இவ் மறையுரையை வழங்குபவர்

அருட்.சகோ. சி. குழந்தை திரேசா FSAG
பிரின் ஆம் கிம்சே,யேர்மனிஞாயிறு மறையுரைகள்

மதிப்பிற்குரிய அருட்பணியாளர்களே, துறவிகளே, அருட் கன்னியரே, உங்கள் ஞாயிறு மறையுரைகளை எமது இணையத்தளத்தின் ஆன்மீக வலத்தில் பிரசுரித்து, ஆண்டவர் இயேசுவின் நற்செய்தியை எல்லோருக்கும் அறிவிக்க விரும்பினால், info@tamilcatholicnews.com என்ற எமது மின்னஞ்சலுக்கு உங்களுடைய ஆக்கங்களை அனுப்பிவைக்கவும். உங்கள் மறையுரைகள் உலகெங்கும் இருக்கும் அனைத்து தமிழ் உள்ளங்களையும் சென்றடையும்.இதோ! ஓநாய்களிடையே ஆடுகளை அனுப்புவதைப்போல நான் உங்களை அனுப்புகிறேன். எனவே பாம்புகளைப்போல முன்மதி உடையவர்களாகவும் புறாக்களைப்போலக் கபடு அற்றவர்களாகவும் இருங்கள்.
(மத்தேயு 10:16)

நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள்; தந்தை, மகன், தூய ஆவியார் பெயரால் திருமுழுக்குக் கொடுங்கள். நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்களும் கடைப்பிடிக்கும்படி கற்பியுங்கள். இதோ! உலக முடிவுவரை எந்நாளும் நான் உங்களுடன் இருக்கிறேன்
(மத்தேயு 28:19-20)

நீ அவற்றை உன் பிள்ளைகளின் உள்ளத்தில் பதியுமாறு சொல். உன் வீட்டில் இருக்கும்போதும், உன் வழிப்பயணத்தின் போதும், நீ படுக்கும்போது, எழும்போதும் அவற்றைப் பற்றிப் பேசு.
(இணைச்சட்டம் 6:7)

