ஞாயிறு மறையுரைகள்

மதிப்பிற்குரிய அருட்பணியாளர்களே, துறவிகளே, அருட் கன்னியரே, உங்கள் ஞாயிறு மறையுரைகளை எமது இணையத்தளத்தில் பிரசுரித்து, ஆண்டவர் இயேசுவின் நற்செய்தியை எல்லோருக்கும் அறிவிக்க விரும்பினால், info@tamilcatholicnews.com என்ற எமது மின்னஞ்சலுக்கு உங்களுடைய ஆக்கங்களை அனுப்பிவைக்கவும். உங்கள் மறையுரைகள் உலகெங்கும் இருக்கும் அனைத்து தமிழ் உள்ளங்களையும் சென்றடையும்.இதோ! ஓநாய்களிடையே ஆடுகளை அனுப்புவதைப்போல நான் உங்களை அனுப்புகிறேன். எனவே பாம்புகளைப்போல முன்மதி உடையவர்களாகவும் புறாக்களைப்போலக் கபடு அற்றவர்களாகவும் இருங்கள்.
(மத்தேயு 10:16)

நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள்; தந்தை, மகன், தூய ஆவியார் பெயரால் திருமுழுக்குக் கொடுங்கள். நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்களும் கடைப்பிடிக்கும்படி கற்பியுங்கள். இதோ! உலக முடிவுவரை எந்நாளும் நான் உங்களுடன் இருக்கிறேன்
(மத்தேயு 28:19-20)

நீ அவற்றை உன் பிள்ளைகளின் உள்ளத்தில் பதியுமாறு சொல். உன் வீட்டில் இருக்கும்போதும், உன் வழிப்பயணத்தின் போதும், நீ படுக்கும்போது, எழும்போதும் அவற்றைப் பற்றிப் பேசு.
(இணைச்சட்டம் 6:7)

ஆண்டவரின் திருக்காட்சி விழா

உன் ஒளி தோன்றியுள்ளது

எசாயா 60:1-12
எபேசி 3:2-3, 5-6
மத்தேயு 2:1-12

இன்று ஆண்டவரின் திருக்காட்சிப் பெருவிழாவைக் கொண்டாடுகின்றோம். இறைவாக்கினர் எசாயாவின் வாக்கு ஆழமான விழுமியங்களை நம்முன் வைக்கின்றது. 'எருசலேமே! எழு! உன் ஒளி தோன்றியுள்ளது ஆண்டவரின் மாட்சி உன்மேல் உதித்துள்ளது! இதோ! இருள் பூவுலகை மூடும், காரிருள் மக்களினங்களைக் கவ்வும், ஆண்டவரே என்மீது எழுந்தருள்வார். அவரது மாட்சி உன்மீது தோன்றும்". என்ற வாக்கு மீட்பராகிய இறைமகன் இயேசு ஒளியாக நம்மோடு இருப்பவர் வாழ்பவர். பாவங்களிலிருந்து மீட்பவர் என்று எசாயா இறைவாக்கினர் உலகிற்கு ஒளியான இறைமகன் இயேசுவைப் பற்றி நமக்கு இங்கு எடுத்துரைக்கின்றாh.; இயேசுவின் தாய் அன்னைமரியாளும் அவருடைய தந்தை சூசையும,; இறைமகன் இயேசுவைக் கோவிலில் அர்ப்பணித்த போது இறைவாக்கினர் சிமியோன் வழியாக இறைவன் வெளிப்படுத்திய வாக்குதான் ஒளியான இறைமகன் இயேசு. "உமது மீட்பை என் கண்கள் கண்டுகொண்டன. இம்மீட்பே பிற இனத்தாருக்கு வெளிப்பாடு அருளும் ஒளி என்று கூறுவதை திருத்தூதர் லூக்கா எழுதிய நற்செய்தியில் காண்கின்றோம். இறைவாக்கினர் சிமியோன் மீட்பரின் வருகைக்காக காத்திருந்தார். அவர் குழுந்தை இயேசுவைக் கையில் எடுத்தபோது அவர்தான் மீட்பர் என்பதை உணரமுடிந்தது. இறைவன் ஒளியாய் இருக்கிறார். அவரிடம் இருள் என்பதே இல்லை. அவரிடம் வாழ்வுக்கு வழிகாட்டும் ஒளி இருந்தது. அவருடைய வாழ்வான ஒளி மனிதருக்கு ஒளியாய் இருந்தது. அவருடைய ஒளி இருளில் ஒளிர்ந்தது. ஏனெனில் இருளானவன் அதன்மேல் வெற்றி கொள்ள முடியவில்லை. வழியும் உண்மையும் உயிருமான இறைமகன் இயேசுவின் பாதையை நோக்கி பயணத்தை தொடர்வோம். இருளின் காரியங்களை நம்மிலிருந்து அகற்றுவோம்.

