இவ் மறையுரையை வழங்குபவர்

அருட்.சகோ. சி. குழந்தை திரேசா FSAG
பிரின் ஆம் கிம்சே,யேர்மனிஞாயிறு மறையுரைகள்

மதிப்பிற்குரிய அருட்பணியாளர்களே, துறவிகளே, அருட் கன்னியரே, உங்கள் ஞாயிறு மறையுரைகளை எமது இணையத்தளத்தின் ஆன்மீக வலத்தில் பிரசுரித்து, ஆண்டவர் இயேசுவின் நற்செய்தியை எல்லோருக்கும் அறிவிக்க விரும்பினால், info@tamilcatholicnews.com என்ற எமது மின்னஞ்சலுக்கு உங்களுடைய ஆக்கங்களை அனுப்பிவைக்கவும். உங்கள் மறையுரைகள் உலகெங்கும் இருக்கும் அனைத்து தமிழ் உள்ளங்களையும் சென்றடையும்.இதோ! ஓநாய்களிடையே ஆடுகளை அனுப்புவதைப்போல நான் உங்களை அனுப்புகிறேன். எனவே பாம்புகளைப்போல முன்மதி உடையவர்களாகவும் புறாக்களைப்போலக் கபடு அற்றவர்களாகவும் இருங்கள்.
(மத்தேயு 10:16)

நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள்; தந்தை, மகன், தூய ஆவியார் பெயரால் திருமுழுக்குக் கொடுங்கள். நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்களும் கடைப்பிடிக்கும்படி கற்பியுங்கள். இதோ! உலக முடிவுவரை எந்நாளும் நான் உங்களுடன் இருக்கிறேன்
(மத்தேயு 28:19-20)

நீ அவற்றை உன் பிள்ளைகளின் உள்ளத்தில் பதியுமாறு சொல். உன் வீட்டில் இருக்கும்போதும், உன் வழிப்பயணத்தின் போதும், நீ படுக்கும்போது, எழும்போதும் அவற்றைப் பற்றிப் பேசு.
(இணைச்சட்டம் 6:7)

திருவருகைக்கால 4ம் ஞாயிறு

நாடிச் செல்லுதல்

மீக்கா 5:2-5
எபிரேயர் 10:5-10
லூக்கா 1:39-45

இன்றைய இறுதி திருவருகைக்கால ஞாயிறு அன்னை மரியாள் கற்றுத்தரும் பாடத்தை நம் கண்முன் வைக்கிறது. 1. விரைந்து செல்லுதல், 2. வாழ்த்துதல்.
விவிலியத்தில் இருந்து விரைந்து செல்ல அழைக்கப்பட்டவர்களில் சிலர்.
ஏழை லாசருக்கு உதவி செய்ய அழைப்பு
இறைவனை பின்செல்ல இளைஞருக்கு அழைப்பு
திருமணவிருந்தில் பங்குகொள்ள பலருக்கு அழைப்பு
விவேகத்தோடு செயல் பட பத்து கன்னியருக்கு அழைப்பு.
இவ்வாறு விவிலியத்தை வாசித்தோமேயானால் பலருக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.
விரைந்து செல்லுதல்
அதில் லட்சிய வாழ்வின் அடையாளமாக வாழ்ந்தவர்கள் ஒருசிலரை. அன்னை மரி அடையாளமாக வாழ்ந்தவர், இவர் கவனி/ நில்/ செல் என்ற வாய்ப்பாட்டினை நம் கவனத்திற்கு இன்று கொண்டு வருகிறார். இறைவனது வார்த்தையை கவனமாக கேட்டல், கேட்டல் வழியாக கிடைக்கும் உள்ளொளியை இயக்கமாக விரைந்து உதவி சென்று நிறைவேற்றுவது. இவ்வாறாக தேவையில் இருப்போருக்கு விரைந்து உதவி செய்யும் போது நாமும் பயன் பெறுகிறோம், உதவி பெறுபவரும் பயன் அடைகிறார் என்பதை மரியாளும், எலிசபெத்தம்மாளும் சந்திக்கின்ற நிகழ்ச்சியில் நடப்பதை இன்றைய நற்செய்தி விளக்கமாக கூறுகிறது.
மரியாளிடம் இருந்த உதவி செய்யும் பண்பு நம்மிடமும் உள்ளது. அதை குறிப்பறிந்து உதவி செய்ய பயன்படுத்த முயற்சி செய்வோம்.
வாழ்த்துதல்
சந்தித்தல் என்பது பலவிதமான அனுபவத்தை தரக்கூடியது. சிறப்பாக மகிழ்ச்சி, இன்பம், நம்பிக்கை, ஆற்றல் மற்றும் வாழ்த்துக்களை அடையாளமாகக் கொடுக்க கூடியது. அடையாளத்தை பகிர்ந்து கொள்ள அன்னை மரி நமக்கும் அழைப்பு விடுக்கிறாள். எலிசபெத்தம்மாள் இவ்வாறாக வாழ்த்துகிறார். “பெண்களுக்குள் நீர் ஆசி பெற்றவர்; உம் வயிற்றில் வளரும் குழந்தையும் ஆசி பெற்றதே! இங்கு பகிரப்படுவது கடவுளின் வல்லமையாகும், இங்கு ஆழ்ந்த விசுவாசம், நம்பிக்கை, இறையனுபவம் பகிரப்படுகிறது. இறைவனின் திட்டம் சந்தித்து வாழ்த்துவதின் மூலம் தெளிவு படுத்தப்படுகிறது.
நமது சந்திப்பு பிறருக்கு மகிழ்ச்சியை மற்றும் வாழ்த்துக்களை கொடுப்பதாக அமையும் போது, பிறக்க போகும் பாலன் இயேசு நம்மில் மகிழ்ச்சிக்கொள்வார். அதற்கு நம்மை தகுதியாய் தயாரிப்போம். ஆமென்.