இவ் மறையுரையை வழங்குபவர்

அருட்.சகோ. சி. குழந்தை திரேசா FSAG
பிரின் ஆம் கிம்சே,யேர்மனி



ஞாயிறு மறையுரைகள்

மதிப்பிற்குரிய அருட்பணியாளர்களே, துறவிகளே, அருட் கன்னியரே, உங்கள் ஞாயிறு மறையுரைகளை எமது இணையத்தளத்தின் ஆன்மீக வலத்தில் பிரசுரித்து, ஆண்டவர் இயேசுவின் நற்செய்தியை எல்லோருக்கும் அறிவிக்க விரும்பினால், info@tamilcatholicnews.com என்ற எமது மின்னஞ்சலுக்கு உங்களுடைய ஆக்கங்களை அனுப்பிவைக்கவும். உங்கள் மறையுரைகள் உலகெங்கும் இருக்கும் அனைத்து தமிழ் உள்ளங்களையும் சென்றடையும்.



இதோ! ஓநாய்களிடையே ஆடுகளை அனுப்புவதைப்போல நான் உங்களை அனுப்புகிறேன். எனவே பாம்புகளைப்போல முன்மதி உடையவர்களாகவும் புறாக்களைப்போலக் கபடு அற்றவர்களாகவும் இருங்கள்.
(மத்தேயு 10:16)

நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள்; தந்தை, மகன், தூய ஆவியார் பெயரால் திருமுழுக்குக் கொடுங்கள். நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்களும் கடைப்பிடிக்கும்படி கற்பியுங்கள். இதோ! உலக முடிவுவரை எந்நாளும் நான் உங்களுடன் இருக்கிறேன்
(மத்தேயு 28:19-20)

நீ அவற்றை உன் பிள்ளைகளின் உள்ளத்தில் பதியுமாறு சொல். உன் வீட்டில் இருக்கும்போதும், உன் வழிப்பயணத்தின் போதும், நீ படுக்கும்போது, எழும்போதும் அவற்றைப் பற்றிப் பேசு.
(இணைச்சட்டம் 6:7)









பாஸ்கா ஞாயிறு

அல்லேலூயா அல்லேலூயா

தி.பணி 10:34.37-43
கொலோசையர் 3:1-4
யோவான் 20:1-9

இயேசு தமது சீடர்களுக்கு பலமுறை தனது பாடுகள் மற்றம் உயிர்தெழுதல் பற்றி சொல்லிக்கொண்டே வந்தார். ஆனால் சீடர்களுக்கு அதை புரிந்துக்கொள்ளவும், உணர்ந்துக்கொள்ளவும் முடியாமல் இருள் என்னும் நம்பிக்கையற்றத்தன்மை அவர்களின் இதயத்தை மறைத்துவிட்டது. எனவே தான் தீடிரென காணப்பட்ட பாடுகளும், மரணமும் அவர்களை ஏற்றுக்கொள்ள தடுமாற செய்கின்றன. இதில் நாம் வியப்பு கொள்ள வேண்டியதாக தோன்றவில்லை. இயேசு இறத்துவிட்டார் என ஏற்றுக் கொள்ளாமல் இருக்கும் போது எப்படி இயேசு உயிர்த்துவிட்டார் என்னும் அதிர்ச்சியை உணர்ந்து கொள்ள முடியும். மாறாக இருளில் இருந்து ஒளிக்கு அழைக்கப்படுவதை நாம் பார்க்கிறோம். இயேசுவின் உயிர்ப்பு அறிந்து கொள்ள வேண்டிய அறிவு சார்ந்தது அல்ல, தெரிந்து கொள்ள வேண்டிய ஒரு கருத்தியல் அல்ல, மாறாக அனுபவித்து வாழ்ந்து காட்டப்பட வேண்டிய ஒரு அனுபவம் என்பதை சீடர்கள் நமக்கு அவர்களின் வாழ்க்கை அனுபவ பாடத்தை முன்வைக்கின்றனர். இயேசுவின் உயிர்ப்பை அனுபவித்த சீடர்கள் இயேசுவின் சாட்சிகளாக மாறினார்கள். எனவே தான் இயேசு அவர்களுடன் வாழும் போது நடந்த அனைத்து நிகழ்வுகளையும் கேட்டு, மற்றும் கண்டு பாவித்த அனுபவங்களை தெளிந்து உணர்ந்து கொள்ள உயிர்ப்பின் அனுபவ ஒளி அவர்களுக்கு உதவியாக இருக்கிறது என்பதை பார்க்கிறோம்.
இயேசுவின் உயிர்ப்பு வாழ்வின் முழுமையைச்சுட்டிக்காண்பிக்கிறது. இது புதுவாழ்வின் அறிவிப்பாக விளங்குகிறது. சீடர்கள் தொலைத்திருந்த நம்பிக்கையை இயேசு உயிர்ப்பின் வழியாக உறுதிப்படுத்துகிறார். நம்பிக்கையின் பலமே முழுமையான நம்பிக்கையில் தான் அடங்கியுள்ளது என்கிறது ஓர் பழமொழி. ஆம் சீடர்கள் தனது நம்பிக்கையை சாதாரணமாக பயன்படுத்த இடம் கொடுத்துவிட்டார்கள். ஆனால் நம்பிக்கை கொள்ளும் போது வாழ்வின் அடையாளங்களை, அதன் பணிநோக்கத்தை அறிந்து கொள்ள உயிரோட்ட உணர்வுகளை புதிய பார்வை மூலம் மீண்டும் பெற்றுக்கொள்ள உதவியாக இருப்பது தான் முழுமையான நம்பிக்கை. இப்படிப்பட்ட நம்பிக்கையை அறிந்து உணர்ந்து கொள்ள நம்மை சுற்றியுள்ளவர்கள் அவர்களின் வார்த்தையாலும், செயலாலும் நம்மை தூண்டுகிறார்கள் என்பதனை இன்றைய நற்செய்தி நமக்கு நினைவு படுத்துகிறது. ஆம் மகதலா மரியா ஒளியின் தீபத்தை மற்றவரிலும் பிரகாசிக்க முன்வருகிறார்.
நம்மில் இருக்கும் உயிர்ப்பின் ஒளி ஏராளம். அதை அடையாளம் கண்டு கொள்ள புதிய வாழ்வின் அறிவிப்பாளராக நாமும் மாறுவோம். நம்மை சுற்றியிருப்போருக்கு நல்வாழ்க்கை, விசுவாச சாட்சியவாழ்வு என நம்மில் இருக்கும் சக்தியை இந்த உயிர்ப்பு பெருவிழாவில் அனைவரிடமும் அல்லேலூயா முழக்கத்துடன் பகிர்ந்து கொள்வோம். ஆமென்.