இவ் மறையுரையை வழங்குபவர்

அருட்.சகோ. சி. குழந்தை திரேசா FSAG
பிரின் ஆம் கிம்சே,யேர்மனிஞாயிறு மறையுரைகள்

மதிப்பிற்குரிய அருட்பணியாளர்களே, துறவிகளே, அருட் கன்னியரே, உங்கள் ஞாயிறு மறையுரைகளை எமது இணையத்தளத்தின் ஆன்மீக வலத்தில் பிரசுரித்து, ஆண்டவர் இயேசுவின் நற்செய்தியை எல்லோருக்கும் அறிவிக்க விரும்பினால், info@tamilcatholicnews.com என்ற எமது மின்னஞ்சலுக்கு உங்களுடைய ஆக்கங்களை அனுப்பிவைக்கவும். உங்கள் மறையுரைகள் உலகெங்கும் இருக்கும் அனைத்து தமிழ் உள்ளங்களையும் சென்றடையும்.இதோ! ஓநாய்களிடையே ஆடுகளை அனுப்புவதைப்போல நான் உங்களை அனுப்புகிறேன். எனவே பாம்புகளைப்போல முன்மதி உடையவர்களாகவும் புறாக்களைப்போலக் கபடு அற்றவர்களாகவும் இருங்கள்.
(மத்தேயு 10:16)

நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள்; தந்தை, மகன், தூய ஆவியார் பெயரால் திருமுழுக்குக் கொடுங்கள். நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்களும் கடைப்பிடிக்கும்படி கற்பியுங்கள். இதோ! உலக முடிவுவரை எந்நாளும் நான் உங்களுடன் இருக்கிறேன்
(மத்தேயு 28:19-20)

நீ அவற்றை உன் பிள்ளைகளின் உள்ளத்தில் பதியுமாறு சொல். உன் வீட்டில் இருக்கும்போதும், உன் வழிப்பயணத்தின் போதும், நீ படுக்கும்போது, எழும்போதும் அவற்றைப் பற்றிப் பேசு.
(இணைச்சட்டம் 6:7)

