இவ் மறையுரையை வழங்குபவர்

அருட்.சகோ. சி. குழந்தை திரேசா FSAG
பிரின் ஆம் கிம்சே,யேர்மனிஞாயிறு மறையுரைகள்

மதிப்பிற்குரிய அருட்பணியாளர்களே, துறவிகளே, அருட் கன்னியரே, உங்கள் ஞாயிறு மறையுரைகளை எமது இணையத்தளத்தின் ஆன்மீக வலத்தில் பிரசுரித்து, ஆண்டவர் இயேசுவின் நற்செய்தியை எல்லோருக்கும் அறிவிக்க விரும்பினால், info@tamilcatholicnews.com என்ற எமது மின்னஞ்சலுக்கு உங்களுடைய ஆக்கங்களை அனுப்பிவைக்கவும். உங்கள் மறையுரைகள் உலகெங்கும் இருக்கும் அனைத்து தமிழ் உள்ளங்களையும் சென்றடையும்.இதோ! ஓநாய்களிடையே ஆடுகளை அனுப்புவதைப்போல நான் உங்களை அனுப்புகிறேன். எனவே பாம்புகளைப்போல முன்மதி உடையவர்களாகவும் புறாக்களைப்போலக் கபடு அற்றவர்களாகவும் இருங்கள்.
(மத்தேயு 10:16)

நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள்; தந்தை, மகன், தூய ஆவியார் பெயரால் திருமுழுக்குக் கொடுங்கள். நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்களும் கடைப்பிடிக்கும்படி கற்பியுங்கள். இதோ! உலக முடிவுவரை எந்நாளும் நான் உங்களுடன் இருக்கிறேன்
(மத்தேயு 28:19-20)

நீ அவற்றை உன் பிள்ளைகளின் உள்ளத்தில் பதியுமாறு சொல். உன் வீட்டில் இருக்கும்போதும், உன் வழிப்பயணத்தின் போதும், நீ படுக்கும்போது, எழும்போதும் அவற்றைப் பற்றிப் பேசு.
(இணைச்சட்டம் 6:7)

