இவ் மறையுரையை வழங்குபவர்

அருட்.சகோ. சி. குழந்தை திரேசா FSAG
பிரின் ஆம் கிம்சே,யேர்மனி



ஞாயிறு மறையுரைகள்

மதிப்பிற்குரிய அருட்பணியாளர்களே, துறவிகளே, அருட் கன்னியரே, உங்கள் ஞாயிறு மறையுரைகளை எமது இணையத்தளத்தின் ஆன்மீக வலத்தில் பிரசுரித்து, ஆண்டவர் இயேசுவின் நற்செய்தியை எல்லோருக்கும் அறிவிக்க விரும்பினால், info@tamilcatholicnews.com என்ற எமது மின்னஞ்சலுக்கு உங்களுடைய ஆக்கங்களை அனுப்பிவைக்கவும். உங்கள் மறையுரைகள் உலகெங்கும் இருக்கும் அனைத்து தமிழ் உள்ளங்களையும் சென்றடையும்.



இதோ! ஓநாய்களிடையே ஆடுகளை அனுப்புவதைப்போல நான் உங்களை அனுப்புகிறேன். எனவே பாம்புகளைப்போல முன்மதி உடையவர்களாகவும் புறாக்களைப்போலக் கபடு அற்றவர்களாகவும் இருங்கள்.
(மத்தேயு 10:16)

நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள்; தந்தை, மகன், தூய ஆவியார் பெயரால் திருமுழுக்குக் கொடுங்கள். நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்களும் கடைப்பிடிக்கும்படி கற்பியுங்கள். இதோ! உலக முடிவுவரை எந்நாளும் நான் உங்களுடன் இருக்கிறேன்
(மத்தேயு 28:19-20)

நீ அவற்றை உன் பிள்ளைகளின் உள்ளத்தில் பதியுமாறு சொல். உன் வீட்டில் இருக்கும்போதும், உன் வழிப்பயணத்தின் போதும், நீ படுக்கும்போது, எழும்போதும் அவற்றைப் பற்றிப் பேசு.
(இணைச்சட்டம் 6:7)









