இவ் மறையுரையை வழங்குபவர்

அருட்.சகோ. சி. குழந்தை திரேசா FSAG
பிரின் ஆம் கிம்சே,யேர்மனிஞாயிறு மறையுரைகள்

மதிப்பிற்குரிய அருட்பணியாளர்களே, துறவிகளே, அருட் கன்னியரே, உங்கள் ஞாயிறு மறையுரைகளை எமது இணையத்தளத்தின் ஆன்மீக வலத்தில் பிரசுரித்து, ஆண்டவர் இயேசுவின் நற்செய்தியை எல்லோருக்கும் அறிவிக்க விரும்பினால், info@tamilcatholicnews.com என்ற எமது மின்னஞ்சலுக்கு உங்களுடைய ஆக்கங்களை அனுப்பிவைக்கவும். உங்கள் மறையுரைகள் உலகெங்கும் இருக்கும் அனைத்து தமிழ் உள்ளங்களையும் சென்றடையும்.இதோ! ஓநாய்களிடையே ஆடுகளை அனுப்புவதைப்போல நான் உங்களை அனுப்புகிறேன். எனவே பாம்புகளைப்போல முன்மதி உடையவர்களாகவும் புறாக்களைப்போலக் கபடு அற்றவர்களாகவும் இருங்கள்.
(மத்தேயு 10:16)

நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள்; தந்தை, மகன், தூய ஆவியார் பெயரால் திருமுழுக்குக் கொடுங்கள். நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்களும் கடைப்பிடிக்கும்படி கற்பியுங்கள். இதோ! உலக முடிவுவரை எந்நாளும் நான் உங்களுடன் இருக்கிறேன்
(மத்தேயு 28:19-20)

நீ அவற்றை உன் பிள்ளைகளின் உள்ளத்தில் பதியுமாறு சொல். உன் வீட்டில் இருக்கும்போதும், உன் வழிப்பயணத்தின் போதும், நீ படுக்கும்போது, எழும்போதும் அவற்றைப் பற்றிப் பேசு.
(இணைச்சட்டம் 6:7)

