச்சட்டம் 6:7)

உயிர்ப்புக்காலம் 5ஆம் ஞாயிறு

புதிய கட்டளை

தி.பணி 14:21-27
திருவெளிப்பாடு 21:1-5
யோவான் 13:31-33.34-35

விவிலியத்தில் தொடக்கம் முதல் முடிவுவரை நமக்கு கூறுவது அன்பு. கிறிஸ்தவ மறையின் ஆணிவேர் அன்பு. உலகின் உண்மையான மதங்கள் அனைத்துக்கும் ஆணிவேர் அன்புதான். அன்பு என்பது முதலில் மனிதர்களின் சுய அன்பில்தான் தொடங்குகிறது.
பழைய ஏற்பாட்டில் இவ்வாறாக கூறப்படுகிறது, உன் மீது நீ அன்புகூர்வதுபோல் உனக்கு அடுத்திருப்பவர் மீதும் அன்பு கூர்வாயாக.

பழைய ஏற்பாட்டில் உள்ள அன்பு இங்கு மாதிரியாக கொடுக்கப்படுகிறது. அதாவது, அடுத்தவர் மீது அன்புகூர்வதற்கு அடிப்படையாக, ஒருவர் தன் மீது முதலில் அன்புகூற வேண்டும் என்று பழைய ஏற்பாட்டில் கூறுவதுபோல் தெரிகிறது, அன்பின் அடிச்சுவடி நமக்குள் ஆரம்பமாக வேண்டும். இந்த ஆரம்பப் பாடங்களைச் சரிவரப் பயிலவும், தங்கள் மீது நல்ல மதிப்பையும், அன்பையும் வளர்த்துக் கொள்ளவும், அடுத்தவர் மீது அன்பும், மதிப்பும் கொள்ளவும், பழைய ஏற்பாடு நம்மை அழைக்கிறது. நம்மீது நாம் கொள்ளும் அன்பு, அக்கறை, மரியாதை என்ற அடித்தளம் சரியாக அமையவில்லையென்றால், அடுத்தவர் மீது அன்பு, ஆண்டவர் மீது அன்பு என்ற வானளாவியக் கோபுரங்களை நம்மால் எழுப்ப இயலாது. மனித மாண்பிற்கு அடிப்படையாக இருக்கும் உயரிய அன்பை நாம் நம்மில் இருந்து தொடங்குவோம்.
புதிய ஏற்பாட்டில் இவ்வாறாக கூறப்படுகிறது, நான் உங்களிடம் அன்பு செலுத்தியது போல நீங்களும் ஒருவர் மற்றவரிடம் அன்பு செலுத்துங்கள்.

இயேசு என்மீது அன்பு கொண்டிருப்பதுபோல் நான் பிறர்மீது அன்பு கொள்ளவேண்டும் என்ற கட்டளை நான் கனவில் மட்டுமே காணக்கூடிய ஓர் இலட்சியம் அல்ல என் மீது நான் கொண்டிருக்கும் அன்பையும், மதிப்பையும் அடுத்தவருக்கு வழங்க வேண்டும் என்று இன்றைய நற்செய்தியில் கூறியிருக்கும் கட்டளை, நான் நடைமுறை வாழ்வில் கடைபிடிக்கக் கூடிய ஒரு சவால். இயேசு நம்மிது கொண்டிருக்கும் அன்பு அள்ள அள்ளக் குறையாத அருளன்பு. இவ்வன்பினால் நாம் ஞானஸ்தானத்தின் வழியாகவும், உயிர்த்த இயேசுவின் வழியாகவும் உறுதிப்படுத்தப்பட்டு, நிறைக்கப்பட்டுள்ளோம். அதிலிருந்து பிறருக்கு அள்ளி வழங்கப்புதிய ஏற்பாடு நம்மை அழைக்கிறது.