இவ் மறையுரையை வழங்குபவர்

அருட்.சகோ. சி. குழந்தை திரேசா FSAG
பிரின் ஆம் கிம்சே,யேர்மனிஞாயிறு மறையுரைகள்

மதிப்பிற்குரிய அருட்பணியாளர்களே, துறவிகளே, அருட் கன்னியரே, உங்கள் ஞாயிறு மறையுரைகளை எமது இணையத்தளத்தின் ஆன்மீக வலத்தில் பிரசுரித்து, ஆண்டவர் இயேசுவின் நற்செய்தியை எல்லோருக்கும் அறிவிக்க விரும்பினால், info@tamilcatholicnews.com என்ற எமது மின்னஞ்சலுக்கு உங்களுடைய ஆக்கங்களை அனுப்பிவைக்கவும். உங்கள் மறையுரைகள் உலகெங்கும் இருக்கும் அனைத்து தமிழ் உள்ளங்களையும் சென்றடையும்.இதோ! ஓநாய்களிடையே ஆடுகளை அனுப்புவதைப்போல நான் உங்களை அனுப்புகிறேன். எனவே பாம்புகளைப்போல முன்மதி உடையவர்களாகவும் புறாக்களைப்போலக் கபடு அற்றவர்களாகவும் இருங்கள்.
(மத்தேயு 10:16)

நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள்; தந்தை, மகன், தூய ஆவியார் பெயரால் திருமுழுக்குக் கொடுங்கள். நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்களும் கடைப்பிடிக்கும்படி கற்பியுங்கள். இதோ! உலக முடிவுவரை எந்நாளும் நான் உங்களுடன் இருக்கிறேன்
(மத்தேயு 28:19-20)

நீ அவற்றை உன் பிள்ளைகளின் உள்ளத்தில் பதியுமாறு சொல். உன் வீட்டில் இருக்கும்போதும், உன் வழிப்பயணத்தின் போதும், நீ படுக்கும்போது, எழும்போதும் அவற்றைப் பற்றிப் பேசு.
(இணைச்சட்டம் 6:7)

தவக்காலத்தின் இரண்டாம் ஞாயிறு

இவருக்குச்செவிசாயுங்கள்

தொடக்க நூல 22: 1-2, 9-13, 15-18
உரோமையர் 8: 31-34
மாற்கு 9: 2-10

கிறிஸ்துவில் அன்புக்குள்ளவர்களே, சகோதர சகோதரிகளே, துடிக்கும் இளைய நெஞ்ங்களே அருமைச் சிறார்களே, இணையதள நண்பர்களே. இன்றைய மறையுறை வழியாக உங்களை சந்திப்பதில் மகிழ்ச்சி. இன்றைய வாரம் நம்மை இறைவன் செவிமடுக்க அழைக்கிறார்.. இன்றைய நற்செய்தியில் உயர்ந்த மலைக்கு சென்றதாக வாசிக்க கேட்கிறோம். இறைவனை சந்திப்பதற்கு ஏற்ற இடம் அமைதியான சூழல். அங்கு நாம் இறைவனின் பிரசன்னத்தை எளிதில் கண்டுக்கொண்டு புரிந்துக் கொள்ளலாம். மலைப்பகுதியில் தான் வியத்தகு செயல்களை கடவுள் நிறைவேற்றுவதாக வாசிக்கின்றோம்.
• ஆபிரகாமுக்குக் கட்டளையிட்ட இறைவன் தேர்ந்து கொண்ட இடம் --(தொ 22:2) ″உன் மகனை, நீ அன்பு கூரும் உன் ஒரே மகனான ஈசாக்கை அழைத்துக் கொண்டு, மோரியா நிலப்பகுதிக்குச் செல். அங்கு நான் உனக்குக் காட்டும் மலைகளில் ஒன்றின் மேல் எரி பலியாக அவனை நீ பலியிடவேண்டும்″.
• மோசசேயை அழைத்த இடம் -- (விப 3:1) மோசே மிதியானின் அர்ச்சகராகிய தம் மாமனார் இத்திரோவின் ஆட்டு மந்தையை மேய்த்து வந்தார். அவர் அந்த ஆட்டு மந்தையைப் பாலை நிலத்தின் மேற்றிசையாக ஓட்டிக் கொண்டு கடவுளின் மலையாகிய ஓரேபை வந்தடைந்தார்.
• சீனாய் மலையில் தந்த கட்டளைகள் -- (விப 19,20) ஆண்டவர் சீனாய் மலைமேல் மலையுச்சியில் இறங்கி வந்தார். அப்போது ஆண்டவர் மோசேயை மலையுச்சிக்கு அழைக்க, மோசே மேலே ஏறிச்சென்றார்.
• இறைமகன் இயேசு கூறிய மலைப்பொழிவு -- (மத் 5:1) இயேசு மக்கள் கூட்டத்தைக் கண்டு மலைமீது ஏறி அமர, அவருடைய சீடர் அவரருகே வந்தனர்.
• இறைவனிடம் வேண்ட ஒலிவ மலைக்கு இயேசு செல்கிறார் -- (லூக் 22:39) இயேசு அங்கிருந்து புறப்பட்டுத் தம் வழக்கப்படி ஒலிவ மலைக்குச் சென்றார். சீடர்களும் அவரைப் பின் தொடர்ந்தார்கள்.