பொதுக்காலம் 29 ஆம் ஞாயிறு

ஆசைகொள்

எசாயா 53:10-11
எபிரேயர் 4:14-16
மாற்கு 10:35-45

இன்றைய வாரம் இறைவன் விரும்பும் வாழ்விற்குள் செல்ல அழைப்புவிடுக்கிறது. இவ்வுலகில் பிறந்த மனிதர்களாகிய நாம் அனைவரும் நமது விருப்ப படி ஒரு வாழ்வை உருவாக்க விருப்பப் படுகிறோம். அவற்றை பல வகைகளில் உள்ளடங்கிறோம். மகிழ்ச்சி நிறைந்த வாழ்வு, அமைதியின் பாதையில் செல்லுதல், சிற்றின்பம், பேராசை, பணம், அதிகாரம், ஆயுதம் என்றெல்லாம் வாழ்கிறோம். இவற்றிற்காக ஏங்காத இதயங்கள் கிடையாது.
இன்றைய நற்செய்தியில் ஆண்டவரின் இருக்கைக்காக யாக்கோபுவும், யோவானும் ஆசைப்படுவதை எண்பிக்கிறது. அன்று முதல் இன்று வரை ஆண்டவர் யாருக்கும் போட்டியாக இருந்ததில்லை. ஆனால் பரிசேயர்கள், தலைமைக் குருக்கள் எப்படியாவது பதவியை தற்காத்துக் கொள்ள வேண்டுமென்ற எண்ணத்தில் செயல்பட்டார்கள். காரணம் மக்கள் கூட்டம் இயேசுவின் பின்னால் சென்றது. அதே போன்று யாக்கோபுவும், யோவானும் புகழுக்கும், பதவிக்கும் ஆசைப்பட்டு இறைமகன் இயேசுவின் கோட்பாடுகளையும், நெறிமுறைகளையும், மதிப்பீடுகளையும் பின்பற்ற தயங்குவதை ஆசை என்னும் அடையாளமாக புனித மாற்கு நற்செய்தியார் விளங்குகிறார்.
சின்னச் சின்ன ஆசை சிறகடிக்கும் ஆசை
முத்து முத்து ஆசை முடிந்து வைத்த ஆசை
வெண்ணிலவு தொட்டு முத்தமிட ஆசை...
என்னை இந்த பூமி...சுற்றி வர ஆசை...
மல்லிகைப் பூவாய் மாறிவிட ஆசை
தென்றலைக் கண்டு மாலையிட ஆசை
மேகங்களையெல்லாம் தொட்டுவிட ஆசை...
சோகங்களையெல்லாம் விட்டுவிட ஆசை...
கார்குழலில் உலகை...கட்டிவிடஆசை...
சேற்று வயல் ஆடி நாற்று நட ஆசை
மீன்பிடித்து மீண்டும் ஆற்றில் விட ஆசை
வானவில்லைக் கொஞ்சம் உடுத்திக் கொள்ள ஆசை
பனித்துளிக்குள் நானும் படுத்துக் கொள்ள ஆசை
சித்திரைக்கு மேலே சேலை கட்ட ஆசை... ஆசைகளை நல்வழியில் கொண்டு செல்ல அனைவராலும் இயலும், ஆகவே தேவையான ஆசைகளை வளர்த்துக்கொள்ள ஆசைபடுவோம்.
ஒரு சின்ன ஊர் . அங்கே ஒரு பள்ளிக்கூடம் . அதிகமாக யாரும் அங்கே படிக்க வருவதில்லை .பெற்றோர்களுக்கும் அக்கறை இல்லை .எதோ பள்ளிக்கூடம் என ஒன்று இருப்பதால் ,தங்கள் பிள்ளைகளை அங்கே அனுப்பி வைத்தார்கள் அவ்வளவுதான் .வகுப்புக்கு வந்த ஒரு மாணவன் மிகவும் மந்தமாக உக்கார்ந்திருந்தான் .ஆசிரியர் அவனை கவனித்தார் ." என்னப்பா ... இப்படி உக்கார்ந்திருக்கே ... படிப்பில் கவனமில்லையா ...?" ஐயா ... என் கவனமெல்லாம் எங்க வீட்டுலேயே இருக்கு !""அப்படி என்ன உங்க வீட்டுல இருக்கு ?"" ஒரு பசுமாடு இருக்கு ! "என்னப்பா சொல்றே ஐயா .. நேத்து எங்க அப்பா புதுசா ஒரு பசுமாடு வாங்கிட்டு வந்தார் , அதை எங்க வீட்டு வாசல்ல கட்டி போட்டிருக்கார் .என் நினைவெல்லாம் பசுமாடு மேலேயே இருக்கு ஆசிரியர் கோபமடைந்தார் , யோசித்தார் ,தம்பி ! ஒண்ணு செய்" நான் உனக்கு ஒரு வாரம் லீவு தர்றேன் .. நீ என்ன பண்ற ... நம்ம ஊர் எல்லையில ஒரு மலை இருக்கே .. அங்க ஒரு குகை இருக்கு ... அதுல போய் உக்கார்ந்துக்க ! ஒரு வாரம் பூரா மாட்டை பத்தியே நினை ... பிறகு வா...!"" சரி .. சார் ...! என்று சொல்லிவிட்டு அவன் புறப்பட்டான் .ஆசிரியர் நினைத்து கொண்டார்" ஆசை தீரும் வரையில் அவன் மாட்டை பற்றியே சிந்தித்து கொண்டு இருப்பான் . பிறகு கொஞ்ச நேரத்திலேயே மறந்து விடுவான் "ஒரு வாரம் கழிந்தது .ஆசிரியர் வகுப்பறையில் நுழைந்தார் .அந்த மாணவன் வெளியே நின்று கொண்டு இருந்தான் .அவர் அவனிடம்" என்னப்பா! மாட்டை பத்தி யோசித்து முடிச்சிட்டியா ? இப்போ மாட்டை பத்தின நினைவில்லையே ?அவன் இல்லை என தலை ஆட்டினான் .அப்பறம் ஏன் இன்னும் வெளியே நிக்கிறாய் ?அவன் சொன்னான் " சார் நான் உள்ளே வரலாம்னு தான் நினைக்கிறேன் , ஆனா என் தலைல இருக்கற கொம்பு உள்ள வர முடியாதபடி மேலே இடிச்சிகிட்டு நிக்குது ".ஆசிரியர் திகைத்து நின்றார் . மாட்டை பற்றியே சிந்தித்து சிந்தித்து , இவன் தான் அதுவாக மாறிவிட்டதாக உணர்கின்றான் .ஜென் கதையில தியானம் எப்படி செய்யணும் என்பதற்க்காக தியானத்தை பற்றி இப்படி ஒரு கதையை சொல்வதுண்டு .நாம யாரை பத்தி அடிக்கடி நினைத்து கொண்டு இருக்கிறோமோ , பேசி கொண்டு இருக்கிறோமோ அவங்களோட குணாதிசயம் நமக்கு வந்துரும் , நாம அவங்களா மாறுகிறோம் .
விவேகானந்தர் கூட சொல்லுவர்
" நீ எதை எண்ணுகிறாயோ அதுவாகவே ஆகிறாய் " என்று .
உங்களுள் முதன்மையானவராக இருக்க விரும்புகிறவர், அனைவருக்கும் பணியாளராக இருக்கட்டும். (மாற்கு 10:44)
இறைவன் பணியாளராக வாழ்ந்து காட்டிய விதம் இவ்வாறாக என் அன்பில் நிலைத்திருங்கள், ஒருவர் மற்றவரிடம் அன்பு செலுத்துங்கள், நல்ல மரங்கள் எல்லாம் நல்ல கனிகளைக் கொடுக்கும், ஆண்டவரும் போதகருமான நான் உங்கள் காலடிகளைக் கழுவினேன் என்றால் நீங்களும் ஒருவர் மற்றவருடைய காலடிகளைக் கழுவக் கடமைப்பட்டிருக்கிறீர்கள். இதுவே இறைமகன் இயேசு பயன்படுத்திய பணியாளராகிய தலைமைத்துவம்.
இந்த தலைமைத்துவத்தை பின்பற்றும் போது சாந்த குணம், தூய்மையான அன்பு, நீதி, இரக்கம் ஆகியவற்றை நமதாக்கிக் கொள்கிறோம். இயேசுவைப்பற்றி சிந்திக்கும் நாம் அவரைப்போல் வாழவும், அவராக நாம் பிரதிபலிக்கவும் விரும்புகிறார். ஆகவே ஆசை கொள்ளுவோம், ஆண்டவரின் வலப்புறமும், இடப்புறமும் அமர நாம் கேட்காமலே நமக்கு வாய்ப்பு கிடைக்கும். ஆமென்.