இவ் மறையுரையை வழங்குபவர்

அருட்.சகோ. சி. குழந்தை திரேசா FSAG
பிரின் ஆம் கிம்சே,யேர்மனிஞாயிறு மறையுரைகள்

மதிப்பிற்குரிய அருட்பணியாளர்களே, துறவிகளே, அருட் கன்னியரே, உங்கள் ஞாயிறு மறையுரைகளை எமது இணையத்தளத்தின் ஆன்மீக வலத்தில் பிரசுரித்து, ஆண்டவர் இயேசுவின் நற்செய்தியை எல்லோருக்கும் அறிவிக்க விரும்பினால், info@tamilcatholicnews.com என்ற எமது மின்னஞ்சலுக்கு உங்களுடைய ஆக்கங்களை அனுப்பிவைக்கவும். உங்கள் மறையுரைகள் உலகெங்கும் இருக்கும் அனைத்து தமிழ் உள்ளங்களையும் சென்றடையும்.இதோ! ஓநாய்களிடையே ஆடுகளை அனுப்புவதைப்போல நான் உங்களை அனுப்புகிறேன். எனவே பாம்புகளைப்போல முன்மதி உடையவர்களாகவும் புறாக்களைப்போலக் கபடு அற்றவர்களாகவும் இருங்கள்.
(மத்தேயு 10:16)

நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள்; தந்தை, மகன், தூய ஆவியார் பெயரால் திருமுழுக்குக் கொடுங்கள். நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்களும் கடைப்பிடிக்கும்படி கற்பியுங்கள். இதோ! உலக முடிவுவரை எந்நாளும் நான் உங்களுடன் இருக்கிறேன்
(மத்தேயு 28:19-20)

நீ அவற்றை உன் பிள்ளைகளின் உள்ளத்தில் பதியுமாறு சொல். உன் வீட்டில் இருக்கும்போதும், உன் வழிப்பயணத்தின் போதும், நீ படுக்கும்போது, எழும்போதும் அவற்றைப் பற்றிப் பேசு.
(இணைச்சட்டம் 6:7)

