இவ் மறையுரையை வழங்குபவர்

அருட்.சகோ. சி. குழந்தை திரேசா FSAG
பிரின் ஆம் கிம்சே,யேர்மனிஞாயிறு மறையுரைகள்

மதிப்பிற்குரிய அருட்பணியாளர்களே, துறவிகளே, அருட் கன்னியரே, உங்கள் ஞாயிறு மறையுரைகளை எமது இணையத்தளத்தின் ஆன்மீக வலத்தில் பிரசுரித்து, ஆண்டவர் இயேசுவின் நற்செய்தியை எல்லோருக்கும் அறிவிக்க விரும்பினால், info@tamilcatholicnews.com என்ற எமது மின்னஞ்சலுக்கு உங்களுடைய ஆக்கங்களை அனுப்பிவைக்கவும். உங்கள் மறையுரைகள் உலகெங்கும் இருக்கும் அனைத்து தமிழ் உள்ளங்களையும் சென்றடையும்.இதோ! ஓநாய்களிடையே ஆடுகளை அனுப்புவதைப்போல நான் உங்களை அனுப்புகிறேன். எனவே பாம்புகளைப்போல முன்மதி உடையவர்களாகவும் புறாக்களைப்போலக் கபடு அற்றவர்களாகவும் இருங்கள்.
(மத்தேயு 10:16)

நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள்; தந்தை, மகன், தூய ஆவியார் பெயரால் திருமுழுக்குக் கொடுங்கள். நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்களும் கடைப்பிடிக்கும்படி கற்பியுங்கள். இதோ! உலக முடிவுவரை எந்நாளும் நான் உங்களுடன் இருக்கிறேன்
(மத்தேயு 28:19-20)

நீ அவற்றை உன் பிள்ளைகளின் உள்ளத்தில் பதியுமாறு சொல். உன் வீட்டில் இருக்கும்போதும், உன் வழிப்பயணத்தின் போதும், நீ படுக்கும்போது, எழும்போதும் அவற்றைப் பற்றிப் பேசு.
(இணைச்சட்டம் 6:7)

திருவருகைக்காலம் முதல் ஞாயிறு

விழிப்பாயிருத்தல்

எரேமியா 33:14-16
1தெசலோனிக்கர் 3:12-4:2
லூக்கா 21:25-28.34-36

திருவருகைக் காலத்திற்குள் நுழையும் நாம் இயேசுவினுடை வருகைக்காக நம்மையே நாம் தயாரிக்கின்ற காலம். மகிழ்ச்சியின் மற்றும் நம்பிக்கையின் காலம். விழிப்பாயிருந்து இறைவனை சார்ந்திருக்க அழைக்கும் காலம்.
எவற்றில் நாம் இறைவனை சார்ந்திருக்க அழைக்கப்படுகிறோம் என்பதைனை இன்றைய இறைவார்த்தைகள் சூட்டிக்காட்டுகின்றன.
நான் தாவீதிலிருந்து நீதியின் தளிர் ஒன்று முளைக்கச் செய்வேன். அவர் நாட்டில் நீதியையும் நேர்மையையும் நிலைநாட்டுவார். (எரேமியா 33:15)
கடவுளுடைய திட்டம், தொடந்து செயல்படுவது. அந்நாள் முதல் இன்று வரை மனிதர்களை மீட்க மனிததன்மை, இறைத்தன்மையோடு விளங்கிய இயேசு நீதியையும், நேர்மையையும் நிலைநாட்ட மீண்டும், மீண்டும் பிறக்கிறார். அன்பே உருவான இறைவன் நமது குற்றத்தையும், பலவீனத்தையும் உற்றுக் கவனிக்காமல் நமக்கு உரிமைவாழ்வு கொடுக்க மனிதனாக தோற்ற இருக்கிறார். அதற்கு நம்மில் தேவையானது விழிப்பாயிருத்தல். உள்ளம் என்னும் கோவிலில் இறைவார்த்தையை கடைப்பிடித்து இறைவனை முழுவதுமாக சார்ந்திருந்து நீதி, நேர்மையை வாழ்வாக்க இந்த திருவருகை காலம் அழைக்கிறது.
சகோதர சகோதரிகளே! நீங்கள் கடவுளுக்கு உகந்தவர்களாய் வாழும் முறையை எங்களிடம் கற்றுக் கொண்டீர்கள்; அப்படியே வாழ்ந்தும் வருகிறீர்கள். இதில் இன்னும் முன்னேற வேண்டுமென ஆண்டவராகிய இயேசுவின் பெயரால் உங்களிடம் இறுதியாகக் கேட்டுக் கொள்கிறோம். (1தெசலோனிக்கர் 4:2)
புனித பவுலடியார் கூறுவது நீங்கள் அன்பையும், அமைதியையும், நீதியையும், மற்றும் நேர்மையின் படியும் வாழ கற்றுக்கொண்டீர்கள், அதை ஆவலோடு செயல்படுத்த தாகத்தோடு விழிப்பாயிருந்து எதிர்கொள்ள இந்த திருவருகைக் கால ஞாயிறு அழைக்கிறது. ஆகவே நிலைவாழ்வுக்கு தேவையான பண்புகளையும் அவரின் மதீப்பீடுகளையும் பகிர்ந்து வாழ்வோம். மனிதன் கடவுளை பிரதிபலிக்கும் நபராக மாற உதவுகின்ற காலத்திற்கு விழிப்பாயிரருப்போம்.
நிகழப்போகும் அனைத்திலிருந்தும் தப்புவதற்கும் மானிடமகன் முன்னிலையில் நிற்க வல்லவராவதற்கும் எப்பொழுதும் விழிப்பாயிருந்து மன்றாடுங்கள். (லூக்கா 21:36)
இவ்வுலகில் நடக்கின்ற நீதி, நேர்மையற்ற சூழல்களுக்குள் இருந்து தப்பித்துக் கொள்ள இறைமகன் கொடுக்கும் செய்தி விழிப்பாயிருத்தல். விழிப்பாயிருத்தல் என்பது உறக்கத்தில் இல்லாதநிலை மற்றும் தன்னை உணர்ந்தநிலையாகும். எனவே இறை உணர்வின் நம்பிக்கையால் உந்தப்பட்டு விழிப்புணர்வுடன் வாழ அழைக்கிறார். இங்கே விழிப்புணர்வு என்பது அவரவர் தம் கடமையில் விழிப்பாயிருத்தல், அவரவர் தம் குறைகளை அறிதலிலே விழிப்பாயிருத்தல், கடவுளோடு இணைவதிலே விழிப்பாயிருத்தல் போன்றவற்றையும் சுட்டி காண்பிக்கிறார். ஆகவே நிலைவாழ்வுக்கு நம்மையை ஆழமாக தயாரிப்போம். ஆமென்.