இவ் மறையுரையை வழங்குபவர்

அருட்.சகோ. சி. குழந்தை திரேசா FSAG
பிரின் ஆம் கிம்சே,யேர்மனி



ஞாயிறு மறையுரைகள்

மதிப்பிற்குரிய அருட்பணியாளர்களே, துறவிகளே, அருட் கன்னியரே, உங்கள் ஞாயிறு மறையுரைகளை எமது இணையத்தளத்தின் ஆன்மீக வலத்தில் பிரசுரித்து, ஆண்டவர் இயேசுவின் நற்செய்தியை எல்லோருக்கும் அறிவிக்க விரும்பினால், info@tamilcatholicnews.com என்ற எமது மின்னஞ்சலுக்கு உங்களுடைய ஆக்கங்களை அனுப்பிவைக்கவும். உங்கள் மறையுரைகள் உலகெங்கும் இருக்கும் அனைத்து தமிழ் உள்ளங்களையும் சென்றடையும்.



இதோ! ஓநாய்களிடையே ஆடுகளை அனுப்புவதைப்போல நான் உங்களை அனுப்புகிறேன். எனவே பாம்புகளைப்போல முன்மதி உடையவர்களாகவும் புறாக்களைப்போலக் கபடு அற்றவர்களாகவும் இருங்கள்.
(மத்தேயு 10:16)

நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள்; தந்தை, மகன், தூய ஆவியார் பெயரால் திருமுழுக்குக் கொடுங்கள். நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்களும் கடைப்பிடிக்கும்படி கற்பியுங்கள். இதோ! உலக முடிவுவரை எந்நாளும் நான் உங்களுடன் இருக்கிறேன்
(மத்தேயு 28:19-20)

நீ அவற்றை உன் பிள்ளைகளின் உள்ளத்தில் பதியுமாறு சொல். உன் வீட்டில் இருக்கும்போதும், உன் வழிப்பயணத்தின் போதும், நீ படுக்கும்போது, எழும்போதும் அவற்றைப் பற்றிப் பேசு.
(இணைச்சட்டம் 6:7)