திருவருகை காலம் 3ம் ஞாயிறு

மகிழ்ச்சி

செப்பனியா 3:14-18
பிலிப்பியர் 4:4-7
லூக்கா3:10-18

"யார் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள்?" .
"யார் உலகில் மிகவும் "சந்தோஷமா" இருக்கிறவங்க?
ஒரு ஊரில் ஒரு காக்கா இருந்துச்சாம். அது ரொம்ப மகிழ்ச்சியா இருந்துச்சு, ஒரு கொக்கை பார்க்கும் வரை.. அது கொக்கை பார்த்து சொல்லிச்சாம். நீ வெள்ளைய எவ்வளவு அழகா இருக்கே. கருப்பா இருக்கும் என்னை எனக்கு பிடிக்கலை என்றது . கொக்கு சொன்னது, நானும் அப்படிதான் நினைத்தேன் , கிளியை பார்க்கும் வரை. அது இரண்டு நிறங்களில் எவ்வள்வு அழகா இருக்கு தெரியுமா ? என்றது. காகமும் கிளியிடம் சென்று, கேட்டவுடன் அது சொன்னது, உண்மைதான் நான் மகிழ்ச்சியாத்தான் இருந்தேன் ,ஆனால் ஒரு மயிலை பார்க்கும் வரை, அது பல நிறங்களில் எவ்வளவு அழகா இருக்கு தெரியுமா ? என்றது. உடனே காகமும் மயில் இருக்கும் ஒரு மிருக காட்சி சாலை சென்று மயிலை பார்க்க , அங்கு ஆயிரக்கணக்கான ஜனங்கள் மயிலை பார்க்க காத்திருக்க , காகம் நினைத்தது ..ம்ம்ம். இதுதான் மகிழ்ச்சி என்று. அழகு மயிலே , உன்னை காண இவ்வளவு பேர் .. என்னை பார்த்தாலே இவர்கள் முகத்தை திருப்பிகொள்கிறார்கள். என்னை பொறுத்தவரை உலகிலேயே நீதான் அதிக மகிழ்ச்சியானவர் , என்றது. மயில் சொன்னது. அன்பு காகமே , நான் எப்பவும் நினைத்து கொண்டிருந்தேன் நான் தான் அழகு மேலும் மகிழ்ச்சியான பறவை என்று . ஆனால் எனது இந்த அழகு தான் என்னை ஒரு சிறையில் பூட்டி வைத்திருக்க செய்கிறது . இந்த மிருக காட்சி சாலை முழுதும் நான் பார்த்ததில் , காகம் மட்டுமே பூட்டி வைக்கப்பட வில்லை .. எனவே நான் யோசித்தது , நானும் காகமாக இருந்தால், உலகம் முழுதும் ஜாலியாக சுற்றி வரலாமே , என்றது . இதுதான் நமது பிரச்சினையும் ...
நாம் தேவை இல்லாமல் நம்மை நாமே கவலை கொள்ள செய்கிறோம் . நம் இறைவன் கொடுக்கும் செய்தி உன்னில் மகிழ்ச்சியை காண். இருப்பதை வைத்து சந்தோசம் கொள் . இது நம்மை ஒரு பெரும் மகிழ்ச்சிக்கு இழுத்து செல்லும் என்பதற்கு இன்றைய இறைமுத்துக்கள் சான்றாக விளங்குகின்றன.
மகளே சீயோன்! மகிழ்ச்சியால் ஆர்ப்பரி; இஸ்ரயேலே! ஆரவாரம் செய்; மகளே எருசலேம்! உன் முழு உள்ளத்தோடு அகமகிழ்ந்து அக்களி. உன் கடவுளாகிய ஆண்டவர் உன் நடுவில் இருக்கின்றார்; அவர் மாவீரர்; மீட்பு அளிப்பவர்; உன்பொருட்டு அவர் மகிழ்ந்து களிகூருவார்; தம் அன்பினால் உனக்குப் புத்துயிர் அளிப்பார்; உன்னைக் குறித்து மகிழ்ந்து ஆடிப்பாடுவார். ஆண்டவரோடு இணைந்து என்றும் மகிழுங்கள்; மீண்டும் கூறுகிறேன், மகிழுங்கள்.
செப்பனியா வழியாக மகிழ்ச்சியில் நம்பிக்கை கொள்ளவும், புனித பவுல் வழியாக மகிழ்ச்சியில் உறுதியுடன் வாழவும் உற்சாகம் கொடுக்கப்படுகிறது.மகிழ்ச்சி நம்மில் இருக்கும் போது இன்றைய நற்செய்தி கூறும் பகிர்தல் என்னும் மனப்பான்மை எளிதாக நம் உள்ளத்தில் இருக்கும்.
இந்த திருவருகை காலத்தில் உள்ளார்ந்த அமைதியை பெற முற்படுவோம், அன்பு செய்ய நேரம் ஒதுக்குவோம், மறந்து மனவலிமையோடு மன்னிக்கும் சூழ்நிலையை பயன்படுத்துவோம், நற்செய்தியை வாழ்வாக்க மகிழ்வாய் வாழ செபத்தை கருவியாக பயன்படுத்துவோம்.திருமுழுக்கு யோவான் கூறும் பகிர்தல் அன்பு, மன்னிப்பு, தியாகம், நீதி, சமாதனத்தின் உறவு இவ்வுலகில் பகிரப்படும் போது, இறைவன் கொடுக்கும் நித்திய மகிழ்ச்சியை நம் வாழ்வில் கண்டு கொள்ள இயலும். இந்த வாரத்தில் மகிழ்ச்சியை பகிர்ந்துக்கொள்ள உதவி செய்யுது கடவுளை மனிதரில் வரவேற்ப்போம். ஆமென்.