இவ் மறையுரையை வழங்குபவர்

அருட்.சகோ. சி. குழந்தை திரேசா FSAG
பிரின் ஆம் கிம்சே,யேர்மனிஞாயிறு மறையுரைகள்

மதிப்பிற்குரிய அருட்பணியாளர்களே, துறவிகளே, அருட் கன்னியரே, உங்கள் ஞாயிறு மறையுரைகளை எமது இணையத்தளத்தின் ஆன்மீக வலத்தில் பிரசுரித்து, ஆண்டவர் இயேசுவின் நற்செய்தியை எல்லோருக்கும் அறிவிக்க விரும்பினால், info@tamilcatholicnews.com என்ற எமது மின்னஞ்சலுக்கு உங்களுடைய ஆக்கங்களை அனுப்பிவைக்கவும். உங்கள் மறையுரைகள் உலகெங்கும் இருக்கும் அனைத்து தமிழ் உள்ளங்களையும் சென்றடையும்.இதோ! ஓநாய்களிடையே ஆடுகளை அனுப்புவதைப்போல நான் உங்களை அனுப்புகிறேன். எனவே பாம்புகளைப்போல முன்மதி உடையவர்களாகவும் புறாக்களைப்போலக் கபடு அற்றவர்களாகவும் இருங்கள்.
(மத்தேயு 10:16)

நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள்; தந்தை, மகன், தூய ஆவியார் பெயரால் திருமுழுக்குக் கொடுங்கள். நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்களும் கடைப்பிடிக்கும்படி கற்பியுங்கள். இதோ! உலக முடிவுவரை எந்நாளும் நான் உங்களுடன் இருக்கிறேன்
(மத்தேயு 28:19-20)

நீ அவற்றை உன் பிள்ளைகளின் உள்ளத்தில் பதியுமாறு சொல். உன் வீட்டில் இருக்கும்போதும், உன் வழிப்பயணத்தின் போதும், நீ படுக்கும்போது, எழும்போதும் அவற்றைப் பற்றிப் பேசு.
(இணைச்சட்டம் 6:7)

பொதுக்காலம் 22 ஆம் ஞாயிறு

வலிமையான எண்ணங்கள்

இணைச் சட்டம் 4:1-2.6-8
யாக்கோபு 1:17-18.21-22.27
மாற்கு7:1-8.14-15.21-23

மனித வாழ்வின் வளர்ச்சிக்கு எண்ணங்களும், நம்பிக்கையும் இன்றியமையாதவைகள். எண்ணங்களே ஒரு மனிதனை பிரதிப்பலிக்கும் கண்ணாடி எனலாம். வலிமையான எண்ணங்களே நம் வாழ்வை வழிநடத்திச் செல்கிறது. வலிமையான எண்ணங்களே மற்றவர்களில் இருந்து மாறுபட்ட சிந்தனையுடன் வாழ்ந்து வெற்றி பெறுவது. மனித எண்ணங்கள் பலம் மற்றும் பலவீனத்தை உள்ளடங்கியது. இந்த எண்ணங்கள் உள்ளத்தில் இருந்து வெளியே வருபவையை என இயேசு கூறுகிறார். தீட்டுப்படுத்தக்கூடிய எண்ணங்களை சரிசெய்ய இயலும். 'மனிதன் எப்படி வாழ்கிறானோ அப்படியே சிந்திக்கிறான்' என்றார் மக்சிம் கார்க்கி. பறவையைக் கண்டு விமானம் படைக்க வேண்டும், பாயும் மீன்களைப் பார்த்து படகையும், எதிரொலியை கேட்டு வானொலி படைக்க வேண்டும் என்று மனிதனுக்குத் தோன்றியது. அந்தச் சூழல்தான் அவனுக்கு சிந்தனையை தூண்டியது.
ஒரு ஜென் துறவி தியானத்தில் இருக்கையில் ஒரு திருடன் வந்து அவரைப் பயமுறுத்தினான். அவரோ சிறிதும் கலங்காமல், "உனக்குத் தேவையானது அந்தப் பெட்டியில் உள்ளது. வேண்டுமானால் வேண்டும் வரை எடுத்துக் கொள்" என்றார். அவனும் மீதி கொஞ்சம் வைத்து விட்டு பணத்தை எடுத்துக் கொண்டு வெளியேற நினைக்கையில் துறவி, "பொருளை எடுத்தால் அவருக்கு நன்றி சொல்ல வேண்டாமா?" என்று கேட்க, அவனும் நன்றி சொல்லி விட்டு சென்றுவிட்டான். பின்பு பிடிபட்டுக் கொண்டான். சாட்சிக்கு துறவியை வரவழைத்தவுடன் அவர் சொன்னார், "இவருக்கு நான் தான் பணத்தையும் பொருட்களையும் கொடுத்தேன். அவர் அதற்கு நன்றி கூடத் தெரிவித்தார்" என்றார்.
அத்திருடன் பின்னாளில் சிச்சிரி கோஜுன் என்னும் அத்துறவியின் மிகச் சிறந்த சீடரானார்.
எண்ணத்தை பக்குவப்படுத்துவதும், அதை கட்டுப்படுத்துவதும் செப வாழ்வு. நமது உள்ளத்தை அது தூய்மையாக்க உதவியாக இருக்கும். இறைவன் துணை வேண்டுவோம். வலிமையான எண்ணங்களை கொண்டு பயனடைவோம், பலன் கொடுப்போம். ஆமென்.