பொதுக்காலம் 31 ஆம் ஞாயிறு

பேறுபெற்றோர்

திருவெளிப்பாடு 7:2-4.9-14
1யோவான்3:1-3
மத்தேயு5:1-12

இன்றைய ஞாயிறு நற்செய்தியானது பேறுபெற்றோர் வரிசையில் நாம் இணைந்து வாழ்ந்திட வரவேற்கிறது. ஆம் இறைவனால் உருவாக்கப்பட்ட திருச்சபை பேறுபெற்றது, அதில் வாழும் நாமும் பேறுபெற்றவர்களாக வாழ கொடுக்கப்படும் கட்டளைத்தான் மலைபொழிவு. அன்று பழைய ஏற்பாட்டில் மோசேயின் வழியாக சீனாய் மலையிலிருந்து இஸ்ராயேல் மக்களுக்கு கொடுக்கப்பட்டது பத்துகட்டளை, புதிய ஏற்பாட்டில் இறைமகன் இயேசு காலத்திற்கு ஏற்ப சற்று எளிய நடைமுறையில் மலைபொழிவு என்னும் கட்டளையை பயன்படுத்துகிறார்.
பேறுபெற்றோர்
ஏழையரின் உள்ளத்தோர் பேறுபெற்றோர்; ஏனெனில் விண்ணரசு அவர்களுக்கு உரியது. (மத்5:2) என்று கூறும் இயேசு `மனிதநேயம்` உடையவர்கள் அனைவரும் பேறுபெற்றவர்கள் என்றும் கூறுகிறார். இதற்கு எடுத்துக்காட்டாக நாம் புரிந்து கொள்ளும் வகையில் திருச்சபை நமக்கு உதவி செய்கிறது. எவ்வாரெனில் தினமும் ஒரு புனிதரை நமக்கு நினைவுப்படுத்தி அவர்களின் வாழ்க்கை நடைமுறையையும், இயல்பையும் உள்வாங்கி கொள்ள அழைக்கிறது.
இறைவனுக்காக தன் உள்ளத்தையும், உடலையும் அர்ப்பணித்துத் துன்பங்களை, இன்பங்களாக ஏற்றவர்கள், உலக மாந்தர்களின் நலனுக்காகவும், அவர்கள் நெறிபிறழாமல் வாழ வழிகாட்டியாகவும் நின்றவர்கள். தன்னலமற்று தியாக தீபங்களாக வாழ்ந்து மறைந்தவர்களைத்தான் தூயவர்களாக அல்லது புனிதர்களாக அடையாளப்படுத்துகிறது நம் கத்தோலிக்கத் திருச்சபை.
இறைவனின் மீட்புத்திட்டத்திற்கு முதல் அன்னையாகவும், அரசியாகவும் திகழும் அன்னைமரி ஏழையரின் உள்ளத்தை கண்நோக்கியவர். - அவருக்கு அஞ்சி நடப்போருக்குத் தலைமுறை தலைமுறையாய் அவர் இரக்கம் காட்டி வருகிறார். அவர் தம் தோள் வலிமையைக் காட்டியுள்ளார்; உள்ளத்தில் செருக்குடன் சிந்திப்போரைச் சிதறடித்து வருகிறார். வலியோரை அரியணையினின்று தூக்கி எறிந்துள்ளார்; தாழ்நிலையில் இருப்போரை உயர்த்துகிறார். பசித்தோரை நலன்களால் நிரப்பியுள்ளார்; செல்வரை வெறுங்கையராய் அனுப்பிவிடுகிறார். மூதாதையருக்கு உரைத்தபடியே அவர் ஆபிரகாமையும் அவர்தம் வழி மரபினரையும் என்றென்றும் இரக்கத்தோடு நினைவில் கொண்டுள்ளார்; தம் ஊழியராகிய இஸ்ரயேலுக்குத் துணையாக இருந்து வருகிறார். (லூக்1:50-55)
கடவுளின் விருப்பத்தை செயல்படுத்துவது எனது தலையாகிய கடமை மேலும் எனக்கு கொடுக்கப்பட்ட பொறுப்பு என வாழ்ந்தவர் புனித சூசையப்பர், இவர் கனிந்த உள்ளம் கொண்டவர். - கனிவுடையோர் பேறுபெற்றோர்; ஏனெனில் அவர்கள் நாட்டைஉரிமைச் சொத்தாக்கிக் கொள்வர். (மத்5:5)
இறைமகன் இயேசுவிடம் பயிற்சியை பெற்று இறையரசுக்காக உழைத்த திருத்தூதர்கள். நீதிநிலைநாட்டும் வேட்கை கொண்டோர் பேறுபெற்றோர்; ஏனெனில் அவர்கள் நிறைவுபெறுவர். (மத்5:6)
தனது இரத்தத்தை கொடுத்து மறைசாட்சிகளாக விளங்கிய சாட்சிகள். நீதியின் பொருட்டுத் துன்புறுத்தப்படுவோர் பேறு பெற்றோர்; ஏனெனில், விண்ணரசு அவர்களுக்குரியது. (மத்5:10)
புனித அகுஸ்தினார் வாழ்க்கையில் மாற்றம் ஒன்றே சுழற்சி முறையில் இயங்குவது என்று திருந்தியவர். தூய்மையான உள்ளத்தோர் பேறுபெற்றோர்; ஏனெனில் அவர்கள் கடவுளைக் காண்பர். (மத்5:8)
புனித தெரசம்மாள் தன்வாழ்நாளெல்லாம் செபத்திலேயே கழித்து இறப்பதற்கு முன்பு என் பணி இனிமேல் தான் ஆரம்பமாகிறது என்று கூறி விண்ணகத்தில் உலக மக்களுக்காகப் பரிந்து பேசி செபிக்கப் போவதாக அறிவித்துச்சென்றாள். அமைதி ஏற்படுத்துவோர் பேறுபெற்றோர்; ஏனெனில் அவர்கள்கடவுளின் மக்கள் என அழைக்கப்படுவர். (மத்5:9)
புனித அலோசியஸ் கொன்சாகா இளம்வயதிலேயே தூயவராகும் எண்ணத்தோடு தனது வாழ்க்கையில் தெய்வபயம், பக்தி கொண்டு உடல்நிலையற்றவருக்காக தனது அரச வாழ்வை துறந்து ஆறுதல் வழங்கினார். துயருறுவோர் பேறுபெற்றோர்; ஏனெனில் அவர்கள் ஆறுதல் பெறுவர். (மத்5:4)
இன்றைய திருவிழா கடவுளுக்கு முழுவதும் தம் வாழ்வைத் திறந்து, கடவுளை சார்ந்து வாழ்ந்தார்கள் தான் புனிதர்கள் என எண்பிக்கிறது. கடவுளை சார்ந்து வாழ பழகுவோம், பேறுபெற்றோர் வரிசையில் நாமும் இடம் பெறுவோம். வறுமை ஒழிப்பு தினமாகிய இன்று சிறப்பாக புனிதர்களிடம் வேண்டுவோம். ஆமென்