தவக்காலம் 2ஆம் ஞாயிறு

இறைத்தோற்றம்

தொடக்கநூல் 15:5-12.17-18,21
பிலிப்பியர் 3:17-4:1
லூக்கா 9:28-36

மனம் விரும்பிகிற போக்கில் வாழாமல், இறைவனது வழிகளைத் தேர்ந்து தெளிந்து அவருக்கு உரியவர்களாக வாழ அழைக்கப்படுகிறோம்.
லூக்கா நற்செய்தியில் இறைமகன் இயேசு இறைவேண்டலுக்கு முக்கியத்துவம் கொடுப்பதை திருச்சபை இந்த தவக்காலத்தில் நம் கண்முன் வைக்கிறது. தவக்காலம் முதல் ஞாயிறு நற்செய்தி வாசகத்தில் தூயஆவியால் அழைத்துக்கொண்டு பாலைநிலத்திற்கு சென்று தந்தையோடு கொண்டுள்ள உறவை ஆழப்படுத்துகிறார் என்றும் தவக்காலம் இரண்டாம் ஞாயிறு நற்செய்தி வாசகத்தில் உயர்ந்த மலைக்கு சென்று இறையனுபவம் பெற்று, தம் சீடர்களுக்கும் கற்றுக்கொடுக்கிறார் என்றும் வாசிக்கிறோம்.
“இறைவேண்டலில்
இயேசுவின் வாழ்க்கையில் முக்கிய கட்டங்களின் போதும், அறுதியான முடிவுகள் எடுப்பதற்கு முன்னும் இயேசு இறைவேண்டலில் ஈடுப்ட்டார் என்கிறது லூக்கா நற்செய்தி. அதில் சில முக்கிய நிகழ்வுகள்.
1. மக்களெல்லாரும் திருமுழுக்குப் பெறும் வேளையில் இயேசுவும் திருமுழுக்குப் பெற்று, இறைவனிடம் வேண்டிக் கொண்டிருந்தபோது வானம் திறந்தது. (லூக் 3:21)
2. அந்நாள்களில் அவர் வேண்டுவதற்காக ஒரு மலைக்குப் போனார். அங்குக் கடவுளிடம் வேண்டுதல் செய்வதில் இரவெல்லாம் செலவிட்டார். (லூக் 6:12)
3. இயேசு தனித்து இறைவனிடம் வேண்டிக்கொண்டிருந்தபோது சீடர் மட்டும் அவரோடு இருந்தனர். அப்போது அவர்களிடம், “நான் யார் என மக்கள் சொல்கிறார்கள்?” என்று அவர் கேட்டார். (லூக் 9:18)
4. இவற்றையெல்லாம் சொல்லி ஏறக்குறைய எட்டுநாள்கள் ஆனபிறகு இயேசு பேதுருவையும் யோவானையும் யாக்கோபையும் கூட்டிக்கொண்டு இறைவனிடம் வேண்டுவதற்காக ஒரு மலைமீது ஏறினார். (லூக் 9:28)
5. இயேசு அங்கிருந்து புறப்பட்டுத் தம் வழக்கப்படி ஒலிவ மலைக்குச் சென்றார். சீடர்களும் அவரைப் பின் தொடர்ந்தார்கள். அந்த இடத்தை அடைந்ததும் அவர் அவர்களிடம், “சோதனைக்கு உட்படாதிருக்க இறைவனிடம் வேண்டுங்கள்,”என்றார். பிறகு அவர் அவர்களை விட்டுக் கல்லெறிதூரம் விலகிச் சென்று, முழந்தாள்படியிட்டு, இறைவனிடம் வேண்டினார்:“தந்தையே, உமக்கு விருப்பமானால் இத்துன்பக் கிண்ணத்தை என்னிடமிருந்து அகற்றும். ஆனாலும் என் விருப்பப்படி அல்ல; உம் விருப்பப்படியே நிகழட்டும்”என்று கூறினார். [அப்போது விண்ணகத்திலிருந்து ஒரு தூதர் அவருக்குத் தோன்றி அவரை வலுப்படுத்தினார். அவரோ மிகுந்த வேதனைக்குள்ளாகவே, உருக்கமாய் இறைவனிடம் வேண்டிக் கொண்டிருந்தார். அவரது வியர்வை பெரும் இரத்தத் துளிகளைப் போலத் தரையில் விழுந்தது.] அவர் இறைவேண்டலை முடித்துவிட்டு எழுந்து சீடர்களிடம் வந்தபோது அவர்கள் துயரத்தால் சோர்வுற்றுத் தூங்கிக்கொண்டிருப்பதைக் கண்டார். அவர்களிடம், “என்ன, உறங்கிக் கொண்டா இருக்கிறீர்கள்? சோதனைக்கு உட்படாதிருக்க விழித்திருந்து இறைவனிடம் வேண்டுங்கள்”என்றார். (லூக் 22: 39-46)
6. “தந்தையே, உம்கையில் என் உயிரை ஒப்படைக்கிறேன்” என்று இயேசு உரத்த குரலில் கூறி உயிர் துறந்தார். (லூக் 23:46)
இந்த இறைவேண்டல் நேரங்களில் இயேசு தம் தந்தையாகிய கடவுளோடு தமக்குள்ள நெருங்கிய உறவையும் ஒன்றிப்பையும் வெளிப்படுத்துகிறார். அதன் வெளிப்பாடு அவரின் அணுகுமுறையில் வெளிக்கொணரப்படுகிறது சென்ற இடமெல்லாம் நன்மையை, மேலும் மேன்மையானதுமாக விட்டுச்சென்றார். செபம் என்னும் ஆயுதம் நம்மில் இருக்கும் போது எந்த விதமான ஆயுதங்களை கண்டும் கலக்கம் கொள்ளவேண்டாம் பேதுருவிற்கு கூறி வாருங்கள் கீழே போவோம் என அழைத்து வருகிறார். ஒரு நிலையில் கிடைக்கும் மகிழ்ச்சியே போதும் என்று அதிலே மதிமயங்கி ஆழ்ந்துவிடாமல் மகிழ்ச்சியை இரட்டிப்பாக்க புறப்பட அழைத்து வருகிறார். இந்த தவக்காலத்தில் இறையனுபவம் பெற்று, புது மனிதர்களாக, இறையனுபவசக்தி, இறையனுபவஆற்றல் பெற்றவர்களாக வாழ வரம் கேட்போம்.
“தோற்றம் மாறுதல்
இயேசுவின் காலத்தில் வாழ்ந்த மனிதர்கள் இயேசுவை ஞானியாக கருதினார்கள், இறைவாக்கினாராக, தலைசிறந்த போதராகவும் மக்கள் பார்வையில் தோற்றமளித்தார். மேலும் உவமைகள், கதைகள், அறிவுரைகள், எச்சரித்தல் கூறும் போது தத்துவமகானாகவும் தோற்றமளித்தார். கடவுளின் பார்வையில் இயேசுவைப்பற்றிய கண்ணோட்டம் இவ்வாறாக இருந்ததாக நான் கருதுகிறேன். அது “ “இவரே என் மைந்தர்; நான் தேர்ந்து கொண்டவர் இவரே. இவருக்குச் செவிசாயுங்கள்”. உறவுக்கும், அன்பின் மதீப்பீட்டிற்கும் உள்ள தோற்றத்தை நாம் அறிய வாய்ப்பு கொடுக்கப்படுகிறது. இந்த அன்பின் மதீப்பீடுகள் நல்ல செயல்களின் மூலம் வெளிக்கொணரப்படுகிறது. நல்ல செயல்கள் செய்யும் போது நம்மை அறியாமல் நம்மில் தோற்றங்கள் மாறுபடுகின்றன. மகிழ்ச்சி, கனிவு, பகிர்தல், புரிதல், ஏற்றுக்கொள்ளல், என்று நம்மில் இந்த பண்புகள் வளர்ந்து கொண்டே வருகின்றன. அதற்கு ஏற்றக்காலம் இந்த தவக்காலம். ஆகவே நல்ல செயல்கள் வழி நமது தோற்றத்தை மாற்றியமைப்போம். மற்றவருக்கு எந்த விதமான தோற்றத்தை இந்த தவக்காலத்தில் கொடுக்கபோகிறோம் என ஆராய்ந்து பார்ப்போம்? ஆமென்.