உயிர்ப்புக்காலம் 4ஆம் ஞாயிறு

இயேசு நல்ல மேய்ப்பன்

தி.பணி 13:14.43-52
திருவெளிப்பாடு 7:9.14-17
யோவான் 10:27-30

நம் ஆண்டவராகிய இயேசு நல்ல மேய்ப்பன் என்பதை உணர்த்தும் திருவிழாவை, திருச்சபை இந்த ஞாயிற்றுக்கிழமை நம் கண்முன் வைக்கிறது.
தலைமை ஏற்போர், வழி நடத்துவோர், தமது பணிகளை எவ்வாறு மேற்கொள்ள வேண்டும்? அவர்களிடம் இருக்க வேண்டிய குணாதிசயங்கள் எவை என்பதை ‘நல்ல மேய்ப்பன்’ இயேசு நமக்கு உணர்த்துகின்றார்.
மேய்ப்பனின் குணம்
“வாழ்வு தரும் உணவு நானே. என்னிடம் வருபவருக்குப் பசியே இராது; என்னிடம் நம்பிக்கை கொண்டிருப்பவருக்கு என்றுமே தாகம் இராது.“ யோவா 6:35
“வழியும் உண்மையும் வாழ்வும் நானே“. யோவா 14:6
“உண்மையான திராட்சைச் செடி நானே“. யோவா 15:1
தலைமை ஏற்று பிறரை வழி நடத்துபவர்களை ஆயன் அல்லது மேய்ப்பன் எனக் கூறலாம். ஒவ்வொரு பதவிப் பெயர்களில் அவர்கள் அழைக்கப்பட்டாலும் அவர்களது பணி மேய்ப்புப் பணியே. நல்ல ஆயன் சேவைக்கும் தன்னலமற்ற பணி வாழ்வுக்கும் இலக்கணமாகத் திகழவேண்டியவர். பணிவிடை, தியாகம், அர்ப்பணிப்பு பணியில் முழுமையான ஈடுபாடு என்பவை ஆயனுக்கு முக்கியமாகும்.
மேய்ப்பனின் பணி வாழ்வு
நல்ல ஆயன் தம்மிடமுள்ள நூறு ஆடுகளில் ஒன்று காணாமற் போனாலும் ஏனைய 99 ஆடுகளையும் விட்டு விட்டுக் காணாமற் போன ஆட்டைத் தேடிச் செல்வார். அதனைக் கண்டு பிடிக்கும் வரை ஓயமாட்டார். இச்செயலானது ஆயன் தம் கட்டுப்பாட்டிலுள்ள ஒவ்வொரு மந்தையிலும் காட்டும் தனி அக்கறையை வெளிப்படுத்துகிறது. 99 மந்தைகள் இருந்த போதும் நூறாவது மந்தையும் தமக்கு முக்கியம் என்பதையும் அதன் மேலும் தாம் அளவு கடந்த அன்பு வைத்திருப்பதையும் காட்டுகிறது. இது நம் ஒவ்வொருவரது பணி வாழ்விலும் முக்கியமான படிப்பினையாகிறது.
மேய்ப்பன் ஆடுகளை அறிகின்றார்
ஓர் ஆயன் தன் மந்தையிலுள்ள அனைத்து ஆடுகளையும் நன்றாக அறிந்திருப்பதுபோல, இயேசுவும் நம்மை அறிகின்றார். 'தந்தை என்னை அறிந்திருக்கிறார். நானும் தந்தையை அறிந்திருக்கிறேன். அதுபோல நானும் என் ஆடுகளை அறிந்திருக்கிறேன். என் ஆடுகளும் என்னை அறிந்திருக்கின்றன' (யோவா 10: 14-15).
பெற்றோர்கள் குழந்தையை அறிந்துக்கொள்ளவும், குழந்தைகள் பெற்றோரை அறிந்துக்கொள்ளவும் இந்த ஞாயிற்றுக்கிழமை நல்ல மேய்ப்பன் நம் குடும்பத்திற்கு வாய்ப்புக் கொடுக்கிறார்.
மேய்ப்பன் ஆடுகளின்மீது பரிவுகொள்கின்றார்
ஆயன் தனது ஆடுகளின்மீது மிகுந்த அக்கறை காட்டுகின்றார். அவர்கள் ஆயரில்லா ஆடுகளைப்போல் இருந்ததால் அவர்கள்மீது பரிவுகொண்டு, அவர்களுக்குப் பலவற்றைக் கற்பித்தார் (மாற் 6:34) என்று வாசிக்கிறோம். பரிவின் மூலம் தம் அன்பை வெளிப் படுத்துகிறார்.
குடும்பத்தில், சமுதாயத்தில் நாம் பரிவு கொண்டவர்களாக வாழ அழைக்கிறார்.
மேய்ப்பன் பாதுகாப்பு தருகிறார்
இயேசு தன் சீடர்களுக்குப் பாதுகாப்பு தந்தார். அவர்களின் அச்சத்தைப் போக்கினார். 'சிறு மந்தையாகிய நீங்கள் அஞ்சவேண்டாம் (லூக் 12:32) என்ற சொற்கள் அவர் தரும் பாதுகாப்பை எடுத்துரைக்கின்றன.
நாம் வாழ்கின்ற குடும்பத்தில், சமுதாயத்தில் நாம் மற்றவர்களுக்கு அன்பு, பாசம், அடைக்கலம், ஆறுதல் என்னும் பாதுகாப்பை கொடுப்பவர்களாக வாழ அழைக்கிறார்.
மேய்ப்பன் தன் ஆடுகளுக்காக உயிரைத் தந்தார்
நல்ல ஆயன் தன் ஆடுகளுக்காகத் தன் உயிரையும் கொடுக்க முன் வருவார் என்பது இயேசுவின் கருத்து. அதை அவர் சொல்லவும் செய்தார். ஆடுகளுக்காக 'எனது உயிரைக் கொடுக்கிறேன்.' (யோவா 10: 14-15). சொன்னதை செய்தும் காட்டினார்.
பெற்றோர்கள் குழந்தைகளுக்காக தனது ஆசைகள், ஏக்கங்கள், எதிர்ப்பார்ப்புக்கள் என அனைத்தையும் இழக்கின்றார்கள், ஆம் அதை குழந்தைகள் நினைத்து பார்த்து, வயதான தம் பெற்றோர்களை முதியோர் இல்லத்தை நோக்கி செல்லாமல் இருப்பதற்கு அழைக்கிறார்.
. பாஸ்கா காலத்தில் இருக்கும் நாம் அனைவருமே நல்ல மேய்ப்பாளர்கள். உயிர்த்த ஆண்டவர் சீடர்களின் இயலாமையை, அறியாமையை, நம்பிக்கையற்றத்தன்மையை அறிந்தார். அறிந்ததோடு விட்டுவிடாமல் அவர்கள் பலத்தைக்கொண்டே பலபடுத்தினார். ஆம் நல்ல ஆயனான இயேசு தனது மேய்ப்புப் பணியை அவரது வாரிசுகளான ஆயர்களிடம் விட்டுச் சென்றுள்ளார். அவர்கள் இயேசுவைப்போல மேற்கண்ட பணிகளை நல்முறையில் நிறைவேற்றி நல்ல ஆயர்களாகத் திகழவேண்டும். தலைமை ஆயரான புனித பேதுரு தமது திருமடலில் 'உங்கள் பொறுப்பிலிருக்கும் கடவுளின் மந்தையை நீங்கள் மேய்த்துப் பேணுங்கள்' (1பேது 5 :2) என்று வழங்கிய அறிவுரையின்படி மேய்ப்புப் பணியில் ஈடுபடவேண்டும். நல்லாயனாம் இயேசுவின் மந்தையாகிய நாம் அவரைப் பின்பற்றி அவர்காட்டும் வழியில் செல்வோம்.