பொதுக்காலம் 24 ஆம் ஞாயிறு

தன்னையறிதல்

எசாயா 50:5-9
யாக்கோபு 2:14-18
மாற்கு 8:27-35

இன்றைய 24 ஆம் ஞாயிறு இறைமகன் இயேசு, புனித பவுல், புனித பேதுரு இவர்களை பற்றி சிந்திப்பதற்கு மீண்டும் வாய்ப்பு கொடுக்கப்படுகிறது.
1. ஒருவரிடம் நம்பிக்கை இருப்பது போல் இன்னொருவரிடம் செயல்கள் இருக்கின்றன - புனித பவுல்
• யானையின் பலம் தும்பிக்கையிலே
மனிதனின் பலம் நம்பிக்கையிலே என்கிறது பழமொழி
• எந்த அளவு இறைவன் மீது நம்பிக்கை வைக்கிறோமோ அந்த அளவிற்கு இறைவனது அருள் நமக்காகச் செயல்பட்டு உதவும்.
• இறைவனுடன் தொடர்பு கொண்டு அவரது திருக்கரங்களில் நம்மை ஒப்படைத்துவிட்டால், அவர் தன்னுடைய சொந்த சக்தியை நமக்கு அளிப்பார்.
• ஒருவருக்கு தெய்வ நம்பிக்கை, நல்ல செயல்கள் இவை இரண்டும் இருக்க வேண்டும். இறைநம்பிக்கை கொண்ட செயல்கள் எப்போதும் வெற்றியை தருகின்றன.
நம்பிக்கை தான் நம் வாழ்வின் உயிர்நாடி. அடுத்த வினாடி என்ன நடக்கும் என்பது நமக்குத் தெரியாது. நாளை நாம் பிழைத்திருப்போமா என்பதும் தெரியாது. ஆனால் நாம் நீண்ட காலம் உயிருடன் வாழ்வோம் என்ற நம்பிக்கையில் தான் நமது வாழ்க்கைச்சக்கரம் சுழன்று கொண்டிருக்கிறது. நம்பிக்கையே மனிதனின் ஒழுக்கத்திற்கும், உயர்வுக்கும் காரணம். கடவுளிடம் திடமான நம்பிக்கை வையுங்கள். அவரது அருட் கருணையிலும், வல்லமைமிக்க செயல்களிலும் நம்பிக்கை வையுங்கள். ஆண்டவர் நம்மைச்சகல தடைகளிலிருந்தும் விடுவித்து, நம்மைக்காப்பாற்றுவார் என்று உறுதியுடன் நம்பும் போது வாழ்வு பொருள் கொடுக்கிறது.
வாழ்வுக்கு என்னை எடுத்துக்காட்டாக எடுத்துக்கொள்ளுங்கள் என புனித பவுல் முன்வருகிறார். கடவுளை அறியாத நிலையில் நான் இருந்த போது எனது செயல்கள் நம்பிக்கையே தரைமட்டமாக்கியது. அதே நேரத்தில் கடவுளை பின்தொடரும் போது என் வாழ்க்கையின் செயல்பாடுகள் வீரியமிக்கதாகவும் நம்பிக்கையின் ஒளியாகவும் திகழ்ந்தது. "ஒருவரிடம் நம்பிக்கை இருப்பதுபோல இன்னொருவரிடம் செயல்கள் இருக்கின்றன" என யாராவது சொல்லலாம். அதற்கு என் பதில்; செயல்கள் இன்றி எவ்வாறு நம்பிக்கை கொண்டிருக்க முடியும் எனக் காட்டுங்கள். நானோ என் செயல்களின் அடிப்படையில் நான் கொண்டுள்ள நம்பிக்கையை உங்களுக்குக் காட்டுகிறேன். நமது நோக்கமும், எதிர்பார்ப்பும், சரியாக தெரிந்த பின்பு, நாம் இயேசுவை போல வாழவும், நாமே தெரிந்து கொள்ள முடியும். நானோ நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் சிலுவையை அன்றி, வேறு எதைப் பற்றியும் ஒருபோதும் பெருமை பாராட்ட மாட்டேன் என கூறி தனது செயல்கள் வழி நம்பிக்கை நிறைந்த உள்ளத்தோடு நாம் தொடர்ந்திட பணிக்கிறார்.
எனது செயல்கள் அர்த்தம் நிறைந்ததாக இருக்கிறதா?

