இவ் மறையுரையை வழங்குபவர்

அருட்.சகோ. சி. குழந்தை திரேசா FSAG
பிரின் ஆம் கிம்சே,யேர்மனிஞாயிறு மறையுரைகள்

மதிப்பிற்குரிய அருட்பணியாளர்களே, துறவிகளே, அருட் கன்னியரே, உங்கள் ஞாயிறு மறையுரைகளை எமது இணையத்தளத்தின் ஆன்மீக வலத்தில் பிரசுரித்து, ஆண்டவர் இயேசுவின் நற்செய்தியை எல்லோருக்கும் அறிவிக்க விரும்பினால், info@tamilcatholicnews.com என்ற எமது மின்னஞ்சலுக்கு உங்களுடைய ஆக்கங்களை அனுப்பிவைக்கவும். உங்கள் மறையுரைகள் உலகெங்கும் இருக்கும் அனைத்து தமிழ் உள்ளங்களையும் சென்றடையும்.இதோ! ஓநாய்களிடையே ஆடுகளை அனுப்புவதைப்போல நான் உங்களை அனுப்புகிறேன். எனவே பாம்புகளைப்போல முன்மதி உடையவர்களாகவும் புறாக்களைப்போலக் கபடு அற்றவர்களாகவும் இருங்கள்.
(மத்தேயு 10:16)

நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள்; தந்தை, மகன், தூய ஆவியார் பெயரால் திருமுழுக்குக் கொடுங்கள். நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்களும் கடைப்பிடிக்கும்படி கற்பியுங்கள். இதோ! உலக முடிவுவரை எந்நாளும் நான் உங்களுடன் இருக்கிறேன்
(மத்தேயு 28:19-20)

நீ அவற்றை உன் பிள்ளைகளின் உள்ளத்தில் பதியுமாறு சொல். உன் வீட்டில் இருக்கும்போதும், உன் வழிப்பயணத்தின் போதும், நீ படுக்கும்போது, எழும்போதும் அவற்றைப் பற்றிப் பேசு.
(இணைச்சட்டம் 6:7)

பொதுக்காலம் 34ஆம் ஞாயிறு

உண்மையை எடுத்துரைப்பதே என் பணி

தானியேல்7:13-14
திருவெளிப்பாடு1:5-8
யோவான்18:33-37

இன்று நாம் கிறிஸ்து அரசர் பெருவிழாவினைக் கொண்டாடுகிறோம். ஓர் அரசர் என்பவர் மக்களுக்கு முழுமையாக பணி செய்பவராகும். அந்த அரசு உண்மையின், நீதியின், அன்பின், மற்றும் சமாதானதத்தின் அரசாக அமைய வேண்டும். இப்படிப்பட்ட அரசரைத் தன்மை கொண்டவர் நம் கிறிஸ்து அரசர். இதற்கு புனித லூக்காஸ் நற்செய்தியாளர் இவ்வாறாக சான்று பகர்கிறார். அவரது ஆட்சிக்கு முடிவே இராது. (லூக் 1:33)
ஐந்து அப்பங்களை ஐயாயிரம் பேருக்கு அளித்த போது அதிசயங்கள் கொண்டு நாட்டில் பஞ்சம், பட்டினி இல்லாமல் காத்துக் கொள்வார், ஆகவே அரசராக்கிவிடலாம்.
பார்வையற்றவர், காதுகேளாதவர், உடல்நலமற்றோர் ஆகியோரை குணமாக்குவதால் நாட்டில் நோய், நொடி இல்லாமல் காத்துக் கொள்வார், ஆகவே அரசராக்கிவிடலாம்.
இறையாட்சி என்பது உண்பதையும், குடிப்பதையும் அடிப்படையாகக் கொண்டதல்ல, மேலும் உலகத்தில் காணப்படும் அரசாட்சி, அரியணை, ஆடம்பரம், ஆதிக்கம் ஆகியவற்றிற்க்கு உட்பட்டதல்ல. மாறாக இறையாட்சி எதை குறித்தது என தன் வாழ்க்கை மூலம் வாழ்ந்துக்காட்டியவர் நம் கிறிஸ்து அரசர். அவை தனது அன்பு மற்றும் கனிவு கொண்ட வார்த்தைகள், நீதி மற்றும் அமைதி வழங்கும் பார்வை, பொறுமை மற்றும் மன்னிப்பு கொடுக்கும் இதயம். இவற்றையே ஆயுதமாக கொண்டு மனித மனங்களை ஆளும் அன்பரசராக விளங்குபவர் நம் கிறிஸ்து அரசர். கிறிஸ்து அரசர் தன் அரசுரிமை காரணமாகப் பயன்படுத்தும் அதிகாரமானது மக்கள் மீதோ அல்லது மக்களுக்கு எதிராகவோ பயன்படுத்தப்படுவதல்ல. மாறாக மக்களுக்காக அவர்களின் வாழ்க்கைத்தரம் உயர்வதற்காகவே அமைந்தது. மக்களுக்காகவே முழுமையாக பணி செய்தவர் நம் கிறிஸ்து அரசர். உண்மையை எடுத்துரைப்பதே என் பணி (யோ 18:37) என்று கிறிஸ்து வல்லமையுள்ள வார்த்தைகளினாலும், அதை செயல்படுத்துவதிலும் உயர்ந்தவர். இறையாட்சி பணியை இவ்வுலகில் வாழும் போதே கொண்டுவர நம் ஒவ்வொருவருக்கும் திருச்சபை இவ்வாறாக பொறுப்பினை கொடுக்கிறது.
திருச்சபை என்பது அரசமாளிகை, அன்பு, சமாதானம், நீதி என்பது இறைவனது சிம்மாசனம். இந்த சிம்மாசனத்தில் இருந்து மற்றவர்களுக்கு கொடுக்கும் பகிர்தல்தான் படைவீரர்கள். படைவீரர்களிடம் காணப்படும் சக்தி, துணிவு எப்போதும் முன்னோக்கியதாகவே இருக்கும். இந்த இறையாட்சியில் படைவீரர்கள் கொண்டிருக்கும் கவசம் அன்பு, கனிவு, அக்கறை, அரவணைப்பு, விட்டுக்கொடுத்தல், உண்மை, தூயஆவி அருளும் கொடைகள் அனைத்தையும் வெளிப்படுத்தும் சாந்தமான வீரர்கள். கிறிஸ்து அரசரை பின்பற்றுகின்ற நாம் உண்மையில், நீதியில், அன்பில் வாழ அதை வெளிப்படுத்த வேண்டும் என நம் கிறிஸ்து அரசர் விரும்புகிறார். தொடக்ககால கிறிஸ்த்தவர்கள், சீடர்கள், மறைசாட்சிகள் கிறிஸ்துவை அரசராக வெளிப்படுத்த நாட்கள், வருடங்கள் என படைவீரர்கள் கொண்ட கவசங்களை பயன்படுத்தினார்கள்.
இந்த அறிவியல் வளர்ச்சியிலும், எல்லா சந்தர்ப்பங்களிலும் கிறிஸ்து அரசரை பின்பற்ற உதவக் கூடிய கவசத்தை நழுவவிடாமல் பாதுகாப்போம். ஆமென்.
கிறிஸ்து அரசர் வாழ்க..