இன்றைய நற்செய்தியில் காணப்படும் கீழ்திசைமூன்று ஞானிகள் விண்மீன் வழிகாட்டியதால் மீட்பராகிய இறைமகனைக் கண்டுகொள்ள முடிந்தது. அவர்கள் ஏரோதிடம் யூதர்களின் அரசராகப் பிறந்திருக்கிறவர் எங்கே? அவரது விண்மீன் எழக்கண்டோம். அவரை வணங்க வந்திருக்கிறோம்" என்ற வாக்கை கேட்டவுடன் ஏரோது கலங்குகி;ன்றார். ஏன் அவன் எருசலேமில் வாழ்ந்தும் பெத்லகேமில் மீட்பராகிய இறைவன் பிறப்பபை அவனால் காணவும் அனுபவிக்கவும் வாய்ப்பு கிடைக்கவில்லை. அவனிடம் ஆணவம் என்னைவிட யார் அரசராக பிறந்திருக்கக்கூடும் என்று தன்னுள் நினைக்கின்றார். ஆனால் மூன்று ஞானிகள் தனது பயணத்தில் பலவகையான சாவால்களை எதிர்கொண்ட போதிலும் அவர்களுடைய முயற்சியைக் கைவிடாமல் விண்மீன் காட்டிய இலக்கை நோக்கி பயணம் செய்து ஒளியான மீட்பரை வந்து அடைந்தனர். நம்முடைய இலக்கும் ஒளியான இறைவனை அடைவதுதான். நானே உலகின் ஒளி என்னைப் பின் தொடர்பவர் இருளில் நடக்கமாட்டார், வாழ்வுக்கு வழிகாட்டும் ஒளியைக் கொண்டிருப்பார் என்றும், ஒளி உங்களோடு இருக்கும்போதே ஒளியை ஏற்றுக்கொள்ளுங்கள். அப்போது ஒளியைச் சார்ந்தவர்கள் ஆவீர்கள். ஒளியான இறைவன் இரக்கமும் கருணையும் நிறைந்தவர். திருமுழக்கின்வழியாக ஒளியானவரில் ஒன்றாகியுள்ளோம். அவருடைய அழியாத ஒளியில் முத்திரையிடப்பட்டுள்ளோம். ஒளியான இறைவன் நம்மில் வாழ்கின்றார். எனவே அரசன் ஏரோதைப் போல் நாம் கலங்கத் தேவையில்லை. இறைவனை ஆராதிக்கவும், அனுபவி;க்கவும், உண்மையிலும் ஆவியிலும் வழிபட நமக்கு தூய்மையான இதயம் தேவை. பாவம் என்ற இருளின் செயல்களை அகற்றி, இரக்கமுள்ள தந்தையாம் இறைவனின் இரக்கத்தைப் பெற்று ஒளியான இறைவனின் பாதையில் பயணிப்போம். இன்று நமது இறைவன் பொன்னோ. சாம்பிராணியோ, வெள்ளைப்போளமோ கேட்வில்லை. நமது நொருங்கிய குற்றமுணர்ந்த உள்ளத்தை. எனவே இறைவனை நொருங்கிய தாழ்மையான உள்ளத்தைக கொண்டு வணங்கி அவருடைய இரக்கத்தைப் பெறுவோம்.