பொதுக்காலம் 26 ஆம் ஞாயிறு

இறையாட்சி பணி

எண்ணிக்கை 11: 25-29
யாக்கோபு 5: 1-6
மாற்கு 9: 38-48

இன்றைய நற்செய்தியை நாம் வாசித்தோமேயானால் அதன் கருத்துகளை புரிந்து இறைவனை ஏற்றுக்கொள்வது என்பது எளிதானதாக இருக்க இயலாது. எவ்வாரெனில் மேலோட்டமாக வாசித்தால் எதிர்மறையான வார்த்தைகள் பயன்படுத்துவது போல் நமக்கு தோன்றும். இதை விசுவாச நம்பிக்கையில் அறிந்துக்கொள்ள இன்றைய நற்செய்தி அழைக்கிறது.
நம்மைச் சார்ந்தவர், சாரதவர்
இறைமகன் இயேசு பாகுபாடு இல்லாமல் இறையாட்சி பணியை செய்தார். நம்மை சாராதவர் என்று கூறுவது இறையாட்சிக்கு ஏற்ற வாழ்வு அல்ல. அன்று இறைமகன் இயேசு பரிசேயர், சதுசேயர், பாவிகள், ஏழைகள், பெண்கள், சிறுவர்கள், உடல்நலமற்றோர், ................. இவ்வாறு நம்மை சார்ந்தவர், சாராதவர் என பாகுபாடு இல்லாமல் அனைவரையும் ஏற்றுக்கொள்கிறார். அனைவரும் வாழ்வு பெற தன்னையே கொடுக்கிறார். அவரின் வழி மரபில் வந்த நாமும் அவற்றை பின்பற்றுகிறோம். ஆம் இன்றைய நாட்களில் ஐரோப்பிய நாடுகளை எடுத்துக்கொண்டேமேயானால், மற்ற நாடுகளில் இருந்து வரும் அகதிகளை சார்ந்தவர், சாராதவர் என பார்க்காமல் ஏற்றுக்கொள்கிறார்கள். இறையாட்சி மண்ணில் அழிந்து விடவில்லை. இறைவனுக்கு நன்றி கூறுவோம். இவ்வாறு அனைத்து கண்டங்களிலும் மொழி, இனம், சாதி, நிறம், படித்தவர், புறந்தள்ளப்பட்டோர் என குழுவாக பிரிந்து நம்மைச் சார்ந்தவர், சாராதவர் என காணப்படும் உலகிற்கு, இன்றைய நற்செய்தி கூறும் செய்தி இறைவன் நாமத்தில் வல்லமைமிக்க இறையாட்சியை கொண்டுவர அறிவுறுத்தப்படுகிறோம்.
நாம் வாழும் குடும்பம், சமுதாயம், நாடு இவற்றில் நான் எப்படிப்பட்ட சார்வுதன்மையை கொண்டுள்ளேன்?
இழப்பது இறைவனின் கட்டளைகளையா? உடல் உறுப்பையா?
நேரிய வழியில் செல்ல இறைவனின் கட்டளைகள் உதவியாக இருக்கின்றன. கட்டளைகளை பின்பற்றும் போது கடமைகள், பொறுப்புக்கள் அனைத்திற்கும் வாழ்க்கையில் இருந்து பொருள் கொடுக்கிறோம். அவ்வாறு முயற்ச்சிக்கும் போது மனித தன்மையில் உடல் உறுப்புக்கள் நம்மை தேர்வு செய்ய பணிக்கிறது. அனைத்து உறுப்புக்களும் தனது பணியை செய்ய மறுக்கிறது அல்லது மறுதலிக்க நமது சோர்வு சோம்பல் காரணமாகிறது. இந்த காரணங்களை கொண்டு நிலை வாழ்வுக்கு உகந்த வாழ்க்கை நிலையை அறிந்துக்கொள்ள முடிவதில்லை. இன்றைய நற்செய்தியில் கூறுவது செய்தி உடல் உறுப்புக்கள் இல்லையென்றாலும் கூட உங்களது நற்செயல்கள் வழி இறையாட்சிக்கு உட்படுவது எளிது என அறிவுறுத்துகிறார்.
இறைவன் கட்டளைகளின் வழி நற்செயல்களை செய்து நமது உடல் உறுப்பை ஆலயமாக மாற்றி அது மற்றவருக்கு வாழும் போதும், இறந்த பின்பு தானம் என்ற உயரிய நற்செயல் வழி இறையாட்சியை அமைப்போம்.
வாழ்வில் சேர்ப்பது பரலோக நன்மையா? பாவம் நிறைந்த தன்மையா?
பாவம் நிறைந்த வாழ்வை இறைமகன் இயேசு கடிந்து கொள்கிறார். இறைவனை சார்ந்திருக்கும் நமது வாழ்வு பலவீனத்தால் வீழ்ந்து விடாமல் கிறிஸ்தவ மதீப்பீடுகள், நம்பிக்கை, விசுவாசம் என்னும் பலத்தால் நன்மையடைய இன்றைய நற்செய்தி சொல்கிறது. பரலோக வாழ்விற்கு பலம் கொடுக்கும் சக்தி, ஆற்றல், திறமைகள் ஏராளமாக நம்மிடம் புதைந்து கிடக்கிறது. அவற்றை இறையாட்சி பணிக்காக இவ்வுலகில் நடைமுறையாக்க முயற்சிப்போம். நடைமுறையில் செயல்படுத்தும் போது பாவம் என்ற நிலை மறைந்து போகும். பரலோக வாழ்விற்கு தேவையான அருள்வாழ்வு ஆனந்தத்தை கொடுக்கும். அள்ளித்தரும் இறைவனின் ஆசீர்வாதங்களைப் பெற்று அகமகிழ்ந்து அகிலத்தில் ஆண்டவரை பிரதிப்பலிக்க முற்படுவோம். ஆமென்.