2. நான் யார் - இயேசு
பரீட்சை நடந்துகொண்டிருந்தது. ஒரு மாணவன் பரீட்சை ஹாலுக்கு அரை மணி நேரம் லேட்டாக வந்து சேர்ந்தான். "தம்பி நீ ரொம்ப லேட். இன்னும் இரண்டு மணி நேரத்துல எழுதி முடிச்சுடனும்" என்றார் ஆசிரியர். மாணவன் ஒத்துக்கொண்டான். ஆசிரியர் சொன்ன நேரம் வந்தது.ஆனால் அந்த மாணவன் எழுதிக்கொண்டே இருந்தான். "தம்பி டைம் ஆயிடுச்சு. இனிமே நீ பேப்பர் குடுத்தா வாங்க மாட்டேன்" என்றார் ஆசிரியர். மாணவன் எரிச்சலாகி பேப்பரைத் தூக்கி வீசி "போங்கய்யா நீங்களும் உங்க எக்ஸாமும்!" என்று கத்தினான். "டேய் நீ ரொம்ப அதிகமாப் பேசறே! ப்ரின்சிபால் கிட்டே கம்ப்ளெயின்ட் பண்ணிடுவேன்" என்றார் ஆசிரியர். "நான் யார் தெரியுமா?" என்றான் மாணவன். "நீ யாரா இருந்தா எனக்கென்ன?" என்று கடுப்பாக சொன்னார் ஆசிரியர். "நான் யார்னு தெரியாது உங்களுக்கு?" என்றான் மாணவன் மீண்டும். "தெரியாது!!!" என்று கத்தினார் ஆசிரியர். "அப்ப நல்லதாப் போச்சு!" என்று சொல்லிவிட்டு நடையைக் கட்டினான் மாணவன்.
சிந்தித்து பார்த்தோமேயானால் நமது வாழ்வில் கூட நம்மை தெரிந்து கொள்வதற்கும், மற்றவரை அறிந்து கொள்வதற்கும் நேரம் ஒதுக்குவது கடினமாக உள்ளது. ஆம் இறைமகன் இயேசு காலம் தொடங்கி இன்று வரை ஒவ்வொருவருமே நான் யார் என தேடிக்கொண்டே இருக்கும் முயற்சியில் இயங்கி கொண்டேதான் இருக்கிறார்கள். இறைமகன் இயேசு இங்கு முழுமையாக மனித தன்மையில் செயல்படுவதை பார்க்கிறோம். ஒரு சமுதாயத்தில் வாழும் போது தன்னாய்வு, தன்னைப்பற்றிய மற்றவரின் மதீப்பிடுகள் என்ன என்று அறிந்துக்கொள்ளும் பொது வாழ்வில் மற்றும் பணிவாழ்வில் முழுமையை அடைய முடியும். கடவுளின் திட்டத்திற்கு தன்னை நிறைவாக கையளித்தார். உலகில் வாழ்ந்தாலும் நாம் உலகை சார்ந்தவர்களல்ல.
இதற்கு இயேசு பேதுருவிடம் கூறுவது இவ்வாறாக, தாமரை இலை தண்ணீரிலே இருந்தாலும் தண்ணீரிலே ஒட்டாமல் இருப்பது போல இந்த உலக கவர்ச்சியான பட்டம், பதவி புகழ் நம்மில் மூழ்கி விடாமல் இருக்க கடிந்து கொள்கிறார். "என்னைப் பின்பற்ற விரும்பும் எவரும் தன்னலம் துறந்து, தம் சிலுவையைத் தூக்கிக்கொண்டு என்னைப் பின்பற்றட்டும். ஏனெனில் தம் உயிரைக் காத்துக்கொள்ள விரும்பும் எவரும் அதை இழந்து விடுவார்; என் பொருட்டும் நற்செய்தியின் பொருட்டும் தம் உயிரை இழக்கும் எவரும் அதைக் காத்துக் கொள்வார். ஒருவர் உலகம் முழுவதையும் தமதாக்கிக் கொண்டாலும் தம் வாழ்வையே இழப்பாரெனில் அவருக்குக் கிடைக்கும் பயன் என்ன? அவர் தம் வாழ்வுக்கு ஈடாக எதைக் கொடுப்பார்? நான் யார் என்பதையும் அவர் எதற்காக தந்தை கடவுளால் அனுப்பட்டார் என்பதையும் முழுமையாக அறிந்திருந்தால் உண்மைக்கும், நீதிக்கும், நேர்மைக்கும் அவரது இறையாட்சி அமைந்தது.
நான் யார்? எனது கடமைகள் என்ன என்று அறிய வருவோம்.

3. நீர் மெசியா - பேதுரு
பேதுருவுக்கு கடவுளால் வெளிப்படுத்தப்பட்டதால் நீர் மெசியா என அறிக்கையிடுகிறார். ஆனால் கடவுளின் வெளிப்பாட்டை முழுமையாக அறிந்துக்கொள்ள பேதுருவால் இயலவில்லை. மெசியா என்றால் உலக நடைமுறையில் காணப்படும் பொன், பொருள், தன்னலம். வசதி நிறைந்த வாழ்வு, துன்பம் காணாத விளம்பரம் நிறைந்த வாழ்வு என எண்ணம் கொண்டதால் தீமைகளிலிருந்து நன்னையை பிரிந்து பார்க்க தெரியவில்லை. ஆனால் இறைமகன் இயேசு கற்றுக் கொடுக்கிறார். தான் யார் என்றும் எப்படிப்பட்ட மெசியா எனவும் வெளிப்படுத்துகிறார்.
மெசியாவாக வேண்டுமென்றால் சாவை ஏற்க வேண்டும், துன்புற வேண்டும், உலகத்தாரால் உதறித் தள்ளப்பட வேண்டும் என்ற எதார்த்தமான முறையை கற்றுக் கொடுக்கிறார். இவ்வுகில் அருள்வாக்கு எடுத்துரைக்கும் அனைத்து உள்ளங்களுக்கும் தெளிவு கொடுக்கப்படுகிறது.
வாழ்வில் தெளிவினை கண்டு கொள்ள, புரிந்து கொள்ள கொடுக்கப்படும் வாய்ப்பினை பயன்படுத்துவோம். மேலும் கடவுள் நம்மில் வெளிப்படுத்தும் அடையாளத்தை அறிந்துக்கொள்ள அதற்கு ஏற்றார் போல் இறையருளை பெற்று வாழுவோம். ஆமென்.