இவ்வாறாக மலைப்பகுதியில் இறைவன் காட்சிக் கொடுத்து, உடன்படிக்கை செய்தது உறவுகளை வலுப்பெறச் செய்தது புதுவாழ்வுக்கு அழைத்துச் செல்வதாக இருக்கிறது. (எசா 55.9) மண்ணுலகத்திலிருந்து விண்ணுலகம் மிக உயர்ந்து இருப்பதுபோல உங்கள் வழிமுறைகளைவிட என் வழிமுறைகளும், உங்கள் எண்ணங்களைவிட என் எண்ணங்களும் மிக உயர்ந்திருக்கின்றன. உயர்நிலையில் இருக்கும் இறைவன் உயர்ந்தவற்றையே ஒவ்வொரு மனிதனுக்கும் செய்கிறார். நம்பிக்கை கொண்டவர்களாக, உறுதிப்படைத்தவவர்களாக இறைவன் நமக்காக கொடுத்த வாழ்க்கைப் பாதையை அவரின் துணையோடு அறிய வருவோம். கறைப்படாத மாசற்ற மனம் உடையவராக வாழும் போது நாம் உயர்ந்து இருப்போம். ஆகவே நமது எண்ணங்களை மாற்றி உயர்வாக கருதவும், நினைக்கவும், அனைத்து சூழல்நிலைகளிலும் உயர்வாக இருக்கும் இறைவனைப் பற்றிக்கொள்ளவும் வரம் கேட்போம்.

தோற்றம் மாறுதல் என்பது உள்ளொளிப் பெற்று புதுப்பொலிவை மற்றவருக்கு வழங்குதல். இறைமகன் இயேசு சக்தியினைப் பெற்றுகிறார். கடவுள் அவருக்கு ஆற்றலும், எழிலும் மிக்க வியத்தகு செயல்களை அறிவிக்க மாட்சிப்படுத்துகிறார். மண்ணுலகம் களிகூர்வதற்காக, விண்ணுலகில் இருந்து பேரன்பின் மூலமாக பூவுலகை நிறைவு செய்யத் தம் ஒரே மகனை அவரது திருவுளப்படி தோற்றம் மாறச் செய்தார். உருக்கொடுக்கும் இறைவன் நமக்கு மாற்றத்தைக் கொடுக்க உறுதியுள்ளவராக இருக்கிறார். உயர்வான எண்ணங்கள் உருவாகும் போது நமது மனித தன்மைகள் கனிவு நிறைந்தாக இருக்கிறது. அடிப்படையில் நமது எண்ணங்கள் செயல்பாடுகள் நல்லவையை. ஆனால் சூழ்நிலைகளுக்கு ஏற்ப, கால வளர்ச்சியின் போக்கில் நமது உண்மையான நிறங்கள் கூட தோற்றம் மாறுகின்றன. இந்த தோற்றத்தைக் கொண்டு மற்றவருக்கு ஆற்றல் கொடுக்கின்றோமா? அழிந்து போகும் சக்தியை பரிமாறுகின்றோமா?

இறைமகன் இயேசு உவமைகள், போதனைகள் வழியாக கற்பிக்கும் போது பயன்படுத்திய வார்த்தை (மாற் 4:23-24) கேட்கச் செவியுள்ளோர் கேட்கட்டும் என்றார். மேலும் அவர், நீங்கள் கேட்பதைக் குறித்துக் கவனமாயிருங்கள். கடவுளின் திட்டத்தை அறிய மனிதருக்கு இயேசு வாய்ப்பு கொடுக்கிறார். இன்றைய நற்செய்தியில் பேதுரு, யாக்கோப்பு, யோவானை அழைத்து தந்தையின் குரலை கேட்பதற்கு இயேசு வாய்ப்பு கொடுக்கிறார். “என் அன்பார்ந்த மைந்தர் இவரே; இவருக்குச்செவிசாயுங்கள்” என தந்தை கடவுள் நம்மையும் பார்த்துக் கேட்கிறார் ஆகவே நாம் இறைவனுடைய குரலை கேட்கத் தயாராக இருக்கிறோமா? அல்லது நமக்கு எது சாதகமாக இருக்கிறதோ அதை மட்டும் கேட்க நமது காதுகளையும், மனதையும் அகல திறக்கிறோமா? இன்றையத் திருப்பலி கொண்டாட்டம் நமக்கு தெளிவை கொடுப்பதாக அமையட்டும். ஆமென்.